4. புத்தக அறிமுக விழா.

எமது இருவரின் கவிதைகளும் உணர்வுப்பூக்களில் இடம் பெற்றது. எனது கணவர் திருவாளர் இலங்காதிலகம் ஏற்புரை செய்த போது.

 

 

Kalam Kadir September 27 at 5:14pm Report
வானம் ஏகிப் போனாலும்
கானம் தரும் கவிகுயிலே
தென்றலில் வரும் என் வாழ்த்து;
உன்றன் நூல் வெளியிடும் இடம் பார்த்து

Anna Kannan  

டென்மார்க்கில் தமிழ் நூல்கள் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும் நிகழ உள்ளன. 10.10.2010 அன்று நிகழ உள்ள இந்த நிகழ்வின் அழைப்பிதழ் இதோ –
 
 
 
September 27 at 9:21pm · · · Share · See Wall-to-Wall · Flag


Vetha Langa
Sujatha Anton இருவரும் இணைந்து படைத்த படைப்புகள் இரு கரங்களாய்
தமிழிற்கு ஆற்றிய பெருமையாக உங்களை சாரும். தமிழ்
வளர வேண்டும். கடமையாக எண்ணி கருமமாய் ஆற்றும்
உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துகின்றேன்

November 7 at 6:01pm · ·  1 personLoading…
  •  
 
September 27 at 9:06am · · · Share

3. எனது மூன்றாவது நூல்.

(எனது மூன்று நூல்களும் நூலகம்.ஓர்க்  இணையத்தளத்தில் மின் நூல்களாகப் பார்க்கலாம்.)

நூலகம் .ஓர்க் ல் இந்த நூலின் – மின்னூல் இணைப்பு இதோ!….http://noolaham.net/project/20/1930/1930.pdf

In viruba.com —  This is the link :-    http://www.viruba.com/atotalbooks.aspx?id=49

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

முதல் நூலிற்கு நான் எழுதியதின்படி எனது கணவர் ஒத்துழைக்க மறுத்தார். மூன்றாவது நூலில், இந்த உணர்வுப் பூக்களில் இவரது கவிதைகள் 43ஐ இணைத்து 188 பக்கங்கள் கொண்டு இருவருமாக இந்த நூலில் எழுதியுள்ளோம்.  எனது 69 கவிதைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை இணைத்த போதும் மணிமேகலைப் பிரசுரம் அதைச் சரிவரச் செய்யவில்லை. அது போல புத்தகப் பின்புற அட்டையையும் சிவப்பு எழுத்தைப் போட்டு அதன் அழகைக் குறைத்துவிட்டனர்.
யேர்மன் ‘பூவரசு’   இதழாசிரியரும், சுவிஸ் எழுத்தாளர், செய்தியாளர், கவிஞர் ஏ.யே ஞானேந்திரனும், எனது கணவரைப் பற்றி நானும் முன்னுரை எழுதியுள்ளோம்.

இந்த நூல் பற்றியும் கட்டற்ற கலைக் களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளது. இதை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தலாம்.

உணர்வுப் பூக்கள் (நூல்) முகவரி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

முத்துக் கமலம் இணைய இதழில் இந்நூல் பற்றி வாசிக்க இந்த இணைப்பு உதவும்.

http://www.muthukamalam.com/muthukamalam_puthakaparvai59.htm
பார்வை:

ஈழத்துப் பெண் கவிஞர் வேதா இலங்காதிலகம் மற்றும் அவரது கணவர் இலங்காதிலகம் ஆகியோர் இணைந்து கவிதை நூல் ஒன்றைத் தந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஒருவர் கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார் என்றாலே ஏச்சுக்களும் பேச்சுக்களும் ஏராளமாய்க் கிடைக்கும். ஆனால் ஒரே வீட்டில் கணவன் மனைவி இருவருமே கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் இணைந்த இத்தம்பதியர் எண்ணத்திலும் ஒன்றாய் இருப்பது நம்மை ஆச்சர்யமடைய வைக்கிறது. இவர்களின் உணர்வுகளை தங்கள் கவிதை நூலான உணர்வுப் பூக்கள் எனும் தலைப்பில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்நூலில் வேதா இலங்காதிலகம் “பக்திப்பூக்கள்” எனும் தலைப்பில் 2 கவிதைகளையும், “பெற்றோர் பாசப்பூக்கள்” எனும் தலைப்பில் 8 கவிதைகளையும், “மழலைப் பூக்கள்” எனும் தலைப்பில் 2 கவிதைகளையும், “மழலைப் பாடல் பூக்கள்” எனும் தலைப்பின் கீழ் 3 கவிதைகளையும், “இயற்கைப பூக்கள்” எனும் தலைப்பில் 9 கவிதைகளையும், “கதம்பப் பூக்கள்” எனும் தலைப்பில் 23 கவிதைகளையும், “பெண்மைப் பூக்கள்” எனும் தலைப்பில் 9 கவிதைகளையும், “விண்ணேகியோருக்கு” என்ற தலைப்பில் 9 கவிதைகளையும், “பொது” எனும் தலைப்பில் 4 கவிதைகளையும்  கொண்டு மொத்தம் 69 கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. இவரது கவிதைகளில் பெரும்பான்மையான கவிதைகள் வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளது. சில இதழ்களில் பிரசுரமாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேதா இலங்காதிலகத்தின் கணவர் இலங்காதிலகம் எழுதிய 43 கவிதைகள் பின் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதியுள்ள கவிதைகளில் இத்தனை முகங்களா எனும் தலைப்பிலான

இராவணனுக்குப் பத்து முகங்கள்
முருகனுக்கு ஆறு முகங்கள்
பிரமனுக்கு நான்கு முகங்கள்
மனிதனுக்கு எத்தனை முகங்கள்
பொய்யனுக்கு இரண்டு முகங்கள்
கள்வனுக்கு இரண்டு முகங்கள்
கொலைஞனுக்கு இரண்டு முகங்கள்
காமுகனுக்கு இரண்டு முகங்கள்
வஞ்சகனுக்கு இரண்டு முகங்கள்
சுயநலவாதிக்கு இரண்டு முகங்கள்
அரசியல்வாதிக்கு இரண்டு முகங்கள்
ஏமாற்றுக்காரனுக்கு இரண்டு முகங்கள்
பரம ஏழைக்கு இரண்டு முகங்கள்
பணக்காரனுக்கு இரண்டு முகங்கள்
பெற்றோருக்கு இரண்டு முகங்கள்
பிள்ளைகளுக்கு இரண்டு முகங்கள்
ரசிப்பவனுக்கு இரண்டு முகங்கள்
தூற்றுபவனுக்கு இரண்டு முகங்கள்
கலைஞனுக்கு இரண்டு முகங்கள்
கவிஞனுக்கு இரண்டு முகங்கள்
கற்றவருக்கு இரண்டு முகங்கள்
கல்லாதவர்களுக்கு இரண்டு முகங்கள்
வேதம் ஓதுபவனுக்கு இரண்டு முகங்கள்
நாத்திகனுக்கு இரண்டு முகங்கள்
படைத்தவனுக்கு இரண்டு முகங்கள்
படைக்கப்பட்டவனுக்கு நாற்பது முகங்களா?

-எனும் கவிதை உட்பட பல சுவையான கவிதைகளும் இருக்கின்றன.

இந்நூலிற்கு சுவிஸ் நாட்டிலிருக்கும் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான ஏ. ஜே. ஞானேந்திரன் அணிந்துரையும், ஜெர்மனியின் பூவரசு தமிழ் ஏட்டின் ஆசிரியர் இந்து மகேஷ் சிறப்புரையும் எழுதியிருக்கின்றனர். சென்னை, மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்தக் கவிதை நூல் தமிழ்க் கவிதை ஆர்வலர்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு நூல்.

     -தாமரைச்செல்வி. 

http://www.vaarppu.com/review.php?rvw_id=50

வார்ப்பு இணையத் தளத்தில் இது..ஊடகவியலாளர் திரு . செல்வராசா அவர்கள்…..

விமர்சனம்
உணர்வுப் பூக்கள்
– வேதா. இலங்காதிலகம் தம்பதி

வேதா இலங்காதிலகம் உணர்வுப் பூக்கள் கவிதை,

இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை
07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் �காலைக்கலசம்� நிகழ்ச்சியில்,
�இலக்கியத் தகவல் திரட்டு� என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார்
15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால்
தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.ஓலியலை: 13.01.2008அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக்
கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம்.
மீண்டும் இந்தவாரம் மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக டென்மார்க் நாட்டின் ஓகுஸ் நகரிலிருந்து வேதா
இலங்காதிலகம் அவர்கள் எழுதி, சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் அண்மையில்
வெளியிட்டுள்ள உணர்வுப் பூக்கள் என்ற தலைப்பிலான கவிதைத் தொகுதியொன்றின்
அறிமுகத்திற்கு வருகிறேன்;. வேதாவின் கவிதைகள் என்ற கவிதைத் தொகுதியினை
முதன்முதலில், ஏப்ரல் 2003இல் வழங்கியதன் வாயிலாக இலக்கிய நூல்
வெளியீட்டுத்துறையில் தன் காலடிகளைப் பதியவைத்த வேதா இலங்காதிலகம்,
டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் குழந்தைகள் இளையோர் சம்பந்தமான பராமரிப்புப்
பயிற்சி பெற்றவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள்,
சஞ்சிகைகளில் இவரது கலை இலக்கியப் படைப்புக்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. இன்றும்
வெளியாகிவருகின்றன.இவரது குழந்தைகள் பராமரிப்புப் பயிற்சியின் அனுபவங்களையும், தேடல்களையும்
பிரயோகித்து டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் சஞ்சிகைகள், பத்திரிகைகளில்
வெளிவந்த பல விஞ்ஞான அறிவியல் கட்டுரைகளைத் தேடிப்பெற்று அவற்றில்
தேர்ந்தெடுத்த பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து புலத்தில் வாழும் நம் தமிழ்க்
குழந்தைகள் இளையவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் குழந்தைகள் இளையோர் சிறக்க
என்ற தனது இரண்டாவது நூலையும் வேதா இலங்காதிலகம் 2004இல்; வெளியிட்டிருந்தார்.
அது குழந்தைகளுக்கான நூல் என்பதைவிட அவர்களை வளர்க்கும் பெற்றோர்களுக்குரிய
சிந்தனையைத் தூண்டும் நூல் என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும்.உணர்வுப்பூக்கள் என்ற தனது மூன்றாவது நூலை மற்றொரு கவிதைத் தொகுப்பாகத் தனத
கணவருடன் இணைந்து இப்போது 2007இல் வழங்கியிருக்கும்; வேதா இலங்காதிலகம் அவர்கள்
1976ஆம் ஆண்டிலேயே இலங்கை வானொலியில் தன் முதல் கவிதைக்குக் களம் கண்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987இல் டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்த பின்னரும்
தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும்; தன் கவிதைகளைக் காலத்துக்குக் காலம்
இவர் வழங்கிவந்துள்ளார்.பக்திப் பூக்கள், பெற்றோர் பாசப்பூக்கள், மழலைப் பூக்கள், மழலைப்பாடல் பூக்கள்,
இயற்கைப் பூக்கள், கதம்ப உணர்வுப் பூக்கள், பெண்மைப் பூக்கள், விண்ணேகியோருக்கு,
பொது, என்று ஒன்பது பகுப்புகளில் தனத படைப்புகளையும், பத்தாவது பகுப்பாக
க.இலங்காதிலகத்தின் கவிதைப் பூக்கள் என்ற பகுதியையும் இந்நூலில் உள்ளடக்கி-
இந்தப் பத்துப் பிரிவுக்குள்ளும் அண்மைக்காலத்தில் வானொலியிலும், பிற ஊடக
நிகழ்வுகளிலும் பாடிய கவிதைகளைத் தொகுத்தும் வகுத்தும் வேதா இலங்காதிலகம் இந்த
உணர்வுப்பூக்களில் மணம் பரப்பவைத்துள்ளார்.இத்தொகுப்பில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால் முதல் ஒன்பது
பிரிவுகளுக்குள்ளும் தனது 69 பாடல்களை தொகுத்திருக்கும் வேதா இலங்காதிலகம்,
பத்தாவது பிரிவுக்குள் தன் கணவர் க.இலங்காதிலகம் எழுதிய 43 கவிதைகளையும்
மேலதிகமாக இணைத்திருக்கிறார் என்பதாகும். இவரது நூலுக்கு அணிந்துரைகளை இருவர்
வழங்கியுள்ளனர். சுவிஸ் – பாசல் நகரிலிருந்து ஏ.ஜேஞானேந்திரனும்,
ஜேர்மனியிலிருந்து பூவரசு ஆசிரியர் இந்த மகேஷ் அவர்களும் இவ்வணிந்துரைகளை
எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவர் க.இலங்காதிலகத்தின் 43 படைப்புக்கள்
பற்றி ஒரு வரியேனும் எழுதவில்லை. வேதா இலங்காதிலகம் எழுதியுள்ள இரண்டு அறிமுகக்
குறிப்புகளில் இரண்டாவதில் கணவரின் படைப்பிலக்கிய அறிமுகம் பற்றி நிறையவே
குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வரியில் பிற்சேர்க்கையாகத் தன் கணவரின்
படைப்புக்கள் சேர்க்கப்பட்டமையை அணிந்துரை எழுதியவர்கள் அறிந்திருக்கவில்லை
என்ற குறிப்பு வருகின்றது.

அந்தவகையில் உணர்வுப்பூக்களின் இணை ஆசிரியர்களாக திருமதி வேதா இலங்காதிலகமும்,
திரு. கனகரத்தினம் இலங்காதிலகமும் அமைகின்றனர்.  தன் கணவரின் கவிதை ஆர்வமே
தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறும் வேதா இலங்காதிலகம்
வழங்கியிருக்கும் உணர்வுப் பூக்கள் கவிதைத் தொகுதியின் உள்ளே சற்று நுழைவோம்.

பக்திப்பூக்கள் என்ற முதற்பகுப்பினுள் விநாயகரையும் கண்ணனையும்
பாடிப்புகழ்ந்தபின், பெற்றோரையும் குடும்பத்தினரையும் நினைந்துருகும் பெற்றோர்
பாசப்பூக்கள் என்ற பிரிவுக்குள் பாவடி புனைய, முதலெழுத்தானவர், இதயத்தில் கொலு,
என்னாசை அப்பா, என்ற தலைப்புகளில்; தன் தந்தையை நினைத்தும், அம்மா, அனுராகமான
பல்லவி அனுபல்லவி, ஆகிய தலைப்புகளில் தன் தாயாரை நினைந்தும் பாடிய பாடல்களுடன்,
அற்றைப் பிறைநிலவு, சுற்றுலாப்பிரியன் ஆகிய பாடல்களில் தன் பிள்ளைகளுடனும்
கவியுறவாடியிருக்கிறார் வேதா.

மழலைப்பூக்கள் என்ற பிரிவுக்குள் குழந்தைகள் பற்றிப்பாடும் வேதா அதனையடுத்த
மழலைப்பாடல் பூக்கள் என்ற பிரிவுக்குள் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச்
சேர்த்துள்ளார். இயற்கைப் பூக்கள் என்ற பிரிவுக்குள் நயாகராவையும், உள்ளுர் கடல்
அலைகளையும், வானத்திலிருந்து விமானத்தின் சாளரத்தினூடு தெரியும் இலங்கையின்
கரையோரக்கோடுகளையும் தாம் இயற்கையின் அழகில் தம்மைத் தொலைத்துவிட்ட நேரங்களையும்
அழகாகப் பாடிப்பதிவுசெய்கின்றார்.

தாயகத்தை விட்டுத் தொலைதூரம் வந்துவிட்ட போதும் காலம் கடந்தும்கூட இன்றுவரை
தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன.
தாயகத்துக் கிராமத்தின் கனவுகளையும் இவற்றில் பல கவிதைகள் பதிவு செய்கின்றன.
தான் புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழும் டேனிஷ் மண்பற்றியோ, அதன் மக்கள் பற்றியோ
இவரது கவிதைகள் எதுவும் இத்தொகுதியில் பேசப்படவில்லை.

வேதாவின் கவிதைக் களங்கள் எங்கெங்கெல்லாமோ நிலைகொள்கின்றன. இயற்கையையும்,
ஈழத்தின் நீங்காத நினைவுகளையும் ஏன் மொசப்பத்தேமியாவின் நாகரீக உயர்வையும்
மெச்சிப் பாடும் இவர் தீபம் தொலைக்காட்சியில் அன்புள்ள சினேகிதியே என்ற சின்னத்
திரைத்தொடரின் 50ஆவது நிகழ்வை அறிந்து அதற்கும் வாழ்த்துக் கவிதை
பாடியிருக்கிறார்.

இறுதிப் பிரிவுக்குள் அடங்கியுள்ள திரு. இலங்காதிலகத்தின் கவிதைகள்
வகைபிரிக்கப்படவில்லை. அதில் ஒரு கவிதை மலையில் பிறந்த ஆரணங்கே- என்பது.
ஈழத்தின் மலையகத்தைப் பாடும் அழகிய இயற்கையோடியைந்த கவிதை இது. 1977இல் பூவும்
பொட்டும் மங்கையர் மஞ்சரியில் திருமதி இராஜேஸ்வரி சண்முகத்தின் வாசிப்பில்
அரங்கேறியுள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னரே ஆழம் கண்டுள்ள இவரது கவிதை
உணர்வினை இப்பொழுதுதான் காணக்கிடைத்திருக்கின்றது. திரு.க.இலங்காதிலகத்தின்
கவிதைகளைத் தனியாகத் தொகுத்துத் தனிநூலாக்கியிருக்கலாமே என்ற எண்ணத்தை
இத்தொகுப்பின் பின்னிணைப்பில் காணப்படும் 43 கவிதைகளும் ஏற்படுத்தியிருந்தன.

தன் கணவரின் கவிதை ஆர்வமே தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறிய வேதா
இலங்காதிலகத்தின் வரிகளின் அர்த்தம் திரு. இலங்காதிலகத்தின் கவிதைகளுள் நுழைந்து
வெளிவரும்போது ஆழமாக உறைக்கின்றது. திரு இலங்காதிலகம் எழுதியுள்ள நான் பார்த்த
ஈழம் நலமில்லை என்ற கவிதை 2003இல் எழுதப்பட்டுள்ளது. இன்றும் அதன் வரிகள்-
நாண்காணடுகள் கடந்த நிலையில் பொருந்துகின்றன. யாழ் நூலக எரிப்பு பற்றிய இவரது
கவிதை வஞ்சகனால் எரிந்தது நூலகம் என்ற தலைப்பில் காணப்படுகின்றது. நூலக
எரிப்பினால் ஒரு சாமானியனின் மனம் படும் வேதனை அதில் புரிகின்றது.

நூலகம் எரித்த நாள் மே 31 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் என் கவனத்தை
ஈர்த்தது. யாழ்ப்பாண நூலகம் மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர்
எரிக்கப்பட்டது என்பதே வரலாறாகும். அதாவது 1981 ஜுன் 1இன் விடிவுக்கு முந்தைய
பொழுது. யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த இராஜா விஸ்வநாதன் ஒழுங்குசெய்திருந்த
யாழ்ப்பாண நூலக எரிப்பின் முதலாவது நினைவுதினக்கூட்டத்தை நடத்திய வேளையில்
உத்தியோகபூர்வமாக யாழ் நூலக எரிப்பினை ஜுன் 1ம் திகதியாகவே குறிப்பிடவேண்டும்
என்று அவர் பதிவுசெய்திருந்தார். அதன் பின்னர் வரலாற்றுப் பதிவுகளில் யாழ் நூலக
எரிப்பினை ஜுன் 1ம் திகதி என்றே குறிப்பிட்டு வருகின்றோம். திகதிக் குழப்பத்தைத்
தவிர்த்துக்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் இத்திகதியையே நாங்கள் புகலிடப்
பதிவுகளிலும் பின்பற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வணக்கம்.

N.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 4.1.2008

All Rights Reserved. No part of this Documentation may be reproduced or
utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any
means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without
the prior written permission of the copy right owner.
குறிப்பு: மறு
பிரசுர உரிமை கவிஞரால் பெறப்பட்டது

______________________

http://thamilbooks.blogspot.dk/2008/05/blog-post.html  

______________________________________

http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7982%3A2012-12-07-16-07-16&catid=514%3A2012-07-30-19-58-03

___________________________

http://www.vaarppu.com/review.php?rvw_id=73

இனிய நந்தவனம் சிறு சஞ்சிகையில் ஆங்கரைபைரவியால் எழுதப்பட்ட விமர்சனம் வார்ப்பு இணையத் தளத்திலும் வெளியானது.

விமர்சனம்
உணர்வுப் பூக்கள்
– வேதா. இலங்காதிலகம் தம்பதிஇனிய நந்தவனம் இதழ் – பங்குனி 25 -2009 ல்
– ஆங்கரை பைரவி.பொதுவாகவே வாசகத்தனத்தில் கவிதைகள் என்பது உணர்வுகளின் பிரவாகம் என்கிற கருத்து உண்டு. எழுகின்ற உணர்வுகளைப் படைப்பாக்கித் தரும் வல்லமை, தேர்ந்த படைப்பாளர்க்கு மட்டுமே சாத்தியம். இதை மனதில் கொண்டு, வேதா இலங்காதிலகம் அவர்களின் “உணர்வுப் பூக்கள்” தொகுப்பை வாசிக்கிறபோது, முதல் பாரா முற்றிலுமாகப் பொருந்துகிறது வேதா-இலங்காதிலகம் இருவருக்கும். அம்மா, அப்பா, தம்பி, தங்கை, உறவுகளை, ஒரே நடிப்பு நட்சத்திரமாக மிளிரும் நடிகர் திலகத்தை, மழை, நதி, அருவி என இயற்கையை… எல்லாம் ஒரு உணர்தலின் உணர்ந்ததின் கவிதைகளாகவே இருக்கின்றன. ஆரம்பப்பள்ளி மாணவனுக்கும் பிடித்துப்போகிற நடை, பிற மொழிக் கலப்பு இல்லாத தமிழ் வாசம், தொகுப்பு முழுவதும் மணக்கிறது. வேதாவின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு தளத்தில் பயணித்த கவிதைகளாக இருப்பது மகிழ்வைத் தருகிறது. பெரும்பாலும் வானொலியில் வலம் வந்திருப்பது நல்ல விசயம் தான். வேதாவின் கவிதைகளில், நாற்சார வீட்டில் மாட்டியது, தலைப்பிலான கவிதை நவீனத்துவ சாயலில் இருக்கிறது. மாதாழை, மழையிருட்டு போன்ற சொற்கள் கவிதைக்கான ருசியைக் கூடுதலாகத் தருகின்றன. அனைத்து உணர்வுப் பூக்களும் அன்பு வாசத்தின் அடையாளமாய் இருக்கையில் நூலுறவு, சாம்பலில் உதித்த அறிவுக்கதிர் ஆகிய இரண்டு கவிதைகளும் அறிவின் வாசமாய் இருந்தன. இந்த இரண்டு கவிதைகளையும் வர்ணிப்போடு நில்லாமல், எரிதல் தந்த வலியையும் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.(எரிந்த நூலகத்தை எழுதுகையில் வலிதான் பேச வேண்டும்). இந்தத் தோன்றலை இலங்காதிலகத்தின் சில கவிதைகள் முன்மொழிகின்றன. அன்னியக் காற்று, கனவு, பிணக்குழி, வாழ்வுக்காய் வதைபடுகிறோம், வதைபடுதலில் வாழுகிறோம் கவிதைகள் மெல்லிய வலியோடு பதிவாகியுள்ளன. “வாழ்வா சாவா போராட்டம், பூவா தலையா தடுமாற்றம்” நல்ல பதிவு. “யாழ்ப்பாணம்” கவிதையில் மெல்லிய வலி கூடுதலாகி இருக்கிறது. தமிழ் தேசியம் பேசும் “இரவல் தத்தம் இரவல் கொள்ளி” கவிதை இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது. உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள். வளரும் படைப்பாளிகளுக்கு இந்தத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டி. வளர்ந்தவருக்கு இந்த நூல் பத்தோடு பதினொன்று. நல்ல தமிழ் சொற்கள் அடங்கிய தொகுப்பு.

வீரகேசரி யில் உணர்வுப்பூக்கள் பற்றிய கட்டுரை பிரித்தானிய ச் சகோதரர் முல்லை அமுதன் எழுதியது. IN THANGA MAnkai Magazin..

விமர்சனம்

 

இது சகோதரர் முல்லை அமுதனின் விமரிசனம். – 2009ல் எழுதப்பட்டது.
https://www.facebook.com/photo.php?fbid=585008634915483&set=a.283368628412820.68146.100002190553532&type=1&theater

‘உணர்வுப்பூக்கள்’ (வீரகேசரி பத்திரிகையில் வந்தது. புகைப்படமாக நீங்கள் மேலே பார்த்தது.)

வேதாவின் கவிதைகள் ஊடாக நம்க்கு பரிச்சயமான வேதா தன் கணவருடன் இணைந்து இந் நூலை தந்துள்ளார். 187 பக்க்ங்களில் கிறவுன் சைசில் செனனை மணிமேகலைப்பிரசுரம் ஊடாக வெளிவந்துள்ள நூலின் அனைத்துக்கவிதைகளும் சம தளத்தில் பயணிக்கின்றன.
கோப்பாய்/நாயன்மார்கட்டு இணைவில் சங்கமித்த டென்மார்க்கில் வாழும் கவிதைத்தம்பதிகளின் உண்ர்வுக்ளின் வெளிப்பாடே நமக்கு கிடைத்த கவிமாலை.69/49 கவிதைத் தலைப்புக்களில் இருவரும் அழகு தமிழில் தமிழை லாவகப்படுத்தி நமக்குப் புரியும் வண்ணம் தந்திருப்பது யாவரும் புரியும் இலகுவாக படிக்கக்கூடியதாக உள்ளது.
பாராட்டத்தான் வேன்டும்.
மீனாட்சி நடேசையர் தொடக்கம் இன்றைய வேதா வரை தமிழில் இலகுவாக எழுத முடிந்திருக்கிறது.
இங்கு வேதாவுடன் அவரது கணவரானான இலங்காதிலகமும் இணைந்து கவிதை சமைப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.
தேவையும் கூட.
வேதவின் கவிதைகளைப் பார்க்க போனால்…,
பக்க்திப்போக்கள்,பெற்றோர் பாசப்பூக்கள்,மழலைப்பூக்கள்,மழலைப்பாடல் பூக்கள்,இயற்கைப்பூகள்,
கதம்பபூக்கள், பெண்மைப்புக்கள்,விண்ணேகியோர்க்கு…,பொது…எனும் தலைப்புக்களில் வேஅதா தரும் கவிதைகளில் ஏற்ற இறக்கமின்றி சமசீர் நடையில் தாளம் பிசகாமல்
மனதுக்குள் ஏதோ மெல்லிதான வருடலுடன் கூடிய சில சோகங்களை எதிர்பார்ப்புக்களை சொல்லிச் செல்வதை உணரமுடிகிற்து.
கவிதையின் தளம்/களம்புலம்பெயர் சூழலாக இருப்பினும் வேர்களை மறக்காத வலி தாங்கிய தாயின் மனது பற்றி ஏதொ எமக்கு சொல்லிச் செல்கிறது.
தற்போதெல்லாம் வாசிக்க முடிகிற வார்த்தைகள் அணைத்தும் நமக்கும் வலிக்கவே செய்கிறது. இது யாவர்க்கும் பொருந்தும்.
‘நீ அருகில் வாழ்கின்ற நிறைவு என்றும் எனக்கம்மா…
உன்னை பிரிந்த நினைவு எனக்கென்றும் இல்லையம்மா…
உன்மடி மீது சாய்ந்த மனனிறைவு எனக்கம்மா..
நற்புதையல் கிடைத்ததென நிறைவு கொண்டேனம்மா..’-எனத் தாய் பற்றி சொலகிறார்.
‘எங்கள் வீட்டு மாமரக்குடை அவர்…
குன்றாத ஆதரவுக் குடையில் நாம்..
என்றும் சுடரான அறிவும் அன்பும்..
நின்று இல்லத்திற்கு ஒளி தந்தது…
கடற்கரை மணலாய் பல நினைவுகள்..
கலையழகுக் கிழிஞ்சல்களாய் சில நினைவுகள்…
கொலுவாக மனதில் அழியாத சொருபம்..
கொடுக்கிறது சுய ஆழுமையை சுயமாக எமக்கும்….’ தன் தந்தை பற்றி சொல்கையில் எமக்கும் சொல்ல மறந்த சேதிகள் நிறையவே உண்டு என்பதே சரியானது.
‘வேதாவின் கவிதைகள்’ நூலில்
சொல்லாத சில சங்கதிகளை சுமந்து வந்துள்ளதாகவே நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
பூவரசு,லண்டன் தமிழ் வானொலி,வார்ப்பு.கொம்,பதிவுகள்.கொம், மண்.. என இவ்ரின் கவி வழங்கல்க்ளை சுமந்து வந்தவைகள்.அத்னால் தானோ என்னவோ கவிதைகளை சிறப்பாக எழுதும் பயிற்சியாயிற்று எனலாம்.
‘தேடிப் பைந்தமிழ் நூல்கள் ஆழப்பயில்வோம்..
கூடிப் பல்லரங்கினில் சங்கத் தமிழினையாய்வோம்..
மோனைத் தமிழ் மோகனமாய் வாழவெங்கும் ..
கூனித் தடுமாறாது கூட்டாக முயல்வோம்..
நாவேந்தர் பழ்ந்தமிழையெடுத்து நிமிர்த்துவோம்..
சீரேந்தும் தடைப் பின்னடைவுச் சாய்வைத் தடுப்போம்…’என தமிழ் மீதான உணர்வை வெளிப்படுத்துகிறர்ர்.
இலங்காதிலகம் அவர்களின் கவிதைகளும் சிறப்பவெ உள்ளன.பூவைப் பார்ப்பதா/நாரின் மணத்தை அனுபவிப்பதா? இருவரின் கவிதைகளும் சீரான தள்த்தில் பயணிக்கின்றன. நாடு பற்றிய சிந்தனைகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
‘ஆணையிறவு அன்னியன் கையிலிருந்தது…
ஆத்திரம் தமிழன் மனதிலிருந்தது..
வெள்ளி வரை தாக்கம் தீரவில்லை…
வென்றெடுத்த வீர வேங்கைக்குத் தீபாராதனை..
போர் மனம் கொண்டவனில்லை தமிழன்..’சராசரித் தமிழனின் வெற்றிப் பெருமிதம் தான்.வீராப்புடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்த நமக்கு சோகமே எஞ்சியது .
‘போர் அனர்த்தம் புகன்றிடமுடியாது…
அழுது வடிந்த முகங்கள்..
இழந்து போனவீடுகள்…
பல கதைகள் கூறின..
பல நூற்றாண்டு போயினும்,
பல வடுக்கள் போயினும்,
பம்பர உலகம் மறந்துவிடும்..
கோவையில் மாவீரர் துயிலும் இல்லம்..
கோடி மனதை கசிய வைக்கும் இல்லம்..
நான் பார்த்த ஈழம் நலமில்லை..

ஒரு வரலாறு பதியப்பட்டிருக்கிறது.
வேர்களுடன் பேச முடியாத அன்னியம் கிளைகளுடன் பேசத் துடித்து பின் பார்த்தனீயச் செடி நாட்டியகொடுமையையே கண்டோம்.
எந்தன் மனம்,மலையில் பிறந்த ஆரணங்கே,வழி..வழி..,பூவையே,
என்றும் இளமைக்கதல்..,டென்மார்க் தனிமை,இதயம் தேடுது உனை,இடைவெளி சிறிதே,தாகம்,இயக்கம்,முருகா,எதை எதையோ தேடுகிறேன், எங்கள் ஊர் பூவரசு,அடுத்தது என்ன,போதை,அம்மா நீ அங்கு சுகமா,ந்ம்பிக்கை நாறுக்கள்,அன்னியக்காற்று,வானம்,கனவு,ஆணாதிக்கம்,என் அப்பா,பிணம்,பிணப்பெட்டி,பிணக்குழி,வாழ்வுக்காய் வதைபடுகிறோம்-வதைபடுதலில் வாழ்கிறோம், சிறுமியின் கனவு,மல்லிகை மலையில் அலரிப்பூ,யாழ்ப்பாணம், இரவல் தத்தம் இரவல் கொள்ளி,தத்துவமும் தவமும்,இத்தனை முகங்கள?, பொய்த்து விட்டது,வஞ்சகனால் எரிந்தது நூலகம்,இதயமுள்ள இயற்கையே,கோடகாலம்,னான் பார்த்த ஈழம் நலமில்லை,எழு!எழு!,னடை,எனக்குளும் வந்தது வசந்தம்,நாசவேலை,அறிவின் கீழ்நிலையா,னான் யோசிக்கிறேனேன்று’… விரிகிறது இலங்காதிலகத்தின் கவிதைகளின் தலைப்புக்கள்.
‘பூவரசு பெயர் ஏன் கொண்டாய்?
பூக்களுக்கு நீ அரசா?
பூவுடன் அரச இலை சாயல் கொண்டதனால்,
பூவரசு பெயர் பெற்றாயா?’
நூலகம் எரிந்த சோகம் இவரையும் தாக்கியதில் வார்த்தை வடிவம் பெறுகிறது.
பிற மனங்களை நோகடிக்காதபடி எழுத முனைந்திருக்கிறர்கள்.
கவிதைகளில் இறுக்கமில்லை.
யாவரும் படித்துணர முடிகிறது.
குறமகள்,கோகிலா மகேந்திரன்,தம்பிலுவில்.ஜெகாபோன்றோரின்கவி வடிவம் போல் இலகுவாக எழுதும் வேதாவுடன் அவரின் கணவர் இலங்காதிலகமும் மேலும் நல்ல கவிதை நூல்களை தந்து எம்மை வியப்பில் ஆழ்த்த வாழ்த்துவோம்.
-முலலைஅமுதன்

29/08/2009

In Face book  27-8-2015  

  • Rajakavi Rahil :-     ஒரு நூலின் அழகினை அதனுள் அமர்ந்திருக்கின்ற மொழியின் பரிமாணத்தின் நிர்மாணிப்பை மொழியின் தேர்ந்த சொல்லாடலாலும் அதன் வீரிய நடையினாலும் எடுத்துப் பரப்பிவிடுகின்ற தன்மை எங்கும் விரவிக் கிடக்கின்றன…ஒரு படைப்பாளியின் இயங்குதளத்தையும் , அந்தப்படைப்பு வெளிப்படுத்துகின்ற உணர்வுக் கருத்தியலையும் முன்வைக்கும் பாங்கிலும் எழுந்து நிற்கிறான் ஒரு படைப்பாளி…அந்த வல்லமையான கவிதைவடிவத்தின் ஒளிவீச்சின் பிரகாசிப்பில் வேதா லங்கா திலகம் அவர்கள் சுடர் தருவது நேசிப்பின் …அவரது மொழியியலின் அடையாளமாகும் என்றுதான் நான் நினைக்கிறேன்….
     
Rajakavi Rahil :-   தனது மொழியும் அதன் ஊடகமான சமூகத்தின் வலிகளையும் , வலிமைகளையும் முன்னிறுத்தி மொழி எழுதல் வடிவமாகிய கவிதை செய்தல் பெருமை…அந்தப் பெருமைமிகு அடர்த்தியில் என்வாழ்த்தும் இணைந்திருக்கட்டும்…வாழ்த்துக்கள்.

2. எனது இரண்டாவது நூல்.

(எனது மூன்று நூல்களும் நூலகம்.ஓர்க்  இணையத்தளத்தில் மின் நூல்களாகப் பார்க்கலாம்.)

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

எனது இரண்டாவது நூல் 2004ல் வெளிவந்தது. 32 டெனிஸ் மொழிக் கட்டுரைகள் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். எனது இரண்டு சிறு கட்டுரைகளும் இறுதியில் உள்ளது. 13 சிறுவர் பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. 160 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  யெர்மனி மண்சஞ்சிகை ஆசிரியர் வ. சிவராசாவும் டென்மார்க்கில் வசிக்கும் உளவியல் நிர்ணர் திரு வி.சிறி கதிர்காமநாதனும் முன்னுரை எழுதியுள்ளனர்.

நூலகம் .ஓர்க் ல் இந்த நூலின் – மின்னூல் இணைப்பு இதோ!….http://noolaham.net/project/20/1929/1929.pdf

குழந்தைகள் இளையோர் சிறக்க… (நூல்) முகவரி –  கட்டற்ற கலைக் களஞ்சியம் விக்கிபீடியாவில்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

 

In viruba.com — This is the link  :-    http://www.viruba.com/atotalbooks.aspx?id=49

முத்துக்கமலம் இணையத்தளம் எழுதிய வரிகள்……..

http://www.muthukamalam.com/muthukamalam_puthakaparvai60.htm

பார்வை:

ஈழத்துப் பெண் கவிஞர் வேதா இலங்காதிலகம் வாழ்வாதாரத்திற்காக இலங்கையிலிருந்து டென்மார்க் நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர். டென்மார்க் நாட்டில் பாலர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதனால் குழந்தைகள் குறித்து அதிகமான நூல்களைப் படித்திருக்கிறார். குழந்தைகள் குறித்த செய்திகளை பல ஊடகங்களில் பார்த்திருக்கிறார். டெனிஷ் மொழியில் வெளியான குழந்தைகள் குறித்த பல கட்டுரைகள் அவரது கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளைத் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்து அளித்தால் என்ன என்கிற எண்ணமும் வந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் போன்றவைகளைக் கட்டுரைகளாக்கித் தந்திருக்கிறார்.

இந்த நூலின் ஆசிரியர் கவிஞராக இருப்பதால் நூலின் கடைசிப் பகுதியில் குழந்தைகளுக்கான கவிதைகள் பதின்மூன்றைத் தந்திருக்கிறார். மேலும் கட்டுரைகளுக்கிடையில் சில இடங்களில் என் மொழிகள் எனும் தலைப்பிலும் சில கவிதைகள் தரப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு ஜெர்மனியிலிருந்து வெளிவரும் மண் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியர் வ. சிவராசா அணிந்துரையும், டென்மார்க் நாட்டில் உளவியல் நிபுணராக இருந்து வரும் வி. சிறீகதிர்காமநாதன் என்பவர் சிறப்புரையும் எழுதியுள்ளனர்.

சென்னை, மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூல் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் சிறப்பான ஒரு நூல்.

     -தாமரைச்செல்வி. 

மேலும்

1. முதலாவது நூல்.

மேலும்