27. பக்தி.

12366481_960475860699935_3994818969714866598_n

 

பக்தி மனசாரவும் கொள்கிறார்
பகட்டு பாசாங்காகவும் இருக்கிறார்.
கடவுள், குரு உறவுகளிடம்
கபடின்றிப் பரிமாறும் உணர்வாம்.
உருவிது ஒருவகை அன்புநிலை.
ஒருவித போதை நிலை
***
பக்தி, மனம் – ஐம்பொறிகளை
சக்தியால் அடக்கித் தியானித்தல்.
நான்கு ஆன்மிகப் பயிற்சிகளில்
ஒன்று பக்தி ஆகிறது.
ஞானம், கர்மம், இராஐம்
ஏன மூன்றும் ஆகிறது.
***
பக்தியால் பல வெற்றியாளர்
முத்தி நிலை அடைந்துள்ளார்.
சித்தியின் சக்தி இதுவென்பார்.
மன அமைதி வீரம்
கன நம்பிக்கை நிதானம்
தனமாகப் பக்தியால் பெறலாம்.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10474864_699684510086896_4159358153570174852_n

26. துர்க்காதேவி.

Durgai (1)

 

துர்க்காதேவி.

 

சிம்மவாகினி தாயே எம்
அம்மா துர்க்கா தேவி
தீய சக்தி ஒளிக்க
தீயாய் துணை வருவாய்.
Superstar---5-Star-rating---Gold
நவராத்திரி ஒன்பது நாட்கள்
தவமான முதல் மூன்றும்
நவசக்தி நாயகி உன்னை
நலம் வேண்டி வணங்குவோம்.
Superstar---5-Star-rating---Gold
மகிஷாசுரமர்த்தனி அகிலாண்ட ஈசுவரி
மங்களசண்டிகையே அருள் வடிவே
ஆதிபராசக்தி அன்பின் உருவே
ஆபத்தைத் தடுப்பாய் போற்றி.
Superstar---5-Star-rating---Gold
திரிசூல நாயகியே போற்றி
திரிபுர சுந்தரியே அருள்வாய்
பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
பக்தியுடன் உன்னைப் பணிகிறோம்.
Superstar---5-Star-rating---Gold
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-10-2015
10474864_699684510086896_4159358153570174852_n

25. முருகா

Muruga88[1]-----m

அழகான மயிலேறி ஆறுபடை வீட்டினிலே
அருள் முகம் காட்டும் முருகா
அன்பர்கள் மனமிரங்க ஞானப் பழமாக
அறிந்து கொண்ட முருகா!

வளமாக எமது தேசம் வாழ
குளமாக ஆனந்தம் பொங்கி வழிய
உளமார அருட்பார்வை தாராய்
தளமாக அறிவினைத்தாராய்!

என்றும் இளமையான அழகு முருகா
வென்று நம் தமிழ் அழகுற
நன்று அருட் பார்வை வீசாய்!
குன்றில் குடி கொண்ட முருகா!

முத்துத் தீவை மொத்தமாய் மாற்றி
சொர்க்கத் தீவாய் ஆக்கித் தருவாய்!
சொக்கநாதர் செல்வனே முருகா! நீ
தக்கது அறிவாய் அழகு முருகா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10-2013

anjali-2

24. ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

625581_487087371346612_304887616_n

ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

மூன்று தேவியரை மூலமாக்கி

ஆன்ற கலைகளின் வாசனை

ஊன்றி நிலைத்திட யாசனை

தோன்றியது பூசை ஆராதனை.

வீரதீரபராக்கிரமம் கல்வியுடன் சேர,

தூரம் போகாதிருக்க

சாரமுடை தூய பக்தி

வேருடன் வீரமாள துர்க்காவை

செல்வம் செல்லாது நிலைக்க

செல்வாக்கு அதனோ டிணைக்க

செல்லிடம்  இலட்சுமியைசேவிக்க

செலவிடும் நடு மூன்று தினங்கள்.

முல்லை மலர் தூவி

கல்வி கலைக்காய் கலைவாணியை

சொல்லிப் பணியும் இறுதி

வெல்லும் விசயதசமியின் நாட்கள்.

(செல்வாக்கு – புகழ்,மதிப்பு. செல்லிடம் – பலிக்குமிடம்.  ஆன்ற – மாட்சிமைப்பட்ட )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-10-2013.

T – 30-9-2014

thiri

 

23. அங்கிங்கெனாதபடி…..

023

அங்கிங்கெனாதபடி…..

(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)

 

அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்

தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!

 

பொங்கி விரவும் துணிவும்

மங்காது விரியும் புகழும்

தங்கிடும் பொருளும் உயர்வும்

கங்கையாய் என்னொடு கலக்க

மங்களமாய் அருள்வாய் இறைவா!

எங்கள் பரம்பொருளே முருகா!         (அங்கிங்கெனாதபடி)

 

பயமும் கவலையும் என்னுள்

சுயம்பு ஆகாது விலகிட

வியனுறு நம்பிக்கை உயர்ந்திட

பயனுறு நலம் பெருகிட

நயமுறு அறிவு வளர்ந்திட

நயம் தருவாய் முருகா!                   (அங்கிங்கெனாதபடி)

 

அன்பு, பண்பு உயர்ந்திட

இன்பம், திண்மை வளர்ந்திட

வன்மை வறுமை ஒழிந்திட

திருமிகு தாய்மண் இணைந்திட

திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

திருவருள் தருவாய் முருகா!.            (அங்கிங்கெனாதபடி)

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-12-2004

(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.

வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)

 

 

 

peacock-feather-line[2]b

22. தூயவன் பாதம்.

lord-shiva-33h

தூயவன் பாதம்.

 

பிறைநிலவைச் சடையில் பின்னியவன்

நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்.

மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்

கறையான நீலகண்டம் அமைந்தவன்.  (பிறை)

நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்

அலையா தமைதி தரும் அமலன்!

உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட

விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான்.  (பிறை)

உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.

இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்

சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.

நமையாளப் பற்றுவோம் தூயவன் பாதம்.  (பிறை)

 

(இலண்டன் தமிழ் வானொலியில் சகோதரர் சர்மா இசையமைத்துப் பாடியது.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

27-5-2005

unnamed

21. அல்லாவே அல்லாஹ்!

Ka%92aba%20The%20House%20Of%20Allah%203

அல்லாவே அல்லாஹ்!

 

 

அல்லாவே அல்லாஹ்! அன்பின் இரட்சகரே!

அல்லாவிற் கிணை யாரு மில்லையே!

அன்புடை மனிதருக்காய் பூமியை விரித்தீர்!

அகண்ட வானத்தை ஒரு முகடாக்கினீர்!    (அல்லாவே)

 

அனைத்தையும் எமக்காய் அன்புடன் படைத்தீர்!

அழகு வானத்தால் மழையைத் தந்தீர்!

அதனால் பயிர்கள் கனிகள் எழுந்தன.

அரிய உணவாக அவைகளை யாக்கினீர்!   (அல்லாவே)

 

அல்லாவே உமது கொடையை மறவோம்.

அரிய நேர்வழியில் பின் தொடர்வோம்.

அற்புத உண்மைகளைப் பொய்யுடன் இணைக்கோம்.

ஆத்ம சாந்திக்காய் உம்மைத்  தொழுவோம்….(அல்லாவே)

 

 

 

 

பா  ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-9-2005.

 

 

divider1

 

20. அழகன் முருகன்

Image5

அழகன் முருகன்

 

 

மாதொருபாகன் மைந்தன் முருகன்

மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான்.

மாம்பழம் கையில் சேராத முருகன்

மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான்.

 

தெய்வயானையைத் தேவியாய் கொண்டும்

தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில்,

தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும்,

தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.

 

மகாதேவன் மாதொருபாகன்

மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்.

மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்

சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்.

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

4-9-2005.

 

 

peacock-feather-line[2]b

 

 

19. சந்த மொழியில் தினம்….

murugan5

சந்த மொழியில் தினம்….

 

தந்தைக்குத் தமிழ்  உரைத்த முருகா

சிந்தைக்கு மகிழ்வு தர வருக!

முந்தைப் பழைய தமிழ் உயர

எந்தனுக்கும் தமிழ் செழிப்பு தருக!   (தந்தைக்கு)

 

வந்த இடத்து மொழி சிறப்பு.

சொந்த மொழி மறத்தல் நகைப்பு.

கெந்தும் தமிழ் நிலையால் தவிப்பு

உந்தன் அருள் தனையே நிரப்பு.   ( தந்தைக்கு)

 

சந்த மொழியில் தினம் உன்னை

சிந்து பாடித் தொழ என்னை

சுந்தரத் தமிழ் கடலில் நீந்த

செந்தமிழ் முருகா நீ அருள்வாய்!.   (தந்தைக்கு)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

2-11-2005.

 

end1

18. நவராத்திரி

 

சாவித்திரி தாயே!

 

(ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்)

அறுபத்து நான்கு கலைகளையும் எமக்கு

சிறுகச் சிறுகப் புகுத்தும் சாவித்திரி தாயே!

இறுகப் பிடிக்கிறேன் உன்பாதமென்றும்

மறுக்காது உன்னருள் தருவாயம்மா!

 

நவராத்திரி   

 

வாழ்வின் முறுவலின் ஆதாரங்கள்
ஆழ்ந்த தத்துவம் நிறை இராத்திரிகள்.
ஆன்ற கலைகளை ஆராதிக்கும் இரவுகள்
மூன்று தெய்வங்களைப் போற்றும் இரவுகள்.

ன்பது இராத்திரிகள் ஒளிரும் சுபராத்திரிகள்
மகாசக்திகளின் தத்துவம் நிறை இராத்திரிகள்.
முக்தி தரும் தேவியரிடம் ஆக்க நிலை வேண்டி
ஒருமித்து நாம் வணங்கும் நவராத்திரிகள்.

வீரத்தின் அதிபதி துர்க்கையை
வீரியம் வேண்டி வணங்குகிறார்.
செல்வத்தின் அதிபதி இலக்குமியை
செல்வம் வேண்டிச் சேவிக்கிறார்.

ல்வியின் அதிபதி சரசுவதியைக்
கல்வியை வேண்டி வணங்குகிறார்.
கருமமாய் வணங்கும் புனித இராத்திரிகள்.
விசய தசமியுடன் விடைபெறுகின்றன.

வித்துவங்களின் இணைவின் ஆரம்பத்தில்
தத்துவமான மனவியல்  வழியாரம்பம்
விசயதசமியன்று தான் வித்தியாரம்பம்
வியாபித்து எங்கும் வெற்றிவாகை சூடும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2002.

(ரி.ஆர்.ரி தமிழ்அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது.

Germany MANN magacine published this poem in 3-10-2004)

In Anthimaalai web site :_    http://anthimaalai.blogspot.com/2011/10/2.html

 

 

                                           

Previous Older Entries