6. 25வது கவியரங்கம்.

 25வது கவியரங்கம்.

(6வது எத்தனம்.)

தமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……
என் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே! பல் திறமைத் தலைவரே! 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே! வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்
வாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.

வாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும்பம்—————————————————-———–

ஆச்சரியப்படலாம் பலர்! ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.
13501893_1048738495217622_6595386679914587423_n
paperclips

5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

 

கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

தமிழே வணக்கம்———————-
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
இவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்
பெற்றவர் தந்த தமிழல்லவா
பெட்டியில் பூட்டாது பெருக்கி
பெருங்காயமாய் மணக்க
பெருமையுடன் உலாவ விடுகிறேன்
பெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.
தலைமை வணக்கம் ——————————————
தலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.
கவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.
சபையோரே —————————————–
அன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.
சறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
தலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமையில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக
மீண்டும் பிறப்பதில்லை ————————————-
எனும் தலைப்பை எடுத்துள்ளேன்.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குதலே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.
***
எண்ணங்களால் நமக்கு நன்மையாய்
திண்ணமாய் பிறருக்கும் தீங்கெண்ணாது
வண்ணமாய் எம்மை வளர்த்தார்கள்.
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக அழகாய்.
***
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கு
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கும்.
காக்குமிச்செயல் எமது நம்பிக்கையை.
***
நிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி, வாழ்வதற்காகவே
பிறவி பெற்றேன் நான்
வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
***
நன்றி……………….
களம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்
எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை
வாயார மொழிகிறேன: நன்றி…நன்றி….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-6-2016.—-
13435412_1553843181578876_2277001488952134744_n

4. கவியரங்கம் 4வது எத்தனம்

op

 

4-6-2016

 21வது கவியரங்கம் 4வது எத்தனம்

தமிழ் வணக்கம்.
திராவிட மொழிக் குடும்பத்து முதல் மொழியே
செம்மொழியே! உலகின் பதினெட்டாம் இடத்து மொழியே
மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபு கொண்ட மொழியே பணிவான வணக்கம்! என்னோடு கவியரங்க மொழி பேசத் துணையாகுவாய்.
கவியரங்கத் தலைமை வணக்கம்!
திருமதி நிர்மலா கிருஷ்ணமுர்த்தியின் தகைமைகளைப் போற்றி அவரது தலைமைக்கு நிறை வணக்கம் இனிய வாழ்த்துகளுடன் அன்பு நன்றியும். அருமையான தலைமையுரைக் கவிதை. மிக ரசித்தேன் நன்றி.
சபை வணக்கம்
நம் வித்தாரங்களைப் பொறுமையுடன் கேட்க ஆவலாகக் காத்திருக்கும் பல் துறை வித்தகராம் சபையோரே அன்பு வணக்கம்
நிலாமுற்ற நிர்வாகமே குழுவினரே உங்களிற்கும் வணக்கம்.
வசந்தமாக வரும் எனது துணைத் தலைப்பு வசந்த காலப்
பள்ளிக்காலம்.
——————————————–
மண்ணில் அகரமெழுதி, மனப்பாடம் செய்து
எண்ணி விரல்களோடு கணக்கு கலைகளும்
வண்ணக் கைவேலைகளோடு பழகிய பசுமைப்
பள்ளிக் காலமெனக்கு மூன்றரையிலிருந்து பதினாறுவரை.
திருக்குறள் மனனம் பேச்சுப் போட்டி
திருவுடை நடனம் சங்கீதம் விளையாட்டு
பெருமையுடன் வாழவைத்த பள்ளி இனிமை.
வருவதினிப் புலம் பெயர்ந்த பள்ளி.
நாற்பதகவையில் வேற்று மொழக்p கலாச்சாரம்
ஏற்றது டெனிஸ் மொழிப் பள்ளி.
முற்றாக மூன்று வருடங்கள் முடிய
பற்றுடன் புகுந்தது செமினாறியப் பள்ளி.
பாலர் பராமரிப்பு – நர்சரி ஆசிரியர்
பயின்றது மூன்று வருடங்கள் வியப்பில்!
பாலகாலமல்ல! திக்குத் தெரியாத காட்டில்.
புதிது படிப்பு, பயிற்சியார்வம் அத்தனையும்!
சுயமான சிந்தனை, கணிப்பு மாறுபட்டது.
சுகமாய் கட்டுரையானாலும் வேற்றுமையாய் தன்
சுயகோண விரிப்பு வாய்மூலம் – அறியாவுலகு
விரிந்தது, அருமை, அனுபவம் புதிது.
இன்னும் சொல்லலாம், நேரமில்லை, வரிக் கட்டுப்பாடு.
நன்றி வரிகள்.
—————————————-
அரிய இவ்வாய்ப்;பிற்கு, பொறுமையாய் கேட்ட அவையோருக்கு, நிர்வாகத்திற்கு, தலைமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
4-6-20116.
purtyflwrsbr

3. 20வது கவியரங்கம்

13308548_1026729390751866_3646123214274022000_o

நிலாமுற்றம் 28-5-2016. 20வது கவியரங்கம் எனது (வேதா. இலங்காதிலகம்.) 3வது எத்தனம்.

ஆசைகள்.
தமிழே!
அழியாத தமிழே! வணக்கம்
அவனியின் புகழே வணக்கம்!
விழியே! என் மொழியே!
பொழிந்து உன்னை அனைவருக்கும்
விருந்தாக்கி மகிழ அணைவாய்!
பொருந்த நெஞ்சினிலே வருவாய்!
அருந்த, கவியரங்கம் சிறக்க
அருள்வாய்! வணங்குகிறேன் பணிவாக.
தலைமையே!
கவியரங்கத் தலைவரே வணக்கம்!
புவியெங்கும் புகழ் மணக்க
கவிஞர்கள் கூடி பாக்களீந்து
புகழ் மணக்க வாழ்த்துகளுடன் வணக்கம்.
சபையோரே!
சங்கமித்த சபையோரே வணக்கம்
தங்கத் தமிழ் சிறக்க
தாங்கும் தமிழார்வம் என்றும்
ஓங்க வளர்ப்போரே வணக்கம்.
ஆசைகள் அளவற்றது.
பேராசை, நிராசையோடு
துணைத் தலைப்பு ஆசைகளில்
என்னாசை எடுப்பது இங்கு
மண்ணாசை
மண்ணை அழைந்து மகிழ்வது
மண்ணுக்குள் கரங்கள் ஒழிப்பது
அண்ணாந்து வாயினுள் போடுவது
தண்ணீரில் குழைத்து அனுபவிப்பது
***
உருவங்கள் சட்டி பானையது
அருமையாய் செய்து மகிழ்ந்தது
பருவத்து மழலை மண்ணாசை.
அருகிருந்து கோலமிட்டதும் மண்ணாசை.
***
நாட்டுக்கு நாடு அரசர்
கோடு போட்டு யுத்தமிட்டார்.
காடேகினார் ராமர் மண்ணாசையே
உடன்பிறப்புகளும் மோதுகிறார் மண்ணாசையே.
***
ஊன்றி நிற்கிறோம் மண்ணில்.
உணவு தருவதும் மண்ணே!
மடியாகி, மெத்தையாகிக் கல்லறையாகிற
மகாபாரத மூலமும் மண்ணே!
***
எம்மைத் தாங்கும் மண்ணை
செம்மையாய் வாழவிடும் மண்ணை
அளவோடு நேசிப்போம் ஆதரிப்போம்.
உளமார மகத்துவம் உணர்வோம்!
***
மண்ணாசை அளவோடு கொண்டு மாண்புறுவோம் என்று கூறி வாய்ப்புத் தந்த நிலாமுற்றத்திற்கு நன்றி. வணக்கம்.
செவிமடுத்த, வாசித்த சபையோருக்கும், நடுவர்கள், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-5-2016
puthu

2. 19வது கவியரங்கம்.

 

 

19வது கவியரங்கம்.

நிலாமுற்றம் 19வது கவியரங்கம்.
எனது (வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.) இரண்டாவது முயற்சி.
(நாயகர் – அரசர். நடலம் – செருக்கு)
நாயகர் போற்றி வளர்த்த தமிழ்
நானிலம் போற்றும் தமிழே வணக்கம.;;
நடாது என்னுள் விளைந்த தமிழ்
நங்கூரமிட்டு நந்தனம் அமைத்த தமிழ்
நடலமின்றி நர்த்தனமாடி யான் விரிக்கிறேன்
நடைபாவாடை. நயமுடனெனது கவியரங்க
சமர்ப்பணம் நிறைவேற அருள்வாய்.
தமிழே வணக்கம்.
நன்மார்க்கம் நிறைவேற ஒன்று கூடி
நற்குணங்கள் நற் தகுதிகளுடைய நடுவரே (நடுவர்களே)
அங்கத்தவர்களே! நயமான நல் வணக்கம்.
நளினமாகக் கவியரங்கம் சிறக்கட்டும். நல் வாழ்த்துகள்.
சங்கம் வளர்த்த தமிழை வளர்க்க
இங்கும் ஆவலாய் கூடிய சபையோரே!
மங்காத நற்கருத்தக்களை உள் வாங்கப்
பொங்கும் ஆவலுடன் காத்திருக்கும் சபையோரே
உங்களிற்கு நல் வணக்கம்.
இங்க நான் எடுத்துக் கொண்ட துணைத்தலைப்பு.
பணம்
பணச்செங்கோல் உலகைப் பலமாய் ஆளுது
குணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.
எணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.
கணம்! மனிதத்தின் கண்களை மறைக்கிறது.
கணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது
கணத்தில் உயர்வு புகழ் தருகிறது.
சணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.
கணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.
தன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.
என்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.
பென்னம் பெரிய அதிகார முதலாளியிது.
அன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.
மனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்
தனம் இந்தப் பணச் சரித்திரம்.
கனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.
தினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.
பணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.
பணம் பற்றிய வரிகள் முற்றும்.
என் வரிகளையிங்கு எடுத்துரைக்க வாய்ப்பு நல்கிய நிலாமுற்ற நிர்வாகத்திற்கு நன்றிகள்.
நடுவர்கள், சபையோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக் கவிஞர்கள் வந்தவர்கள் வரப்போகிறவர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-5-2016.

puthu

1. வாய்மை – கவியரங்கம்

13147327_10208229564113977_557310268483352219_o

வாய்மை – கவியரங்கம்

***

நிலாமுற்றம் – கவியரங்கம் என் முதல் முயற்சி:-
***
செந்தமிழ், நந்தமிழ், அருந்தமிழ்
சந்தனத் தமிழ் வாழ்க!
செந்தளிப்பாய் வளர்கவென்று
இந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.
***
களம் தந்து எம் தமிழை
வளம் படுத்தும் தலைமைக்கு வணக்கம்.
உளம் நிறைந்து ஒத்துழைக்கும்
உறுதுணை அங்கத்தவர்க்கு வணக்கம்.
வறுமையற்ற வளமுடை தமிழ்நேச
அவையோருக்கும் வணக்கம்.
முறுவலுடன் எமக்கு வாய்ப்பளித்து
அறுவடைக்குக் காத்திருக்கும்
பெருமக்களாம் நிலாமுற்றம் குழவினருக்கும் வணக்கம்.
***
வாய்மை தலைப்பில் வரும் வரிகளிவை.
உண்மை! உள்ளத்திலிருப்பதைக் கூறுவேன்.
வாய்மை வாய் வழி வருவதாம்.
உண்மை, வாய்மை, மெய்மையாம்
கண் போன்ற மனிதவியல்புகள்
விண்ணைத் தொடும் மெய்யியல்.
மண்ணில் வீழ்த்தும் பொய்யியல்.
***
தூய்மையாய் அணைப்புத் தரும்.
ஆய்மை செய்தால் வழியெனும்
வாய்மை வதை தரும்.
பொய்யை நேசிப்போர் மத்தியில்
மெய்யாய் நாம் உதைபடுகிறோம்.
தெய்வத் துணையோடிறுதியில் வெற்றியே
***
நெருப்பில் நடத்தலிவ் வழி!
கருப்பு மனதான பார்வையும்
செருப்படியான வார்த்தைகளும் சுடும்.
இருப்பான துணிவோடு நிமிர்ந்தால்
பெருமையுடை வாய்மை வெல்லும்.
உருப்படியாய் வாய்மை வழியேகுவோம்.
விருப்புடன் கேட்டோர், வாய்ப்பளித்தோருக்கு
ஒருமுகமாய் அனைவருக்கும் நன்றி
கூறி விடை பெறுகிறேன்.
***
வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ். டென்மார்க்.
2-3-2016
Divider-Red-3