11. சான்றிதழ்கள்.( காட்டுமல்லி பூத்திருக்கு)

 

 

*

நிலாச்சோறு – நாட்டுப்புறப் பாடல்

 காட்டுமல்லி பூத்திருக்கு.

*

காட்டு மல்லி பூத்திருக்கு
காவலின்றி விரிந்திருக்கு
பாட்டுக் கட்ட ஆசையிருக்கு
நாட்டுப் பாடல் தானா வருது
நீட்டி முழக்குவோம் நேசமாக. (காட்டு)

*

கேட்டுப் பறிக்கத் தேவையில்லை
கேள்வி கேட்க யாருமில்லை
மூக்குப் பறிக்கும் வாசைன
முகர்ந்து பார்க்கத் தேவையில்லை.
மாலை கட்டிச் சூடுவோம். (காட்டு)

*

மலர் பந்தல் விரிப்பு.
மலையருவியருகில் தாளம்.
மனவருத்தமெம் உணவு குறைவு
மாய்ந்து வேட்டையாடுவோம்.
மகிழ்ந்து சேர்ந்து உண்போம். (காட்டு)

*

மரத்து மேல வீடு.
யானை வந்தால் ஓடுவோம்.
யாகமே யெம் வாழ்வு
புலி வரவுக்கும் குறைவில்லை.
புருவம் உயர்த்தும் வாழ்வே. (காட்டு)

*

வெள்ளைக்காரன் வருவானிங்கு.
வெகுமதிகள் தருவான். கூடாரம்
அடித்துக் கும்மாளம் போடுவான்.
காட்டு மல்லி மாலையை
கழுத்திலணிந்து ஆடுவான் (காட்டு)

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 23-4-2017

*

underline

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  மே 09, 2017 @ 12:44:50

  காட்டுமல்லி பா வாசம் அருமை 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   மே 09, 2017 @ 12:52:33

   சகோதரா தங்கள் வலைக்கு காலை வந்தேன் கருத்திட
   தமிழ்மண முயற்சியில் சேவர் பிழை என்று மக்கர்
   பண்ணியது பின்பு முயற்சித்து வருவேன்
   இப்போது தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
   மகிழ்ச்சி

   மறுமொழி

 2. கோவை கவி
  மே 23, 2017 @ 12:42:35

  Maniyin Paakkal :- காட்டு மல்லியாய் மணக்கிறது பா
  11-5-2017-
  Vetha Langathilakam ஓ! காட்டுமல்லி மணம் மணியை இழுத்துள்ளது மிக மகிழ்ச்சி சகோதரா.
  மனமார்ந்த நன்றி.
  11-5-17
  2017 · 11 May at 10:09

  Sujatha Anton :- அருமை காட்டுமல்லிகை கவிமணம் பரப்புகின்றது.
  11 May at 13:39

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி Sujatha
  மனமார்ந்த நன்றி. எங்கே இருந்திர்கள் இவ்வளவு காலமும்?…..
  காட்டில் மழை பெய்திருக்கே?
  ·2017 – 11 May at 16:30

  Sujatha Anton:- நலம் விசாரித்தமைக்கு நன்றிகள். உங்கள் சுகம் எப்படி? வழமைபோல் கனடா,மற்றும் வேலை. நாட்கள் நகர்கின்றது. உடன்
  கருத்து பதிவதற்கு சொந்த இடத்தில் இன்மையே காரணம்.
  2017 -· 11 May at 17:22

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: