8. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது

 

puthumai. march 17

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது

 
பூக்கள் படையுடனான இன்ப மாளிகை வீடு.
பாக்களவிழும் அமைதி ஆரோக்கியமான கூடு.
ஊக்கமுடைய ஊதுபத்தியாமறிவு நறுமணம் கமழ
கோதும் குறுந்தொகை மொழியாடுமில்லத்தில் வாழலாம்.
*
அன்புப் பார்வை அங்கீகரிக்கும் நாகரீகம்.
ஆதரவு மொழியுடைய செல்லச் சுவை
இதயத்தில்   தென்றல் வீசுமருமை வீட்டில்
அன்பின் மேலாண்மையுடன் ஆனந்தித்து வாழ்தலருமை.
*
தற்பெருமை பேசிப்பேசி இதயமறுக்கும் சுயநலமாய்
அற்பமாய் மூன்று வேலை செய்வதை
நற்செயலென்று பீத்தல், இதை நாள்முழுதும்
வற்புறுத்திக் கேட்க வைத்தலெத்தனை அலுப்பு!
*
இப்படியொரு மனிதருடன் காலமெல்லாம் வாழ்தல்
எப்படி அருமையாகும்! எருமையும் குடியிருக்காது.
தப்படி எடுக்கும் குடும்ப அங்கத்தவரால்
முப்பொழுதும் நாசமாகும் நிலை உருவாகும்
*
குடிகாரன் வீடு என்றும் மின்னல்
இடியுடைய சோக மழை பொழியும்
குடிலே! அறிவுக் குடை தேடியிங்கு
விடியலெனுமருமை காண புனர்வாழ்வு தேவை.
*
ஒழுக்கமற்ற பிள்ளைகளால் பெற்றவர் கௌரவம்
வழுகிடும், தன்மானம் வெகுவாகத் தலை குனியும்.
அழுகையே மூச்சுக் காற்றாகி சூனியமாகும்.
எழுகையற்ற இவ் வீட்டிலெருமையும் குடியிருக்காது.
*
கண்ணீராடும் நெஞ்சோடு கூட்டல் பெருக்கலற்ற
எண்ணங்களில் வசந்தமற்ற கருமை வீட்டில்
புண்ணாகும் மனதோடு வாழ்தல் கொடுமை.
வண்ணமாய் அருமையகம் தேடி வாழலாம்.
*
மயிலிறகு, குயிலினிமை பயிலுகின்ற பரமானந்தம்
துயிலாத புன்னகை துவளாத வீட்டில்
ஓயிலாக அமைய வாழ்தல் இனிமை.
வெயிலாக அருமையற்ற வீட்டுலகம் வேண்டாம்.
*
Vetha Langathilakam Denmark..13-4-2017
*
veeduuu
Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Bagawanjee KA
    ஏப் 16, 2017 @ 14:04:01

    #குடிகாரன் வீடு என்றும் மின்னல்இடியுடைய சோக மழை பொழியும்#
    நனைந்தாலும் குடிகார எருமைக்கு உறைக்காதே:)

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஏப் 17, 2017 @ 01:30:49

    அருமை…

    மறுமொழி

  3. JAYAKUMAR K
    ஏப் 17, 2017 @ 02:25:50

    அருமை
    உண்மை

    மறுமொழி

  4. கோமதி அரசு
    ஏப் 17, 2017 @ 11:44:53

    அருமையான கவிதை.

    மறுமொழி

  5. கோவை கவி
    மே 20, 2017 @ 18:57:13

    Ansar Shamun:- vaalthukal
    13-4-17

    Vetha Langathilakam:- மிக்க நன்றி.
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்திற்கு. dear Ansar Shamun

    ஆர் எஸ் கலா :- வாழ்த்துக்கள்
    13-4-17

    Vetha Langathilakam :- மிக்க நன்றி.
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்திற்கு. dear R.S.Kala…
    2017· 13 April at 16:45

    மறுமொழி

  6. கோவை கவி
    மே 20, 2017 @ 19:02:21

    Dharma Ktm :- அருமை அக்கா
    2017 13 April at 16:57

    Vetha Langathilakam:- மிக்க நன்றி.
    மிக்க மகிழ்ச்சி கருத்திற்கு
    201713 April at 18:45
    Maniyin Paakkal :- சொல்லாடல் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க
    18-4-17

    Vetha Langathilakam :- மிக்க நன்றி Mani…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: