14. கண்ணதாசன் சான்றிதழ் (15)

 

aaddukuddy

*

ஆட்டுக்குட்டியும் நானும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் (15)
இரண்டாம் நிலை – 4

 (கதை வரிகள்)

கருமேகப் புகை சூழ்ந்த கவலை
முகத்தில் அம்மா. ஏனம்மா என்றால்
எமது ஆடு குட்டியீனப்போகுது என்றார்.
ஏதுமறியாப் பால பருவத்தில் நாம்.

காகம் வராது நீங்கள் காவல்
காக்க வேண்டும் என்றார் அம்மா.
ஆட்டுக் கொட்டில் ஓரமாக இருக்கையிட்டோம்.
குச்சியுடன் அமர்ந்து ஆவலாய் காத்திருந்தோம்.

குட்டி நீரில் தோய்ந்து விழுந்தது.
எடுத்துச் சாக்கில் படுக்க வைத்தாரப்பா.
இளஞ்சிவப்பு நிறக் கூம்பு முனையாகக்
குட்டியின் பாத முனை தோன்றியது.

இப்படியிருந்தால் குட்டி எப்படி நிற்கும்!
என் சிறு மனதுச் சிந்தனை!
காற்றுப் பட்டால் முனை முற்றுதலாகுமாம்
பிஞ்சுக் காலடியை (குளம்பை) நகத்தால்
வேகமாகக் கிள்ளி மட்டப் படுத்தினாரப்பா.

குட்டியைப் பிடித்தெழுப்பி நிற்க வைத்தார்.
தட்டுத் தடுமாறிச் செல்ல அடியெடுத்தது.
தள்ளாடியது தாயருகில் மெதுவாக விட்டார்
அப்பறமென்ன! மே!..மே!யென்று பாசப் பொழிவே!

தாயாடு நக்கி நக்கி வெப்பமாக்கியது.
பஞ்சுப் பதுமைப் புது சீவனானது.
உயர் ரகக் குட்டி. மிக
நீண்ட காது ரெட்டைச் சடையாக ஆடும்.

உயரத்திலிருந்து ஒரு வட்டமடித்துக் குதிக்கும்!
என்னாலும் உன்னாலும் முடியாத சுட்டித்தனம்!
அழகு, அன்பு ஆசைப்பார்வை விலையுயர்வு!
ஓடியோடி அம்மாவை இடித்திடித்துப் பால் குடிக்கும்.

கன்னத்தை ஆசையாக உரசி அணையும்.
சின்னப் பூப்பல்லக்காய் தூக்குவேன். என்ளாளும்
என்னோடிராது தெரியும்! விற்பனையாகும் சோகமே!
என்ன ருசி ஆட்டுப் பால்!

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-8-2016

*

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 12, 2017 @ 21:31:01

  தமிழ் உதயா:- இனிய வாழ்த்துகள்
  · 4 August 2016 at 01:42
  Usharani :- மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் சகோதரி
  4 August 2016 at 02:33

  முகில் வேந்தன் :- வாழ்த்துகள்
  · 4 August 2016 at 02:40

  சுசிமணாளன் கவிச்சுடர் சுக்காம்பட்டி :-

  Palani Kumar:- உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
  · 4 August 2016 at 03:03

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 12, 2017 @ 21:32:47

  Malar Amalan :- வாழ்த்துக்கள்
  4 August 2016 at 06:45

  Sumathi Shankar:- வாழ்த்துகள் அம்மா
  · 4 August 2016 at 06:52

  Madhi Nelavu :- வாழ்த்துகள் அம்மா
  · 4 August 2016 at 07:06

  மறுமொழி

 3. JAYAKUMAR K
  ஏப் 13, 2017 @ 01:17:44

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 13, 2017 @ 01:49:53

  அருமை…

  வாழ்த்துகள் அம்மா…

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 20, 2017 @ 18:34:47

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: