16. கண்ணதாசன் சான்றிதழ் (17)

 

 

 

 

 

இது 17வது சான்றிதழ் கவிதை.

கவியுலகப் பூஞ்சோலையின் 8-8-16 தினபோட்டியின் #தலைப்பு_உண்மை_நட்புஇன்றைய போட்டி கவிதையின்#வெற்றியாளர்_கவிஞர்_Vetha_Langathilakamஅவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

உண்மை நட்பு


(நீரவர் – அறிவுடையவர். தரளம் – முத்து)

மதுவேந்தும் மலர்க் கூட்டத்துள்
புது உல்லாசப் பயணமாகும்
மெதுமையுணர்வுடைய உண்மை நட்பு.
பச்சைப் புல் தரையில் பாதம்
பதிக்கும் மெத்தெனும் சுகவுணர்வு.

*

விரும்பி மனதில் பதியமாகி
அருத்தமுடன் வேரூன்றி அகமீதில்
அருட்சோதியாய் பிரகாசிக்கும் தீபம்
கருத்தாய் அந்தமின்றி நீளும்.

*

முதுகு சாயும் இருக்கையாய்
தோள் தருமுறவாய் அணைந்து
தோணியாய் கரை வரை
பயணிக்கும் உண்மை நட்பு.

*

நீரவர் நட்பு உயர்வு
சேரவர் வரிசையில் அனுபவம்
தரளம் சேகரிக்கும் தரமுடைத்து.
தூரவர் போயினும் சுகந்தம்.

*

நீருயரத் தாமரைத் தண்டு
உயர்வதாய் நட்பெம்மை உயர்த்தும்
திறவாத புத்தகமாகும் நன்கு
உறவாடாத உண்மை நட்பு.

*

நினைக்கும் தோறும் இனிக்கும்
நீங்குதலற்ற பிணையும் நெருக்கம்.
நல்லது கெட்டது அளவோடு
நவின்று நன்மை பெருக்கும்.

*
வருவதும் போவதுமாய் மலர்தலும்
வாடுதலுமாயொரு தொடர் நிகழ்வாகும்.
உட்கட்டுச் சிறப்புறும் உறவு
உட்பற்றுடன் நீண்டு தொடரும்.

*

நட்பதிகாரத்தில் வள்ளுவரும் மொழிகிறார்
ஒட்டுரிமையாம் உருகியிறுகும் நட்பை.
சர்வமும் தானெனும் கனமுடைய
பேச்சு செயலழிவுடையுறவு நீக்குதற்பாலது.

*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 8-8-2016.

*

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊

15. கண்ணதாசன் சான்றிதழ் (16)

 

mana nalam

16

*

கவியுலகப் பூஞ்சோலையின் 04-8-16 தினபோட்டியின் தலைப்பு #மன_நலம்_சிறக்குமானால்# இன்றைய போட்டி கவிதையின் #வெற்றியாளர் கவிதாயினி_Vetha_ Langathilakam# அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
#மன_நலம்_சிறக்குமானால்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   

வாழ்வுப் பிரச்சனைகளை எதிர் நோக்கி
தாழ்வின்றிச் சமாளித்து முன்னேறுதல் மனநலம்.
மனநலப் பிரச்சனைகளை முன் கூட்டியே
கண்டறிந்து சிகிச்சையெடுத்தல் சுக பலன்.

*

பார்வை, நினைவுடன் ஒட்டிய நரம்புகள்
சேர்த்திணையும் கலங்கள் செவ்வையாக இயங்காவிடில்
செயல்களும் எண்ணமும் மாறுபட்டுப் பாதிப்படையும்.
மயக்கமான இந்நிலை மனநலப் பாதிப்பு.

*

மனதில் அழுத்தம் அதிகமானால் மனநோயாகும்
மூளையிலுள்ள இரசாயனச் சமமின்மையென்கிறது விஞ்ஞானம்.
ஆன்மா, மனதின் தளர்ச்சி, மனப் பலமின்மையே
மனநோயின் காரணமென்கிறோம் பழமை வழியாக.

*

மூளைக்குத் தகவல்கள் சரியாகப் பரிமாறப்படாவிடில்,
மரபியல் பரம்பரை நோயால் மரபணு கடத்தலாலும்
மனநலம் பாதிப்படைய வாய்ப்பு உண்டாம்.
பேராசை, வேலையழுத்தம், சூழல்களாலுமிது உருவாகும்.

*

சுகாதாரம், ஆரோக்கியம், ஆன்ம நலம்
ஆகாவென்ற மனநலம் தரும். மாறாகினால்
கல்வி முன்னேற்றம், கலவி உறவு
தொழில் முன்னேற்றம் உறவுகளில் பாதிப்புருவாகும்.

*

மனநலம் சிறக்குமானால் அற்புதமாக எம்
உடல் நலமுயரும். பூவுலகம் சொர்க்கமாகும்.
மனநலக் காப்பகங்கள் இல்லாது ஒழியும்.
மனநல ஆலோசகர்கள் தொழில் இழப்பார்.

*

இலக்கியம், யோகா, தியானம், சுற்றுலா
பரபரப்பான வாழ்வு, கலைகள், நல்லுறவு
இறைபக்தி, மனமார பேசுதலால் மனநலம்
நந்தவன ஊர்வலமாகி வெகுவாகச் சிறக்கும்.

*

அன்பெனும் இன்ப ஊற்று குளிர்
சாரலாய் சொரியட்டும்! ஆரோக்கிய உணவு
சிரிப்பு மனதைக் காக்கட்டும்.! தனமெனும்
கனமற்ற சிந்தனையோடு இனமிணைந்து வாழ்வோம்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 4-8-2016.

*

2291771e9rhjzakq9

14. கண்ணதாசன் சான்றிதழ் (15)

 

aaddukuddy

*

ஆட்டுக்குட்டியும் நானும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் (15)
இரண்டாம் நிலை – 4

 (கதை வரிகள்)

கருமேகப் புகை சூழ்ந்த கவலை
முகத்தில் அம்மா. ஏனம்மா என்றால்
எமது ஆடு குட்டியீனப்போகுது என்றார்.
ஏதுமறியாப் பால பருவத்தில் நாம்.

காகம் வராது நீங்கள் காவல்
காக்க வேண்டும் என்றார் அம்மா.
ஆட்டுக் கொட்டில் ஓரமாக இருக்கையிட்டோம்.
குச்சியுடன் அமர்ந்து ஆவலாய் காத்திருந்தோம்.

குட்டி நீரில் தோய்ந்து விழுந்தது.
எடுத்துச் சாக்கில் படுக்க வைத்தாரப்பா.
இளஞ்சிவப்பு நிறக் கூம்பு முனையாகக்
குட்டியின் பாத முனை தோன்றியது.

இப்படியிருந்தால் குட்டி எப்படி நிற்கும்!
என் சிறு மனதுச் சிந்தனை!
காற்றுப் பட்டால் முனை முற்றுதலாகுமாம்
பிஞ்சுக் காலடியை (குளம்பை) நகத்தால்
வேகமாகக் கிள்ளி மட்டப் படுத்தினாரப்பா.

குட்டியைப் பிடித்தெழுப்பி நிற்க வைத்தார்.
தட்டுத் தடுமாறிச் செல்ல அடியெடுத்தது.
தள்ளாடியது தாயருகில் மெதுவாக விட்டார்
அப்பறமென்ன! மே!..மே!யென்று பாசப் பொழிவே!

தாயாடு நக்கி நக்கி வெப்பமாக்கியது.
பஞ்சுப் பதுமைப் புது சீவனானது.
உயர் ரகக் குட்டி. மிக
நீண்ட காது ரெட்டைச் சடையாக ஆடும்.

உயரத்திலிருந்து ஒரு வட்டமடித்துக் குதிக்கும்!
என்னாலும் உன்னாலும் முடியாத சுட்டித்தனம்!
அழகு, அன்பு ஆசைப்பார்வை விலையுயர்வு!
ஓடியோடி அம்மாவை இடித்திடித்துப் பால் குடிக்கும்.

கன்னத்தை ஆசையாக உரசி அணையும்.
சின்னப் பூப்பல்லக்காய் தூக்குவேன். என்ளாளும்
என்னோடிராது தெரியும்! விற்பனையாகும் சோகமே!
என்ன ருசி ஆட்டுப் பால்!

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-8-2016

*

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊

13. கண்ணதாசன் சான்றிதழ் 14

 

kanave kalaiyathe

பெருமக்களீர் , பாவலர்கள் அனைவருக்கும் வணக்கம்

கவியுலகப் பூஞ்சோலையின் 30-7-16 தினபோட்டியின் தலைப்பு#கனவே_கலையாதே# இன்றைய போட்டி கவிதையின் #வெற்றியாளர்_கவிதாயினி_#Vetha_Langathilakam# அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

கனவே கலையாதே.
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

Vetha Langathilakam
தலைப்பு:- கனவே கலையாதே….(பாடல் மெட்டில்)

ஆண்:-
காதலை மறைக்காதே பூவினும்
மெல்லிய காதலை மறைக்காதே!…
மூடிப் பொத்தினும் இருமல், காதல் வெளியாகும்
மல்லிகை முல்லையாய் ஊரெல்லாம் மணமாகும்
தேசிய நறுமணம் அறிவாயா….
தேங்காத உணர்வு புரிவாயா…
தெளிவற்ற மௌனம் பெரும் திரையே
..(மூடிப் பொத்தினும்..)….(காதலை மறைக்காதே)…..(வரிகளைப் பாடுதல் — கையேந்தியே வரிகள் பாடுதல் போல)…..
உன் விழிகள் காட்டிக் கொடுக்கும்…..
உன் கன்னம் நூறு சொல்லும்…
தடுமாறும் பொழுதே புரியுமல்லவா
பெண்:-
கன்னிப் பெண்ணின் மனதில்
காதல் இரகசியம் தானே….
மெய்யைப் பொய்யாய் மறைப்பாளே…
ஆண்:-
விழியால் மொழி கூறேன்..
நிலமேன் நோக்குகிறாய்…..
நினைத்திடு என்னை சுந்தரியே
பெண்:-
…ம:…காதல் படித்திட நினைக்கவில்லை
நினைவும் மனதில் வந்ததில்லை
நிச்சயம் காதல் தேவை தானா…..
(மூடிப் பொத்தினும் // வரிகளைப் பாடுதல் — கையேந்தியே வரிகள் பாடுதல் போல)…..

ஆண்.-
சுவாசம் தானே காதல்…
சுகப்பட ஏனோ தயக்கம்…
சுடுகலம் அல்லவே காதல்..
பெண்:-
வெடித்துப் பறக்கும் பஞ்சில்
இயற்கை மென்மை உண்டு
இடித்து உடைக்க எண்ணாதே….
ஆண்:-
காதல் நயகராவா நீயன்றி
பொங்கும் எரிமலையா….
என்னிதயம் குளிருமோ எரியுமோ உன்னால்…
பெண்:-
ஆகட்டும் பார்க்கிறேன்
அப்பா அம்மாவோடு பேசுவேன்…
கொஞ்சம் பொறுப்பாயா காத்திருப்பாயா….
(மூடி பொத்தினும்)…..(காதலை மறக்காதே..)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-7-2016
(பாடலைப் போட்டு என் வரிகளையும் கவனித்தேன் ….)

#தலைமை_நிர்வாகி_ஒரத்தநாடு_நெப்போலியன்#
#கவியுலகப்_பூஞ்சோலைக்_குழுமம்#

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

12. கண்ணதாசன் சான்றிதழ் – 13

 

mmm

13692855_1756529767945131_8433056370442052562_o

வெண்கலம்  – -1

venkalam

Poongavanam Ravendran to கவியுலகப் பூஞ்சோலை

பேரன்புள்ளீர், அனைவருக்கும் வணக்கம் மிக மகிழ்ச்சியான தகவல்

#சிறப்பு_கண்ணதாசன்_சான்றிதழ்_ வெற்றியாளராய் #கவிதாயினி_வேதா_திலகம்_ #தலைப்பு_துள்ளி_திரியாத_பருவம்# 28–7–16 போட்டி கவிதையின் வெற்றியாளர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

கவித்தோழமைகளே   எங்களுடன் சேர்ந்து நீங்களும் கவிதாயினியை வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
#கவியுலகப்_பூஞ்சோலை_குழுமம்#

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

துள்ளித் திரியாத பருவம்
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

 

மனமறியாத வேதனை மாநிலத்தில்
இனமேயினத்தை வெறுக்கும் அங்கவீனம்.
இயல்புணர்வா இது இரக்கமின்மையா!
இறைவா ஏனிந்த நிலை!

பிள்ளைத் தொழில் தீக்குச்சியா!
கொள்ளை வெடிகுண்டுத் தாக்கமா!
தள்ள முடியா பிறப்பிழிவா!
கொள்ளை அடித்ததா இளம்பிள்ளைவாதம்!

ஏமாற்றம், துன்பம், அவமான
மூலதனங்கள் சூறாவளியில் அல்லாடும்
சிறுமன வாழ்வுத் துன்பியல்
சமுதாயக் குற்றம்! மனமெரிகிறது!

நீதிநெறிகள் படித்தும் அடியொற்றா
தீயமனங்களால் நாட்டு நாற்றம்
வறுமை, பிச்சையெடுப்பு, அங்கவீனமாய்
மானத் துகிலுரிப்பது மடைமை!

துள்ளித் திரியாத பருவத்தைத்
துள்ளி விளையாடச் செய்யும்
எள்ள முடியாத நிர்வாகமிங்கு.
பள்ளத்திலில்லை அங்கவீனர் டென்மார்க்கில்.

மெச்சும் நிலை இது.
உச்ச பட்சமாய் அரசுகளங்கு
இச்சை மிகு திட்டங்களால்
எச்சமுடை நிலையுயர்த்த வேண்டும்.

அள்ளி வயிறாறும் உணவில்லாத
எள்ளி நகையாடும் ஏழைமை
உள்ளம் நோகும் காட்சியை
கள்ளமில்லா அரசு நேராக்கணும்.

அங்கலாய்க்கிறது மனது! தர்மமின்றி
பங்கிடுகிறார் மக்கள் சொத்தை.
தங்கப் புத்துலக சிந்தனைகளால்
அங்கிதை மாற்றலாம் ஆட்சியாளர்.!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  28-7-2016

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉

11. கண்ணதாசன் சான்றிதழ் 12

 

13738108_1756673691264072_6216012279348264703_o

12th – certificate…Kannathasan-

🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🍀
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🍀

மனந்தொட்டு முத்தமிட்டால்
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

(வாயாலே உறவாடும் காலம் – ஓறல் பேஃஸ்)

கனமின்றி இலவம் பஞ்சாய்
வனமேகும் ஒரு மனம்
தனம் கொள்ளும் இதமாய்
மனம் தொட்டு முத்தமிட்டால்.

வாயால் எதையும் உணரும்
வாயாலே உறவாடும் காலமாதலால்
வாயுளிங்கு அரிய கன்னம்
செல்லக் கடியாய் குழந்தைக்கு.

மனம் விரிந்து மிதந்து
மகிழ்ந்து உறவாடி ஒன்றிடும்
தினம் தருமுன்னூறு முத்தத்தால்
சினமடங்கும் சிரித்துச் சுகிக்கும்.

சில்லெனும் தென்றலில் ரோசா
வாசமாய், இன்னிசை வீணையாய்
தேன் தடவிய முத்தம்
ஊடுருவி உள்ளே நுழையுது.

துன்பங்கள் சிதறிக் கலைந்து
மென்னமைதி நரம்பெங்கும் பாயும்.
பேரமைதி உடல் கொள்ளும்
சீரானந்த முத்த எச்சிலால்.

அகப்பட்ட வார்த்தைகளை உருட்டி
உருவாக்கி கருத்தொடர்பற்று விளங்காது
அலையும் பனுவலாய் அகப்பட்டதா
என் கன்னமுனக்கு செல்லமே!

இன்ப நங்கூரம் இதுவா
நன்கு ஊன்று! ஆழ்கிறேன்!
நிழலல்ல இது நிசம்
மனம் கொண்டு முத்தமிட்டால்.

முத்த மழையில் நனையும்
தாய்மைப் பேரன்பு, பேரருள்
வரம்! பேறுக்காய் ஏங்குவோர்
தரணியில் ஆயிரம் ஆயிரம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-7-2016

 

lines-stars-243923

10. கண்ணதாசன் சான்றிதழ் -11

13738359_1755323481399093_1833101698648335527_o

இது 11வது சான்றிதழ்.)

 

தாலாட்டும் நினைவுகள்.

(அன்னத்தூவி – அன்னப் பறவையிறகு)

இன்பியல் அனுபவ அலைகள்
அன்னத்தூவியாய் அணைந் திதயத்தில்
நன்னயம் பூத்துப் பெருக்கும்!
நன்கொடையென மனவியலாளரும் கையாளும்
கன்னலான நெஞ்சினடி ஓவியங்கள்!
அன்னவூஞ்சல்! அமுத கிரியாவூக்கி;கள்!

ஓவியங்கள் ஒங்காரமாய் ஒசையிட்டு
ஓய்வு நேரங்களில் ஓடையாய்
ஓடியது தண்ணீர் நிறங்களோடு.
ஓம் மென்ற தூரிகைகளின் நடனம்.
ஓவியக்காரியாய் ஒவியம் வரைந்தேன்
ஓ! இனிய அனுபவமது!

இன்றும் தாலாட்டுகிறது! எங்கே
இழைகிறது என் ஓவியங்கள்!
இன்னிசைக் குழுவே பாடுமென்
இதயத்துள்! தூரிகையின் முத்தங்கள்
இணையில்லா இன்ப சரசங்கள்!
இதய வருடல்கள் ஒவியங்கள்!

தந்தையோடு கைப்பற்றி வளவில்
மந்திரம் போல் நடந்தது,
தம்பளப் பூச்சியை மிதிக்காது
தாண்டித் தாவி நடந்தது,
தரமான அறிவார்ந்த கதைகள்
தமா(ஷ்)சாகவும் கூறுமப்பா ஹா! தாலாட்டுகிறது!

சனிக்கிழமை தோறும் மாமிமாருக்கு
சங்கீதம் படிப்பிக்க துவிச்சக்கரவண்டியில்.
சங்கீத வாத்தியார் வருவார்
சங்கடமின்றி உன்னிப்பாய் கேட்டது
சங்கமமாகியது இரத்தத்தில் இயல்பாய்
பங்கீடிது மின்னற் கீற்றாய்…

அப்பம்மா பசுப்பால் கறப்பார்
அமுதமொழி வரும் வரை
அணைத்திருப்பேன் கன்றுக் குட்டியை
இணைப்பை விட்டதும் துள்ளியோடி
அமுதமருந்தும் குட்டியழகோ அழகு!
அட்டைப்பெட்டிப் பாலில்லின்று தாலாட்டுது!

ஓரின்பத் தென்றல் தேனள்ளியூற்றி
வேர் இறுக்குமானந்தத் தாலாட்டு
வைக்கோல் பட்டடையிலிருந்து இழுத்து
வைக்கோலை மாடுகளிற்குப் போடுவது
பைய அடியெடுத்து பயத்தோடு.
கைவிடாத பயம் மாடு இடிக்குமென.

 

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.
24-7-2016.

end_bar

9. கண்ணதாசன் சான்றிதழ்.10

13781714_1754848521446589_7399165200020175937_n

10th…

கருகிய மலர் சிரிக்கிறது


கருமை நிறத்திலும் கண்டவரை ஈர்க்கும்
கஞ்சமில்லா அழகுப் புன்னகை கண்ணிறைக்கும்.
கவனம் இழுக்கும் வண்டு விழியழகி.
கந்தோரில் அனைவரையும் கம்பீர அறிவொளியால்
கவரும் தலைவியவள், துணை அதிகாரி.

கடமைப் பதவியுயர்வு நேர்முகத் தேர்வு
கணவனிடம் கையசைத்து விடை பெற்றாள்.
தலைநகர் நோக்கிய மகிழுந்துப் பயணம்.
தடவும் எண்ணக் குமிழிகள்! எதிர்காலம்
தரப்போகும் பதவியின் கற்பனையில் நீந்தினாள்.

மூன்று மணித்தியாலச் சாரத்தியம். ஒளிந்து
முகிலுக்குள் அசையும் நிலவாக இசைச்சாரல்
முழுதாய் இதயம் தழுவி நனைத்தது.
கோடை வெப்பக் கானல்நீர் தெருவில்.
கோடையிடியானவொரு சத்தம்! வாகனம் புரண்டது!

நெருப்புக் காட்டில் இவள் நினைவிழந்தாள்.
நெருப்பு மழையில் குளித்தவுடல். விழித்தாள்.
மருத்துவ மனையில் கட்டுகள் மருந்துகளுடன்.
மலர்ந்த பூ முகம் கருகியது.
சிலிர்த்த தகவல் அவள் கர்ப்பிணியாம்.

பந்தாடிய விதி முற்றாக அறுக்காது
சந்தனக் கட்டியைக் கொஞ்சிக் குழைந்திட
விந்தையாக வயிற்றில் வளர்ந்தது. சுபமாக.
தந்தை தாய் மகிழ்ந்து குலாவ
கொழு கொழு பாலன் கொத்தாக உதித்தான்.

பொங்கும் நயகரா இதயத்தில் போல
உங்கு மழைத்துளியுண்ட சிப்பி போல
கங்குப் பாலையிலொரு நீர்ச்சுனை போல
தங்க மகன் வந்தான் தரணியிலே
பொங்கியது உள்ளம் பூரித்து நிறைந்தது.

விதியின் விளையாட்டில் விண்ணப்பம் இன்றி
விளைந்து விரிந்த விகசிப்பு இது.
விசேடமான விருட்ச முளையிவள் மழலை.
விழிச் சிறகுள் அடைகாத்துச் சிரிக்கிறாள்.
விருதிவன்! கருகிய மலர் சிரிக்கிறது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-7-2016.

 
 
blackwith-colour

8. கண்ணதாசன் சான்றிதழ் 9

13731720_1754385308159577_1169192614117112720_n

 


 மனசு செத்துக் கிடக்கிறது……
ஓ!..மன்னிக்கவும்.

***

மனசு செத்துக் கிடக்கிறது
மனமகிழ்வு பொழுது போக்கென்று
மனவிடர் தரும் தொலைக்காட்சித்
தொடர்களின் அளவற்ற அட்டகாசங்கள்.

***

விலை கொடுத்தே மனமகிழ்வைத்
தொலைப்பவர் நாம் தான்.
அலையலையான நெருக்கடி அத்தியாயங்களை
கலையென்று எப்படித்தான் யோசிப்பார்களோ!

***

‘கல்யாணம் முதல் காதல்வரை’
வந்தனா விலகி, அசோக்குடன்
வாழ்ந்தாள் மீண்டும் முதல்
கணவன் – மனைவி பிரியாவீட்டில்.

***

பிரியாவை விலக்குவாளாம், மறுபடி
அருச்சுணனோடு வாழப் போகிறாளாம்!
வாழ வழி பணமுமில்லையாம்.
வாயடைத்து வாட்டும் அநியாயம்!

***

பிரியாவின் சகோதரி அசோக்கை
வரித்தாள். அதுவே வினையானது.
வஞ்சகம்! என்னே அகோரம்!
வக்கிரப் பொண்களாண்களின் சூதாட்டம்!

***

சுகந்தம் விரும்பும் சுந்தரவுள்ளம்
சுரணை கெட, கன்றி
சுருள்கிறது மரித்து, சொல்லியேயாகணும்
சுதம்! (அழிவு) ஒ! மன்னிக்கவும்

***
உருட்டு உருட்டென்று உருட்டி
தோலாக இழுத்து இழுத்து
சரவணன் மீனாட்சி மு(ம)டிந்தது.
சடுகுடு ஆட்டம் மூன்றெப்படியோ!
***

ஆதாரத் தமிழ் உருவி
ஆங்கில அருவி ஒளிக்காட்சியில்
ஆதங்கங்கள்! செத்துக் கிடக்கிறது
பாரதமே ! ஓ! மன்னிக்கவும்

***.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-7-2016.

 
index
 
 
 

7. கண்ணதாசன் சான்றிதழ் 8

13701239_1753990958199012_120091861594793639_o

போட்டி (7)

தலைப்பு:- வடை போச்சே (நகைச்சுவையென)

சரசு:-
யேக்கா! வாயுல மனசுல
வாறதை கவியா எழுதிப்புடலாமுன்னா
கணனில பாத்து எழுதலாமாமே!
உனக்கு தெரியுமாக்கா சொல்லேன்!

இல்லாட்டி சிவா அண்ணேட்டை
கேட்டு எழுதித் தரகேக்கலாமா!
இங்கிலீசு போட்டு நல்லா
எழுதித் தருவாரு சொல்லக்கா!

லெட்சுமி:-
ஏண்டி கூறுகெட்ட சிறுக்கி!
ஏண்டி ஒம் புத்தி
இப்புடிப் போவுது! கவிதைப்
போட்டினாநீ சுயமாத் தானெழுதோணும்!

வாயுல மனசுல வாறதை
எழுது! உங்கப்பாரு படிக்க
வெச்சது இதுக்கு தானே!
பரிசு கெடச்சான்னா இல்லாங்காட்டியுமென்னா!

கணனி பாத்து எழுதினா
வடை போகும் தெரிஞ்சுக்கோ!
விளையாட்டில்ல புள்ள நெச
வெனையா நினைச்சுக்கடி சரசு!

வேறு:-
பாட்டி வடை சுட
நரி வந்து தினமும்
வடையை திருடி உண்டது.
நரிக்குப் புத்தி புகட்டவேண்டும்.

பாட்டி காக்காவுடன் பேசி
நரியை ஏமாத்த நினைத்தாள்.
காக்காவிடம் பாட்டி வடை
கொடுத்து மரத்திற்கு அனுப்பினாள்.

நரி பாடக் கேட்டது.
காக்கா வடையோடு பறந்தது.
நரிக்கு வடை போச்சு.
நாட்டிலேயிப்படி வடைகள் போகுதே!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-7-2016.

 

lines-b

Previous Older Entries