496. மை

281c9-mai

 

*

நிலாச்சோறு – நிலவே மலரே – 52.

மை

*

அறியாமை, இளமை, இருள், களங்கம்
குறிக்கும் மையின் தன்மைகள் ஏராளம்.
முறைமை, மெய்மை நியாயமெழுதும் மை.
தெறிக்கும் அபிப்பிராயங்கள், முறிக்கும் உறவுகள்,
அறிவிக்கும் சரித்திரங்கள், உலகாளும் தகைமைகளை
முரசறையும் மையினாளுமை, பெருமை வல்லமை.

*

தோழமை அன்பின்மை யால் இல்லாமை ஆகும்.
ஆதரவின்மை உலகில் பாரிய வறுமை.
பேசாமை, பாராமை உறவிற்குப் பகைமை.
உரிமை கொண்டுறவைச் சீர்மை செய்வோம்.
இளமை, முதுமை அனுபவங்கள் நன்மை,
பெருமை. சிலரிதைச் சிறுமையெனவும் எண்ணுவார்.

*

கண் மை கவர்ச்சியூட்டும் செழுமை.
பெண்மை இழிவெனும் மடைமை ஒழியட்டும்.
பேதைமை யைப் பெண்கள் வெல்லுதல் அறிவுடைமை.
அறிவின்மையால் கைம்மை நிலைமை தீமை.
ஆண்மை ஆளுதலென்பது பழைமை வழமை.
தகவின்மை தலைமை ப் பதவிக்கு ஏற்புடைமை யல்ல.

*

விரல் மை வாக்களிப்பின் உறுதிப்பாடு.
வசிய மை யால் வெற்றிலை மை யால்
கசியும் பன்மை கதைகள் சோதிடப்புலமை.
வண்ண மைகளால் வரையும் ஓவியங்கள்
கண் பறிக்கும் சிகரதிற்கழைக்கும் பொதுமை.
பசுமை க் கலைகள் புலன்களிற்குக் குளிர்மை.

*

இம்மை மறுமை செம்மை பெற
பொய்மை யாம் கருமை விலகுதல் முழுமை.
ஓற்றுமை உணர்வால் இல்லாமை வேற்றுமை.
பொறாமை யற்ற எளிமை வாழ்வு இனிமை.
குடிமை பெருக்கும் தாய்மை வலிமை.

*

அம்மை அண்மை அஞ்சாமை தரும்.
உவமை யில்லா எழுமை தரும்.
உயர்வு மைகளை தனிமை தெலைக்கும்
இறவாமை த் தமிழில் மையின்றி எழுதிய
தமிழின் அடிமை

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 9-5-2017

*************************************

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 15, 2017 @ 10:04:21

  Birunthavanam Piriyanila Matha Ithal :- பெண்மை இழிவெனும் மடைமை ஒழியட்டும் ஆண்மை ஆளுதலென்பது பழைமை
  அருமை வரிகள்
  2017 – 10 May at 04:01
  Vetha Langathilakam :- அன்புடன் மிக மகிழ்ச்சி கருத்துப் பகிர்விற்கு.
  இனிய நன்றி உறவே.
  10 May at 10:12

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 15, 2017 @ 10:07:34

  வெங்கடேசு:- அருமை அருமை
  2017 – 10 May at 08:49

  பாவலர் அபி சக்தி:- அருமை அருமை அருமை அம்மா
  2017 – 10 May at 09:42
  Vetha Langathilakam :- வெங்கடேசு அன்புடன் மிக மகிழ்ச்சி கருத்துப் பகிர்விற்கு.
  இனிய நன்றி உறவே.
  10 May at 10:12

  Vetha Langathilakam:- பாவலர் அபி சக்தி அன்புடன் மிக மகிழ்ச்சி கருத்துப் பகிர்விற்கு.
  இனிய நன்றி உறவே.
  · 10 May at 10:12

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மே 15, 2017 @ 15:47:28

  மை மை என்று நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை 🙂

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மே 16, 2017 @ 01:19:07

  அருமை…

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  மே 16, 2017 @ 01:20:32

  படங்களை தரவேற்றம் செய்வதில் பிரச்சனை வராதே சகோதரி…

  மறுமொழி

 6. chandrasekaran narayanaswami (chennaipithan)
  மே 23, 2017 @ 15:22:09

  சிறப்பு

  மறுமொழி

 7. Asokan Kuppusamy
  மே 26, 2017 @ 14:53:33

  அருமை, இதிலும் மை இருக்கிறதே பாராட்டுகள்

  மறுமொழி

 8. aruleesan
  அக் 13, 2018 @ 19:03:09

  இத்தனை மைகளையும் ஒரு மைதந்தது
  அந்த மைக்கும் ஆழுமைக்கும்
  என்உரிமை வாழ்த்துக்கள் உரிமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: