64. பா மாலிகை (காதல்)

unnodu

 உன்னோடு நானிருந்தால்

உன்னோடு நானிருந்தால் உன்னதங்கள் பெருகுமென்பாய்

என்னோடு நீயிருந்தால் சாதனைகள் பெருகுமென்பேன்.
முன்னோடும் எண்ணதில் உற்சாகம் முதலாகும்.
இன்னிசை யுருவாகும் அன்பு பெருக்கெடுக்கும்.
கன்னற் தமிழ் பின்ன வரும்.
சின்ன விழிகள் பூவாய் மலரும்.

காதலாய் அணைக்கும் காதற் குழந்தையால்
ஆதரவு உணர்வு பொங்கிப் பெருகும்.
கோதிடத் தேறிடும் சொல்லாத கலை.
பாதக நினைவுகள் தூர விலகிடும்.
சாதக எண்ணங்கள் ஒளியாய் விரியும்.
மேதகு புத்துணர்வு நாற்புறமும் பெருகிடும்.

இளமையின் ஊஞ்சலில் அழகு பெருகும்.
அளவற்ற அன்பு மழையாய்ச் சொரியும்.
தளர்வின்றி நாமும் தரமோடு நடப்போம்.
வளமான ஆனந்தத்தால் வரங்கள் நெருங்கும்.
உலகைப் பிடிக்கும் உளப்பாடு உருவாகும்.
உன்னோடு நானுமென்னோடு நீயும் கௌரவமாவோம்.

 

23-2-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.

 

 

ssssssss-c

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 27, 2017 @ 00:55:17

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. கவிஞர் த.ரூபன்
  பிப் 27, 2017 @ 01:36:36

  வணக்கம்
  அம்மா

  அருமையானவரிகள் இரசித்தேன் இனி தொடர்ந்து வருவேன் வலைப்பக்கம்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 27, 2017 @ 01:39:38

  அருமை…

  மறுமொழி

 4. nagendrabharathi
  பிப் 27, 2017 @ 04:14:30

  அருமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: