491. ஆசியுடைய வாசிப்பு

 

book

*

ஆசியுடைய வாசிப்பு

*

வாசிக்க வாசிக்க மன
பாசிப் படை விலகும்.
தூசியும் கரை ஒதுங்கும்.
யோசிக்கும் உணர்வு பெருகும்.

*

யோசிக்க சந்தேகம் உயரும்.
யோகமான தேடல் பெருகும்.
வாய்ப்புகள் எம்மை நெருங்கும்.
வாய்த்திடும் பல நிகழ்வுகள்.

*

வாத்தியாராகும் இன்பம் துன்பம்
நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவ பாடம்
கோத்திடும் மனப் பக்குவம்

*

பூவெனப் பயன்பாடு பூக்கும்.
பூவாச மதிப்பு பெருகும்.
பூரண மகிழ்வு மலரும்.
பூசிடும் செழுமை வாசிப்பால்.

*

உன்னை மறப்பாய்!
உலகை அளப்பாய்!
உண்மை உணர்வாய்!
ஊற்றான அறிவால்!!

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 23010.

*

நன்னூல்களே உற்ற நண்பன்.

புத்தகம் புத்தியின் சகவாச சங்கமம்
சுத்த அறிவின் சஞ்சார மைதானம்.
புத்தக அறிவொளி நிதானம் நம்
சித்தத்துத் தூசிகள் அகற்றும் சாதனம்.

*

வாசிப்பு தீபம் ஏற்றிடும் நிறைவு
வாணி கடாட்சம் ஏந்தும் நிறைவு.
வாசிப்பு வெள்ளம் உயர, அறிவு
விருட்சம் உயரும், வாகை நெருங்கும்.

*

நம்பிடும் நண்பனும் கைவிடுவான் நாம்
நம்பிடும் நூல்கள் கை கொடுக்கும்.
வம்பிலிருந்து நம்மைக் காக்கும். எம்
வெம்பிய மனதிற்கு மகா துணையாகும்.

*

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
8-6-2016

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2013/07/13/28-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/

*

 

book - 4

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. raveendran Sinnathamby
  ஏப் 25, 2017 @ 09:40:50

  very nice poem. congrats.

  vathiri S.Raveendran.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஏப் 25, 2017 @ 12:27:44

  சிப்பு வந்த பின்பு வாசிப்பு குறைந்தாலும் ,வாசிப்பு என்றும் சுகமே 🙂

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 23, 2020 @ 10:31:55

  Subajini Sriranjan :- மௌனமான ஆசான்
  அழகான பா
  23-4- 2020
  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி சுபா..

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 23, 2020 @ 10:32:46

  Nila Puttalam :- சிறப்பு.. அழகிய வரிகள்..
  23-4-2020
  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி Nila…..

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 23, 2020 @ 10:35:03

  anjula Kulendranathan :- மெளனராகம்
  23-4-2020
  Vetha:-
  மகிழ்ச்சி கருத்திடலிற்கு. அன்புடன் மனமினிக்கும் நன்றிகள்

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 23, 2020 @ 15:12:39

  Lingathasan Ramalingam Sornalingam:-
  “நம்பிடும் நண்பன் கூட கைவிடுவான்; நல்ல நூல்கள் கைவிடா” அருமை, அருமை
  with wishing photo 23-4-2020
  Vetha Langathilakam:-
  நேசமுடன் மகிழ்வு சகோதரா.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 25, 2020 @ 17:30:17

  Ashok MA Mphil :- அழகும்மா..!
  with photo
  23-4-2020
  Vetha Langathilakam:- Thanks ashok Makilchchy….

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 25, 2020 @ 17:34:25

  பேச்சியம்மாள் ப்ரியா :- இலக்கணம்
  கொஞ்சி விளையாடுகிறது கவிதையில்…
  25-4-2020
  Vetha Langathilakam :- நேசமுடன் மகிழ்ச்சி சகோதரி…
  தங்கள் இரசனைக்கு நன்றி

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 12, 2020 @ 08:52:32

  Ruba Sothilingam:- சிறப்பு
  12-5-2020
  Love

  Vetha Langathilakam :- அன:புடன் மகிழ்ச்சி. சகோதரி .
  உங்கள் கருத்தது ஊக்கம் உடைத்து
  எம்மை சோர்வடையச் செய்யாது.
  வாருங்கள் மீண்டும்.
  5-5-2020
  Like

  Subramaniam Kandiah :- வாழ்த்துக்கள் அம்மா.
  5-5-2020
  Like

  Vetha Langathilakam :- சுகமாக இருக்கிறீர்களா? ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும். மகிழ்ச்சி
  like

  Sujatha Anton :- யோசிக்க சந்தேகம் உயரும்.
  யோகமான தேடல் பெருகும்.
  வாய்ப்புகள் எம்மை நெருங்கும்.
  வாய்த்திடும் பல நிகழ்வுகள்.
  அருமை கவிநயம்.
  12-5-2020

  Like
  ·
  Vetha Langathilakam:- கருத்தது ஊக்கம் உடைத்து
  எம்மை சோர்வடையச் செய்யாது.
  வாருங்கள் மீண்டும். Sujatha…..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: