489. சுமையில்லாப் பொழுதுகள்.

13072661_10208099941913503_4589521719401647376_o

*

சுமையில்லாப் பொழுதுகள்.

*

படிப்பெனும் சுமை முடிந்தாலும் உயர்
படிப்பென்ற செமினாறியம் முடிந்ததும் மிக
வடிந்தது கல்விச் சுமை. தொழிலென
படியேறி மனுக்கள் கொடுத்து வேலையிலமர்ந்தேன்.
*
முடிந்தது சுமைப் பொழுதுகள். பணியில்
கொடியேறியது ஆனந்தப் பொழுது, நிறைவு.
விடிந்தது காலம!  பணி ஓய்வூதியம்!
வடிந்தது சுமைகள்! இனிய பொழுதுகளானது!
*
துடிப்பான பேரர்களின்று தென்றலாய் எம்முள்
அடிகோலுகிறார் ஆனந்தத் தேன் அடித்தளமாய்.
குடியேறி இதயத்திலின்பப் பூவாணம் வீசுகிறார்.
நடிப்பற்ற சுமையில்லாப் பொழுதுகள் நகர்கிறது.
*
முகநூல் குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளை
மிகவும் வேண்டுதலுடன் தவிர்த்து நடக்கிறேன்.
அகம் நிறைய சுமையற்ற பொழுதுகளாய்
முகம் மலர்ந்து தமிழோடு தவழுகிறேன்.
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 15-3-2016.
ena...ena...

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஏப் 21, 2017 @ 14:04:09

  #முகநூல் குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளை
  மிகவும் வேண்டுதலுடன் தவிர்த்து நடக்கிறேன்.#
  இதுவும் ஒரு வெறுப்புடை அழைப்போ 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 21, 2017 @ 16:39:05

   இல்லை சகோதரா விரும்பித் தான் அழைக்கிறார்கள்
   நிர்வாகம் நடுவராக.அவைகளை ஏற்றால் எனது இணையத்தளம்
   பார்க்க முடியாத வேலை அதிகமாகும். அது தவிர
   எரிச்சல் பொறாமை வெறுப்புகளால் நடுவர் பணியும் களங்கமாகும்.
   நான் சுதந்திரமாக எழுதுகிறேன். வீட்டுப்பணிக்கு குந்தகம் வரக் கூடாது.
   கணவன் மனைவி உறவு தென்றலாக இருக்க வேண்டும்.
   பேரர்கள் இருக்கிறார்கள்அவர்களுடன் கொஞ்சிக் குலாவுவது தடைபடக் கூடாது.
   வில்லங்கங்களை விரும்பி இழுக்க விரும்பவில்லை. freelance writter..
   My car my petrol…
   நன்றி சகோதரா. கருத்திடலிற்கு….

   மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 21, 2017 @ 14:41:25

  தமிழோடு தொடர்ந்து கவி நடை போடுங்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி
  ஏப் 22, 2017 @ 07:10:22

  //அகம் நிறைய சுமையற்ற பொழுதுகளாய்
  முகம் மலர்ந்து தமிழோடு தவழுகிறேன்//

  மிகவும் இரசித்தேன் சகோ… வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 21, 2017 @ 20:33:32

  Sujatha Anton :- துடிப்பான பேரர்களின்று தென்றலாய் எம்முள்
  அடிகோலுகிறார் ஆனந்தத் தேன் அடித்தளமாய்.
  குடியேறி இதயத்திலின்பப் பூவாணம் வீசுகிறார்.
  நடிப்பற்ற சுமையில்லாப் பொழுதுகள் நகர்கிறது.
  சுமைகள் இல்லாத குதூகலிப்பு பொழுதுகள். அருமை.
  · 5 May 2016 at 22:32

  Vetha Langathilakam:- Mikka nanry.
  · 5 May 2016 at 23:05

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 22, 2017 @ 19:53:26

  Maniyin Paakkal:- நிறைவான ஆக்கம்

  Vetha Langathilakam :- அன்புடன் கருத்திற்கு மிக்க நன்றி மணி…
  மிக்க மகிழ்ச்சி.
  22-5-2017

  Subajini Sriranjan :- மிகப் பெரிய வரம்
  22-5-2017

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி சுபா.
  கருத்திடலிற்கு மிக்க நன்றி.
  22-5-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: