18. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).

 

105845

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 18

 

ஐரோப்பாவில் சுரங்கப் பாதையூடாகப் பல தடவை பயணித்துள்ளோம் ஒரே நேர்சீரான பாதை . சுரங்கத்தினூடாகப் புகுந்து வெளியே வருவோம். மெல்பேர்ணில் சுரங்கப் பாதை கிளை பிரிந்து இரண்டாக வேறு வேறு இடங்களால் வெளியேறும் நிலையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.” ஓ! சுரங்கத்தினுள்ளேயே பாதை இரண்டாகிறதா! ‘ என்று.

பெரும் பாதைகளில் தகவல்கள் மேலே போடுவார்கள்.
¨ சிரியுங்கள்! சிரிப்ப ஒரு சிறந்த மாத்திரை!” என்று சிட்னிப் பாதையில் வாசித்தோம். சிரித்தோம்.
” ஒரு தொலைபேசி அழைப்பு தவறிவிட்டதா! யாரும் கொலை செய்து விடமாட்டார்கள்!”…என்றும் இருந்தது. நாசுக்காக சாரத்தியத்தில் நீங்கள் கவனமெடுங்கள் என்கிறார்கள்.
முற் பகல் 11.25க்கு பிறிஸ்பேர்ண் வந்து இறங்கினோம்.

img_06561

img_06591

கமெராவில் 1.15 பகல் என்று தெரிகிறது. நாம் நேரம் செட் பண்ணவில்லை. தவறாக இருக்கலாம்.
ஒரு புது இடத்திற்கு வந்ததும் எப்படி தங்கும் வாடி வீட்டிற்குச் செல்வது!…. தூரமா கிட்டவா!…., பேருந்து எப்படி எடுப்பது!… என்று பல கேள்விகள் மனதில் குடையும். தங்கும் வாடிவீட்டுப் பதிவுப் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு மெல்ல தயங்கி விமான நிலையக் கட்டிடத்தால் வெளியே நடந்து வர, சீருடை அணிந்த ஒரு பெண் அதிகாரி ஐ எழுத்துடைய ( இன்போஃமேசன்) ஆடை அணிந்தவர் என்ன என்பது போலப் பார்த்தார். முகவரியைக் காட்டி இங்கு போக வேண்டும் என்றோம். வெளியே வந்து அதோ அந்த வரிசையில் சென்று நில்லுங்கள் அறிவீர்கள் என்றார்.

img_06631
நாம் அங்கு போனோம் கணவர் தான் அத்தனையும் பேசினார் நான் பயணப் பொதிகளைப் பார்த்தபடி விலகி நின்றேன். நாம் போகும் இடத்திற்கு வாகனம் ஒழுங்கு செய்யும் நிலையம் அது. படத்தில் காணலாம்.

img_06601
இவர் பேசும் போது திரும்ப விமான நிலையம் வருவது எப்படி என்று பேசியுள்ளார் அதற்கும் சேர்த்து வாகனம் பதிவு பண்ணியானது. காத்திருந்தால் அவர்கள் வந்து ஏற்றிச் செல்வார்கள் என்று அதற்குரிய இடத்தில் நின்றோம் – உட்கார்ந்திருந்தோம். ஒரே பாதையில் செல்லும் பயணிகளாக 2-3 பேருடன் பயணித்தோம்.
அதுவும் ஒரு நகர வலமாகவே இருந்தது. அதாவது சுற்றுலா போலவே இருந்தது. அப்போதே பிறிஸ்பேர்ண் படங்கள் எடுக்கத் தொடங்கி விட்டேன். அவ்வளவு அழகாக வெட்ட வெளியும்

img_06661

வானுயர் கட்டிடங்களுமாக இருந்தது.  வீடுகள்   தோற்றம்

img_06731

img_06761

வீடுகளிலும் பார்க்க வாகனம் தரிக்கும் இடங்கள் அதிகமோ என்று சிந்திக்க வைத்தது. parking place building…
வாடிவீடு வர அப்படிப் போய் அப்படித் திரும்புங்கள் உங்கள் வாடி வீடு தெரியும் என்று இறக்கி விட்டார் சாரதி. அதே போல 21ம் திகதி குறித்த நேரத்திற்கு இந்த இடத்தில் வந்து நில்லுங்கள் விமான நிலையம் போக என்றும் நினைவு படுத்தி விட்டார் அது மகிழ்வாகவும் ஒரு ஆறுதலாகவும் இருந்தது.
வாடி வீட்டிற்குச் சென்றோம். 
19-9-2016 பிறிஸ்பேர்ணில் சிட்டி எட்ஜ் வாடி வீட்டில் சென்று பொதிகளை வைத்து விட்டு வெளியே கிளம்பினோம்.

img_10771

img_10762

வேண்டிய நேரம் இருந்தது.
பசித்தது ஏதாவது சாப்பிடுவோம் என்று தேடினால் மேயர் மாலுக்குள்

IMG_0710[1].jpg

img_07111

img_07011

img_07021

img_07041

img_07061

இந்திய சாப்பாட்டுக்கடை இருக்கு என்றார்கள். போய் தேடினோம். இன்டியன் ஒடிசி என்று சாப்பாட்டுக் கடையில் மசாலா தோசை சொல்லி சாப்பிட்டோம். பெரிய ருசி என்று இல்லை. ஓ.கே பரவாயில்லை.

indian

மிகுதியைபதிவு 19ல் காணுங்கள்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-2–2017

 

divider_172

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 23, 2017 @ 01:44:27

  பயணம் அருமை…

  சிரிப்பு சிறந்த மருந்து… ஆம்…

  மறுமொழி

 2. Nagendra Bharathi
  பிப் 23, 2017 @ 07:45:05

  அருமை

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 24, 2017 @ 02:54:09

  புது உலகிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களின் தளத்திற்கு வருகிறேன். உடன் பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: