10. கலையும் கற்பனையும்.(கைவினை)

mine 338 mine 339

10. கலையும் கற்பனையும்.(கைவினை)

இங்கு நீங்கள் பார்ப்பது கரடிக் குட்டியின் முகம். என்னால் காகிதக் கூழில் செய்த முகமூடி.
இங்கு குழந்தைகள் நிகழ்ச்சியாக பம்ச,(Bamse) குயிலிங் (kylling) – கரடிக்குட்டியும் கோழிக் குஞ்சும் என்ற நிகழ்வு மிகப் பிரபலமானது. அதில் வரும் கரடிக் குட்டியின் முகம் இப்படி இருக்கும். குழந்தைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்த போது முதலாவது வருடம் கைவேலைப் பாடத்தில் இதைச் செய்ய விரும்பினேன்.
இது முதலில் பலூனை ஊதிக் கட்ட வேண்டும்.
செய்திப் பத்திரிகைகளைத் துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணிரில் இரவு முழுக்க ஊற வைத்து, மறுநாள் கைளால் பிசைந்தால் காகிதக் கூழாக வரும். இந்தக் கூழை பலூனின் மேல் மிகத் தடித்த பட்டையாக சம அளவில் போட வேண்டும். பசையும் பாவிக்க வேண்டும். சுவர் பேப்பர் ஒட்டும் பசை அல்லது நாங்களாக நீர் கொதிக் வைத்து சிறிது ஆற விட்டு மாவைக் கலந்தும் பசை செய்யலாம்.
பின்னர் ஓரிரு நாட்கள் காய விட்டு முகத்திற்கு ஏற்ற அளவில் வெட்ட வேண்டும்.
மேலும் ஒரு சிறிய பலூனில் இது போலச் செய்து அரை வட்டமாக வெட்டி மூக்குப் போன்று முகத்தில் ஒட்ட வேண்டும். (மண்ணிறம் பூசிய பகுதி)
இவைகள் நன்கு காய மஞ்சள் நிறம் தீட்ட வேண்டும். இங்கு அந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிறமே பாவித்தார்கள்.
கண்களிற்கு இரண்டு வட்டம் வெட்டல், தோல் துணியில் காது உரு வரைந்து வெட்டி, பசையால் காதுகளை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும். 1990ம் ஆண்டு என் முதல் வருடப் படிப்பில் செய்தது.
இந்த முறை அதை வெளியே எடுத்து பேரனுக்குக் காட்டிய போது, நான் போட, சிரித்தார். தான் போட மறுத்து விட்டார்.
கண்ணாடிப் பொலிதீன் உறையில் போட்டு தூசிகள் படாது வெளியே தெரியக் கூடியதாக உயரத்தில் வைத்திருந்தேன்.
பார்த்து ரசியுங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-12-2013.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

கலையும் கற்பனையும் ( கைவினை). 9

P1040970

கலையும் கற்பனையும் ( கைவினை). 9

அது 1991 குழந்தைகள் பராமரிப்புப் படிப்பிலிருந்தேன். (1990 – 1993). டெனிஸ் மொழியில்  3 வருடப் படிப்பு.

 சங்கீதம் ஒரு பாடம்.

முழுவதும் பிள்ளைகள்  சம்பந்தமாகவே இருக்கும். செயல் முறைப் பாடமும் இருந்தது.

எக்ஸ்.90 எமது வகுப்பின் பெயர்.

அதில் தான் இந்த சங்கீதக் கருவியைச் செய்தேன். ஆசிரியை உதவினார். பலர் பெரிய டோலக் செய்தனர். நானே தான் எனக்கு – சிறிதாகத் தெரிவு செய்தேன். இதை வீட்டில் செய்ய முடியாது. மரம், மேலே போட்டு மூடும் தோல் இவைகள் உரிய இடங்களில் தான் எடுக்க முடியும். செமினாரியம் பெரும் நிறுவனமாதலால் வசதிகள் உண்டு.

நாம் வீட்டில் பாவிப்பதுண்டு ஒன்று சேர்ந்து இசைக்கும் போது.

drum

சிரட்டையை நன்கு சீவி மற்றைய சிறு கருவி செய்தது. அதன் பெயர் தெரியாது.

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன். விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

பின்னர் ஓரளவு கட்டுப்பாடு வர வளைவுகள் வரும். எழுதுகோலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். இங்கு தான் எழுத்து எழுத வருகிறது.

இது போலவே நிறம் தீட்டும் விடயத்திலும். நிறத்துடன் முதலில் விளையாட விடுவது. கரத்தில் சாயத்தைப் பூசி ரீ சேட் பிறின்ட் பண்ணுவதுண்டு. அதை வீட்டிற்கு கொண்டு போய் காட்டி பெருமைப்படுவார்கள்.

இங்கு நீங்கள் காண்பது கைகள், விரல்கள் கட்டுப்பாடுடைய – நிறம் தீட்டும் பயிற்சி.

இப்படி வெற்றுக் கட்டங்களை அச்சடித்துக் கொடுப்போம்.

20031_1294791487068_1324105_n

கட்டத்திற்கு வெளியே நிறம் பூசுப்படாது நிறம் தீட்டிப் பழகுவார்கள்.

முயன்று பார்க்கலாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

29-5-2013.

crayon_line

கலையும் கற்பனையும் 8.(கைவினை)

P1040572

கலையும் கற்பனையும் 8.(கைவினை)

 

சிறுவர்களிற்கு பொத்தான் என்றால் நன்கு பிடிக்கும்.

சட்டையிலிருந்து களன்றவைகளை சிலர் சேகரித்து வைத்து விளையாடுவார்கள். ஒரு தகர டப்பாவிலோ அல்லது போத்தலிலோ போட்டு வைத்து பாவிக்கலாம். இப்படி சேர்த்தவைகளைப் பிள்ளைகளோடு பல வகையில் விளையாடலாம். லூடோ போன்ற விளையாட்டிற்குக் காய்களாகவும் பாவிக்கலாம்.

நானும் இப்படி வகை வகையான அழகான பொத்தான்களை சேகரித்து வைத்திருந்தது  நினைவு வருகிறது.

இங்கு நீங்கள் காண்பது நிறமூட்டிய சாக்குத் துணியில் பொத்தான்களை மரம் போன்ற அமைப்பில் பிள்ளைகளோடு நான் செய்தது.

இப்படி பல உருவங்களைக் கற்பனை செய்து அமைக்கலாம். உருவில் மிகப் பெரிய பொத்தானில் வண்ணங்கள் வரையலாம்.

Buttons08

சின்னஞ்சிறிய  பூக்கள் கொண்ட சீத்தைத்துணியால் பொத்தானை மூடிக்கட்டி அழகாக்கலாம்.

இதை விட கூகிளில் கண்ட சில படங்களையும் தந்துள்ளேன் ரசியுங்கள்.

IAH-330-ButtonFlowers-Hero

JFIAL_Buttons_01

N_ZeccaButtonsB

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

20-5-2013.

கலையும் கற்பனையும் (கைவினை). 7

P1040836

கலையும் கற்பனையும் (கைவினை). 7

சிறு வயதில் ஊரில் களி மண்ணில் உருவங்கள் செய்து விளையாடினோம். இவற்றில் முக்கியமாகப் பிள்ளையார் பிடித்தும் விளையாடியது நினைவு வருகிறது.

இது போல இங்கு பாலர் நிலையத்தில் கடையில் வாங்கிய நிறமூட்டிய களிகளில் உரு அமைப்ப்பது மிகப் பிரபலம்.

இதில் இரண்டு வகைகள் உண்டு. டெனிஸ் மொழியில் எல்இஆர் என்று ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் ”லிய” என்போம். அல்லது ”மொடலிய வொக்ஸ்”  என்போம்.

ஒரு வகை எந்த நாளும் இடிபாப்பம் செய்யும் மாக்கலவை போல பிடித்து விளையாடிய  பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து அடுத்த அடுத்த நாட்களும் செய்வோம். இறுகிவிட மாட்டாது. மாதக் கணக்கிலிருக்கும். பிள்ளைகள் இதனோடு விளையாடுவதை மிக நேசிப்பார்கள். ஏனெனில் இதைப் பினையும் உணர்வு மிக இதமானது. 

மேசையில் மெழுகு சீலை விரித்து, பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு ஆடை (ஏப்றன் என்று கூறுவோம்) அணிய வைத்து, ஓரிரு பெரியவர்களின் மேற்பார்வையில் இருந்து அனுபவிக்க, விளையாட விடுவோம். நாமும் அவர்களோடு குழந்தையாக செய்து காட்டலாம். இதைப்பார்த்து அவர்களும் வித விதமாக உரு அமைப்பார்கள்.

தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.

இதை விட இன்னோரு வகையானது. பல பல நிறங்களில் உள்ளது. உருவங்களைச் செய்து அவுணில் சுடுவது. பின்னர் எடுத்து நிறமூட்டுவது.

இங்கு படத்தில் நீங்கள் காண்பது சங்கிலி, மாலைகளிற்கு தொங்கவிடும் பென்ரன்.  பெரிய பிள்ளைகளுடன் சேர்ந்து நானும் செய்து சுட்டு, நிறமுட்டியது. சாவிகளுடன் தெங்கும் உருவம் இன்னும் வேறு என்னென்னவோ அவரவர் கற்பனையின் பிரகாரம் செய்யலாம். அவுணில் சுட்டதும் கடினமாகிவிடும்.

நீங்களும் செய்து பாருங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-4-2013.

fruiti

 

 

6. கலையும், கற்பனையும்(கைவினை)

P1040570

மணிகளால் உருவமைப்பு.

இது 3 வயதிற்கு மேற்பட்ட யாரும் செய்யும் கைவினை.

படத்தில் காண்பது பிளாஸ்ரிக் மணிகளால் ஆனது.

வெள்ளையாகத் தெரியும் பிளாஸ்ரிக் தட்டுப் போல பல உருவங்களில் சிறிதும் பெரிதுமாக நட்சத்திரம், முக்கோணம் நீள் சதுரம் என கடையில் விற்கிறார்கள். பிளாஸ்ரிக் மணிகளும் உறைகளில் நிறைத்த பல நிறங்களில் வாங்கலாம்.

விரல்களின் அசைவு – மனதின் கற்பனை  -பொறுமை -– எண்ணத்தின் கூர்மைகளைச் சீராக்கும் பயிற்சி இது.

பிளாஸ்ரிக் தட்டில் சிறு சிறு ஆணி போல நிமிர்ந்து கூர் போன்று நிற்பதில் பிளாஸ்ரிக் மணியை நிறுத்த வேண்டும். விருப்பமான வண்ணங்களில் பிளாஸ்ரிக் மணிகளை அடுக்கிய பின்பு  பிள்ளைகளின் பெயரை ஒரு துண்டில் எழுதி உயரமான இடத்தில் வைப்போம். அடுத்த அடுத்த நாட்களில் இன்னாருடையது என்று அடையாளம் கண்டு வேலையைத்  தொடரலாம். பெரியவர்கள் ஒரு நாளிலேயே முடிப்பர். சிறுவர்களிற்குப் பல நாட்கள் எடுக்கும்.

5 – 6 பேர் ஒன்றாகச் செய்ததும் ஒவ்வொன்றிலும் மேலே பேக்கிங் கடதாசியை வைத்து அயன் பண்ண வேண்டும். பிளாஸ்ரிக் மணியின் மேற் பரப்பு உருகி ஒன்றோடு ஒன்று ஒட்டி செய்த உருவம் அழகாக அமையும். இப்போது அடியில் நீங்கள்  வைத்து அடுக்கிய தட்டிலிருந்து உருவத்தை கீழே இறக்கலாம். உருவம் கையிலெடுக்கக்  கூடியதாக இருக்கும்.

படத்தில் நான் பிள்ளைகளோடு செய்த உருவங்களைப்  பார்க்கலாம். சிறிது 2 ம் சமையறையில் தொங்குகிறது. பெரியவை 2ம் குளியலறையில் தொங்குகிறது.

பிள்ளைகளோடு சேர்ந்து நாமும் செய்வோம் மாதிரியாக. 

பல பல மாதிரிகள் உள்ள சிறு படப் புத்தகம் நிலையங்களிற்கு  வரும்.

P1040571

அதையும் பிள்ளைகள் பார்த்து உரு அமைய ஏற்ற நிறங்களாக மணிகளை அடுக்குவார்கள்.

படத்தில் இதுவும் உள்ளது.

மிக சுலபமானது.

ஆனால் சிறு பிள்ளைகளிற்கு இது மிகப் பெரிய வேலை தானே!….

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

9-3-2013.

12720-22coloured

 

5. கலையும், கற்பனையும்(கைவினை)

sweater 047

பால் வளையம்.

 

பொழுது போக்குக் கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் வெள்ளை நிறத்தில் வளையங்கள், இதயம் உரு, பந்து – பல அளவுகளில் பாரமற்ற (பெளெமிங்கோ) எனும் கை வினைகளுக்குரிய பொருள் வாங்கலாம். (கண்ணாடிப் பொருட்கள் பொதியாக அனுப்பும் போது பாவிக்கும் ஸ்பொஞ் போன்ற வகையானது. எனக்கு சரியானப் பெயர் கூறத் தெரியவில்லை) விளங்காவிடில் கீழே படத்தில் காணலாம்.

சிக்சக் என்று கூறும் (பல்லுப் பல்லாக வெட்டும்) கத்தரிக்கோலால் பல வகை நிறத்துணிகளை ஒரு அங்குல நீள அகலத்தில் சிறு  சிறு சதுரங்களாக வெட்டி வைக்கவும். (படத்தில் காணுங்கள்).

sweater 046

 

 படத்தில் உள்ள கருவியின் கூரிய நுனியை வெட்டிய துணியின் நடுவில் வைத்து, கருவியோடு துணியைத் தூக்கி அந்த வளையம், அல்லது விரும்பிய உருவில் நெருக்கம் நெருக்கமாக அழுத்தி துணியை உள்ளே செலுத்த வேண்டும். அது அப்படியே நிற்கும். ஒரு சென்ரிமீட்டர் அளவு உள்ளே அழுத்தினால் மிகுதி வெளியே பூவாக விரியும். பூவாக விரியும் இடம் விட்டு அடுத்ததைச் உள் செலுத்தலாம்.

சுவரில் தொங்கவிட சிறு கம்பியை உள்ளே வளைத்துச் செருகலாம்.

இதை டெனிசில் பால் வளையம் என்று கூறுவோம். இங்கு நான் கூறுவது (படத்தோடு) துணி வேலை மட்டும் தான்.

இது எனது வேலையிடத்தில் பிள்ளைகளோடு செய்தது. அவர்களோடு நாமும் செய்து, நான் இப்போது என்னுடையதை வீட்டுச் சுவரில் மாட்டியுள்ளேன்.

நத்தார் நேரங்களிலும் நத்தாருக்குரிய பொருட்கள், நிறங்களோடு செய்வார்கள்.

வண்ண வண்ணப் பட்டிகளை (றிபன்) நிறங்களாகக் கலந்து சுற்றலாம்.

பொத்தான்கள் வளையத்தில் ஒட்டலாம். காய்ந்த பழவகைகள், பூக்கள், மிகச் சிறி பலூன் துண்டுகள் என்று கற்பனைக்கு ஏற்றபடி வளையத்தை – இதயத்தை – பந்தை அலங்கரிக்கலாம்.

இவை (வளையங்கள்) பல அளவுகளிலும் பெறலாம்.

பாலர் நிலையத்திலிருந்து பெரியவர்கள் வரை டென்மார்க்கில் இவ் வேலை பிரசித்தமானது.

முயன்று பாருங்களேன்.

சுலபமானது.

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2013.

 

 

valaiyammmm

 

 

 

4. கலையும், கற்பனையும்(கைவினை)

DSCF2348

அலங்கார மரக்குற்றி.

1985ம் ஆண்டளவில் றப்பர் மரக்குத்தியில் வர்ணம் பூசிய பூச்சினை (பெயின்ரிங்) இங்கு காண்கிறீர்கள்.

இது எனது தம்பி வீட்டில் அழகுக்காக அடுக்கி வைத்துள்ளார்.

எனது தம்பியும் என்னைப் போல கலை கற்பனைக் கைவண்ணங்களிலும், பாடுவதிலும் என்று பல திறமைகள் நிறைந்தவர்.

அம்மா அப்பாவோடு நாமெல்லாம் 20 வருடங்களுக்கும் மேலாக சித்திரை வருடப்பிறப்பு, தைப் பொங்கல்களிற்கு பொங்கிய சருவக் குடத்தை எடுத்து வந்து மினுக்கி அழகிற்கு வைத்துள்ளதைக் காண்கிறீர்கள். அத்துடன் நாம் ஊரில் சமையலறையில் பாவித்த செம்பு அதன் மேல் வைத்துள்ளார்.

அத்தோடு பூக்கூடையில் பூக்கள் அடுக்கியுள்ளார் இதுவும் அவரது கை வேலையே.

ஊரில் இரவுணவு முடித்து எல்லோரும் கூடியிருப்போம். கூப்பிடும் தூரத்தில் மாமி வீடும் இருக்கிறது. அவர்களும் வந்து விடுவார்கள். பின்பு நேயர் விருப்பம் தான். தம்பி ஆண்குரல் வரிகளும், நான் பெண் குரல் வரிகளுமாகப் பாட்டுக் கச்சேரி தான்.

சரி இவை நிற்க…..நான் விடயத்திற்கு வருகிறேன்.

எனது கணவர் 300 கெக்ரார் தேயிலை றப்பர் தோட்டத்தில் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது நிர்வாக உத்தியோகத்தராக  இலங்கையில் பணி செய்தார்.( field officer in state plantatiom corparation- Srilanka ). றப்பர் மரங்களைப் பிடுங்கி விட்டு தேயிலைக் கன்றுகளை நட்டு வளர்த்துப் பயன் பெற்றனர்.

மரங்களைப் பிடுங்கி அதைத் துண்டு போடும் போது ஒரு மரக்குற்றியை  எமது வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.அதன் அழகைப் பார்த்து நான் 5-6 குற்றிகளாகத் தரும்படி கேட்டேன் இப்படி வர்ணம் பூசிப் பாவிக்கலாம் என்று.

rubber stole2

மாதிரியைப் பாருங்கள்.

இப்படி வித விதமான வண்ணம் பூசி வீட்டிற்கு வெளியே பூச்சட்டிகளை அதன் மேல் அடுக்கி வைப்பது, தேவையானால் முற்றத்தில் போட்டு அமர்வது என்று பாவித்தோம்.

பின்னர் கணவர் வேலையை விட்டு டென்மார்க் வரும் போது (1986ல்) நாமும் கொழும்பு வந்தோம்.  அப்போது தங்கை வீட்டில் எல்லாவற்றையும் வைத்தோம. தம்பி தனக்கு 2 போதும் என்று எடுத்துக் கொண்டு போனார். அது மட்டும் தான் இப்போது மிஞ்சியுள்ளது அலங்காரப் பொருளாக. (வர்ணங்கள் களன்றுவிட்டது.)

இது நினைவு வந்த போது தம்பியிடம் கேட்டேன் படம் எடுத்து அனுப்புவாயா என்று. உடனே எடுத்து அனுப்பினார்.

இன்று அதைப் பாவித்து இதை எழுதினேன்.

அவருக்கு மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். Thank you so much Satha!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-2-2013.

 

163664_469483907911_713827911_5799148_5756063_n

Previous Older Entries