26.உயிரெழுத்து பயில்.

images_TamilVowelsSheet

உயிரெழுத்து பயில்!

அ ஆ வன்னா
அன்பு ஆசை கொள்வோம்.

இ ஈ யன்னா
இலங்கை ஈழம் நம்நாடு.

உ ஊ வன்னா
உணவு ஊர் பிரதானம்.

எ ஏ யன்னா
எட்டு ஏழு இலக்கங்கள்.

ஐ ஒ னா
ஐந்து ஒற்றுமையான விரல்கள்.

ஓ ஓள வன்னா
ஓது ஓளவையின் ஆத்திசூடி

ஃ ன்னா.
அகேனம் –  அக்கன்னா முப்புள்ளி.

வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-11-2015.

Swirl divider v2

Advertisements

25. மழையே….. மழையே

a0613308

மழையே மழையே

மழையே மழையே வருவாய்

 குழைகள் நனைக்க வருவாய்

 குழிகள் தோண்டி நாமும்

 குசும்பாய் விளையாட வருவாய்! (மழையே..)

 

 

மண்ணை நனைத்துக் கூழாக்கி

 சின்ன விரல்களில் அப்பிட

 குழைத்து மண்ணைப் பிசைந்திட

 மழையே மழையே வருவாய்! (மழையே..)

 

 

 மழைநீர் குழியுள் நிறைய

 மகிழ்வோம் எமது கிணறென்று

 கவட்டைக் கம்புகள் இரண்டு

கிணறு அருகில் ஊன்றுவோம். (மழையே..)

 

 

அச்சுலக்கையோடு சிலுவையாக்கும் தடி

அமரும் துலாவாகக் கவட்டையில்

கயிறு வாளி தேடியிணைத்து

கிணறு இறைப்போம் மகிழ்வாய் (மழையே..)

 

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா.இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-5-2015.

malai..malai..

 

24. பசுவின் பால். (சிறுவர் பாடல்)

collage paal...

பசுவின் பால். (சிறுவர் பாடல்)

பால் பால் பால் இனிக்கும்

பால் எனக்குப் பிடிக்கும் – தினம்

பாசமாய்ப்  பெற்றோர் தரும் நல்ல

பால் ஒரு சத்துணவாம்.          (பால்…)

 

பசும்புல்  குழைகள் உண்டு எமக்குப்  

பசு தரும் பால் – நம்

பசி தீர்க்கும் பால். ஏழையும்

பணக்காரனும் விரும்பிக் குடிப்பார்.   (பால்…)

 

வெகு சுவையான  பால் . இது

வெள்ளை நிறப் பால் – நாம் 

வெறுக்காது பால் குடித்தால் பிள்ளைகள்

வெகு பலசாலி ஆகலாமாம்.        (பால்…)

பாலைக் காய்ச்சியும் குடிப்பார் சிலர்

பச்சையாகவும் குடிப்பார். நான் விருப்போடு

பால் பழம் உண்பேன் நன்றாகப்

படித்துப் பெரியவன் ஆகுவேன்.        (பால்…)

 

பா ஆக்கம்  

பா வானதி வேதா. இலங்காதிலகம்

.டென்மார்க்.

15-3-2015.

643630yr2vtei28b

23. கொக்….கொக்…..சேவல்

samila-s.naseeru-head1

collage cock

கொக்…..கொக்…கொக்

கொக்கரக்கோச் சேவல் – அழகுக்

கொண்டை உள்ள சேவலுன்

கொக்கரக்கோ உலகை எழுப்புகிறதே (கொக்…)

 

கொள்ளையழகு இறகும் வாலும்

கொற்றவனாய் உன்னைக் காட்டும்.

கொக் கொக் கொக்காம்

கொக்கியால் கோழியை வளைக்கிறாய். (கொக்..)

 

கொண்டைச் சேவல் கொக்கரக்கோ

கொல்லையில் நின்று கூவுவாய்

கொக்கரக்கோ கொடியை ஏற்றி

கொக்கரித்து  நாள் தொடக்கிறாய்  (கொக்..)

 

வெள்ளை, கறுப்பு சேவல்

கொள்ளையிடும் கலப்பு நிறம் 

உள்ளம் கவரும் கொக்கரக்கோ

உள்ளபடி ஒன்று தான்   (கொக்..)

 

பா ஆக்கம் – பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.  

13-3-2015

1424422_773891019303899_1021719375_n99

22. விரல்கள் பத்து.

73th b'day 076

விரல்கள் பத்து.

கைகள் இரண்டு – அதில்
விரல்கள் பத்து – இதில்
பெரு விரல் அழுத்தும்!
சுட்டு விரல் சுட்டும்!…(கைகள்)

நடுவிரல் மிகப் பெரிதாம்.
மோதிர விரலில் மோதிரமாம்.
சின்ன விரல் கடைக்குட்டியாம்.
விரல்களையறிந்தார் வெற்றியாம். (கைகளை)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-12-2013.

baby-items

21. இரண்டு எண்ணுவோம்.

number2mathcount

இரண்டு எண்ணுவோம்.

இரண்டு ஒன்றுகள்
இரண்டாகிறது சேர்ந்து.
முரண்டு பண்ணாது
இரண்டு எண்ணுவோம்.
உருண்டு பார்க்கிறது
இரண்டு கண்கள் (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

புரண்டு மூடும்
இரண்டு இமைகள்.
திரண்ட உடம்பில்
இரண்டு புருவங்கள்.
இரண்டு கன்னங்கள்.
இரண்டு காதுகள். (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

மிரண்டால் அணைக்க
இரண்டு கைகள்.
இரண்டெட்டு நடைக்கு
இரண்டு கால்கள்.
இரண்டு பேரிணைவு பெற்றோர்.
இரண்டிரண்டாய் எண்ணுவோம். (இரண்டு ஒன்றுகள் இரண்டாகிறது சேர்ந்து.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2013.

3367133-263573-vintage-digits-and-numbers-set-with-decorations

20. ஒன்று எண்ணுவோம்

one_partridge[1]-niram

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

purple line  one

Previous Older Entries