22. வெற்றி.

Now Vethri is 5 years with bro Chola

IMG_0037[1]

வெற்றி கெட்டிக் காரனாக்கும்!…

அம்மாப் பால் தந்து அம்மா
அலாரம் வைத்து ஓடி விட்டார்.
அப்பம்மா மடியில் சிறிது மயங்கினேன்.
அப்புறமும் பால் சூப்ப ஆசையாகினேன்.
அழுது பார்த்தேன், அப்பம்மா ஆட்டினார்.
அடம் பிடித்தேன், அழுது கைகளை
வீசினேன். வாயருகேயெல்லோ விரல்கள் வந்தது!
அப்பாடியோ! பெரு முயற்சி செய்தேன்!

*

அகப்பட்டது!…அகப்பட்டது!.. பெருவிரல் வாயினுள்ளே!
ஆசையாய்ச் சூப்பினேன்! வெற்றி கெட்டிக்காரனாக்கும்!
அம்மா வரவில்லை!..அழுதேன்!…அழுதேன்!….
அப்பம்மா ஆயிரம் கதை சொன்னா…
அப்பாவுக்கு என் சத்தம் கேட்டது.
ஆசையப்பா நீல நிறச் சூப்பியை
அன்பாகத் தந்தார்…ஓ!…என்ன சுகம்!…
சூப்பிச் சூப்பித் தூங்கியே விட்டேன்.

*

அப்பம்மாவும் போய்விட்டார்.

*

Vetha. Langathilakam. Denmark.  2011

 

baby-items

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 24, 2017 @ 13:08:03

  படத்தில் இருப்போர் தங்களது பெயரனும்,பெயர்த்தியுமா
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 24, 2017 @ 21:22:11

   இருவரும் ஆண் குழந்தைகள் வெற்றி 5 வயது.
   சோழன்3 வயது. மகன் வழிப் பேரர்.
   எங்கள் வாழ்வில் தேனூற்றுபவர்கள்.
   மிக்க நன்றி உறவே.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: