494. (கடைசி வரி:- கண்ணுக்குள் நிலவு)

 

Image may contain: 1 person

*

நீயென் கண்ணுக்குள் நிலவே

(கடைசி வரி:- கண்ணுக்குள் நிலவு)

*

எண்ணுக்குள் எண்ணாய், எழுத்துக்குள் எழுத்தாய்
மண்ணுக்குள் வேராயென் மனதோடு தூராய்
எண்ணுதலிலும் எப்போதும் என்னோ டிருப்பவனே
மண்ணிலே நாமிருவருமெமக்குக் கண்ணுக்குள் நிலவே!

*

அன்பில் நாமொருவருககொருவர் சுமை அல்ல.
இன்ப நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்து
நன்றாகக் கை கால்களையசைத்துத் தெம்பாக
இன்னலற்று இருப்போம் கண்ணுக்குள் நிலவே!

*

உடலில் பல மாற்றமானாலும் எம்முற்சாகப்
படலை திறந்து மனதிலிளமையாய்க் களிப்போம்.
உடலுறுப்புச் செயலின் குறைவே முதுமை.
திடமாயியற்கையோடிணைந்து நல்லுணவோடிருப்போம் கண்ணுக்குள் நிலவே!

*

முதுமைப் பாலத்தில் ஒருவரையொருவர் சார்ந்து
பதுமை போலசைந்து பழகிய வழியினில்
மெதுமையாய் நகருதெம் வாழ்வு திருப்தியாக.
புதுமையல்ல நாமொருவருக்கொருவர் கண்ணுக்குள் நிலவு.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 4-5-2017

cloudbar550

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 08, 2017 @ 09:49:44

  தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை :- மண்ணுக்குள் வேராய் அன்பு..
  2017 – · 5 May at 04:18

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி உறவே
  2017 – 5 May at 09:37

  மறுமொழி

 2. கோமதி அரசு
  மே 09, 2017 @ 03:48:52

  முதுமைப் பாலத்தில் ஒருவரையொருவர் சார்ந்து
  பதுமை போலசைந்து பழகிய வழியினில்
  மெதுமையாய் நகருதெம் வாழ்வு திருப்தியாக.
  புதுமையல்ல நாமொருவருக்கொருவர் கண்ணுக்குள் நிலவு.//

  அருமையான கவிதை.
  படம் அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: