6 . நான் பெற்ற விருதுகள் .

 

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

10. கவித் திலகம்

 

kavithilakam viruthu- dr.Jeeva kulumam.11-3-17

 

மிக்க   மகிழ்வுடன்   நன்றிகள்   டாக்டர் ஜீவா   குழுமத்திற்கு, நடுவர்களிற்கும்.  கலந்து கொண்ட கவிஞர்களிற்கும்.——-டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூக்கள் –   வெற்றி பெற்ற     .திருமதி . வேதா இலங்காதிலகம்        கவிதை

 தொலைந்த வாழ்க்கை முறைகள்

*

 

கலைந்த வாழ்வுப் பயணத்தில் எம்
தொலைந்த வாழ்க்கை முறைகள் பலவாம்.
நிலைத்த மின்சாரத்தாலின்ப இழப்புகளதிகம்
அலைகிறதே ஏக்கங்கள் மேற்குலகிலிருந்து.

**

காலைக்கடன் முடிய இறைவனுக்குச் சாத்தும்
மாலைக்கு மலர்கள் கொய்தலின்பம்.
வேலையென்று முற்றம் பெருக்கிப் பாட்டியின்
தொழுவம் சென்று சாணி தேடி
மகிழ்ந்து முற்றத்தில் தெளித்தது சொல்லவா!

**

சம்பலுக்குத் தயார் செய்த பொருட்களை
அம்மியிலரைத்து மணக்க பெருமுருண்டையாகத்
திரட்டியதின்னும் நாவூறுகிறது மறக்கவில்லை.
பெருமுதவியிது அம்மாவுக்கு என்னால்.

**

பத்து மணியளவில் மாமரத்தடியில் அம்மாவுடன்
ஒத்திருந்து கிடுகு பின்னியது, ஈர
ஓலையிடுக்கில் நத்தை, புழுவென்று
அருவருத்தது வழமை வாழ்க்கை.

**

முத்துமாரி கோயில் ஆலமரக் காற்று
மணியண்ணையுடன் வேலியடைக்கக் குத்தூசி கோர்த்தது
பனை வளவுப் பனங்கிழங்குப் பாத்தி
பாட்டன் தோட்டத்தில் மிளகாய்ப் பழம் பிடுங்கினோமே!

**
______________

 

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 7-3-2017

nanry- 8

483. எங்கே மனம்!

bbb

ethaya matam

*

 எங்கே மனம்!

*

*

நியாயமாக நடக்காத உன் மனம்
அநியாயத்திற்கு வீணாகத் துணையான மனம்
வியாபிக்கும் இடம் எங்கே சொல்!
தயாள மனதை எங்கே தொலைத்தாய்!

பொங்குதே மனம் அமைதி இன்றி.
தங்கு தடையின்றி அன்று படித்த
தங்கமான நீதிக் கருத்துகள், நெறிமுறைகளில்
முங்கிய அந்த அமைதி மனமெங்கே!

போதுமெனும் மனமின்றி ஏனிந்தப் பேராசை!
மோதும் உணர்வு ஏன் வந்தது!
ஓதிய அம்மாவினாசைகள் எங்கு ஒழுகியது!
வாதிடவில்லை! பதுக்கினாயா! எங்கே மனம்!

கங்கு எரிந்தாலும் அச்சமற்று உள்ளதா!
சங்கே முழங்கத் தமிழ் பேசுதா!
எங்கே மனம்! நியாயமாக உள்ளதா!
அங்கே தங்கிடவை வீரம், துணிவை!

நீதிமன்றம் உன்மனம்! நாளும்
கோதும் நற் செயல்களால் கழிவுகள்
ஒதுக்க தேடு! எங்கே மனம்!
புதுப்பித்திடு! புனிதமாக்கு! துளசிதளமாக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 2-3-2017

*

ethayam

482. சத்திய சோதனை

1904049_698698750212867_5052261578001816809_n

சத்திய சோதனை

*

*

சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.

***

சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.

***

உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.

***

வேதா. இலங்காதிலகம் டெனமார்க்.

7-3-2017

 

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

481.- ஈ – முதலெழுத்துக் கவிதை.

eeyanna

*

– ஈ –    முதலெழுத்துக் கவிதை. 

*

ஈதலாம் வறியவருக்கு உதவுதலில் முன்னிடம்
ஈட்டினார் அன்னை திரேசாவோடு பலர்.
ஈகையாளனாக உலகில் எல்லோரும் ஆவதில்லை
ஈவிரக்கமுடன் தானமிடுவோர் உயர்வு பெறுகிறார்.
ஈடுபாட்டுடன் எழைகளுக்குக் கொடுத்தல் கருணை.
ஈண்டு வாழும் வரை தயாளராயிருப்போம்.
ஈன்றோரும் பெருமையுறுவர் அங்கவீனரை அணத்தால்.
ஈசனே! ஈச்சப்பியான வாழ்வெனக்கு வேண்டாம்.

*

(வேறு)

ஈரமுடை(அன்புடை) பெற்றோர் ஈரம் (கரும்பு).
ஈரம் (அறிவு) தந்தார் நன்றி..
ஈரம் (அருள்)பொழிந்தார் இறைவன்.
ஈரமானது(குளிர்ச்சி)இவைகளால் மனம்.

*

27-2-2017
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

Swirl divider v2

480. அச்சாணி இல்லா தேர் முச்சாணும் ஓடாது

 

puthumai-feb-20-17

 

தக்கபடி அச்சில் நிற்கும் ஆணி
சக்கரங்கள் கழலாது காக்கும் ஆணி
சக்கரக் காப்பாணி கழன்று விட்டால்
சக்கரம் மூன்று சாணும் ஓடாது.

நம்பிக்கையாம் அச்சாணி வாழ்வுச் சக்கரத்தில்
தும்பிக்கையாகும் இது வெற்றிப் பிறப்பிடத்தில்.
நம்பிக்கை நழுவிடில் புத்துணர்வும் மகிழ்வும்
வெம்பிப் பாழாகும் முயற்சியும் வெற்றியும்.

தலைமைத்துவம் எனும் அச்சாணி நிர்வாகத்தை
அலையாது கட்டினுள்ளே காக்கும் பார்வை.
நிலையான அன்பு உறவிற்கு அச்சாணி
அலையாத ஒழுக்கம் மானுடம் காக்குமேணி.

உறவிற்கு ஆதாரம் ஒட்டும் அன்பு.
உயிர் வாழ்ந்திட அச்சாணி உணவு.
உழவுத் தொழில் உலகிற்கே அச்சாணி.
உயர்த்திடும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்.

மனவளம் சிறக்க நூலகம் ஆதாரம்.
மழை வளம் சிறக்க மரங்களாதாரம்.
இழையும் ஆதாரங்கள் நிரந்தர அச்சாணிகள்.
இலக்கில்லா வாழ்வும் அச்சாணியற்ற தேர்.

தண்டவாளம் இன்றேல் புகைவண்டி ஓடாது.
அண்டமளவு மனித சாதனைகள், அவன்
வெண்டிரை (கடல்) அளவு முயற்சியால் தானே
கண்டிட இயலாத அச்சாணி இதுவே.

கடல் போல் காரியங்கள் செய்திட
உடல் நலம் பெரும் அச்சாணி.
உடலியங்க உயிரோட்டம் சுவாசம் தானே
உயிர் இயங்கும் உன்னத உத்தரவாதம்.

புலம் பெயர்ந்த வாழ்வு அசைய
நலமான மொழியே நல் அச்சாணியானது.
கால சக்கரம் சுழல தாங்குவது
அச்சாணி அனுபவங்கள், கற்பனைகள் தானே.

பணபலம், குண்டர் பலம் தேர்தலிற்கு
பணம் வாழ்விற்கு அச்சடித்த அச்சாணி.
மாற்றத்திற்கு அச்சாணி போராட்ட குணம்.
சினிமாவின் அச்சாணி நல்ல இயக்குனர்.

சிறுவர்கள் சமுதாயம் நாட்டிற்கு அச்சாணி.
சிறுவரான இன்றையவர் நாளைய தலைவர்.
சிறப்பு நினைவால் சிறப்பு நிகழ்விற்கும்
அதிட்டமீயும் அச்சாணி அவரவர் கையிலே.

 

வேதா. இலங்காதிலகம்.
 டென்மார்க்.- Feb- 2017

 

lines-stars-243923

65. பா மாலிகை (காதல்)

12814698_740758996061492_251888590059564690_n

*

காதலன்றி உலகிலை

*

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.
_____________ .

pink

 

 

Next Newer Entries