496. மூன்றாம் பால். – 1 (பா மாலிகை (கதம்பம்)

*

மூன்றாம் பால். – 1

*

உடல் உணர்வுப் பின்னல்
கடலான பாலின ஈர்ப்பு.
அடலான( போர்) தனிப்பட்ட உரிமை.
இடம் (விரிவு) கண்டது மேற்கில் (முன்பே)

*

புதுமை வழியுடைய இளையோர்
‘பால் புதுமையினர் ‘ அறிவு விரிவற்றோர்
பொதுமையான மனக்குளப்பத்தில் இன்று
சதிராடிச் சமூகத்தைக் குளப்புகிறது.

*

கல்வி, மருத்துவம், சட்டத்தில்
நல்ல விழிப்புணர்வு தேவை
திருநங்கைகள், திருநம்பிகள் மூன்றாவது
ஒருமித்து இருபதுக்கும் மேலானவை (பாலினங்கள்)

*

பெண் ஆணற்ற இடைநிலைப் 
பாலினத் தோற்றம் கொண்டோர்
புராணத்தில் அலி, ஒம்போது 
அரவாணி, பொன்னைக்கா பெயராகும்.

*

சுரபிகளின் தவறாய் தன்
மரபிலே மாற்றமான பாலினம்.
‘ இப்படிக்கு ரோஸ் ‘ விழிப்புணர்வை 
அப்படி அள்ளிக் கொடுத்தது.

20-4-2017
__________  

மூன்றாம் பால். –  2

*

வள்ளுவனின் மூன்றாம் பால்
துள்ளும் உணாவுகளின் தொகுப்பால்
கள்ளெனும் காமத்துப் பால்
உள்ளுந் தோறும் இனித்தல்.

*

தொடுதல், அணைத்தல், உராய்தல்,
படுதல், அழுத்தலெனப் பல
விடுதலையற்ற உடல் மொழி
விடுதலை காம வேதனைக்கு.

*

காமத் தீயிவ் உடலவதிகள்
சாமகானம் பாடி இணைவில்
சமாதானமாவது மூன்றாம் பால்.
காதலின் சுடர் காமம்.

*

காதலதிகாரம் காமப் பாலில் 
மோதலானது பதின்மத் தொடக்கத்தில்.
மூன்றாம் பாலின் நிறைவு
முழுதான வாழ்வு தரும்.

*

அறவழியில் இல்லறம் சமை!
ஆட்கொல்லி நோயை விலக்கு!
ஆளுமைப் பரத்தமையை ஒதுக்கு
அறவாழ்வுறுத்தலே வள்ளுவனின் மூன்றாம்பால்.
*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  19-4-2017
2726040v4xjvomhhk
Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    மே 10, 2017 @ 09:51:38

    first poems comments:-
    கவிதைகள் கவிஞர்கள் புதுக்கவிஞன் :- அருமை சகோ
    2017 -· 20 April at 11:36

    Vetha Langathilakam:- Mikka nanry urave…..Makilchy..
    2017 20 April at 13:11

    வெங்கடேசு :- அருமையான சமூக சாடல்..
    2017 20 April at 14

    மறுமொழி

  2. கோவை கவி
    மே 10, 2017 @ 09:55:18

    valluvat vatpkal comments:-
    வெங்கடேசு :- அறவழியில் இல்லறம் சமை
    ஆட்கொல்லி நோய் விலக்கு..

    ஆகா! மிகச்சிறந்த வரிகள்.
    2017 – 20 April at 04:07

    Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா…கருத்திற்கு மகிழ்ச்சி.
    தலைப்பைப் புரிந்தவுடன் மளமளவென் 2 கவிதைகள் எழுதினேன்.
    வாசித்துப் பாருங்கள். உங்கள் தேர்வின் பின் எனது வலையில் போடுவேன்
    2017 – 20 April at 10:19

    பாவலர் அபி சக்தி :- சாமகாணம் பாடி இணைவில் சமாதானமாவது மூன்றாம் பால்.
    காமத்துப்பாலை கவியால் அழகுபடுத்தியுள்ளீர்
    2017 – 20 April at 14:20 · Edited

    Vetha Langathilakam :- மிக்க நன்றி Abi…கருத்திற்கு மகிழ்ச்சி.
    2017 -20 April at 14:20

    மறுமொழி

  3. கரந்தை ஜெயக்குமார்
    மே 11, 2017 @ 01:14:14

    அருமை சகோதரியாரே

    மறுமொழி

  4. கோவை கவி
    மே 14, 2017 @ 10:55:34

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: