10. கண்ணதாசன் சான்றிதழ் -11

13738359_1755323481399093_1833101698648335527_o

இது 11வது சான்றிதழ்.)

 

தாலாட்டும் நினைவுகள்.

(அன்னத்தூவி – அன்னப் பறவையிறகு)

இன்பியல் அனுபவ அலைகள்
அன்னத்தூவியாய் அணைந் திதயத்தில்
நன்னயம் பூத்துப் பெருக்கும்!
நன்கொடையென மனவியலாளரும் கையாளும்
கன்னலான நெஞ்சினடி ஓவியங்கள்!
அன்னவூஞ்சல்! அமுத கிரியாவூக்கி;கள்!

ஓவியங்கள் ஒங்காரமாய் ஒசையிட்டு
ஓய்வு நேரங்களில் ஓடையாய்
ஓடியது தண்ணீர் நிறங்களோடு.
ஓம் மென்ற தூரிகைகளின் நடனம்.
ஓவியக்காரியாய் ஒவியம் வரைந்தேன்
ஓ! இனிய அனுபவமது!

இன்றும் தாலாட்டுகிறது! எங்கே
இழைகிறது என் ஓவியங்கள்!
இன்னிசைக் குழுவே பாடுமென்
இதயத்துள்! தூரிகையின் முத்தங்கள்
இணையில்லா இன்ப சரசங்கள்!
இதய வருடல்கள் ஒவியங்கள்!

தந்தையோடு கைப்பற்றி வளவில்
மந்திரம் போல் நடந்தது,
தம்பளப் பூச்சியை மிதிக்காது
தாண்டித் தாவி நடந்தது,
தரமான அறிவார்ந்த கதைகள்
தமா(ஷ்)சாகவும் கூறுமப்பா ஹா! தாலாட்டுகிறது!

சனிக்கிழமை தோறும் மாமிமாருக்கு
சங்கீதம் படிப்பிக்க துவிச்சக்கரவண்டியில்.
சங்கீத வாத்தியார் வருவார்
சங்கடமின்றி உன்னிப்பாய் கேட்டது
சங்கமமாகியது இரத்தத்தில் இயல்பாய்
பங்கீடிது மின்னற் கீற்றாய்…

அப்பம்மா பசுப்பால் கறப்பார்
அமுதமொழி வரும் வரை
அணைத்திருப்பேன் கன்றுக் குட்டியை
இணைப்பை விட்டதும் துள்ளியோடி
அமுதமருந்தும் குட்டியழகோ அழகு!
அட்டைப்பெட்டிப் பாலில்லின்று தாலாட்டுது!

ஓரின்பத் தென்றல் தேனள்ளியூற்றி
வேர் இறுக்குமானந்தத் தாலாட்டு
வைக்கோல் பட்டடையிலிருந்து இழுத்து
வைக்கோலை மாடுகளிற்குப் போடுவது
பைய அடியெடுத்து பயத்தோடு.
கைவிடாத பயம் மாடு இடிக்குமென.

 

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.
24-7-2016.

end_bar

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 17, 2017 @ 09:56:19

  அருமை

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 18, 2017 @ 02:26:42

  அருமை…

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 19, 2017 @ 09:48:02

  Geetharani Paramanathan:- supper kavithai ninaivukal
  18 February at 23:12

  Vetha Langathilakam:- nanry…makilchy sis
  19 February at 10:30 · Edited

  Subajini Sriranjan:- நல்ல நினைவுகளைக் கொண்ட பாடல்
  19 February at 14:10

  Vetha Langathilakam :- அன்புடன் இனிய நன்றியும் மகிழ்வும்
  கருத்துப் பகிர்விற்கு.
  · A few seconds ago

  Rathy Mohan :- அருமையான பாடல்
  19 February at 14:25

  Vetha Langathilakam :- அன்புடன் இனிய நன்றியும் மகிழ்வும்
  கருத்துப் பகிர்விற்கு.
  · A few seconds ago

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 19, 2017 @ 09:50:23

  Shanthini Balasundaram :- அருமையான பாடல்.
  19 February at 14:49

  Vetha Langathilakam :- அன்புடன் இனிய நன்றியும் மகிழ்வும்
  கருத்துப் பகிர்விற்கு.
  A few seconds ago

  Mohan Nantha:- போற்றக்கூடிய வரிகள்.
  பொறுமையிழந்தமனமோ மீண்டும் மீட்டுப்பார்க்கின்றது கடந்த நினைவலைகளை. வாழ்த்துக்களம்மா உங்கள் கவித்துளிகளுக்கு.
  19 February at 17:06 · Edited

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி சகோதரா வந்து கருத்திட்டதற்கு.
  கருத்துகள் எம்மை ஊக்கவிக்கும் என்பது தாங்கள் அறயாதது அல்ல.
  மிக்க நன்றி.
  · 21 February at 09:42

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 18, 2018 @ 10:24:07

  Kalanithy Jeevakumaran Super vethaakka.
  2017. july
  Vetha Langathilakam Thank you sis
  18.2.2018

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: