63. வெட்கமென்ன பெண்ணிலவே

484313_389542217751778_100000880085147_1029172_139016638_n

வெட்கமென்ன பெண்ணிலவே

நாணம் என்னடி பெண்ணே! நானும்
காண கோணுகிறாய் ஏனடி கண்ணே!
நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு
நாற்குணங்கள் பெண்ணழகு இலட்சணம் தானே!!

***

பூந்தளிர் முகம் மறைக்கும் அந்த
காந்தள் விரல் பற்ற நிலவே
நீந்தும் முகிலாடை விலக்கு பெண்ணே
காந்தும் வெப்பத்தை வெட்க நிழலாலணை

***

வெட்கச் சிவப்புக் கன்னம் உன்
உட்கருத்தைக் கூறுதே! காட்சி தேன!;
இட்டமுடன் யான் நோக்க மண்ணையும்
சட்டென் யான் நோக்காக்காலென்னையும் நோக்குகிறாயே.

***

கதவிடுக்கில் ஒளிந்து நின்று பார்க்கும்;
கை விரல்கள் முந்தானை முடிச்சிடும்
கால் விரல்கள் மண்ணில் கோலமிடும்
காதல் சாலம் வெட்கமிது பெண்ணிலவே

***

.3-2-2017

வெட்கம்.

(உட்கட்டு – அந்தப்புரம். துட்சணம் – குறும்பு.
நிட்கம் – பொன். கட்கம் – அக்குள்- கமக்கட்டு.)

உட்கட்டில் உலவியொரு வெகுமதி நிரப்பி
கட்கத்தில் ஒளிக்கவியலாது மனதை உசுப்பி
வெட்கச் செம்முத்துக் கதிர் பரப்பும்
உட்கருத்தின் வெளிச்ச ஓவியச் சிற்பமே!

நுட்பமான தேன் சுவையுணர்வுச் சுகம்
வெட்கம் நட்சத்திர மின்னற் கலகம்.
துட்சணம் நிறைக்கும் தொட்டதும் விலகும்
நிட்கம் பெறும் கலவியின் இன்பம்.

தோல்வி, அசிங்கம், தவறு செய்தலில்
காலிடக் கூசும் புதிதாய் காண்பதில்
கொட்டும் இன்பக் கொள்ளைப் புதையல்
வெட்க வானவில் பெண்ணுக்கு அழகு.

நகம் கடித்து சேலை திருகும்
முகம் ஒழித்துக் கதவில் மறையும்
தகவுடை வெல்லப்பாகு வெளிப்படை வெட்கம்.
உகந்த கோந்து உதறிடவும் வேண்டும்.

6-5-2016.

775615emfrzryzxr

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 07, 2017 @ 01:16:30

  அருமை

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 27, 2017 @ 15:58:33

  Jasmin Kennedy ;. அழகான வரிகள்

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 27, 2017 @ 20:06:51

  Mha. Kareem :- அழகான அருமையானா நடை
  கவி வரிகள்
  27-10-2017

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 27, 2017 @ 20:07:58

  நன்றி உரித்தாகுக உறவே.
  கருத்திற்கு மகிழ்வடைந்தேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 30, 2017 @ 10:15:24

  Karthikeyan Singaravelu :- மிக அருமையான வரிகள் சகோ வாழ்த்துகள்
  30-10-2017
  Vetha:- Mikka nanry bro

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: