483. எங்கே மனம்!

bbb

ethaya matam

*

 எங்கே மனம்!

*

*

நியாயமாக நடக்காத உன் மனம்
அநியாயத்திற்கு வீணாகத் துணையான மனம்
வியாபிக்கும் இடம் எங்கே சொல்!
தயாள மனதை எங்கே தொலைத்தாய்!

பொங்குதே மனம் அமைதி இன்றி.
தங்கு தடையின்றி அன்று படித்த
தங்கமான நீதிக் கருத்துகள், நெறிமுறைகளில்
முங்கிய அந்த அமைதி மனமெங்கே!

போதுமெனும் மனமின்றி ஏனிந்தப் பேராசை!
மோதும் உணர்வு ஏன் வந்தது!
ஓதிய அம்மாவினாசைகள் எங்கு ஒழுகியது!
வாதிடவில்லை! பதுக்கினாயா! எங்கே மனம்!

கங்கு எரிந்தாலும் அச்சமற்று உள்ளதா!
சங்கே முழங்கத் தமிழ் பேசுதா!
எங்கே மனம்! நியாயமாக உள்ளதா!
அங்கே தங்கிடவை வீரம், துணிவை!

நீதிமன்றம் உன்மனம்! நாளும்
கோதும் நற் செயல்களால் கழிவுகள்
ஒதுக்க தேடு! எங்கே மனம்!
புதுப்பித்திடு! புனிதமாக்கு! துளசிதளமாக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 2-3-2017

*

ethayam

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 10, 2017 @ 08:38:07

  போட்டிக்கு எழுதிய கவிதை..
  எடுபடவில்லை ஆச்சரியமான ஆச்சரியம்!
  பரவாயில்லை… எப்போதும் தெரிவுபட வேண்டும் என்று நியதியில்லையே!
  நீ நன்றாகவே எழுதியுள்ளாய் வேதா!

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 10, 2017 @ 08:54:28

  Ramadoss Gandhi :- அருமை
  Unlike · Reply · 1 · 3 March at 00:56.

  Vetha Langathilakam:- Ramadoss Gandhi Mikkananry – makilchchy urave..
  Like · Reply · 3 March at 09:10

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 10, 2017 @ 11:33:06

  மனத்தெளிவை சொன்னவிதம் அருமை…

  மறுமொழி

 4. Bagawanjee KA
  மார்ச் 10, 2017 @ 20:00:49

  ஏன் எடுபடவில்லை ?ரசிப்போருக்கு காலக் கெடு ஒன்றுமில்லையே !
  துளசி தளம் ….மனதைப் பூஜிப்போம்:)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: