என்னைப் பற்றிய அறிமுகம்..

   

522648_4596763354301_951187094_n

அன்பானவர்களே!

எல்லோருக்கும் வணக்கம்.

இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் சிவக்கொழுந்து
எனது தாயார்.

கோப்பாய் பதியில் ஆதியில் பெண்களுக்காகச் சரஸ்வதி பாடசாலையை 1910ம் ஆண்டு விஜயதசமி அன்று கோப்பாய் வெல்லம்பிட்டி காணியில் நிறுவியவர் என் அப்பப்பா முருகேசு சுவாமிநாதர்.  ஆண்களிற்காக மாண்பு மிகு அமரர் ஆறுமுகநாவலர் உருவாக்கிய பாடசாலையையும் இணைத்து கோப்பாய் நாவலர் மத்திய கலவன் பாடசாலையாக அமரராகும் வரை நிர்வகித்தவர்.
இன்று  இது  நாவலர்  மத்திய மகா வித்யாலயமாகத் திகழ்கிறது.
(இவை தவிர 1911ல் உரும்பராயில் ஓர் ஆங்கிலப் பாடசாலையும, காரைநகரில் ஒரு ஆங்கிலப்பாடசாலையும் நிறுவ உதவினார். அவை இன்று பெரிய கல்லுரிகளாத் திகழ்கின்றன. இன்று இருபாலை கோண்டாவில் றோட்டில் உள்ள அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அன்று ஐக்கிய போதனா கலாசாலையாக நாவலடியில் உருவாக உதவியவர். பன்னவேலைப் பயிற்சிக் கலாசாலைகளை யாழ்-பூதர் மடத்திலும், நீர்கொழும்பு கிறிமெற்றியானாவில் சிங்களவருக்காகவும் நிறுவியவர்.
இது தவிர 1905ம் ஆண்டு மலேசியாவிற்குச் சென்றவர் அங்கு பகாங் என்னுமிடத்தில் ஒரு ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைத்து இலங்கை வந்தார். ( இது இன்று பிலபலமான ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது )

நான் நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில்  ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.

1976ல்    இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் கவிதை எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம்.

அதற்கு முன்னர் அப்பாவின் வாசிப்புப் பிரியம் என்னோடு தொற்றியது.

பாடசாலைப் பேச்சுப் போட்டிகளிலும் பங்கு பற்றிப் பரிசு பெற்றுள்ளேன்.

எனது கணவர் கனகரட்னம் இலங்காதிலகம் தேயிலை-றபர் தோட்ட நிர்வாகத்தில் இருந்தார்.   இவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தேன்.
சுமார் 17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்தில்  தேயிலை   றப்பர்  தோட்ட வாழ்வு.
சிங்களம் பேசப் பழகினேன்.  ஒரு மகன் – ஒரு மகள்,   மகன் வழிப் பேரர்கள் இருவர் உள்ளனர்.

1987 ஐப்பசி மாதம் டென்மார்க்கிற்கு நானும் இரு பிள்ளைகளும் டென்மார்க் குடும்ப இணைப்புச் சட்டமூலம் வந்தோம். எனது கணவர் 1986ல் டென்மார்க்கிற்குப் புலம் பெயர்ந்தார்.
இங்கு வந்து 18 மாதம் கட்டாய டெனிஷ் மொழி படித்தோம். அது முடிய பாலர் பாடசாலை ஆசிரிய பயிற்சி ஒரு வருடம் செய்தேன். பின்னர் இதற்குரிய கல்வி (நர்சரி ரெயினிங் என்பீர்கள்) 3 வருடம் படிப்பு பயிற்சியுடன்,   1993ல் படிப்பு முடிந்து ” பெட்டகோ ” என்ற பட்டம் பெற்றேன். வேலையும் செய்தேன் (இவைகள் டெனிஸ் பிள்ளைகளோடு தான்).

திருமணமாகிக் கணவரின் ஊக்குவிப்பிலும் டென்மார்க், யேர்மனி, இலண்டன் சஞ்சிகைகள் சிலவற்றிலும் எழுதினேன்.

வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்துள்ளேன், வாசிக்கிறேன். 

ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள்  டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளேன்.

கவிதைப் போட்டிகளிற்கும் கவிதைகள் எழுதுகிறேன்.
வெள்ளி – தங்க – வைர முத்திரைக்கவிஞர் – பல நிலைகளில் வெற்றியடைந்துள்ளேன்.   இதில் பல பட்டங்கள்> சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். அவை

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

10. கவித் திலகம்

 11.பைந்தமிழ்    பாவலர்

.2002ல் ‘வேதாவின் கவிதைகள்’ நூலும்,

2004ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொண்ட நூலும்,

2007ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை நானும் எனது கணவருமாக எழுதி வெளியிட்டோம்.

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இங்கு இவை மின்னூல்களாக உள்ளன.

இசை, நடனம் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் ரசிப்பதுண்டு. மேடைகளில் கவிதைகள் வாசிப்பதுண்டு. தமிழெனும் வேர் காக்கும் விதைப்பு இது. டேனிஸ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993ல் பெற்று 3லிருந்து 12 வயது டெனிஸ், தமிழ்ப் பிள்ளைகளுடன் சுமார் பதினைந்து வருடங்கள் வேலை செய்துள்ளேன்.

        இன்று பதிவுகள்.கொம்,வார்ப்பு.கொம், முத்துக்கமலம்.கொம், தமிழ்ஆத்தேர்ஸ்.கொம், இன்னும் சிலவற்றில் (அலைகள்.கொம், தமிழ்விசை.கொம்) அவ்வப்போது எழுதுகிறேன்.

கோவைக்கவி, பா வானதி, கோவைக்கோதை புனை பெயர்களைப் பாவிக்கிறேன்.

மார்கழி 11ம் திகதி 2003 பாரதியாரின் பிறந்த தினமன்று. காலை 9.30 திலிருந்து 10.30 வரை இலங்கை ரூபவாகினி தெலைக்காட்சி ஐ சனாலில் (Eye channel) ” மனையாள் மண்டபம் ” நிகழ்வில் என்னை விசேட விருந்தினராகப் பேட்டி கண்டனர். அந்த நிகழ்வு நேரடி ஒளி பரப்பாகக் காட்சியானது.

அடுத்தொரு முறை 2005ல் ஆடி 18ல் ரூபவாகினி தொலைக்காட்சியில் ” உதயதரிசனம் ” நிகழ்வில் அறிவிப்பாளர் அமரர் திருமதி ரேலங்கி செல்வராசாவின் நிகழ்வில் என்னைப் பேட்டி கண்டார் இதுவும் நேரடி ஒளிபரப்பாக நிகழ்ந்தது.

செந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் எனது இடுகைகளை வாசியுங்கள். https://kovaikkavi.wordpress.com/   ஆடி மாதம் 2009ம்ஆண்டு இவ்வலைப்பூ தொடங்கப் பட்டது.        வாசிப்பதோடு நின்றுவிடாது  உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாகும்.

2-5-2015ல் டென்மார்க்கில் எமது நகர ஓகுஸ் தமிழர் ஒன்றியம் எனக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றை நடத்தி ” நாவலர் விருது ” தந்தனர்.
இது சிறந்த ஒரு அங்கீகாரமாக அமைந்தது. இது விவரமாக எனது வலையில் 10 அங்கங்களாக படங்களுடன்  கீழ் வரும் இணைப்பில் எழுதியுள்ளேன். வாசிக்க முடியும்

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015-2/

கூகிள் தேடலில் –வேதா இலங்காதிலகம் – (தமிழில்)  (In english Vetha langathilakam) எழுதி அழுத்துங்கள் மேலும் விவரங்கள் பெறுவீர்கள்.

என்னைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் சேர்த்துள்ளேன்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


இது அலைகள்.கொம் இணையத்தளத்தில் என்னுடனான  பேட்டி.

http://www.alaikal.com/news/?p=38761#more-38761  

மே 15, 2017

வேதாவின் வலை.2     திறந்துள்ளேன். இதன் ஆங்கிலப் பெயர்

https://kovaikkothai.wordpress.com/

இனி அங்குதான் எல்லாம் எழுதப்படும். இது நிறைந்து – வேதாவின் வலை.2  திறந்துள்ளேன்  in may 2017 —         http://kovaikkothai.wordpress.com

அனைவருக்கும் நல்வரவு கூறுகிறேன்.

வாசித்து மகிழுங்கள். நன்றி.

என்றும் அன்புடன்

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

7-7-2010.

10959858_791476714262399_3683408168867256473_o

IN valaicharam:       Ranjny –    Ranjani Narayanan said…

இன்றைய முதல் மரகதமாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமதி வேதா உண்மையில் மரகதம் தான். தமிழில் அவருக்கு இருக்கும் புலமை அவரது கவிதைகளைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பயணக் கட்டுரையிலும் நம்மை அணைத்து உடன் அழைத்துச் செல்லுவார்.
என்னைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே!
//தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்!!// என்று தனது வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கும் அழகே அழகு.
இன்றைய அறிமுக மரகதப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!

VETHA WROTE:         Thank you Ranjany…sis.

This link:-    http://blogintamil.blogspot.dk/2013/01/blog-post_17.html

                                  

                       

141 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வித்யாசாகர்
  ஜூலை 10, 2010 @ 23:16:22

  சாதனையில் செரித்த பெரியோர்
  சிறியோர் எனக் கொள்ளல் பெரிது; சகோதரி!

  தந்தையோடு எழுத்துப் பயணம் துவங்கி கணவரோடு
  பவனிவரும் மூத்த சகோதரிக்கு
  இந்த இளையவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  எழுத துணிந்த போதே
  எதையும் எடுக்கவும் துணிந்தோம்;
  எல்லாவற்றிற்குமாய் துணிந்ததில்
  எல்லாமுமாய் கரைந்து;
  என் தமிழில் நம் சந்ததிக்காய் எழுத
  எழுத்தின் இன்ப பயணத்தில்
  தமிழாள் கைபிடித்து பயணித்தே இருங்கள்..

  எழுதுபவரின் இயக்கம் நம்; மானிட விழிப்புணர்வை வளர்க்கும்!

  பேரன்புடன்..

  வித்யாசாகர்

  மறுமொழி

  • kovaikkavi
   ஜூலை 11, 2010 @ 19:06:35

   அன்புச் சகோதரரே!
   உங்கள் நல் வார்த்தைகளிற்கு இனிய நன்றிகள். தமிழ் கடலின் பயணத்தில் சாதனைகள: புரிந்த உங்கள் துணையும் தேவை. சேர்ந்தே பயணிப்போம். வாழ்த்துகள்! மேலும் வளம் சேர்க்கட்டும்.

   மறுமொழி

 2. ஜெகதீஸ்வரன்
  ஜூலை 27, 2010 @ 15:00:13

  வலைப்பதிவு மிக அழகாக இருக்கிறது.

  உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. ravi chellathuray
  ஆக 30, 2010 @ 08:13:35

  webseit supper

  மறுமொழி

 4. thayanithy thambiah
  செப் 08, 2010 @ 12:16:08

  varavu kandu peru makilvu. un
  niaivu kondu naanum thamil samaippen kathithru
  perum pen kavi malare!
  nesamudan thayanithy france;

  மறுமொழி

 5. இராஜ.தியாகராஜன்
  செப் 20, 2010 @ 17:21:06

  பாவலரே உங்கள் தளம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 20, 2010 @ 19:44:22

   நன்றி சகோதரரே!. முகநூல் படத்திலும் பார்க்க இந்த உங்கள் முகம் மிக வித்தியாசமாக உள்ளது. நிறைய ஆக்கங்கள் உள்ளது போட, வலையில் ஏற்ற நேரமின்றியுள்ளது. நாளும் முயன்றபடியுள்ளேன் மறுபடியும் நன்றி.

   மறுமொழி

 6. SIRAKU
  செப் 24, 2010 @ 14:34:45

  உங்கள் தளம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2010 @ 15:06:03

   மிக்க மகிழ்ச்சி அன்புறவே. சிவரவி…. சிறகு…. புரியவில்லை. ஆயினும் தமிழில் ஆர்வமுடன் இதை வாசித்ததற்கு மிக நன்றி. தொடர்ந்து புதிது புதிதாகப் போடுவேன் பார்க்கலாம். நல் வாழ்த்துகள்,

   மறுமொழி

 7. eraeravi
  அக் 04, 2010 @ 11:13:48

  வணக்கம் உங்கள் தளம் கண்டேன்
  பாராட்டுக்கள் .நன்றி
  இரா .இரவி
  http://www.eraeravi.com
  http://www.kavimalar.com

  மறுமொழி

 8. sakthythasan
  அக் 29, 2010 @ 06:08:49

  அன்புடன் கவிதாஜினி அவர்களே ! வணக்கம்
  தங்கள் தளம் கண்டேன் மகிழ்சி !
  வாழ்த்துக்கள் !
  அன்புடன் இணுவை sakthythasan

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2010 @ 06:20:42

   மிகுந்த மகிழ்வடைந்தேன். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சுவையாக இருக்கும் மனமார்ந்த நன்றி. கருத்துகளையும் எழுதுங்கள்.

   மறுமொழி

 9. சக்தி சக்திதாசன்
  நவ் 09, 2010 @ 21:31:17

  அன்பின் வேதா, ந்ண்பர் இலங்காதிலகம்
  உங்கள் இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். எழுதக்கூடிய இருவர், எழுத்தை ரசிக்கும் இருவர், எழுத்தோடு இணைந்த இருவர் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாக அமைவது அபூர்வம். அத்தகை அபூர்வ இணைப்பை அடைந்த உங்கள் ஆக்கங்கள் இலக்கியத் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகின்றன. தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னும் பல ஆக்கங்களை அளித்து மேன்மேலும் புலழ் பெற உங்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி சக்திதாசன்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 10, 2010 @ 06:32:59

   மிக்க நன்றி சகோதரரே, தொடர்ந்து கோப்பில் உள்ள ஆக்கங்களை வலையில் ஏற்றியபடி உள்ளேன், நேரம் கிடைக்கும் போது பார்த்து உங்கள் கருத்தைத் தாருங்கள். ஆண்டவன் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தினருக்குக் கிடைக்கட்டும். மறுபடியும் நன்றி.

   மறுமொழி

 10. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  நவ் 12, 2010 @ 08:22:05

  ஒவ்வொரு பதிவையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிகவும் அருமை.
  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
  http://nadaasiva.wordpress.com/

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 12, 2010 @ 15:51:11

   நிச்சயம் சுவையாக இருக்கும். வாசியுங்கள் நேரம் கிடைக்கும் போது. உங்கள் வலைக்கும் நான் சென்று எழுதுவேன். மிக்க நன்றி. வாழ்த்துகள். மேலும் தொடருவோம்.

   மறுமொழி

 11. நீலமேகம்
  நவ் 21, 2010 @ 14:58:45

  உங்கள் வலைத் தோட்டத்துக்குள் புகுந்து மணம் நுகர்ந்து மகிழ்ந்தேன் சகோதரி.

  அருமை செழுமை.

  மென்மேலும் சிறந்து பெருக வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 24, 2010 @ 07:59:22

   நன்றி சகோதரரே! நேரமிருக்கும் போது பார்த்து கருத்தைப் பதியுங்கள். எனக்கும் உங்களுக்கும் இது பயன் தரும். விமர்சனங்கள் தானே எழுத்து விளைய கிடைக்கும் உரம் . இது உங்களுக்குத் தெரியாததல்ல. நன்றி…நன்றி….மகிழ்ச்சி….

   மறுமொழி

 12. Fahim
  டிசம்பர் 25, 2010 @ 09:57:02

  சகோதரி, உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 25, 2010 @ 15:28:49

   இனிய சகோதரரே! பகீம்! உங்கள் இனிய வரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். இது தைதட்டல் போல எழுதும் எமக்குச் சத்துணவானது, அன்றி ஒரு மாத்திரையாவது…இங்கு பல சுவையான சங்கதிகள் உண்டு. நேரமிருக்கும் போது வாசித்து மகிழுங்கள். வாழ்த்துகள்.

   மறுமொழி

 13. Kowsy
  பிப் 25, 2011 @ 20:46:24

  உங்கள் வரலாறு சிறப்பாக இருக்கின்றது. தற்போதைய எழுத்தும் முயற்சியும் உங்களை அடையாளப்படுத்துகின்றது. தொடருங்கள். உங்கள் பாமாலிகைத் தோட்டம் மணம் வீசட்டும்.

  மறுமொழி

 14. கோவை கவி
  பிப் 25, 2011 @ 23:02:27

  நான் பெற்றொர்கள் பெயரை முன்பு குறிப்பிடவில்லை. அது மாபெரும் தவறல்லவா? நான் யார் அவர்களில்லாமல்! அதனால் சிறிது சேர்த்துள்ளேன். அவ்வப்போது மாற்றங்களும் சுவை தானே! நன்றி கௌசி.

  மறுமொழி

 15. pirabuwin
  மார்ச் 02, 2011 @ 04:38:12

  உங்கள் தமிழ் மொழி மீதான காதலுக்கு எனது சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் வலைத்தளம் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2011 @ 18:37:14

   சகோதரர் பிரபுவின்…மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு…உங்கள வலைக்கும் சென்று சிறு வரிகள் எமுதியுள்ளேன். மாலை நேரத்தில் கிடைத்த நேரத்தில் இடுகையிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள், கருத்தைப் பதியுங்கள் மிக்க மகிழ்வாக இருந்தது உங்கள் கருத்துப் பார்க்க. இவை தானே எமக்கு ஊட்டச் சத்து. மீண்டும் நன்றி

   மறுமொழி

 16. கவிஞர் கங்கை மணிமாறன்
  மார்ச் 02, 2011 @ 09:56:58

  இனிமைக்குரிய
  இலங்காதிலகம் அவர்களே!
  தங்கள் தளம் கண்டேன்.
  தமிழ் நலமும் கண்டேன்.
  இல்லறமே கவிதைக்கான நல்லறமாக
  இருப்பது ..
  இறைவன் கொடுத்த வரம்.
  தங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.
  என் வலை தளம் கண்டு
  வளமார்ந்த தங்கள்
  கருத்தைப் பதிவு செய்யுங்கள்!
  கரம் கோர்ப்போம் -கன்னித் தமிழோடு!
  வலைதளம்:gangaimanimaran.wordpress.com
  கவிஞர் கங்கை மணிமாறன்
  சென்னை-120

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2011 @ 18:41:49

   சகோதரர் கங்கை மணிமாறன் அவர்களே! கருத்திட்டமைக்கு மிகுந்த மகிழ்வடைந்தேன் உடனும் உங்கள் வலையைக் கிளிக்கி பின்னூட்டமிட்டுள்ளேன். நேரமிருக்கும் போது ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுப்பது. உற்சாகமானதே. முயற்சிப்போம். நல் வாழ்த்துகள்.

   மறுமொழி

 17. லதானந்த்
  மார்ச் 28, 2011 @ 05:33:20

  அன்புடையீர்!
  கோவை கவி எனப் பெயர் வைத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி.
  கோவையாய்க் கவி எழுதுவதாலா அல்லது கோவை என்னும் ஊர் தொடர்பாக வைத்த பெயரா அல்லது கோவைப் பழம் போன்ற கவி என்பதாலா? எவ்வாறாயினும் கோவைக் கவி எனச் சந்திப் பிழை நீக்கி எழுதுவது நலம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2011 @ 06:59:03

   கோவைக்கவி ஆக ஆங்கிலத்தில் மின்னஞ்சலுக்கு மட்டும் தான் பாவிக்கிறேன். உங்கள் கவனிப்புக்கு மிகுந்த நன்றி. உங்கள் வலைக்குப் போக முடியவில்லை..கருத்துப் போட. உங்கள் கருத்திற்கு வருகைக்கு நன்றி. நேரமிருக்கும் போது வாங்கோ!….(.யாழ் கோப்பாய் என் பிறப்பிடம்.)

   மறுமொழி

 18. kayalvizhi
  ஏப் 06, 2011 @ 05:02:23

  vanakkam amma.. thangal thalathirku mudhal murai varugiren.. migavum azhagaga ullana aakangalum thalamum..

  மறுமொழி

 19. உயிர்த்தோழி.
  ஏப் 14, 2011 @ 03:31:50

  Ungal sathanaigalum, pathivugalum miga arumai.

  மறுமொழி

 20. வேடியப்பன்
  ஏப் 14, 2011 @ 05:05:24

  உங்கலைப் பற்றியும் , உங்களின் பக்கங்களையும் படித்ததில் மிக்க மகிச்சி அம்மா! இனி தொடர்ந்து படிப்பேன். நன்றி!

  மறுமொழி

 21. முனைவர் இரா.குணசீலன்
  மே 13, 2011 @ 06:54:11

  தங்கள் பக்கம் கண்டு மகிழ்ந்தேன்

  மறுமொழி

 22. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 22, 2011 @ 15:44:24

  காலவெள்ளம கரைபுரண்டு ஓடும் போது,
  வண்டல்மண் சிப்பி ஓடுகள் முத்துக்கள்
  எல்லாம் கலந்தே இருக்கும்.

  கழிவுகள் போக, காலம் முத்துக்களை மட்டும்
  தேர்ந்தெடுக்கும்!

  நிச்சயம் தங்களின் படைப்புகள் எல்லாம்
  வடிகட்டப்பட்டு…. சிறந்த முத்துக்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு
  அடுத்த சந்ததியின்
  கைகளில் காலம் ஒப்படைக்கும்!

  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:23:15

   Sakotharar! sri! காத்திருப்போம். கனவு பலிக்கட்டும். கருத்திற்கு, வருகைக்கு மனமார்ந்த நன்றி.மீண்டும் வாருங்கள்! இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 23. கோவை கவி
  மே 28, 2011 @ 16:19:27

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan wrote :- …… ‎Vetha ELangathilakamஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் வேதாவின் வலை..யில் படித்தேன். பயனுள்ள தகவல்கள்.

  மறுமொழி

 24. கோவை கவி
  மே 28, 2011 @ 16:20:19

  mikka nanry sir….

  மறுமொழி

 25. Cheena ( சீனா )
  ஜூன் 02, 2011 @ 00:45:06

  அன்பின் வேதா – சுய அறிமுகம் அருமை. தமிழறிந்த குடும்பத்தில் பிறந்து – தமிழறிந்த கணவரைக் கைப் பிடித்து தமிழ் தொண்டாற்றி வரும் வேதா – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2011 @ 07:45:24

   அன்பின் சகோதரர் சீனா!
   உங்கள் மேலான கருத்திடலுக்கு மிகுந்த மகிழ்வடைந்தேன். உங்கள் வலைப்பக்கம் கருத்திடலாமெனச் சென்றேன். அது இயங்கவில்லைப் போல தெரிகிறது. பரவாயில்லை. நீங்கள் தரும் ஊக்கம் என்னை மேலும் இயங்கும் சக்தியைத் தருகிறது. மனம் நிறைந்த நன்றி. நேரமிருக்கும் போது வாருங்கள்! கருத்துத் தாருங்கள். இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 26. வேலாயுதா.
  ஜூன் 05, 2011 @ 22:22:47

  தமிழாள் பக்கம் மிகவும் அருமை, தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புக்கு மீண்டும் உங்களை வணங்குகின்றேன். உங்கள் தமிழ் பயணம் நின்றுவிடாது நீரோட்டமாய் பயணிக்கணும் அதில் எங்களின் தமிழ் தாகம் தீர்க்கணும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 08, 2011 @ 18:29:03

   அன்பின் ஐயா!(வேலாயுதம்) உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிக மகிழ்ச்சி தந்தது. மிகுந்த நன்றி. நேரமிருக்கும் போது மீளவும் வாருங்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள். நானும் என்னால் முடிந்ததைச் செய்வேன். ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!

   மறுமொழி

 27. vasantha chandran
  ஜூன் 06, 2011 @ 05:37:10

  ஆக்கங்களுக்கு நன்றிகள். உங்கள் பணி தொடரவேண்டும்.

  மறுமொழி

 28. கோவை கவி
  ஜூன் 06, 2011 @ 17:41:38

  வசந்தா சந்திரன்wrote:-
  உங்களைப்பற்றிய அறிமுகம் படித்தோம், வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 29. p.arangasamy
  ஜூன் 18, 2011 @ 18:31:50

  thangal thamizh thondu thodara en vazhthukkal

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 19, 2011 @ 21:55:10

   அன்பின் சகோதரர் அரங்கசாமி! உங்கள வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நேரமிருக்கும் போது மீண்டும் வாருங்கள்: கருத்தைத் தந்து ஆதரவு கொடுங்கள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 30. suganthiny
  ஜூன் 30, 2011 @ 07:38:06

  வணக்கம் கோடி உரித்தாகுக. உங்கள் பனி இன்னும் தொடரணும் நானும் இலங்கையை சேர்ந்தவள் தான். நான் கூட suganthiny77.wordpress.comஇல் வலை பதிவு தொடங்கி உள்ளேன் தயவு செய்து வருகை தரவும்.
  http://suganthiny77.wordpress.com/2011/06/29/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?sn=l

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2011 @ 16:51:51

   சுகந்தினி! படம் ஆணின் படமாக உள்ளது. வேறு ஒரு இணையத்தளப் பெயர் மின்னஞ்சலில் வருகிறது. சுகந்தினி1988.வேட்பிரஸ்.கொம் என்று. உண்மையாகவே நீர் ஆணா? பெண்ணா?. ஒரு கருத்து இட்டுள்ளேன்.

   மறுமொழி

 31. கலாம் காதிர்
  ஜூலை 10, 2011 @ 17:05:42

  தமிழால் வளர்ந்த தமிழாளின் பக்கம்
  அமிழ்தாய் மகிழும் அகம்.

  “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 10, 2011 @ 17:24:45

   எங்கே ஆளையே காணோம் என்று நினைத்த போது வந்துள்ளீர்கள் . உங்களுக்கு ஆயுள் கெட்டி. நலம் பெருகட்டும். மிக்க நன்றி வரவிற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 32. Milda Mary
  ஜூலை 12, 2011 @ 02:26:27

  i like this

  மறுமொழி

 33. கு.சிதம்பரம்
  ஜூலை 14, 2011 @ 16:32:17

  உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் உங்களின் சக்திமிகு கவிதை வரிகளும்,ஆழ்ந்த சிந்தனையும் அயல் நாட்டுப் பயண அனுபவமும் மேலும் மேலும் உலக மக்களை விடியலுக்கு கொண்டுசெல்லும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக் கொள்கிறேன்.உங்கள் தமிழ் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 14, 2011 @ 21:01:43

   மிக்க நன்றி சகோதரரே! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். நேரமிருக்கும் போது மீண்டும் வாருங்கள் கருத்து தாருங்கள்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 34. manisaravanan
  ஜூலை 15, 2011 @ 02:36:24

  vetha unkal valai kanden mikka magizchi arumaiyaka ullathu unkal padaippu vaazthukklal

  மறுமொழி

 35. காத்தான்குடி பிரகாசக்கவி எம் . பீ அன்வர்
  ஜூலை 16, 2011 @ 12:15:27

  வணக்கம் நான் கவி துறையில் கத்துக்குட்டி
  நீங்கள் கலைத்தாய் உங்கள் நட்பு கிடைத்தமைக்கு
  நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்னைபற்றி
  சொல்வது என்றால் பிரகாசக்கவி என்ற
  புனை பெயரில் கவிதைகளை எழுதி வருகிறேன்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 16, 2011 @ 13:12:22

   எவ்வளவு நல்ல பெயர் பிரகாசக்கவி! அப்படியே பிரகாசிக்க வேண்டும். பாடப் பாட ராகம் என்பது போல எழுத எழுத மின்னிட முடியும் வாழ்த்துகள் தொடர்ந்த பயணத்திற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 36. kalanenjan shajahan
  ஜூலை 17, 2011 @ 08:43:48

  உங்கள் இலக்கிய பணிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  மறுமொழி

 37. பொன்.சிவகௌரி
  ஜூலை 23, 2011 @ 11:05:21

  உங்கள் வலைப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கவிதை மலர்கள் என் இதயத் தடாகத்தில் விழுந்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தின.
  வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 11:45:10

   ”..கவிதை மலர்கள் என் இதயத் தடாகத்தில் விழுந்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தின…”
   சகோதரி இது தான் கவிதையின் உயிர்ப்பு. ஒருவரின் கவிதையை வாசித்தால் உடனே எதையாவது எழுதிவிட ஒரு உணர்வு தூண்டும். அது தான் உண்மையான கவிதை. இதை அனுபவ பூர்வமாக நானும் உணர்ந்துள்ளேன். என் கவிதை உங்களை அப்படித் தூண்டினால் எனக்கு அது மகிழ்வே. உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 38. கோவை கவி
  ஜூலை 25, 2011 @ 06:50:10

  Saranga Sivalingarajah wrote:-
  ungal kavi varikal trt vanoli udaka keddu rasithirukkiren,paravaddum​ ungal pugal!thodaraddum ungal pani! valthukkal,,,

  மறுமொழி

 39. Rajarajeswari
  ஆக 02, 2011 @ 06:02:29

  உண்ர்வுப்பூர்வமான அருமையான அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 16:56:24

   சகோதரி! உண்மையில் என்னைப் பற்றி அறிமுகத்திற்கு ஒரு கவிதைப் பாணியில் பூடகமாகத்தான் முதலில் எழுதினேன். எனது முதல் இரசிகர் கணவர் தான் இதைப் பாருங்கோ என்று காட்ட…” இது என்ன உன்னைப் பற்றி எழுது என்றால் கவிதை எழுதுகிறாயே!”…. என்றார் எல்லாம் மாற்றி முழுக்க முழுக்க என்னைப் பற்றி எழுதினேன். இதை வாசித்த ஒரு அன்பர் உங்கள் குலதெய்வம் பற்றி எழுதவில்லையே என்று நக்கல் வேறு. மிக்க நன்றி சகோதரி உங்கள் கருத்து, வருகைக்கும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 40. G.M.Balasubramaniam
  ஆக 05, 2011 @ 07:13:17

  அன்பின் கோவை கவி வேதா, உங்கள் சுய அறிமுகம் அருமை. இக்காலத்தில் அதிகப்படியாக தாத்தா பாட்டி பெயர்கள் அறிந்திருப்பதே அரிதாக இருக்கிறது. உங்கள் வம்சா வழி அறிமுகம் நன்றாய் இருக்கிறது. பிறந்த இடம் விட்டு புலம் பெயர்ந்து இருந்தாலும் உங்கள் தாய் மொழிப் பற்றும் மொழி ஆளுமையும் சிறப்பு. வாழ்த்துக்கள். என் பதிவினை படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது என் பிற பதிவுகளையும் படியுங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 18:35:40

   மிக்க நன்றி ஐயா! உங்கள் கருத்து, வருகை அனைத்தும் மிகவும் பெறுமதியானது. நேசிக்கிறேன். மகிழ்வடைகிறேன் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 41. சிவ மேனகை
  செப் 23, 2011 @ 22:13:55

  வணக்கம் அக்கா ,,,நான் பிறக்கும் முன்னமே நீங்கள் கவி எழுதிய பெருந்தகை ,,,உங்கள் தமிழ் ஆர்வம் கண்டு மகிழ்கின்றேன் ,,,,வாழ்க வளமுடன் ,,,வளர்க தமிழுடன் ,,,,,,

  மறுமொழி

 42. Thanjai Ve.Gopalan
  செப் 26, 2011 @ 02:01:08

  கோவைக் கவி எனது “ஊத்துக்காடு வேங்கடகவி” கட்டுரையைப் படித்துவிட்டு எழுதியிருந்த பின்னூட்டம் எனக்குத் தங்களது வலைப்பூவை அறிமுகம் செய்தது. நற்பெறு பெற்றேன். எங்கோ கடல் கடந்து தமிழ்ப்பணியாற்றும் தங்களையும், தங்கள் கவித்துளிகளையும் படித்து இன்புற்றேன். வாழ்க தங்கள் பணி!

  மறுமொழி

 43. சாகம்பரி
  செப் 26, 2011 @ 07:24:48

  வணக்கம் சகோதரி, தங்களின் வலைப்பூவின் கவிகள் சங்கத்தமிழ் பாடி நிற்பது கண்டு வியக்கிறேன். மிக மிக அருமையான வலைப்பூ. தங்களின் தமிழும் அதன் சிறப்பும் போற்றுதற்குரியவை. நன்றி.

  மறுமொழி

 44. வே.நடனசபாபதி
  அக் 11, 2011 @ 02:02:01

  அன்பு சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!. பன்முகம் கொண்ட தங்கள் அறிமுகம் கண்டேன். வியந்தேன். இனி தங்களின் வலைப்பதிவை நிச்சயம் படிப்பேன் என்பது உறுதி. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 20:15:29

   மிக மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மனம் நிறைந்த நன்றி. மீண்டும் சந்திப்போம். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 45. shahi
  அக் 28, 2011 @ 03:54:27

  வணக்கம் அம்மா..நான் ஷஹி மூன்றாம்கோணம். உங்களைப் பற்றி எழுதுங்கள் என்று எங்கள் முகப்பில் தங்கள் பின்னூட்டம் பார்த்தேன்..தங்கள் மெய்ல் ஐடி தெரிந்தால் எழுதுவென்..நன்றி..ஷஹி

  மறுமொழி

 46. Kalai Moon
  நவ் 06, 2011 @ 13:08:07

  உங்கள் தமிழ்ப் பணிக்கண்டு சிலிர்த்தேன்.
  ஏதோ இருந்தோம் ,வாழ்ந்தோம் என்று இல்லாம்
  கிடைத்த நேரத்தில் ,உங்கள் எழுத்துப்பணி கொண்டு
  வேட்டையாடி ,இன்று சிகரத்தை எட்டியே கவிக்கு பாராட்டுக்கள்.

  முரசொலி கொட்டாட்டும்
  எட்டு திசைப் பரவட்டும்.
  உங்கள் புகழ் பறக்கட்டும்.

  மறுமொழி

 47. Vetha ELangathilakam
  நவ் 09, 2011 @ 17:49:21

  மிக நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்

  மறுமொழி

 48. Sebastian
  டிசம்பர் 10, 2011 @ 14:52:55

  உங்கள் தமிழ்ப் பணிக்கண்டு சிலிர்த்தேன்.
  Vaaltha Vayadillai..Vanangi Vidaiperugiren….
  Vanakkam..!!!

  மறுமொழி

 49. vivek
  டிசம்பர் 23, 2011 @ 03:20:04

  இந்த தளத்திற்கு நான் புதியவன்
  ஆனாலும் வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி
  visit ;www.dooritwilldo.blogspot.com

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 23, 2011 @ 06:05:05

   அன்பின் சகோதரர் விவேக்! மிக மகிழ்ச்சி. நல்வரவு. உங்கள் வருகை, கருத்திடல் மிக மகிழ்வு தருகிறது. மிக்க நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 50. jayarajanpr
  டிசம்பர் 23, 2011 @ 05:46:50

  உங்கள் பெருமைமிகு வாழ்வில் சிறப்பான பதிவுகளை செய்துள்ளீர்கள்.
  தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 23, 2011 @ 06:14:56

   அன்பின் சகோதரர் யெயராஜ்! மிக்க நன்றி. நல்வரவு. எனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்தும் உங்களுக்கு உரித்தாகுக. உறவு வளரட்டும். கருத்திடலிற்கும், வருகைக்கும் மிக மிக நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 51. siga.lenin
  ஜன 06, 2012 @ 17:53:57

  உங்கள் தமிழ் மொழி மீதான காதலுக்கு எனது சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் வலைத்தளம் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 23, 2012 @ 17:55:18

   மிக்க நன்றி சகோதரா. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளிற்கும் மிக்க மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 52. அஷ்வின்ஜி
  ஜன 14, 2012 @ 15:15:56

  வணக்கம் கோவைக்கவி வேதா அவர்களே. எனது வாழி நலம் சூழ வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. புத்தாண்டு தமிழ்ப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்கள் கவிச் சோலையில் பூத்துக் குலுங்கும் வாசமிகு கவிதை மலர்களை ரசிக்கும் பாசமிகு ரசிகனாகி விட்டேன். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.
  அஷ்வின்ஜி.
  http://www.frutarians.blogspot.com
  http://www.vedantavaibhavam.blogspot.com

  மறுமொழி

 53. கோவை கவி
  ஜன 15, 2012 @ 20:05:58

  ம. வேணுதன் wrotr:-
  ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராய் தங்களைப்பற்றி சிறிது தெரிந்து வைத்திருந்தேன், உங்கள் முழுமையான விடயங்களை அறிந்துகொள்ளக் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்கள் கலைப்பயணம் தொடரவும் சிறக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

 54. 2005rupan
  மார்ச் 04, 2012 @ 05:06:27

  வணக்கம் சகோதரி

  தந்தையின் வழிகாட்டலில் கணவனின் உதவியோடு இளைய சமுதாயத்தின் வாசிப்பு திறனை
  வளர்க்க இந்த நவீன உலகில் அன்றும் இன்றும் எழுதி எழுத்துப்படைப்பை படைத்துக் கொண்டு இருக்கவும், உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரி,
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 04, 2012 @ 09:23:29

   மிக நன்றி ரூபன். வேட் பிரஸ்சில் மொழி என்பதில் தமிழ் போட மாறும் பின்னர் ஆக்கங்கள் இடலாம். வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றியும் மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.( You have just opened wordpress.com. congratz)

   மறுமொழி

 55. கலைநிலா
  மார்ச் 27, 2012 @ 16:56:17

  பாரம்பரியமிக்க குடும்பத்தின் வழித் தோன்றலாய்
  வந்த தமிழ்த் தென்றலுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 56. கவிஞா் கி.பாரதிதாசன்
  செப் 06, 2012 @ 22:37:46

  வணக்கம்

  இலங்கா திலக மின்வலையை
  இன்று கண்டேன்! இன்புற்றேன்!
  உளங்..கா மணத்தை ஏற்கின்ற
  உயா்ந்த தமிழின் சுவையுற்றேன்!
  நலங்கா துள்ள பொற்றுணிபோல்
  நன்றே மின்னும் கவிச்சோலை!
  துலங்கா துள்ள உலகழுக்கைத்
  துடைக்க துணிந்து பாடுகவே!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kambane2007@yahoo.fr

  மறுமொழி

 57. ramakrishnan
  அக் 27, 2012 @ 15:22:43

  VERY NICE YOUR WEB

  மறுமொழி

 58. Solai.Thiyagarajan
  டிசம்பர் 23, 2012 @ 07:31:26

  வணக்கம்.
  மியன்மா நாட்டிலிருந்து எழுதுகிறேன்.
  இன்று உங்கள் அருமையான வேதாவின் வலை கண்டேன்.
  என்ன பயனுள்ள வலைத்தளம் என்று வியந்தேன்.
  சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 59. mahalakshmivijayan
  ஜன 11, 2013 @ 09:54:42

  வணக்கம் சகோதரி! தமிழ் உங்கள் கவிதைகளில் கொஞ்சி விளையாடுகிறது! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

  மறுமொழி

 60. Sharmila Dharmaseelan
  ஜன 19, 2013 @ 14:15:08

  தன்னுள் ஆர்ப்பரிக்கும்
  எண்ணங்களை , கவிதைச் சுலோகங்களைக் கருவியாக்கி,
  மற்றவர்களின் உள்ளத்தின்
  இரசனைப் பகுதிகளை ஆரோக்கியமாகக் கீறி
  ஆகர்ஷிக்கும் தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 61. ranjani135
  ஜன 19, 2013 @ 17:09:06

  என் வார்த்தைகளுக்கு இத்தனை மதிப்பா? உங்களை இந்தப் பதிவு மூலம் அறிந்ததில் எனக்கு மிகப் பெருமை சகோதரி.

  ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நலன்களையும் வாரி வழங்கட்டும்.

  மறுமொழி

 62. இரா. தேவாதிராஜன்
  பிப் 27, 2013 @ 09:08:06

  அத்தனையும் அருமையோ அருமை….
  சொல்வதற்கு வார்த்தையை தேடி வேறு
  வழியில்லாமல் தான் மேலே அத்தனை அருமை…

  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தங்களுக்கு…
  கவி தா இனி (கவிதாயினி) மேலும் எங்களுக்கு….
  ஆண்டவன் அருளால் நீண்டாயுளை பெற வேண்டுகிறேன்…

  மறுமொழி

 63. kittu
  ஏப் 28, 2013 @ 09:56:30

  உங்கள் வலையில் சிக்குண்டேன்.ஆலைக் கரும்பினும் சுவையான தமிழ் அமுதம் பருகினேன்.வாழ்க நலமோடு!!! வளர்க தமிழோடு!!!!!

  மறுமொழி

 64. kittu
  ஏப் 28, 2013 @ 10:01:46

  சகோதரி, உங்கள் வலையில் நுழைந்தேன்!!!திகட்டும் வரை தமிழமுதம் பருகினேன்.வாழ்க நலமோடு!! வளர்க தமிழோடு!!!

  மறுமொழி

 65. Kalaimahel Hidaya Risvi
  மே 09, 2013 @ 04:44:32

  பெண்ணினத்தின் பெருமை உங்கள் எழுத்துக்கள் சகோதரி தடங்கள் இன்றி தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 66. கோவை கவி
  மே 15, 2013 @ 19:57:48

  மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும் sis Kalaimahel Hidaya Risvi
  தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும்

  மறுமொழி

 67. m.siva
  அக் 24, 2013 @ 15:42:35

  mika nanri sakothari.unkal pirantha oorukku aiyalooril vasikkm aasiriyai nan

  மறுமொழி

 68. jaya
  பிப் 15, 2014 @ 11:20:33

  thangalin kavi varikal emai eerthathu thodarungal amma

  மறுமொழி

 69. கோவை கவி
  பிப் 20, 2014 @ 21:11:42

  மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும் (Jeya)தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும்

  மறுமொழி

  • jayarajarethinam
   பிப் 21, 2014 @ 03:15:56

   இனிய காலை வணக்கம் அம்மா.
   தங்களின் வரவில் மகிழ்வு பெற்றேன் தங்களைப் பற்றியும் அறிந்தேன் மிக்க
   மகிழ்ச்சி பெருமை அடைந்தேன் அம்மாவின் ஆசியும் எம்மை உயர்த்தட்டும் எம்மை
   வாழ்த்துங்கள் அது போதும் …எமது படைப்புகள் கண்டு குறை நிறை கூறுங்கள்
   …நன்றி உள்ளவளாக என்றும் எப்போதும் …நல்வரவு அம்மா !

   21 பிப்ரவரி, 2014 2:41 முற்பகல் அன்று, “வேதாவின் வலை..” எழுதியது:

   > கோவை கவி commented: “மிகவும் நன்றியும் மகிழ்ச்சியம் (Jeya)தங்கள் இனிய
   > வரவிற்கும், கருத்திடலிற்கும்”
   >

   மறுமொழி

 70. chandra
  செப் 03, 2014 @ 04:24:49

  Ungaludaiya pathivugal anaithum arumai vazhthukkal… srilanka photos really super…….

  மறுமொழி

 71. sujatha anton
  செப் 29, 2014 @ 19:18:43

  தங்களைப்பற்றிய அறிமுகமும் எழுத்துப் பணியும் தமிழிற்கு சேர்ந்த பெருமை.. எல்லோராலும் இதற்கு நேரத்தை ஒதுக்கமுடியாது. ஆனாலும் வழிகாட்டியாக தங்கள்
  கணவருடன் இணைந்த்தொரு பணி மிகவும் மகத்தானது. வாழ்க தமிழ்!! அனைவரும்
  வாசித்து மகிழ்வர்.

  மறுமொழி

 72. sivaramani
  அக் 16, 2014 @ 12:11:02

  இனிய நல் வாழ்த்துக்கள்.
  இப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  என் தாய்நாட்டைச் சேர்ந்தமை இன்னும் பெருமை

  மறுமொழி

 73. விஜயலெட்சுமி கவிபாரதி
  பிப் 25, 2015 @ 10:57:03

  தங்களின் வளர்ச்சி கண்டு பூரிப்படைகிறேன்…! தங்களை பற்றிய அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி..! தங்களின் விலைமதிப்பற்ற எழுத்து பணி தொடர மனமார்ந்து வாழ்த்துகிறேன்…

  மறுமொழி

 74. கோவை கவி
  மே 19, 2015 @ 11:21:07

  Prema Ratnam – From walls UK
  15. apr.2015

  til mig
  thanks Akka, very nice ,you are leading a very interesting life.
  you have done so much and achieved so much.
  I am sure you and your family must be so proud.
  Enjoy your celebration in MMay.
  loads of love
  Prema xx

  Vetha:- Thank you prema….

  மறுமொழி

 75. கோவை கவி
  நவ் 21, 2015 @ 21:32:13

  ‎Raji Krish‎ to Vetha Langathilakam
  November 21, 2010 at 1:38pm ·
  அன்பு சகோதரி வேதாவிற்கு, ராஜியின் வணக்கம்..
  உங்களை பற்றிய அறிமுகம்…கருத்துக்கள்.. அருமை..
  உங்களின் முன்னேற்றத்திற்கு காரணமான உங்கள்
  கணவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளையும்
  தெரிவித்து கொள்கிறேன்..
  ( ஒரு பொன்னு நினைத்தால்..அந்த வானத்துக்கும்…பூமிக்கும்
  பாலம் அமைப்பால்) நிருபித்து இருக்கிறார்கள்.

  மறுமொழி

 76. ரெ.சின்னசாமி
  மார்ச் 07, 2016 @ 13:53:35

  அம்மா உங்கள் நீண்ட பயணத்தினூடே தமிழும் தொடர்வண்டி பயணம் போல் தொடர்ந்து வந்திருக்கிறது. தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணி.

  மறுமொழி

 77. கோவை கவி
  பிப் 18, 2018 @ 18:07:29

  வணக்கம்.

  தங்களது வலைப்பூ பார்த்தேன்.

  வாழ்த்துகள்

  ”அண்ணாச்சி’ அ.கிருஷ்ணமூர்த்தி,
  விருதுநகர் மாவட்டம்,
  தமிழ்நாடு. 18-2-2018.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2018 @ 18:16:09

   அன்பு சகோதரா மிக்க நன்றி மகிழ்ந்தேன். தங்கள் மடல் பார்த்து.
   இறையாசி நிறையட்டும்.இரண்டு வலைப்பூ அதாவது இணையத் தளம் .
   இதில் முதலாவதில் கருத்திட முடியும். அங்கு இதை எழுதுகிறேன்.
   அதன் இணைப்பு இதோ…
   https://kovaikkavi.wordpress.com/about/

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: