480. அச்சாணி இல்லா தேர் முச்சாணும் ஓடாது

 

puthumai-feb-20-17

 

தக்கபடி அச்சில் நிற்கும் ஆணி
சக்கரங்கள் கழலாது காக்கும் ஆணி
சக்கரக் காப்பாணி கழன்று விட்டால்
சக்கரம் மூன்று சாணும் ஓடாது.

நம்பிக்கையாம் அச்சாணி வாழ்வுச் சக்கரத்தில்
தும்பிக்கையாகும் இது வெற்றிப் பிறப்பிடத்தில்.
நம்பிக்கை நழுவிடில் புத்துணர்வும் மகிழ்வும்
வெம்பிப் பாழாகும் முயற்சியும் வெற்றியும்.

தலைமைத்துவம் எனும் அச்சாணி நிர்வாகத்தை
அலையாது கட்டினுள்ளே காக்கும் பார்வை.
நிலையான அன்பு உறவிற்கு அச்சாணி
அலையாத ஒழுக்கம் மானுடம் காக்குமேணி.

உறவிற்கு ஆதாரம் ஒட்டும் அன்பு.
உயிர் வாழ்ந்திட அச்சாணி உணவு.
உழவுத் தொழில் உலகிற்கே அச்சாணி.
உயர்த்திடும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்.

மனவளம் சிறக்க நூலகம் ஆதாரம்.
மழை வளம் சிறக்க மரங்களாதாரம்.
இழையும் ஆதாரங்கள் நிரந்தர அச்சாணிகள்.
இலக்கில்லா வாழ்வும் அச்சாணியற்ற தேர்.

தண்டவாளம் இன்றேல் புகைவண்டி ஓடாது.
அண்டமளவு மனித சாதனைகள், அவன்
வெண்டிரை (கடல்) அளவு முயற்சியால் தானே
கண்டிட இயலாத அச்சாணி இதுவே.

கடல் போல் காரியங்கள் செய்திட
உடல் நலம் பெரும் அச்சாணி.
உடலியங்க உயிரோட்டம் சுவாசம் தானே
உயிர் இயங்கும் உன்னத உத்தரவாதம்.

புலம் பெயர்ந்த வாழ்வு அசைய
நலமான மொழியே நல் அச்சாணியானது.
கால சக்கரம் சுழல தாங்குவது
அச்சாணி அனுபவங்கள், கற்பனைகள் தானே.

பணபலம், குண்டர் பலம் தேர்தலிற்கு
பணம் வாழ்விற்கு அச்சடித்த அச்சாணி.
மாற்றத்திற்கு அச்சாணி போராட்ட குணம்.
சினிமாவின் அச்சாணி நல்ல இயக்குனர்.

சிறுவர்கள் சமுதாயம் நாட்டிற்கு அச்சாணி.
சிறுவரான இன்றையவர் நாளைய தலைவர்.
சிறப்பு நினைவால் சிறப்பு நிகழ்விற்கும்
அதிட்டமீயும் அச்சாணி அவரவர் கையிலே.

 

வேதா. இலங்காதிலகம்.
 டென்மார்க்.- Feb- 2017

 

lines-stars-243923

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 04, 2017 @ 03:59:45

  // மனவளம் சிறக்க நூலகம் ஆதாரம்.
  மழை வளம் சிறக்க மரங்களாதாரம். //

  பிடித்த வரிகள்…

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 19, 2017 @ 19:52:51

  Karthikeyan Singaravelu:- வாழ்த்துகள் சகோதரி
  Unlike · Reply · 4-3-2017.
  Vetha Langathilakam :- மிக்க நன்றி Anpudan K.S மகிழ்ச்சி தங்கள் கருத்திடலிற்கு.
  2017 – 4 March at 19:10
  Alvit Vasantharany Vincent:- வாழ்த்துகள் தோழி.
  · 4 March at 19:27
  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு ஆழ்ந்த அன்புடன் மனமார்ந்த நன்றி அலவிற்.
  2017· 4 March at 22:07
  Subajini Sriranjan :- வாழ்த்துக்கள் வேதாம்மா
  2017-· 4 March at 20:52
  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு ஆழ்ந்த அன்புடன் மனமார்ந்த நன்றி சுபா.
  2017-· 4 March at 22:09

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 19, 2017 @ 19:58:29

  Rathy Gobalasingham Congratulations Acca.
  2017 -· 4 March at 22:42

  Vetha Langathilakam :- Thank you very much Rathy sister.. Happy to see your words..
  2017 – 4 March at 23:03

  Shanthini Balasundaram:- வாழ்த்துக்கள். .
  2017 -· 4 March at 22:42

  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு ஆழ்ந்த அன்புடன் மனமார்ந்த நன்றி Shanthini.
  2017 – 4 March at 23:04

  Sujatha Anton:- வாழ்க வளர்க தமிழ்!!!! தமிழ்!!!!
  2017 – 5 March at 21:48

  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு ஆழ்ந்த அன்புடன் மனமார்ந்த நன்றி.
  19-5-2017

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 19, 2017 @ 20:05:40

  Thadsha Jana :- Congratulations Aunti
  19-5-2017

  Vetha Langathilakam :- Thanksda…..
  19-5-17 Just now

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 20, 2017 @ 20:05:36

  Vetha Langathilakam Sara Bass :- வாழ்த்துகள்
  2017 – · 3 March at 12:15

  ஆர் எஸ் கலா:- வாழ்த்துக்கள்
  · 3 March at 14:03

  Lazer Velankanni :- வாழ்த்துகள்

  Arunachalam Thiyagarajan :- வாழ்த்துகள்

  Shanthini Balasundaram:- வாழ்த்துக்கள் சகோதரி.
  20-5-17

  பூமதீன் கலந்தர்
  Image with – ullam niraintha paaraaddukal.
  2017 – · 3 March at 10:25

  Ansar Shamun:- வாழ்த்துக்கள்
  2017 – 3 March at 10:27

  Mohamed Shafry:- வாழ்த்துக்கள் வேதா
  Like · Reply · 7 mins

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 01, 2017 @ 21:41:24

  Shanthini Balasundaram :- வாழ்த்துக்கள் சகோதரி.
  20 May at 20:59

  Vetha Langathilakam:- மிக்க நன்றி உறவே கருத்தடலிற்கு மகிழ்ச்சி.
  1-6-17
  Sivaraman Krishnapillai:- நல் வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே கருத்தடலிற்கு மகிழ்ச்சி.
  1-6-2017.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: