493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)

sollalaku nool

*

நிலாமுற்ற குழுமம் கடந்த ஆண்டு செய்த விழாவில்புத்தகம் வெளியிட்டனர் அதில் வந்த எனது ஒரு கவிதை இது.

*

*

நிலாமுற்றம் கவிதைப் போட்டி 8.7.2016

சொல்லழகு.

சொல் மனிதன் சொன்னதாலானது.
சொல்லழகால் மொழி உருவானது.
சொல்லிலுண்டு மொழியின் உயிருடல்.
மனிதன் மொழிந்ததாலானது மொழி.
சொற்கள் சேர்ந்தால் சொற்றொடராகும்.
சொல்லிற்குப் பல் பிரதானம்.

*

ஓரெழுத்து ஈரெழுத்தாம் பல
சொல்லழகு தமிழிற்கு அழகு.
ழுகர ளகர சொற்கள்
தமிழின் மகுட வைரங்கள்.
மயங்கொலிச் சொல்லழகும் உண்டு..

*

இடமிருந்து வலமாக வலமிருந்து
இடமாக வாசிக்கும் சொல்லழகு
விகடகவி திருபருதி என்றுளது.
ஒரு சொல்லிற்கு பல பொருளுடைத்து.
ஓரெழுத்துச் சொல் நாற்பத்தேழு உண்டு.

*

சொல்லழகு சட்டென்று மனங்கவரும்.
சொன்னார் ஒளவைப் பிராட்டியர்
சொல் திறம்பாமை கற்பெனப் படுவது.
அம்மா என்ற சொல்லழகு.
மம்மா மம்மி எமக்கெதற்கு.

*

சொல்லழகு இல்லையேல் சுவையேது.
பேச்சினில் நிறையும் சொல்லழகும்
கவிஞனின் கவிதைச் சொல்லழகும்
இதயத்தைத் தாலாட்டி என்றும்
இணைந்திட வைக்கும் அமுதவழகு.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016.

குழுவினருக்கு  மனமார்ந்த நன்றிகள்.

 

No automatic alt text available.

 

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 22, 2017 @ 12:25:00

  Vetha Langathilakam:- Dear Lingathasan Ramalingam Sornalingam நீங்கள் விருப்பம் போட நான் அழித்து விட்டேன்.
  மன்னிப்புடன் இப்போது பாருங்கள்.
  2017 – · 4 May at 23:02

  Lingathasan Ramalingam Sornalingam :- Vetha Langathilakam Aunty. I will like the post right now & read that tomorrow. Hope that’s okay with you 😃
  2017 -· 4 May at 23:06

  Vetha Langathilakam :- well come always… Thank you.. இப்பெல்லாம் கருத்துகள் விழுவது குறைவு. இதற்காக நான் எழுதாமல் இருக்க முடியுமா?
  என் வழியில் நான் போவேன்.
  2017 – · 4 May at 23:11 · Edited

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 22, 2017 @ 12:26:24

  Subajini Sriranjan :- சொல்லழகு இல்லையேல் கவியழகு ஏது//அருமை
  2017 – · 5 May at 14:24

  Vetha Langathilakam :- unmai நன்றி சுபா கருத்திடலிற்கு.
  மகிழ்ச்சி.
  இதை வாசித்துக் கருத்திடவே மக்களிற்கு …See more
  2017 -· 5 May at 20:13

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: