41. வேதாவின் வலை.2

 இங்கு வாருங்கள் – https://kovaikkothai.wordpress.com/

வேதாவின் வலை.2
என்று புதிதாக ஒரு பக்கம் திறந்துள்ளேன்.
கட்டுமான வேலைகள் முடிய அதாவது தொழில் நுட்ப வேலைகள்
முடிய உலா வரும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
முதவாவது – கோவைக்கவி.வேட்பிரஸ். கொம் __________தமிழில் – வேதாவின் வலை
இரண்டாவது – கோவைக்கோதை.வேட்பிரஸ்.கொம்——-

தமிழில்—வேதாவின் வலை.2
என்பதைத் தெரிவிக்கிறேன்.

*
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-5-2017

*

heartborder

40. Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

3 பெரிய தீவுக்கூட்டம் டென்மார்க்.
அதனுள்ளும் பல குட்டித் தீவுகள்.
இதைக்கொஞ்சம் காட்ட இந்த இரு படங்களும்.
Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.
dk-kort-alle-klubber
smaalandsfarvandet-rundt-km-336-gif-2
28-1-2017  காலை எட்டேகால் மணிக்கு நானும் கணவரும் புறப்பட்டோம் .
இரவு 9 மணக்கு வீடு வந்தோம் – காரில் பயணம்.
நிக்கூபிங் பஃல்ஸ்ரருக்குப் போனோம்.
காலநிலை 4 பாகை வெப்பம் என்று இருந்தது.  காலைச்சூரியன் அழகாகப் பார்க்கலாம் கண்கூசாமல். காலை 8.30 மணி.
nykob-2
369 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டும். காலையுணவு முடித்து வெளிக்கிட்டோம். உறைநிலைப் பனியும் வாகன நெரிசலும்வாகனம் ஓட சிறிது சிரமமாக இருந்தது. காலையில் போகும் போது இப்படி இருந்தது.
nykob-1
nykob-18
nykob-19

nykob-21

.பியூன் தீவக்கு ஊடாகப் போவதானால்
பெஃறி எடுக்க வேண்டும். இது நேரப்படி செய்ய வேண்டும்.
அதனால் எமது வசதிப்படி பயணிக்கலாம் என்று
லீல பெல்ட (யூலண்ட் பிஃயூன் இடைப்பட்ட பாலம்)
2 புகையிரதப் பாதையும் 3 மகிழுந்துப் பாதையும் உண்டு.
1700 மீற்றர் நீளம்.

Little Belt Bridge, also known as the Little Belt, is a six-lane highway bridge between Jutland and Funen, built in the period from 1965 to 1970 and inaugurated on October 21 the same year. The architect was Orla Mølgaard-Nielsen.

The bridge is 1,700 meters long, 33.3 meters wide and has a free span of about 600 meters. Navigational clearance is 44 meters. Navigational clearance for the Little Belt is conditional on the old Little Belt that has a vertical clearance of 33 meters. Under the bridge is held annually Rock under the bridge, the largest one-day festival.)

nyko-9
nykob-10
Google photo
lille-baelt
பின்னர் 18 கிலோ மீட்டா நீள ஸ்ரோவ பெல்ட்
பிஃயூன் தீவு ஷேலாண்ட்தீவுக்குப் போய் அதிலிருந்து
நிக்கூபிங்க்கு கார் ஓடினோம்.
Great Belt Fixed Link is a combined bridge and tunnel link intended for railway and motor traffic crossing the Great Belt and connecting Funen and Zealand. The railroad opened on 1 June 1997 and the road link opened on 14 June 1998. Wikipedia
Address: Great Belt Bridge, 4220 Korsor
Height: 254 m
Opened: June 14, 1998
This is   google photo
big-baelt
nykob-24
nykob-26
nykob-27
nykob-31
போகும் போது சூரியன் என் கண் முன்னாலே அடித்தது.
nykob-3
வாகனம் மாறி ஓடத் தொடங்க காரினது சூரிய மறைப்பு ( ஷேட்)
எனக்கு உதவவில்லை.கண் கூசியது. நான் இருக்கையின் முன் பக்கம் நகர்ந்து
தலையை அண்ணாந்து பார்த்து சூரியக் கூச்சத்தைத் தவிர்த்து ஓட்டினேன்.
இவருக்கு அதைப் பார்க்க ஏதோ போல இருந்திருக்கு.’ இது என்ன!’ என்றார்
‘ கண் கூசுதே’ என்றேன். ‘காரை நிறுத்து நான் ஓடுகிறேன்’ என்று பிடுங்கிவிட்டார்.
nykob-34
nykob-32
எனது பெரியம்மா மகள் குடும்பமாக அங்கு வசிக்கிறார் .
அவரது மூத்த மகன் இலங்கை சென்று திருமணம் செய்தார்.
அவரது மனைவி வந்திட்டார்.   புதுப்  பொண்ணு மாப்பிள்ளையை
சந்திக்கச் சென்றிருந்தோம்.
nyko-7
nykob-35
nykob-37
                                                                                        nykob-36
divider_130

39. 2016 christmas// எல்லோருக்கும் இன்பமான நத்தார் வாழ்த்துகள்.

மகிழுந்தில் பயணித்துப் பல
மகிழும் அனுபவங்கள் தவறுகிறது.
மகிழ்ந்து பேருந்தில் சென்று
அகழ்ந்த நத்தார் அழகுகள்
நிகழ்ந்தவை குறைவு தான்.
இகழ்வு கால மாற்றத்திற்கே.

காலங்கள் பல மாற்றங்களுடன் வேகமாக நகருகிறது.
முன்பெல்லாம் நத்தார் என்றால் அலங்காரங்கள் களைகட்டி
நகரம் ஜே!… ஜே! என்று இருக்கும் வர வர இவை அனைத்தும்
குறைந்து விட்டது. 2016ல் சில சோடனைகள் நத்தாருக்காக
நான் கண்டவை. நமது நகரத்தில் ஒரு ஓடை உள்ளது
இதையும் படம் எடுத்தேன். பசுமை சம்பந்தமாக
ஏதோ நடக்கிறதோ தெரியவில்லை ஒரு கந்தோர்போல
புதுமையாகக் கட்டியுள்ளனர். பிரம்பில் அல்லது வேறு ஏதோ
குச்சிகளைப் பாவித்து இந்தக் கொட்டிலை உருவாக்கியிருந்தனர்.
அழகாக இருந்தது வித்தியாசமாக. – பாருங்கள்
அலங்காரங்கள் கூட மின்சார வெளிச்சத்தால் தான் அழகு படுத்துகிறார்கள்.
அதனால் எனது கமராவால் பகலில் அதன் அழகைத் தர முடியவில்லை.

img_00201

img_00351

img_00421

img_00271

img_00371

img_00311

img_00451

 

 

santasit-l

38. எனது உரை-(தமிழுக்கு மகுடம்) 9-4-2016

 

 

எனது உரை-(தமிழுக்கு மகுடம்) 9-4-2016

சபையோர் அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் 7ம் ஆண்டுத் தடம் மிகச் சிறப்பாகப் பதியட்டும். தம் திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்துத் திறமைசாலிகளிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இதை உருவாக்கிச் செயல்படுத்தும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்திற்கும் இனிய வாழ்த்துகள். ஒருவர் திறமை கண்டு வாழ்த்தும் போது அதைத் தட்டிக் கொடுக்கும் போது மறு பக்கம் திரும்பிப் பார்க்காது எதிரிகள் போல எண்ணாது வாழ்த்துங்கள் மகிழ்வாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாவிடிலும் உங்கள் பிள்ளைகளையோ பேரப் பிள்ளைகளையோ வாழ்த்தும் நேரமும்- காலமும் வரும் என்று எண்ணுங்கள். தமிழ் எனும் கல்வி கற்றவர்களிற்கும் சென்ற விடமெல்லாம் சிறப்பு உண்டாகும் என்பதற்கும் இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு தான்.
இதை முன்னெடுக்கும் இளைஞர் குழாம் சீருடை அணிந்தோர் குழுவிற்கும் இதில் ஒரு பெண்மணியும் இணைந்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் இவ்விழா நடத்துவதால் ஏதும் இலாபம் இல்லையாயினும் வரும் காலச்சந்ததியை உயர்த்தும் நல்லெண்ணம் இவர்களிற்கு உண்டு. இன்று மகுடம் சூட்டப் படுவோர் போன்று நாளையும் வேறு பலர் மகுடம் ஏந்துவார்கள் என்பது உண்மை. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்தக் குழுவினருக்கு விழா நடத்தும் சேவை ஓடர்கள் எடுத்துக் கொடுப்பது தான். சங்கத்திற்கு மாத சந்தா வருடச்சந்தா கேட்கவில்லையல்லவா? கோபித்துக் கொண்டு அவர்களைப் புறம் தள்ளாது அணையுங்கள்.
தமிழின் திறமை, தமிழின் நன்மையால் தமிழால் ஒன்று கூடியுள்ளோம் இங்கு. தமிழுக்கு விழா என்பதால் தமிழ் பற்றியே சிறிது கூறிச் செல்லலாம் என்று எண்ணி வந்துள்ளேன்.
திராவிட மொழிக் குடும்பத்து முதன்மையான மொழி எமது தாய் மொழி தமிழ். திராவிட மொழிக் கூட்டத்தில் 26 மொழிகள் உள்ளன. இதில் நாம் பெருமைப்படக் கூடியதாக அத்தனைக்கும் மூல மொழி – ஆதி மொழி தமிழ். இதை விட 35 சிறு மொழிக் கூட்டங்கள் உள்ளன அதற்கும் தமிழ் மொழியே மூலமானது.
மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழ் மட்டக்களப்புத் தமிழ் என்று பல வேறுபாடுகள் உண்டு. மேலும் தமிழிலிருந்து நேரடியாகப் பிரிந்து மலையாளம் என்றும் பல வகைகள் உண்டு.
தமிழின் காலங்கள் என்று அதை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.
கி.மு 300 – லிருந்து 700 வரையுள்ள இடைப் பட்ட காலம் பழந்தமிழ் காலம் என்றும்
700லிருந்து 1600 காலம் வரையானது இடைக்காலத் தமிழ் என்றும்
1600 முதல் இன்று வரை நவீன தமிழ்காலம் என்றும் அடங்குகிறது.
கி.மு ஓராம் நூற்றாண்டிலிருந்து தமிழ் என்ற பெயர் எமது மொழிக்குப் பெயராக இடப்பட்டுப் பயனுக்கு வந்தது என்று செய்திகள் உலாவுகிறது. தமிழ் என்ற சொல் எப்படி வந்தது என்று பல கருத்துகள் உள்ளது. திராவிட சமஸ்கிருதச் சொல் மாறுபட்டுத் தமிழானது – தமிழ் என்ற சொல் தான் மாறுபட்டுத் திராவிட என்று ஆனது என்றும் கூறுகிறார்கள். த்ரவிட, திரமிட தரமிளா என்று மாறித் தமிள தமிழ் என்று ஆனது என்றும் இதை அப்படியே தலைகீழாக மாற்றியும் கூறுகிறார்கள்.
சௌத்து வருத்து என்பவர் தம் – மிழ் என்று பிரித்துக் காட்டித் தனது மொழி என்ற பொருள் வரும் என்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக் மொழியாளர் தம் – இழ் தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்று பெயர் தர வல்லது என்கிறார். இப்படிப் பல வித முடிவற்ற ஆய்வுகள் உள்ளது.
இது தவிர தமிழை செம்மொழி என்றும் அங்கீகரித்தனர். 3000 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் தமிழில் கிடைத்த ஒரே ஒரு மூல நூலான தொல்காப்பியத்தில் இந்த செம்மொழி என்ற சொல் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த செம்மொழி அந்தஸ்து என்ற சீரிய மொழி, சிறப்பு மொழி உலகில் பல மொழிகளிற்கு ஏற்கெனவே உள்ளது. உதாரணங்களாக சுமேரிய மொழி, ஆதி எகிப்து மொழி, ஆதி பாபிலோன் மொழி, கீப்றூ, சீன மொழி, கிரேக்க மொழி, சமஸ்கிருதம், லத்தீன், மண்டாயிக், சிரியா, ஆர்மீனியன், பேர்சியன் என்று பல.
செம்மொழி என்பது இன்னும் பல கருத்துடையது. சிறப்பு மொழி மிகப்பாரம்பரியானது, பழைமை இலக்கியங்கள் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும். வேறொரு பாரம்பரியத்தின் மொழி நிழல் அதில் படிந்திருக்கக் கூடாது. அப்படிப் பட்ட மொழியே செம்மொழி. இப்படிப்பட்ட திறமைகள் உள்ளதாலேயே தமிழ் செம்மொழியாக்கப் பட்டது. ஆனால் இது மிகக் கால தாமதமாகவே தமிழுக்குக் கிடைத்தது என்கிறார்கள்.
தமிழ் என்றால் இனிமை, எளிமை தொன்மையென பலவாகும்.
பல நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், தென்னாபிரிக்கா, கயானா, பிஜி, ட்ரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் இருந்தாலும் அவர்கள் அதைப் பேசுவதில்லை. ஆதலால் அங்கு இது அழிந்து படுகிறது. நாம் தமிழ் பேசுவோம்…அதை அழிக்காது பேணுவோம்.
வீட்டில் நாம் தமிழ் பேசுவதால் பிள்ளைகள் பல தொகையான தமிழ் சொற்களை தானாகவே பயில்கிறார்கள். அவைகளை வைத்து அவர்கள் மேலும் முன்னேற முடியும். இதனால் பேச்சுத் திறன் வளருகிறது. சொற்களஞ்சியம் அகராதி ஒன்று தம்முள்ளே கட்டப் படுகிறது, வளருகிறது. ஆடல், பாடல், நடிப்பு, வர்ணப் படங்கள் என்பன பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டி தமிழைக் கற்க உதவுகிறது. பல் திறமை கொண்ட ஆசிரியர்களின் திறமை கெட்டித்தனம் இங்கு தேவைப் படுகிறது.
தமிழ் வீட்டில் பேசுவது மட்டுமல்லாது தமது தாய் நாட்டுத் தொடர்பு, தமிழ் சூழல் மிக அவசியம். இதற்கு உதாரணமாக எமது பேரன் ஒன்றரை வயதில் மலேசியா சென்று 3 கிழமை நின்று வந்தார். இங்கு கதிரையைப் பார்த்து நாற்காலி என்று கூறினார். அவரது அம்மா வழிப் பாட்டன் நாற்காலி என்று தான் பேசுவார் இதைப் பேரன் தன்னுள் தானாகவே உள் வாங்கிக் கொண்டார், எடுத்துக் கொண்டார். தமிழ் சூழல், தமிழ் நாடு முக்கியம் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதுதவிர பல மொழிகள் படித்தால் பிள்ளைகள் உருப்பட மாட்டார்கள் என்று சில பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதையில் தடை போடுவதும் உண்டு. இவை சரியல்ல பிள்ளைகள் சகல மொழிகளையும் அதற்கேற்றபடி கையாளுவார்கள். இதற்கும் எமது 4 வயதுப் பேரனை உதாரணம் கூறுகிறேன். தமிழ் ஆங்கிலம் டெனிஸ் மூன்றும் சமமாகப் பேசுவார். அடுத்து..
.
நாம் முழுக்க முழுக்க நமது பழைய இதிகாச புராண இராமாயணக் கதைகள் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அவைகள் இன்றும் தேவையானவை சிறந்தவை என்று கூறுபவர்கள். இவை தமிழ் கல்வியில் தொடர வேண்டும்.
இறுதியாக ஆதிப் பழைய நூல் தொல்காப்பியம் இதுவே இன்று இலக்கணங்களை விளக்கும் நூலாக உள்ளது. தமிழில் எழதப் பட்ட காவியமாக சிலப்பதிகாரம் உள்ளது. இது கி.பி 200 – 300 காலப்பகுதியைக் கொண்டது. ஆத்திசூடி 1000 ஆண்டுகளிற்கு முன்னரும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளிற்கு முன்னரும் இயற்றப் பட்டது.
தமிழ் பற்றி இங்கு சிறிதளவு பார்த்தோம். தமிழ் பற்றிப் பார்ப்பதை முடிக்கவே முடியாது. தோண்டத் தோண்ட திரண்டு கொண்டே வரும்.
(இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் எழுதப்படடிருக்கும் தமிழ் மொழி)
இஸ்ரேல் நாட்டின் ஒலிவ மலையிலுள்ள தேவாலயத்தில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளதாம் கர்த்தருடைய ஜெபம்.
இதில் இடம்பெற்ற ஒரே ஆசிய மொழி தமிழ் மொழி மட்டுமே .)சமீபத்தில் இதை வாசித்தேன்.
நன்றி இணையத் தளங்களிற்கு.
நான் தமிழிற்குச் சிறியவள்.
ஆயினும் தமிழ்மொழி என்ற தலைப்பில் 46 கவிதைகள் எனது இணையத் தளத்தில் பதிந்துள்ளேன். முழுவதும் நானே எழுதியவை. விரும்பினால் சென்று வாசிக்க முடியும்.
மேலும் தொடருவோம். பொறுமையாக இருந்து செவி மடுத்த அனைவருக்கும் இனிய நன்றிகள்.——————
silence

37. கலைகள்.

 
இங்கு கூடியிருக்கும் கலைஞர்கள், கலையைப் போற்றுவோர், கலையில் பங்கு பற்றுவோர், பெற்றோர்கள், இன்று 25ம் ஆண்டு நிறைவு கொள்ளும் ஓகுஸ் சலங்கை நாதம் சங்கீத கானம் குழுவினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இவ் விழாவில் பங்கு பற்றுவோருக்கும் அன்பு வணக்கம்.
கலைகள் எனும் தலைப்பில் என்னை எடுத்துரைக்கும் படி வேண்டினார்கள். மேடைப் பேச்சில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனாலும் என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன்.

கலைகள்.

ஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம்.
இங்கு 64 கலைகள் எவையென நாம் பார்க்கவில்லை.
உணர்விற்கும் கற்பனைக்கும் முக்கியம் தரும் கவின்கலை ” ஏஸ்தெற்றிக் ஆட்ஸ்” என்றும் தொழில் நுட்பக் கலைகள் என்றும் இதைப் பிரிக்கலாம்.
கவின்கலையே அரங்காடல், எழுத்துக்கலை, கேட்கும் கலையென 3 பிரிவாகிறது. அரங்காடல் கலைகளே நடனம், இசை, நாடகம் என்று நாமின்று இங்கு கூடியுள்ளோம்.
எழுத்துக் கலை கவிதை, கட்டுரையாகவும், கண்ணால் பார்ப்பவை கட்புலக் கலைளென ஓவியம், சிற்பம், ஒளிப்படம் என்றாகிறது.
பணம் காலம் அதிகமாகச் செலவு செய்து கற்பவை நுண்கலைகள் என்கிறோம்.
கலை என்றால் என்ன?

மனித ஆக்கத் திறன் வெளிப்பாடு என்கிறோம். பார்ப்பவர் கேட்போரிடம் சொல்ல விரும்பும் தகவலை அழகுற, சீராக, சுவைபடக் கூறுதல், மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க ஆர்வம் தூண்டும் படைப்பாற்றல் திறன் தான் கலை என்று ஆகிறது. திறமையுள்ளவன் கலைஞன். தன் மனக் கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறன் கலை.
20ம் நூற்றாண்டில் 9 கலைகள் தான் என வகுத்தனர். அவை
கட்டிடக்கலை – நடனம் – சிற்பம் – இசை – ஓவியம் – கவிதை – திரைப்படம் ஒளிப்படவியல் – வரைகதை என்பன.
கலைகள் வரலாற்றின் சாட்சியாக, வரலாற்றின் துணைப் பிரிவாக உள்ளது.
கற்கால மனிதன் கல்லிலே பொருட்களைச் செய்தான். அங்கிருந்து கலை ஆரம்பமானது. பின்பு தகரம் செம்பு இரும்புக் காலங்களென அவன் செய்த பொருட்களின் மூலம் எழுதிய வரைந்த உருவங்கள் மூலம் மனித வரலாறை கணித்து அறிய முடிந்தது. அவைகளை ஆவணப் படுத்தியதால் அவற்றை நாமின்று பார்த்து வாசித்து அறிகிறோம்.
கலையில் இன்னொரு புனிதத் திறன் இருக்கிறது. இன மத பேதங்கள் கடந்து கலையைக் கலையாக ரசிக்கும் உணர்வு உருவாகிறது.
அரங்காடல் கலையில் நடனத்தைப் பார்த்தோமானால்:-
இசை தாளத்திற்கு அமைய உடலை அசைத்து குழுவாகவோ தனியாகவோ உருவாக்கும் ஒரு கலை வடிவம். ஆதியில் ஒன்று கூடல், கொண்டாட்டம் – சடங்கு – பொழுது போக்கு என்று நடனம் உருவாகி இருக்கலாம். இதை அன்று கூத்து என்றே கூறினர். பின்னர் கடந்த 3 நூற்றாண்டு காலமாக ” சதிர்” என்று கூறப:பட்டதாம். சுமார் 60பது ஆண்டுகளாகத்தான் பரத நாட்டியம் என்று பிரசித்தம் ஆனதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துவிற்கு முன்னர் 3300 காலப்பகுதி எகிப்து கல்லறை ஓவியங்களிலும், பழைய குகைகளிலும் நடன ஓவியங்கள் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகத் தொல் பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்பட்டன. மேலும் நோய்கள் குணப்படுத்த, சாமியாடுதல் வெறியாட்டு போன்றவற்றிற்கும் நடனம் முன்னோட்டமாக இருந்துள்ளது.

இன்னொரு கருத்தாக சிவன் – சிவபெருமானே நடனத்தைத் தோற்றவித்தவர் என்பார்கள். ஆடல் கலைக்கே அதாவது பரதத்திற்கு முன்னோடி நடராசப் பெருமான் என்றும் நம்புகிறார்கள். ஆகவே தான் பரதம் பயில்வோர் நடராசர் திருவுருவத்தை முன் வைத்தே பயிற்சியைத் தொடங்குவர். மேலும் ஆடல் அரங்குகளிலும் நடராசர் சிலையோ ஓவியமோ இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.  (உதாரணமாக இவ்வரங்கத்தையே பார்க்கலாம்)
அதனால் நடராசர், நடேசர், நடனசபாபதி, ஆடலரசன், ஆடல்வல்லான், கூத்தபிரான் என்ற பல பெயர்களுக்குரியவராய் திகழ்கிறார் நடராசப் பெருமான்.
புராணவியல் நீதியாக பரதமுனிவரால் நாட்டியம் எனும் நடனக்கலை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

இதன் பயன்கள் பல . இதில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. மிக நுணுக்கமாக கண்கள், பாதங்கள், கையசைவுகள், உடலசைவுகள், மனதிற்கு மகிழ்வு தரும்.
2. உடலிற்குச் சிறந்த அப்பியாசமாகவும் அமைகிறது. நடனத்தில் ப – பாவம் என்றும், ர – ராகம் என்றும், த – தாளம் என்று 3 ஐயும் குறிப்பிடுவதால் பரதம் என்றும் குறிக்கப் பட்டதாம். நவரசங்களும் காட்டி ஆடும் அதிசயக்கலை. இது பொழுது போக்கானாலும் சம்பாத்தியமும் தருவதாக உள்ளது.
3. நடனம் ஆடுவதால் உடலும் உள்ளமும் ஒன்றாகிறது. ஒழுக்கப் படுத்தல் எனும் செயல் முறை நல்ல நடத்தைகள் உருவாக்க வழிகாட்டுகிறது. மனித மனம் சமூகம் சார்ந்த உள்ளமாக மாற்றப் படுகிறது. மன அழுத்தம் குறைக்கப் படுகிறது.;
4. நடனத்தின் உளவியல் – கல்விப் பயன்பாட்டைப் பார்க்கும் போது ஒழுக்கப் படுத்தல் எனும் குணம் தான் புலம் பெயர்வில் தமிழ் கலாச்சாரத்தை இழுத்து வைக்க உதவுகிறது.
5. மன உணர்வுகளை உடலசைவு ஆக்குதலே நடன உளவியல் ஆகிறது. உளப் பிரச்சனைகள் நடனத்தின் மூலம் இசைவாக்கப் படுகிறது.
ஆகவே மனம் கவரும் நடனத்தை கற்பது மனமகிழ்வு தரும். ஆண் பெண் பேதமின்றி நடனக்கலை சிறப்புடைத்து என்பதை மனதில் எடுப்போம்.
அடுத்து இசை – சங்கீதத்தை பார்த்தோமானால்:-
கட்டுப் படுத்தப் பட்ட – ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் என்கிறோம். ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஓலி இரைச்சல் என்கிறோம். நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது.
சொல்லுக்கு இசைய வைப்பது மனிதனை சகல உயிரினங்களையும் இசைய வைப்பது இசை. இதை சிரவணக்கலை என்றும் கூறுவர். மிகச் சிறந்த கலைகளில் இதுவும் ஒன்று.
பண்ணிசை அல்லது கர்நாடக இசை யே ஆதி இசை வடிவமாக இருந்தது. 2000 ஆண்டுகளிற்கு முன்னர் ஏழிசை என்று தோன்றியது. தமிழில், இசைக்கலை தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை அரும்பி, மலர்ந்து வளர்ந்து வருகிறது. சங்ககாலம் தொட்டே இசைக்கு என, முறையான, நெறிப்படுத்தப்பட்ட இலக்கணம் உண்டு. இலக்கண நூல்களும் உண்டு. மொழியறிவும் இயற்கையறிவும் கொண்டு, ஏழுவகை இசைப் பெயர்களைப் பண்டைத் தமிழர் வகுத்தனர். அவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.
இவையே தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்ட போது இந்த ஏழு இசைகளை சுவரம் என்றனர். சட்சம் -ரிசபம் – காந்தாரம் -மத்திமம் – பஞ்சமம் – தைவதம் – நிசாதம் என்ற இந்த ஏழு சுவரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்றும் எழுத்தக்களால் குறிக்கப் பட்டது.
பண்டைய தமிழிசை களவாடப்பட்டு, சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டு, கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படலாயிற்று. அது மெய்யாகவே, நம் தமிழிசை தான்? மராட்டிய மன்னன் சோமேசுவரன் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என அழைத்தான்; குறித்தான். தமிழிசை என்னும் வழக்காறு தடம் புரண்டு போயிற்று. கர்நாடக சங்கீதம் _ என்னும் வழக்காறு காலூன்றலாயிற்று.
பழம் தமிழ் இசையிலொன்றாக. கிராமிய இசை என்பதே கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென வகுத்துக் கொண்ட ஒரு வகை இசையாகும். இவற்றிற்கு நாடோடி இசை நாட்டுப் பாடல் எனற பெயர்களும் உண்டு.
தமிழரின் மரபு வழி இசைச் செல்வம் பழம் தமிழ் இசையாகும். சங்கத் தமிழே இயல் – இசை – நாடகம் என்ற 3 வகையாகும். இதில் வரும் இசையே பழம் தமிழ் இசையாகும்.
இசையோடு கூத்துமாக இசைக்கலை நுட்ப விளக்கங்கள் நான் முன்பு குறிப்பட்டது போல முச்சங்க காலத்தில் இலக்கணத் தமிழ் நூல்களில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.இவை சுமார் 3000 ஆண்டுகளிற்கு முன்பாகவே செவ்விய கலைகளாக விளங்கியது.
அடுத்து மிக முக்கியமாக இராக தாளத்தோடு மிகப் பழைமையாக நமக்காகக் கிடைத்தவை தேவாரங்களாகும்.
பண்கள் என்று பலவகை ராகங்களில் இவை பாடப்பட்டன. இசைக்கு அடிப்படை பண்களே.
கடவுள் வழிபாடு மூலம் தேவார திருவாசகம் பாடுதலும் நடனம் இசை மூலம் மன அமைதி மகிழ்வும் ஒழுக்க முறைகளையும் பயில முடியும்.
மன இறுக்கங்கள் விலகி மகிழ்வாக வாழ முடியும்.
இசை மனதை நெகிழ வைத்தல் என்பதும் மொழி கடந்த பொதுத் தன்மையே.

நன்றி இணையத் தளங்களிற்கு.
கலைகளாக இங்கு நடனம் இசை பற்றி சிறிது பார்த்தோம். சலங்கை நாதம் சங்கீத கானம் மேலும் தொடர்ந்து இனிமையாக இவ்வரங்கத்தில் முழங்கட்டும். இத்துடன் எனது உரையை முடிக்கின்றேன். இதுவரை பொறுமையாக இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
19-9-2015

flourish-text-book-line-divider-writing

36. நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

29879_1472263123261_4018299_n

நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

இயற்கையாக நிகழ்வது மரணம்.
கெட்டவர்கள் மரணித்தால் இது ஒரு சம்பவம். நல்லவர்கள், சிந்தனையாளர்கள் மரணித்தால் அது பெரும் பாதிப்பு. மனதைக் கசக்கியெடுக்கிறது.
அநியாயக்காரர்கள், துவேசக்காரர்கள், நீதியை அவமதிப்பவர்கள், பொய்யாக வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து நல்லவருக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் போது நல்லவர்கள் ஏன் விரைவில் மரணிக்கிறார்கள் என்று மனம் வெதும்புகிறது.
நல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா! திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.
மணித்தியாலக் கணக்காக தனது பாதுகாப்பிற்காக நின்ற காவலாளியைத் தொடர்பு சாதனத்தால் தொடர்பு கொண்டு அவரை ஆசனத்தில் அமரவைக்க விரும்பிய தலைவன் வாழும் உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.
எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடகிறது. குணங்களில் தான் எத்தனை பேதங்கள்.
கெட்ட பெற்றோர் கூட தம் பிள்ளை நல்லவனாக வருவதையே விரும்புகிறார்கள். வளரும் பிள்ளைகள் அன்னை தந்தையின் குணங்களையும் வாழும் சூழல் தாக்கங்களாலும் பல குணாதிசயங்களில் உருவாகின்றனர்.
நல்ல பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க முயல வேண்டும்.
ஏன் எல்லோரும் நல்லவராகவே உருவாக உருவாக்க முடியாது!
நல்ல சிந்தனை செயல் கொண்டவர்களால் நல்ல வீடு உருவாகிறது.
நல்ல வீடுகளினால் நல்ல கிராமங்கள் உருவாகிறது.
நல்ல கிராமங்களால் நல்ல நாடு உருவாகிறது.
ஏன் எல்லோரும் நல்லவராக முடியாது!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-7-2015.

lines-a

35. ஓகுஸ் (எமது) நகரத்து ஒன்றியத்தின் அறிவிப்பு

Aarhua tamizhar
அனைவருக்கும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம்
மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகுஸ் நகரத்தில் வசிக்கும்; திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.
10959858_791476714262399_3683408168867256473_o
ஓகுஸ் எமது நகரத்து ஒன்றியத்தின் அறிவிப்பு இது.
இணையத்து அன்பர்களிற்காக அதை இங்கும் தருகிறேன்.
டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம் ஓகுஸ் ஆகும்.வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-4-2015
pT5ooLeec-i

http://www.stsstudio.com/?p=7431      

எஸ்ரிஎஸ் ஸ்ரூடியோவிற்கு ஆயிரம் நன்றிகளை இங்கு கூறுகிறேன்.

பா வானதி வேதா. இலங்காதிலகம். அவர்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல் நல்ல ஆற்றல் உள்ள சிறந்த கலைஞரும் கூட இவருக்கான கௌரவிப்பு அறிந்ததும் மிகமகிழ்ச்சியாக உள்ளது எமது கலைஞர்களுக்கு சிறப்பு தரக்கூடிய இந்த சிந்தனைக்கு உரியவர்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடர்வோம் 36. ஓகுஸ் நகரத்து ஒன்றியம் இந்த அறிவிப்வை விடுத்துள்ளது படைப்பாளிகள் என்பது,

கடவுள்ளுக்குசமம் அவன் ஒவ்வெரு படைப்பின்போதும் தனக்குள் இருக்கும் ஆதங்கங்களை மட்டுமல்ல, சமுதாய சீர்கேட்டை மட்டுமல்ல, பல்விதநோக்கில் சிந்தித்தே தன் படைப்பை வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது அது பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கும் பொருந்தும்,

புலம் பெயந்துவந்து இங்கே வாழ்கிறோம் எமக்கு எதர்கு மொழி..? எமக்கு எதற்கு கவிதை…? கதை என்று எல்லேரும் இருந்துவிட்டால் இன்று இவர்போன்று சிறப்புள்ள கவிஞர்களை எமது சமுதாயம் இழந்திருக்கும் இவர் மொழிப்பற்றும்
எழுத்துத்துறை ஆற்றலும் இன்று இவரை கௌரவிக்கும் அளவுக்கு இவர் வளர்ச்சி இவர் பணி தொடரவும் இதுபோன்ற பல பாராட்டுக்கள் இவருக்குக்கிடைக்கவும் எஸ்.ரி.எஸ்.இணையம் சிறுப்பிட்‌டி இணையம் ஆனைக்கோட்டைஇணையம் தமிழ் எம் ரிவி இணையம் எஸ்.ரி.எஸ்.கலையகம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்10426103_791474420929295_7877622212379511038_n
(02.05.2015)அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

34. கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

13721747-illustration-depicting-a-road-traffic-sign-with-a-positive-thinking-concept-blue-sky-background

கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

தனது மனதைக் கட்டுப் பாட்டினுள் வைக்க இயலாதவர்கள் கட்டற்ற வாழ்வில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக ஒரு விருப்பமான செயலைச் சிலகாலம் நிறுத்தி வைக்கவோ, கெட்ட செயலைச் செய்யாது நிறுத்தி வைக்கவோ மனக்கட்டுப் பாட்டளர்களால் முடியக் கூடியது.

அத்தனையையும் அனுபவிக்க வேண்டும் என்று வரையறையற்று வாழ்பவர்கள் தமது உடலாரோக்கியத்தைக் கூடக் கவனிக்க மாட்டார்கள். கடைகளில் உள்ள ஆரோக்கியமற்ற உணவுகளையுண்டு பணத்தை வெகுவாக வீணாகச் செலவழித்துத் தமக்கும் குழந்தைகளிற்கும் நோயைத் தேடிக் கொள்வார்கள்.

நல்லவர்கள் செய்யும் நல்ல செயல்கள் உலகிற்கு ஆவணமாகிறது. இவர்கள் நல்ல சிந்தனைகள் நூலாகிறது. உழைப்பு நலிவுற்றவர்களிற்கு உதவுகிறது. உலக வரலாறுகளில் இவர்கள் இடம் பிடிக்கிறார்கள்.
மனிதனுக்குரிய நல்ல இலட்சணங்களை நல்லவர்களே பின்பற்றுகிறார்கள். அது அறிவு, அதிகாரம், புகழ் எனும் பல வழிகளில் அடங்குகிறது.
ஐம்புலன்களையும் வென்றவர், மனக்கட்டுப்பாடுடையவர், எதைப் பற்றியும் கவலையடையார். நிறைவு எனும் சொல்லிற்கு இலட்சணமானவர்கள்.
நல்ல வழிகாட்டிகளாக உள்ளவர் பிள்ளைகளும் பெரும் பாலும் நல்ல பாதையையே பின் பற்றுகின்றனர். அதே போன்று கெட்ட பழக்கமுள்ள பெற்றவர் பிள்ளைகளும் கெட்ட வழியை நாட வாய்ப்பு உண்டு
இங்கும் விதி விலக்குகள் உண்டு. இது வாழும் சூழல், பழகும் மனிதரைப் பொறுத்தும் மாற வாய்ப்புகள் உண்டு.
மனப் பாதிப்பு அடைவோர் பழி வாங்கும் உணர்வில் தீய வழிகளை நாடி தனக்கும் உலகிற்கும் தீமையை செய்கிறார்கள். தீயவர்கள் தீயவர்களோடு இணையும் போது குழு முறையிலாகி உலகை நாசப் படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21-1-2015.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

33. புற்றுநோயை வென்றவள்.

images

புற்றுநோயை வென்றவள்.

அகில உலகமும் தெரிந்த டென்மார்க்கின் ஓப்பரா பாடல் பாடும் நட்சத்திரமும்

மகாராணியின் 70வது பிறந்த நாளிற்குப் பாட்டுப் பாடியவருமான

ரீனா கிபேக் 2010ல் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மூக்குப் பிரியும் சுவரில் பெரியகட்டி உருவானது.

 கழுத்து தோள்பட்டை எலும்பு வரை அது பயணப்பட்டமாதிரி. 

அறுவை சிகிச்சை  

மேலும் பரவாது இருக்க கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரப்பி என்றும்,

இனி அவர் பாட முடியாது என்ற நிலையும் வந்தது.

நுரையீரல்வரை நோய் பரவியது.  கதிரியக்கச் சிகிச்சை, கீமோ என்பவைகளால்

10 கிலோ எடை குறைந்தும், உணவு விழுங்க முடியாமலும் உடல் நோவினாலும் அவதிப்பட்டார்.

வைத்தியர்கள் கை விரித்து விட்டனர். அவர் இறந்து விடுவார் என்ற முடிவைக் கூறினார்கள்.

மிக மனம் சோர்ந்தார்.  கெயலிவ் வைத்தியசாலை வைத்தியரின் ஊக்கத்துடன்

மாறுபட்ட சிகிச்சையாக அதிக அளவு விட்டமின் சி திரவ நிலையாகவும்,

விட்டமின் டி3 டபிள் அளவாகவும், மீன் எண்ணெய். பழவகைகள், உடற்பயிற்சி பாடல் என்று

சுறுசுறுப்பாக இயக்கினார்கள். 

2011ல் ஸ்கான் செய்த போது புற்று நோயிற்கான எந்த அடையாளமும் அவரிடம் இருக்கவில்லை.

வைத்தியர்கள் ஆச்சரியப்பட்டனர். மறுபடி ஓப்பரா திரைகளில் பாடுகிறார்.

தன்னை ஊக்கப் படுத்திய வைத்தியரை மெச்சுகிறார்.

உடலில் நேயெதிர்ப்புச் சக்தியைக் (immunity) கூட்டினால் எந்த நோயையும் வெல்லலாம் என்பதற்கு

ரீனா கிபெக் சிறந்த உதாரணம்.

(B.T denish பத்திரிகையில் வந்த கட்டுரையின் சுருக்கம்.)

 

தமிழாக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-12-2014.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

32. நான் கொடுப்பது யாருக்கு….!!!

1455d-versatile-blogger

avarkal unmaikal

புரட்டாதி 18 அன்று இந்த விருதை- வேசற்றைல் புளோகர் விருதை இந்த – இணையத்தளமும் எனக்கு வழங்கியுள்ளது. இது எனக்கு இன்று தான் தெரிந்தது.  இரண்டாவது தடவையும் இவ் விருது.
இந்த அன்புள்ளம் 53 பேருக்கு இதைக் கொடுத்துள்ளார்..  அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்.  இந்த இணைய முகவரி தருகிறேன் சென்று பாருங்கள்.  இதோ…

http://avargal-unmaigal.blogspot.com/2014/09/award.html     

இந்த அன்புள்ளத்திற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.

பலர் பல பேரிற்கு இவ்விருதுகளைக் கொடுத்து விட்டனர்.
எனக்கு யாரிற்குக் கொடுப்பது என்று தெரியவில்லை.  குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்க வேண்டுமாம்.
தேடித் தேடிப் பார்த்து 4 பேரை எடுத்தேன். இவர்கள் ஏற்கெனவே இவ்விருதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.

1.  http://www.gowsy.com/    –   கௌரி. சிவபாலன்.

2. http://ilavenirkaalam.blogspot.dk/         மகேந்திரன்.

3.http://iravinpunnagai.blogspot.com/       சி.வெற்றிவேல்

4.http://thuruvanatchathiram.blogspot.in/         மதிப்பிற்குரிய சந்திரா

இனி என்னைப் பற்றி எழுத வேண்டும்.  

மகனிற்கு 2வது பிள்ளை பிறந்துள்ளது எங்கள் இரண்டாவது பேரன்.
மூத்தவர் இரண்டரை வயது சரியான சுட்டி. அவர் என்னோடு தான் 2 நாட்கள் தூங்கினார்.
எனக்கு ஓய்வே இல்லை. அதனாலேயே இவைகள் தாமதமாகி விட்டது. என்னைப்பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது வாசியுங்கள்.  இதோ…

https://kovaikkavi.wordpress.com/about/

எல்லோருக்கும் வணக்கம்.

இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் எனது தாயார்.

நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில்  ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.

1976ல்    இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம்.    ( இப்படித் தெடருகிறது…தயவு செய்து  இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்) 

இரண்டாவது தடவையும் இவ் விருது.

blogaward

அனைவரிற்கும் மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-9-2014

images 2356

Previous Older Entries