47. பாமாலிகை (தமிழ் மொழி)

இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது இனிய தமிழெழுது- வரை (கீழிருந்து பாருங்கள்)

 

26.jpg.ss

*

செந்தமிழ் வாழியவே!

*

செந்தமிழ் வாழியவே! எம் வேர்!
நந்தமிழ் வாழியவே! எம் உயிர்!
தீந்தமிழ் தொல்காப்பியத் தமிழ் பார்!
அருந்தமிழை அழகாய்ப் பேசுவீர்!

*

செம்மொழி! திராவிட மொழிக் குடும்பத்தின்
முதன்மை மொழியில் ஒன்று, நறுந்தேன்!
பைந்தமிழ்! எட்டுக் கோடியினருக்கும் மேலானவர்
அருந்தமிழைப் பேசும் பெருமையுடைத்து.

*

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது!
மிரண்டிடாதீர்! குமரிக்கண்டத்தில் தோன்றிய மொழி!
முரணற்றது மணிமகுடம் சங்க இலக்கியங்கள்!
திரண்ட இலக்கிய மரபுடைத்து.

*

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நாலடியார்
பெரும் பொக்கிசப் புதையல் தமிழ்!
கருத்தோடு காத்து வளர் செந்தமிழை!
விருப்போடுயர்ந்து செந்தமிழ் வாழியவே!

*

வள்ளுவர், கம்பர், பாரதி, ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி!
அள்ளி அணையுங்களெம் தெய்வ மொழியை!
தள்ளாதீர் செந்தமிழ் வாழியவே!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2016

*

end

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  மே 05, 2017 @ 14:29:53

  செந்தமிழ் வாழியவே
  அருமை

  மறுமொழி

 2. Bagawanjee KA
  மே 05, 2017 @ 15:06:45

  தமிழின் அருமை ,இந்திய அரசுக்கு தெரிய மாட்டேங்குதே ?இனி மேலாவது புரிந்து கொள்ளட்டும் 🙂

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 06, 2017 @ 01:21:14

  பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  வழக்கம்போல அருமையான மாலை தமிழுக்கு. நன்றி.

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 21, 2018 @ 10:51:16

  Vetha Langathilakam தாய்மொழி பற்றிய கவிதைகள் 46 பதிந்துள்ளேன். பார்த்துள்ளீர்களா!!!!….

  Jasmin Kennedy :- அத்தனையும் தமிழ் போல்
  அழகு

  Vetha Langathilakam:- nanry sakothari..

  Sujatha Anton :- அத்தனையும் பொதிந்த தமிழ். அதற்குள் பொதிந்த அத்தனை கருத்துள்ள கவிநயம். அதை வாசிக்கும் போது அதிலும் ஒரு ரசனை
  கலந்த தமிழ். வாழ்க தமிழ்.!!!

  Vetha Langathilakam :- nanry Sujatha..

  Ratha Mariyaratnam :- மிக அருமையாகக் கூறியுள்ளீரகள் அழிந்து போன எம் சாம்பிராட்சியங்கள் மறைக்கப்பட்டுவரும் உண்மைகளாகும். சமீபத்தில் வாசித்தேன் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சிக்கு இந்திய அரசாங்கம் நிதியை காரணம் காட்டி பின்வாங்கியது 2017

  Vetha Langathilakam :- Nanry sis

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 25, 2019 @ 09:29:18

  கவிஞன் சேகர் மருது உமா :- அருமை

  Vetha Langathilakam :- Mikka nanry sako.
  2017
  Sukumaran Veeraputhiran :- NICE

  Vetha Langathilakam:- Mikka nanry sako..
  2017
  Vetha Langathilakam நக்கீரன் மகள் :- அருமை

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மிகிழ்வும் சகோதரி.

  சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி :- வாழ்த்துகள் அம்மா

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மிகிழ்வும் சகோதரா.

  2017
  Sujatha Anton :- வள்ளுவர், கம்பர், பாரதி, ஒளவை
  அள்ளிப் பரப்பிய ஆதி மொழி!
  அள்ளி அணையுங்களெம் தெய்வ மொழியை!
  தள்ளாதீர் செந்தமிழ் வாழியவே!
  நிறைந்த தமிழ் கற்றுத்தெழிந்தவர்க்கு அதன் இனிமை சுவையானது. அருமை.
  2017
  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மிகிழ்வும் சகோதரி
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: