6. ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்.

13735633_1753072968290811_8784608383151339310_o

ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்

இன்றும் பார்க்கப் புதிதானது
இரத்தக் கண்ணீர் உயிர்ப்புடையது
துரோகம், வஞ்சகம், திமிர்
ஆங்கில மோகம் அடடா!..
தமிழ் கலாச்சாரப் பழிப்பு!

இதயம் தொழும் தமிழ்வசனம்
இரண்டு, மூன்றென பலமுறை
பார்த்தால் கவிஞனாகலாம் (உதாரணம்)
” தொட்டாரைத் துவள வைக்கும்
துடியிடை – சுழல் நயன சுந்தரி”

காந்தாவின் இளமையழகு பதினாறு
வயதில் பார்த்து ரசித்த ராஐம்
நடிப்பு சிறப்பு. சோடி நடனம்
ரசனை.” ஆளை ஆளைப் பார்க்கிறாய்”
நானன்று பாடியாடிய பாடல்.

மோகனரங்கம் பெண் பித்தன்.
மோகிக்கும் நடிப்பு. நகைச்சுவை
அவரது பாணி தனி ஒப்புக்குத்
திருமணம், பரத்தை வீடு, குஷ்டமுகந்த
தண்டனை. மனைவிக்கு மறுமணம் மகாசிறப்பு.

கல்வி கற்றிட்டால் கனமழியுங்கள்!
கால் செருப்பாய் மரணவீட்டில்
மனிதங்கள் வீசல்! அகங்காரம்!
கலைசெய்கிறேனென்று தஞ்சம் காந்தா
விலையானது தேகம் வாழ்வு

இரு கரங்களில் ஏந்திய தேனீர்தட்டு
குஷ்டரோகமென்று மாடிப்படியில் சறுக்கல்
சந்திரபாபு நகைச்சுவை பிரமாதம்!
சிரிப்பு! ”தட்டிப் பறித்தார் என்வாழ்வை”
நான் விரும்பப் பாடிய பாடல். மிக நன்று.

”குற்றம் புரிந்தவன்” உலகப் பிரபலம்.
பாடல் போட்டியில் பலர் பாடுகிறார்
”பெண்களே உலக பெண்களே” பெண்களை
தூக்கி நிறுத்தும் கருத்துடைய பாடல்.
பாலுவின் தமிழ் உச்சரிப்பும் சிகரம்.

ஒழுக்கமிழந்தால் நிச்சயம் ஒருவனின்
விழுப்பமும் விழுமெனும் கருத்தமைந்த
இரத்தக் கண்ணீர் உலகில் இன்னுமுள்ள
பல மோனகரங்கன் – காந்தாக்களைத்
திருத்தட்டும்! படிப்பினைப் படம்.

( எல்லோரும் கதைச் சுருக்கம் தந்துள்ளனர் )

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 19-7-2016.


Unavngivet

5. கண்ணதாசன் சான்றிதழ் 6

13723882_1751422235122551_619705988644798997_o

மனம் வலிக்கிறது.

முகிலோ அலையோவென மருள் காட்டும்
முடிவற்ற அழகிய வெளியது உலகில்.
துடிப்பு மகிழ்வுடன் மக்கள் உலாவ
துலங்கும் வானெல்லை காணா அழகு.

முத்தமிடுவது போலப் பாவனை காட்டி
முத்தமிடாத பிரமிக்கும் கடலும் வானும்
சங்கமிப்பதாய்க் காட்டும் மாய அழகு
பொங்கும் நைஸ் கடற்கரையழகு குலைந்தது.

பயங்கரவாதம் வேலி தாண்டித் தாங்கொணா
மனவலிகள் தருவது புதுமையல்ல சூரியன்
உதித்து மறையும் செயலாக ஆகிவிட்டது.
அழகு நைஸ்நகரில் நாமுமொருமுறை வலம்வந்தோம்.

பாரவண்டியை அதி வேகமாய்ச்  செலுத்தி
பாதகமாய் எண்பத்தி நான்கு உயிர்கள்
பிள்ளைகள் பெரியவர்களாக பலியெடுத்ததும் பலர்
படுகாயமுற்றதுமான தகவலால் மனம் வலிக்கிறது.

விழுந்திட நொண்டும் வகையாய் தமிழில்
எழுகின்றது பல எழுத்துப் பிழைகள்.
பழுது கண்டு மனம் வலிக்கிறது.
இழுக்குடை நிலை இது மாறட்டும்.

அழகு, இயற்கை, ஆனந்தக் கொண்டாட்டம்.,
பழகும் உடன் பிறப்புகளைப் பிரிந்தோம்
துழாவும் மன வலிகளுடன் மேற்கிலெமக்கு
பழகிவிட்ட பாழும் துன்ப விளையாட்டிது

சுற்றிலும் ஈட்டிகளாக வெற்றி ஏணிகளாக
நற்குணம் மாற்றும் குற்றுயிராகவும் ஆக்கும்
கற்றவனும் கல்லாதவனும் பெறும் சாகசமிது
குற்றிக் குதறி மனம் வலிக்கிறது

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2016

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

4. கண்ணதாசன் சான்றிதழ்

13603261_1748417112089730_3740032208945390882_o

முதல் காதல்

*

( ஐந்தாவது கண்ணதாசன் .சிறப்புச் சான்றிதழ்
முதற் காதல்.)

சந்தம் துள்ளும் பதின்ம வயதில்
தந்தையின் நண்பர் மகனெனும் இனிய
பந்தத்தில் எம்மில்லத்தில் குடி புகுந்தார்.
விந்தையில்லை நேச வனத்துள் இயல்பாகவே நாம்.
தொய்யாத ஒழுக்கவியல் வேலியுள் காதல்
செய்யோனென இரகசியமாகச் சுடர் விட்டது.
மெய்யாக வெளியுலகிற்கு வெளிச்சமான போது
பெய்தது எதிர்க்கணைகள் எம்மில்லத்தில்.
எட்டுப் பிள்ளைகள் இவரின் தந்தை
சட்டென இதயம் நின்று விண்ணுலகேகினார்.
கட்டான குடும்பப் பொறுப்புகள். நிலையில்
கடமை கருதி தென்னிலங்கை சென்றார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் நாமிருவரும்.
கடிதம், பிரிவு காத்திருப்பாய் நீண்டது.
கடினமான ஏழு வருடங்கள் காதலாடினோம்.
கவிதையும் காதலுமப்போது பின்னிப் பிணைந்தது.

இலையாம் தேயிலை இறப்பர் தோட்டத்திலிவர் தொழில்.
மலையாய் நெஞ்சிலுயர்ந்த  அலை
நிலையானது கடிமணமாய். தெற்கிற்கு மாறினேன்.
தளிர்விட்டது குடும்பம் குழந்தைகள் பேரர்களாக.
முதற்காதல் முழுக் காதலாகி நர்த்தனமிடுகிறது:
முதுவேனில் வீணையுடன் இன்பக் கீர்த்தனமாகிறது.
மதுவிது குறையாத அன்புப் பாலமிது.
வலியது உண்மையான நடிப்பில்லையன்றேல் இனிப்பது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

3. கண்ணதாசன் சான்றிதழ் -4

13620885_1727681140834518_1975772005668467882_n

இதயத்தில் கனக்கிறாள்.

 

அவளை நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது
அவளே நெஞ்சில் கனமாகிவிட்டாள்.
அவள் என் பிரிய நண்பியென்று
அவமாக எண்ணினேனோ!… இன்றெண்ணுகிறேன்.

தாயகத்திலிருந்து தெரிந்த நாமும் அவர்களும்
இங்கும் அன்பாகக் கலந்துறவாடினோம்
இரண்டு மணிநேர மகிழுந்துப் பயணம்.
அனைத்தும் பேசி கலந்துறவாடி
விருந்து சந்திப்பாக உறவு இனித்தது.

சரிதாவிற்கு பதினெட்டு இருபது வயதில்
இரு ஆண் பிள்ளைகள்.
அதே வயதுடைய எமது பிள்ளைகளும்.
திடீரென சரிதா எதற்கோ பயப்படுவது போலவும்
தந்தையிடமிருந்து தனதிரு மகன்களை

பாதுகாத்து அணைப்பதும் தெரிந்தது.
சடுதியாக ஒரு மகனை படிக்க என்று
கனடா அனுப்பினார்கள். சிலகாலம் செல்ல
மற்ற மகனையும் அனுப்பினார்கள்.

சரிதாவும் கணவரிடையேயும் அந்நியோன்னியம்
குறைந்ததாகத் தெரிந்தது. எம்மோடு அவள்
இவைகளைப் பேசவில்லை. தம்பதிகள்
ஒரே வீட்டிலிருந்தும் வேறாகத் தெரிந்தனர்.
எம்மோடு சிரித்துப் பேசி நடிப்பதாகத் தெரிந்தது.

இருபகுதி வீட்டு விஜயங்களும் குறைந்தது.
தொலைபேசிப் பேச்சுகள் தொடர்ந்தது.
சொல்லாமலே கனடா போவாள் வருவாள்.
நாம் நன்றாகப் பேசி நடிக்கிறோம்.
எங்கே கனநாளாகக் காணவில்லையேயென்றால்

கனடா போய்வந்தேன் என்பாள்.
கள்ளி சொல்லாமலே போய் வந்தாயா என்பேன்..
நன்கு சிரிப்பாள். இப்போது
தொலைபேசித் தொடர்பும் மிகக் குறைவு.
இதயத்தில் கனக்கிறாள்.

நட்பு – பிரிய நட்பென்றால்
உயிருக்குயிராய் மனதிற்கு
இதம் தரவேண்டும். இவள் கனக்கிறாள்.
திரையோடு வாழும் நட்பாகிவிட்டது.

இன்று வரை ஏதும் புரியவில்லை
அவள் சொந்த வாழ்வுக் குளப்பமாகியிருக்கலாம்
எம்மோடு பகிர கூசியிருக்கலாம்.
ஆனாலும் நாம் இனிய நண்பர்கள்…!!!..
(உண்மைக் கதை பெயர் முதலிய தகவல்கள் கற்பனை)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-7-2016

12965393-set-of-gold-dividers

கண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் 3

13615133_1726950080907624_7265839992127459924_n

நெஞ்சில் தைச்ச முள்.

அஞ்சிடும் வீரமற்ற நெஞ்சிற்கு
நெஞ்சில் தைக்கும் முள்ளாக
பஞ்சில் பற்றும் நெருப்பாக
பஞ்சமற்ற முட்கள் உலகில்.

***

உறவுகள் நண்பர்களின் அழுத்தும்
செயல்கள், வார்த்தைகள் முள்ளாகி
ஈட்டியாய் குத்துகின்ற தாக்கம்
உறுதியற்ற நெஞ்சில் ஆழமாயறையும்.

***

காதலழிவு, தாய்மையின்மைப் பழி,
வறுமைத் தாக்கம், கற்பழிப்பு,
நட்புத் துரோகம் கொலையென
முள்ளிலே முள்ளோடு வாழ்கிறோம்.

***

நாட்டுப் பற்றாளருக்கு
நாக விடம் போன்ற இன இழிவு
நாளும் நெஞ்சில் தைக்கும் முள்
ஒன்றல்ல ஓராயிரமிதயங்களின் தாக்கம்.

***

நாயினும் கீழானவன் என்போம்
நாட்டுப் பற்று இல்லாதவனை.
நாடே நாசமான துன்பம்
நாளும் நெஞ்சில் தைத்த (தைக்கும்) முள்.

***

முள் முறிந்து கன்றியதும்
முழுக் குடும்பம் அழிந்ததுவும்
முழுவதும் மொழியவியலா வேதனை.
இது மட்டுமல்ல இன்னுமின்னும்.

***

மாதரிழிவால் காயமுறும் மனங்கள்
மாபெரும் நட்டம் குமுகாயத்திற்கு.
வலிவுடையோன் வாகாய்ச்; சமாளித்து
முள் நீங்கி முதுகுயர்கிறான்.

***

முள் தைத்து முன்னேறுதலும்
முழதாய் அழியும் தற்கொலையாய்
முற்றுப் புள்ளி வைப்பவரும்
முளைத்து எழுவதுமாய் தாக்கங்கள்.

***

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

 
vector_146.cdr

கண்ணதாசன் சான்றிதழ்-1 – 2

13558928_1724978974438068_4317683988860908749_o

 

 

சுடாத சூரியன்

மழை மேகம் கருமேகம்
குழை மூடியதாய் சூரியன்
அழைத்தாலும் வரான் ஒளிந்து
சுடாமல் இருந்தான் உள்ளே

***

மேற்கில் இங்கு அவன்
மேலாக மின்னுவான் வெப்பமே
அற்ற சுடாத சூரியனே
நம்பினால் நம்புங்கள் மெய்யே.

***

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

*****************************************

13559140_1725807611021871_764913633982672311_o

 

உழைப்பே உயர்வு.

***

மாய்ந்து உழைப்பவனிற்கு மதிப்புடை
வாய்ப்பு வாசலில் கோலமிடும்
பிறரை ஏய்த்து சோம்பலாக வாழ்பவன்
நல்லினிய வாய்ப்பைச் சாய்த்து மாய்வான்.
உழைப்ப இல்லாதவனை விரக்தியாம்
மனித மனத்தொல்லை விழுங்கும்.
வெறுப்பு, ஏமாற்றம் இயலாமை
கருப்புப் போர்வையிட்டுத் துரத்தும்.

***

மனித மனச் சூரியன் உழைப்பு!
தன் காலில் நிற்கும் ஆனந்த
ஒளி நிம்மதிக் கடற்காற்றாய்
வீட்டை நிறைக்குமொரு இன்ப வானவில்.
சமூக அந்தஸ்து நன்மதிப்பு
உழைப்பால் சந்தணமாய் மணம் வீசும்.
படிப்பால் உடலுழைப்பால் உயர்வு உறுதி.
உறுதியான மந்திரக்கோல் உழைப்பு.

***

பசியின்மை, பாழ் தனிமை வறுமையெனும்
கொடும் தூசிகள் உழைப்பவனை நெருங்காது.
உழைப்பின்றி உயிரை மாய்க்கும் உன்னத
இளைஞர் வேலை வாய்ப்பெனும் விடத்தால்
அழிவது வேதனை. சுயதொழில் முன்னேற்றம்
பயமற்ற நிறைவு தரும் சஞ்சீவி. கையிலெடுங்கள்!
நம்பிக்கை, துணிவு முயற்சியே
உலகவாழ்வின் உன்னத செங்கோல்!

***

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

silence

Next Newer Entries