486. நள தமயந்தி

 

nilave malare- 39

*

 நள தமயந்தி


நள தமயந்தி மகாபாரதத்தின் துணைக்கதை.
நவரசங்களுடைய ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.
நளவெண்பாவென புகழேந்திப் புலவர் எழுதினார்.
நிடத நாட்டு நளமகாராசன் ஆட்சி
நிசமான அருளாட்சியாக அமைந்ததாம் அன்று.
இளம் அரசன் நளன் நந்தவனவுலாவில்
அங்கிருந்த தடாகத்தில் அழகிய பறவையாம்
அன்னத்தைக் கண்டு அதனழகில் மயங்கினானாம்.

*

அதன் வெண்மை நிறம் பச்சையிலைகளில்
அழகொளிரப் பிரதிபலித்தது. கால்களின் சிவப்பு
தடாகத்து நீரிலும் பரவிச் சிவந்ததாம்.
தான் பிடித்தால் கைபட நோகுமென்று
பணிப் பெண்ணதைப் பிடித்து வரச்செய்தான்.
அவனிரக்க குணமறிந்து அன்னமவனிடம் தஞ்சமானது.
உன்னழகு நடை பெண்கள் நடைக்கொப்பா!
அறிந்திட அழைத்தேன் அஞ்சாதே என்றான்

*

அச்சம் விலகிய அன்னம் பேசியது
‘ நான்கு குணங்களும் நாற்படை ஆனவள்
காற்சிலம்பு முரசாக கண்கள் வாள்
வேற் படையாக சந்திர முகமுடையாள்
உன்னழகு அறிவிற்கு விதர்ப்பதேச இளவரசி
தமயந்தியீடானவள் ‘ என்றது. யாரது தமயந்தியென
நளன் காணாமலேயவளில் காதல் கொண்டான்.
மையல் மீறி அன்னத்தைத் தூதாக்கினான்.

*

அன்னம் தமயந்தியிடம் குளிரொளியுடையான், பெருந்தோளான்
நல்லாட்சியாளன், பெண்கள் மனங்கொள்ளை கொள்பவனென
நளன் பற்றியெடுத்துக் கூறியது. நளபுகழாரத்தில்
தமயந்தி மயங்கி தந்தையின் சுயம்வரத்திற்கு
நளனை அழைக்கிறாள். தமயந்தியழகில் மையலுற்ற
தேவர்களைவரும் நளனுருவில் சுயம்வரத்திற்கு வருகின்றனர்.
குழம்பிய தமயந்தி கண்களிமைப்பில் பேதங்கண்டு
நளனுக்கு மாலையிட்டு மகிழ்ந்து வாழ்ந்தனர்.

*

ஏமாந்த சனீசுவரன் வன்மத்தால் நளன்வாழ்வில்
பன்னிரு வருடங்கள் பீடித்து ஆட்டுவித்தான்.
சூதாடி நாடிழந்து, குழந்தை மனைவிபிரிந்து,
கார்க்கோடகன் பாம்பு கடித்து, தேரோட்டியாக,
சமையற்காரனாகி இரண்டாம் சுயம்வரத்தில் குடும்பத்தோடிணைகிறான்.
பல படிப்பினைக் கதையிதைக் கேட்டால்
சனிபாவம் தொடராது என்பது இறுதிவரிகள்.
சுருக்கமிது. விரித்து வாசியுங்கள் பலனடையலாம்.

*
_______________________________________     
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 29-3-2017
*
pink

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 05, 2017 @ 22:19:40

  கவிஞர் வி.ஜே.பி. ரகுபதி:- சிறப்பு கவியே
  29 March at 11:25 ·- 2017

  Vetha Langathilakam :- கவிஞர் வி.ஜே.பி. ரகுபதி ..மகிழ்வுடன் அன்பான நன்றி உறவே.
  29 March at 11:47 – 2017

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 05, 2017 @ 22:20:54

  வெங்கடேசு :- அருமை
  30 March at 03:59 · 2017

  Vetha Langathilakam:- மிக அன்புடன் கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும் உறவே.
  30 March at 12:07 ·-2017

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 06, 2017 @ 01:10:15

  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: