66. பா மாலிகை (காதல்)

unkkena...nilamuttam

உனக்கென வாழ்கிறேன்.

***

புத்தியில் பயிரிடும் மானுட அகவிளக்கு
அற்புதத் தொண்டு, தொழிலாக எம்
கற்பித்தல் தெரிவிலென் இட மாற்றலுக்காய்
உற்சாகமான காத்திருப்புடன் உனக்கென வாழ்கிறேன்.
உறவை உயிராக எண்ணி அர்ப்பணித்திட
உலக வனத்தில் உச்சமாய் உலாவிட
பறவைகளாய் ஆசிரிய வானில் சிறகடித்திட
சிறப்பாயொரே இடத்தில் பணி செய்வோம்.

***

நிர்வாண மனங்கள் நிறைந்த உலகில்
சர்வமும் உணர்ந்து தமிழ் முத்துக்கள்
கோர்த்து வளரும் இளையோருக்கு அறிவுக்
கருவூல மாலையிணைக்க உனக்கெனக் காத்திருக்கிறேன்.
உணர்வெழுதும் உன்னின்பக் கவிப் பூக்கள்
உயிர்த்து வரும் அழகு மாந்த
அயர்வின்றிக் கையிணைத்து இறுதி வரை
இலக்கையடைய இங்கு உனக்கென வாழ்கிறேன்.

***

சங்காரம் செய்வோம் அறவீனத்தை! விழாது
எழுவோம்! இலட்சிய மதுரச முத்தாடுவோம்!
அகங்காரமற்ற அன்பு மன இராசாங்க
சுகந்தத்தில் புதைந்து வெற்றியால் இறுமாப்போம்.
அமிழ்தான மொழி இலக்கியம் பருகிட
தமிழென்ற வண்ண விரிப்பில் இழைந்தாட
குமிழுமன்பின் காப்புறுதியோடு இல்லறம் நெய்திட
அறுவடைக் காலத்திற்காய் உனக்கென வாழ்கிறேன்.

***

2-3-2017.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

ethayam

1 பின்னூட்டம் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    மார்ச் 14, 2017 @ 01:01:25

    அழகான சொல்லாடல்… ரசித்தேன் அம்மா…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: