17.அவுஸ்திரேலிய ( கங்காரு நாட்டுப் ) பயணம் – 17

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 17

img_04831

img_04841

வரும் போது சிட்னி முருகன் கோயிலையும் பார்த்து வந்தோம் இறங்கி உள்ளே செல்லவில்லை. வீடு வந்தோம்.
கணவர் கூறினார் அவுஸ்திரேலியா வந்து கங்காரு பார்க்கவில்லையே என்று. நீல மலைக்கும் போகலாம் என்று சீலன் கூறினார் இறுதியில் நாளை கங்காரு பார்ப்பது என்று முடிவானது.

img_05111

இரவுணவு முடிய இரு முகன் – (விக்ரம்) தர்மதுரை – (சேதுபதியும) பார்த்தோம். எல்லாம் பிடித்தது.
அடுத்த நாள் சீலனும் சின்ன மகளும் நாமும் ” பெஃதர் டால் ” எனுமிடம் போய் மிருகங்கள் பார்த்தோம்.

img_05241

அதாவது அவுஸ்திரேலியாவில் உள்ள மிருகங்கள். அன்றைய நாள் ஒரே மழைத்தூற்றலாக இருந்தது. குடையுடனே நடந்தோம்.
1700 வகை பாலூட்டிகள், பறவைகள் அங்கு உள்ளனவாம். கங்காருவுக்கு உணவூட்டலாம், கோலாவை சந்திக்கலாம், குசுனி, உணவுகள் உண்டு. காலை 9 முதல் மாலை 5 மணி வரை உள்ளே இருக்கலாம் என்று தகவல் உள்ளது.
படங்களைப் பாருங்கள்.

img_05351

img_05301

img_05311
63 வகை கங்காரு உள்ளதாம் கங்காரு சாணி நல்ல உரமாம். கங்காரு முட்டை இடுவதாம் குட்டி போடுவது அல்ல. கங்காரு மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுமாம். 5 வருடம் மட்டுமே வாழுமாம். கங்காருவின் முட்டை உடைந்து பெரிய புழுக்கள் போன்று குஞ்சுகள் ஊர்ந்து தாயின் வயிற்றுப் பையுள் ஏறுமாம். அங்கேயே பால் குடித்து தாயின் உடல் சூட்டில் வளர்திடுமாம். பின்பு துள்ளிப் பாய்ந்து உலாவிடுமாம்.

கப்டன் குக் கங்காருவை முதலில் பார்த்து அது என்ன என்று பழங்குடியினரைக் கேட்டாராம். நீ பேசுவது புரியவில்லை என்று தமது மொழியில் (கங்காரு) பதில் கூறினார்களாம். அதையே குக் மிருகத்தின் பெயரெனக் குறித்துக் கொண்டாராம்.

img_05471

img_05961

img_06001

img_06061

img_06071

img_06041

img_06031

Next KOALA  தூங்கும் போது பந்து போல இருக்கும்

koala

img_05391

img_05421

கோலா மரத்தில்  இருக்கிறது.

img_05651

img_05641

img_05701

img_05671

img_05741

img_05731

கறுப்புப் பண்டி பார்த்தோம்

img_05821

img_05931

அவுஸ்திரேலிய  தேசியப் பறவை ஈமு

img_05911

 
அது ஒரு மழை நாள். கங்காரு பார்த்து வந்து அமர்ந்திருந்தோம். சீலனின் தம்பியார் வந்திருந்தார் அவர் எங்களை அழைத்தார் நீலமலைக்குச் செல்வோம் வாருங்கள் என்று. எனது கணவர் காலையில்  ” பெதர் லாண்ட் ”  சுற்றி வந்ததால் பிறகும் மாலையும் மழை தூறியபடி உள்ளதால் பஞ்சிப்பட்டு இயலாது என்று கூறி விட்டார். எனக்கு விருப்பமானாலும் நான் மௌனமாகவே இருந்தேன். சீலனின் தம்பியின் நல்ல மனதை மதிக்கிறேன். இன்றும் நீலமலை பார்க்காதது எனக்கு ஏக்கமாகவே உள்ளது.
சிட்னி வாசம் முடிந்தது.
அடுத்த நாள் 19ம் திகதி காலையே வெளிக்கிட்டோம் விமானம் 10 மணிக்கு பிறிஸ்பேர்ண் பயணம். சீலன் விமான நிலையம் வந்து எம்மை பயணம் அனுப்பி வைத்தார். வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட பின் பேருந்தில் மாறி விமான நிலையம் சென்றோம்.
மறுபடியும் அந்தப் பெரிய அசத்தும் பாலத்தினூடாகவே பயணித்தோம்.

img_06251

மிகுதியை அடுத்த பதிவு 18ல் காணுவோம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 10-2-2017

 

2144764y0c9u25lsh

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Alvit
  பிப் 10, 2017 @ 21:17:23

  நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரெஞ்சுத் தொலைக்காட்சியிலும் அவுஸ்திரேலியா நாட்டுக் கங்காரு பற்றிய விவரணப்படத்தைப் பார்க்க முடிந்தது. குட்டிகள் இலாவகமாக தாயின் வயிற்றுப் பகுதிக்குள் பாய்ந்து ஏறி அடங்குவதும் அவற்றின் பாய்ச்சல்களும் அருமை.
  கட்டுரைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  உங்களது இந்தப் பயணத்தைப் பற்றி இன்னும் விரிவாக நீங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 10, 2017 @ 22:21:23

   ஆம் இன்னும் விரிவாக எழுதலாம் தான் சகோதரி.
   இந்த மிருகங்கள் பற்றி எழுதினாவே நிறைய வரும்.
   கோயிலைப்பற்றிக் கூட விவரிக்கவில்லைத் தான்.
   மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சி.

   மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 10, 2017 @ 22:02:49

  Arumai

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 11, 2017 @ 00:56:32

  அனைத்தும் அருமை…

  மறுமொழி

 4. Bagawanjee KA
  பிப் 11, 2017 @ 06:06:23

  உங்களுடன் நானும் பெதர்லன்ட் சுற்றிப் பார்த்த உணர்வு 🙂

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 13, 2017 @ 10:56:28

  Subajini Sriranjan :- மிக அழகாக இருக்கிறது தொடருங்கள்
  Like · Reply · 10 February at 23:23.

  Vetha Langathilakam :- ஓ! தொடர்ந்தபடியே தான் உள்ளேன் சுபா . நன்றி.
  இதற்கு முன் 3-4 கவிதைகளும் போட்டேன்.
  மிக்க மகிழ்ச்சி.
  Like · Reply · 1 · 10 February at 23:26

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 13, 2017 @ 10:57:29

  Alvit Vasantharany Vincent :—என்ன ஸ்ரைலா இருந்து ஊஞ்சலாடுகிறீங்க!
  🙂

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 13, 2017 @ 11:05:22

  comments from australia :-

  Sharmila Inbaseelan :- Very nice, good to how the Kangaroo name came 🤗
  Unlike · Reply · 1 · 11-2-17

  Ponnampalam Satkunam :- Beautiful presentation thanks Vetha sister( not sure acca or thankachi)
  Like · Reply · 13-2-17

  Vetha Langathilakam:- in april 2017 — 70 years
  Like · Reply · 13-2-17

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 31, 2020 @ 20:09:19

  Sujatha Anton :- கட்டுரை அருமை. வாழ்க தமிழ்.!!
  31-3-2020

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: