29. திருவள்ளுவர்.

 

 

4 வரிப் போட்டி

12928119_1746698228949757_1906415748366125523_n
¤

(தின்மை – தீமை)

குன்றாத பகவன்
தின்மையற்ற ஆதிக்கும்
சென்மமெடுத்தார் செந்நாப்போதார்
என்ற திருவள்ளுவர்.
¤
குன்றுகள் உடையதாம்
மன்னராம் வள்ளுவம்
என்ற நாட்டிற்கு!
நன்கு வேட்டையாடினாராம்.
¤
முன்னோடி திருவள்ளுவர்
இன்னுயிர் மனைவியாக
மென்மை வாசுகியைத்
தன்னுடையவள் ஆக்கினார்.
¤
அன்றாடம் போற்றி
இன்பித்துப் படியென
இன்கவி குறளை
கன்னலமுதாயீந்தார் திருவள்ளுவர்.
¤
தன்னிகரற்ற வாழ்வியல்
நன்மார்க்க நீதிகள்
மன்னுயிர்க்கு ஈந்தார்.
நன்கொடை திருக்குறள்.
¤
பன்முகக் கூறுகளுடைய
ஊன்றுகோல் வள்ளுவம். (திருக்குறள்)
ஆன்மிக அறம்
அன்றாட நெறிகளுடையது.
¤
அன்பான ஒளவையார்
அன்று மதுரையில்
நின்றுதவினார் திருக்குறள்
நன்கு அரங்கேற.
¤
கன்மேலெழுத்து வள்ளுவரது
நன்னூல் திருக்குறள்.
சென்னையில் வள்ளுவருக்கு
இன்னமுதக் கோட்டமுண்டு.
¤
நன்றி மறப்பது
நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது
நன்றென்றார் வள்ளுவர்
¤
தன்னீர்மை பெருக்கிடும்
என்றறிந்து நாட்கனைக்
கொன்றிடாதே திருக்குறள் 
உன்னை சான்றோனாக்கும்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-8-2016.

 

வேறு

தமிழுக்கு உயிரான வள்ளுவனே

முன்னோடியான இவர் தீமையற்ற ஆதிக்கும்
குன்றாத பகவனுக்கும் செந்நாப்போதார் என்று
இன்கவியாகப் பிறவியெடுத்த மகான் வள்ளுவர்.
இன்னுயிர்த் துணைவியாக வாசுகி இணைந்தார்.

கன்னலமுதாய் இன்கவியான குறளை ஈந்தார்.
நன்மார்க்க நீதிகள் நிறைந்த தன்னிகரற்ற
நன்கொடையாக மன்னுயிர்க்குதவும் நூல்.
பன்முகக் கூறுகளுடைய ஊன்றுகோல் வள்ளுவம்.

ஆன்மிக அறம் அன்றாட நெறிகளுடையது.
அன்று மதுரையில் திருக்குறள் அரங்கேற
நின்றுதவியவர் அறிவு, அன்புடைய ஒளவையார்.
சென்னையில் வள்ளுவருக்கு இன்னமுதக் கோட்டமுண்டு.

கன்மேலெழுத்தான ஒரு நன்னூல் திருக்குறள்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மற என்றார்! ஒன்றல்ல!
ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்கள்!

தமிழர் பண்பாட்டுச் செறிவின் அடையாளம்.
தமிழின் அகரம் அகராதி திருக்குறள்.
தமிழுக்கு உலக இலக்கிய அரங்கில்
தகவுடைய உயரிடம் தந்தார் திருவள்ளுவர்.

11-6-2018

 

 

end

 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 26, 2017 @ 14:08:03

  அருமை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. ramani
  ஏப் 26, 2017 @ 15:25:20

  அற்புதமானக் கவிதை
  உங்களுக்கு மட்டும் மோனை எப்படி
  இப்படிச் சரளமாய் இயல்பாய் வந்து
  விழுகிறது…
  பொறாமையுடனும்…வாழ்த்துக்களுடனும்

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஏப் 26, 2017 @ 15:55:57

  #அன்பான ஒளவையார்
  அன்று மதுரையில்
  நின்றுதவினார் திருக்குறள்
  நன்கு அரங்கேற.#
  மதுரையில் எனக்கு இது புtதிய செய்தி 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   மே 01, 2017 @ 13:21:00

   திருக்குறள் அரங்கேற்றம்:
   மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

   இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.

   திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

   திருவள்ளுவமாலை:
   வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

   “ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
   போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
   வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
   சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

   சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
   http://naganvel.blogspot.dk/2012/01/blog-post_24.html

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: