3. நூல் மதிப்பீடு – முன்னுரை

14741173_357880367893149_611275231_n

 

14794088_357880357893150_393948291_n

14793995_357880347893151_1963096237_n

14797371_357880361226483_2104502173_n

அணிந்துரை

பொத்துவில் தமிழ் மகன் அஐ;மல்கான் தனது தமிழ் ஆர்வத்தினால் தனது இரண்டாவது நூலாக
” காதல் பித்தனின் கிறுக்கல் ”
என்ற தலைப்பிட்ட நூல் வெளியிடுகிறார். இளவயது அல்லவா தலைப்பு ஆச்சரிம்; தரவில்லை.
இவர் எனக்கு முகநூலில் அறிமுகமான துடிப்புடைய ஒரு மகன். இவரது தமிழ் ஆர்வம் போற்றுதற்கு உரியது.
தமிழுணர்வு ஒரு தமிழனுக்கு வேண்டும். அது எமது ஊன்றுகோல், கலங்கரை விளக்கு. தமிழில் பேச பலர் கூசுகிறார்கள். ஆங்கிலத்தோடு கூடப் பிறந்தவர்கள் போன்று, அது நாகரிகமென்ற மாயையில் உள்ளனர். தொலைக்காட்சிகளிலும்; ஆங்;கிலம் சக்கை போடு போடுகிறது. இதை மிக மனக்கசப்புடன் எழுதுகிறேன்.
இவ்வகை நிலையில் தமிழ் நூல் வெளிவிடுவது சிறந்த முயற்சி, தமிழ் தொண்டுமாகிறது.
” கவிஞனை அழிக்க முடியாது.
பூமி வெடித்த முளைத்தது போல
பூக்கும் எழுதுகோற் போராளி.
நெஞ்சத்து உணர்வின் பாவிதை
தஞ்சமான உணர்வின் பாவிதை.
உழுத நீல குருதியின் இழப்புத் தான்
எழுதும் இதயத்துக் கவிதை வண்ணம்.
பழுதுபட்டதைத் திருத்தக் கூறியே
எழுதுகோலினை எடுக்கிறான் கவிஞன்;.
ஏர் முனையாய் தமிழை உழும்
கூர்முனை தானே பேனாமுனை ”
இவரது குறைவான எண்ணிக்கைக் கவிதைகளைத் தான் நான் வாசித்துள்ளேன் அவை காதல் தோல்விக் கவிதைகளாக இருந்தது.
கவிஞன் என்பவன் எல்லா வித உணர்வுகளையும் வெளியிடுவான்.
மனுநெறிக் காவலன் தானே பேனா முனை. எனவே வித்தியாச வரிகளின் நளினங்கள் அறிந்து அவற்றை வெளிக்கொண்டு வந்து எழுத வேண்டும்.
இவர் இன்னும் பல நூல்கள் எழுதி புகழ் பெறட்டும்.
பல் கவித்துவ மொழியாடலை புதுமையாகப் பகிரும் சிறந்த எழத்தாளராக இவர் உயர வேண்டும் என்று டென்மார்க்கிலிருந்து வாழ்த்துகிறேன்.

அன்புடன்
திருமதி வேதா. இலங்காதிலகம்.
(ஒய்வு பெற்ற பாலர் பாடசாலை ஆசிரியர்)
டென்மார்க் 14-7-2016
https://kovaikkavi,wordpress.com

 

download

2. நூல் மதிப்பீடு – முன்னுரை – வாழ்த்துரை

14095884_430843800372992_5121173612954359690_n

thanu

நெடும் தீவு  தனுவிற்கு  நான் எழுதிய 

வாழ்த்துரை

” வீறு கொண்டெழும் வாலிபம்
ஆறு போன்று பாயும்.
தீரமுடை வழி காட்டலில்
நேரிய பாதை செல்லும்”

சமூக விழிப்புணர்வு கொண்ட இளம் வாலிபன் இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனு எடுக்கும் கன்னி முயற்சியான புத்தக வெளியீட்டு முயற்சி மிகவும் தேவையானதான ஒரு முயற்சி.
போரின் வெடிப்புகளாலும், அமைதியற்ற அநாகரீகச் செயல்களாலும் நொந்து போன மனதிற்கு இதம் தருமொரு இனிய முயற்சி.
சேவியர் தனிநாயகம் அடிகளாரின் தந்தை நாகநாதன் மற்றும் அவர் தந்தை வழிப்பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அப்புகழ் பூத்தவர்கள் உதித்த இடத்தில் உதித்த தனுவும் தனது தமிழார்வம், தேசப்பற்றுக் கொண்டு தமிழாள ஆர்வமுடன் அடியெடுத்து வைக்கிறார்.
தம் சுய அறிவிழந்து போதை மருந்துப் பழக்கத்திலும், தீய வழிகளிலும் செல்வோர் மத்தியில் வேதனைப் பாதையில்; நடக்காது சாதனைப் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்.
இவரது ஓரிரு கவிதைகளைப் பர்க்கும் போது ” எம் ஊர் ” என்ற கவிதையில் இவரது ஊர் உணர்வு வீசுகிறது. தனது ஊரைத் தெரியாதவர்களிற்குக் கவி வரிகளில் மிக இனிமையாக விவரிக்கிறாh. நெடுந்தீவைப் படம் பிடித்துக் காட்டுவதாக நான் உணர்ந்தேன்.

‘படகு புதியவர்களிற்குத் திகில் எமக்கோ
பழஞ்சோற்றுப் பதம்”…என்கிறார் சிறப்பாக.
இன்னொரு கவிதையில் வவுனியா சாலை ஓரத்தில் தான் கண்ட நிகழ்வை உயிரெழுத்து வரிகளாக ”அ ” விலிருந்து ”ஒள” வரை ஒளவையாரின் பாணியில் வரைந்துள்ளார்.
”இல்லாத எம்மிடம் ஈக்கள் மொய்ப்பதேனோ”
என்று ஏழைமை நிலையை வேதனை பொரும எழுதுகிறார். இந்த வேதனைகள் நாட்டிலிருந்து வடிந்து மறைந்து மகிழ்வு நிலைக்க வேண்டும்!
”உணர்வாயா” எனும் கவிதையில் முதியோர் இல்லம் பற்றி
”கூவிக் கொண்டே என் ஆவி போயிடுமோ!
கூவி முடிவதற்குள் இவ்வில்லம் வாருமய்யா!”
என்று பிள்ளைகளின் பாராமுகத்தை, வயோதிபத்தைக் கவனிக்காத குணங்களை எடுத்துரைக்கிறார்.
பல கவிதைகள் இணைக்கப் பட்டுப் புத்தகமாகிறது. ஓவ்வொரு வரிகளும் தமிழ் வாரிசுகளிற்குப் பாடமாக அமைந்து வழிகாட்டட்டும்.
வாலிபன் தானே! காதலை விடுவாரா! ”காத்திருக்கும் காதல்” கவிதையிலும் ஊரை விட்டு வைக்கவில்லை.
”கடலோரம் வீசும் கூதற்காற்றில் என்
காதில் கதை சொன்ன ஆசை மச்சானே!
இதயத்தைக் கடலில் கரைத்தாயா
ஊர் வந்தால் சொல்லி விடு”
என்று காதலில் ஏங்குகிறார்.
இவரது கவிதைப் பயணம் – எழுத்துப் பயணம் வெற்றிகரமாக உச்சம் எட்ட எனது நல்லாசிகளை வழங்குகிறேன்.
பலப்பல நூல்கள் வெளியிட்டு எழுத்து வானில் தனு கொடிகட்டிப் பறக்க இறையாசி நிறையட்டும்.
மனமார்ந்த வாழ்த்து. வாழ்க! வளர்க!
__
திருமதி வேதா. இலங்காதிலகம்
(பெட்டகோ)
ஓய்வு பெற்ற பாலர் நிலைய ஆசிரியை.
கவிஞர் (வேதாவின் வலை)
டென்மார்க். 7-6-2015

div138

1. நூல் முன்னுரை.

munnu - ajg

sitharal - addai

சுவிற்சலாந்தில் வாழ்ந்த சமீபத்தில் இலண்டனிற்கு இடம் பெயர்ந்த அன்பு நண்பர் – எழுத்தாளர்- செய்தியாளர் – தமிழ் ஆறு இணையவாளர் – கவிஞர் என்று பல உருக் கொண்ட ஏ.ஜே.ஞானேந்திரனின் ” சிதறல்கள் ” நூலின் முன்னுரை.

div138

வாழ்த்தும் அன்பு வார்த்தைகளுடன்

” நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதி ”
– அறிவுடையார் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்றது” என்கிறார் கடுகைத் துளைத்து எழுகடலான கருத்தை குறுகத் தறித்த குறளில் புகுத்தியவர் திருவள்ளுவர்;.
நட்பிற்குரியவர், நாம் ஏஜேஜி என்று அழைக்கும் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன், அதுவும் அறிவுடையார் நட்பு.
பாசல் சுவிஸ்ல் வாழும் இலங்கைத்தமிழர் இவர் அங்கு தமிழ் ஆசிரியர். இன்னும், எழுத்தாளர், செய்தியாளர், கவிஞர் எனும் பல பாத்திரங்களுக்கு உரியவர்
பல வருடங்களின் முன்பு இலண்டன் ரைம்ஸ் வானொலியில் உருளும் உலகு தலைப்பில் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன் செய்திகள், தகவல்கள் தொகுத்துத் தந்தார். சிந்தனைக் கருத்துகள், கருத்துத் தொகுப்புகள், நேயர் கடிதம் என்று கலந்து கொண்ட போது குரல் வழியாகவும் அறிமுகமானார்.
ஒரு தடவை டென்மார்க்கிற்கு வருகை தந்த போது இவரை நேரில் எங்கள் வீட்டில் சந்திக்கும் வசதியும் கிடைத்தது.
நான் பாமினி எழுத்துருவில் தமிழை எழுதி வந்தேன். நான் கேட்ட போது யூனிக்கோட்டில் அதை மாற்றக் காட்டித் தந்தவர். மெதுவாகச் சென்ற என் எழுத்துப் பயணம் அன்றிலிருந்து தங:கு தடையின்றிப் பாய்கிறது.
ஆகையால் இவர் மறக்க முடியாதவர், என் தமிழோடு பிணைந்தவர் என்பதை நன்றியுடன் நினைக்கிறேன்.
இன்று இவர் ” சிதறல்கள்” நூல் உருவாக்குவது மிக மகிழ்வு தருகிறது. வேறு இணையம் வைத்திருந்தாலும் தமிழ்6 இணையம் மூலம் கடந்த இரு வருடங்களாக பலரை மகிழ்வித்து வருபவர்.
முத்துக்களாகத் தகவல் சிதறல்கள் தமிழ் ஆற்றில் (ஆறில்) உருளும் உலகில் தெரிந்ததும் தெரியாததும் என்று உண்டா? தமிழ் ஆறில் நீந்தி தீர்வு காணக் கூடியதாக இருந்தது.
கவலையே படாமல் சிரி சிரியென்று சிரிக்கவும் கட்டுரைக் குறிப்புகள் தந்தார். உதாரணமாகப் பாழாகிவிட்ட முகம் என்பதை சமீபத்தில் படித்துச் சிரித்தேன். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா!
பணச் செலவு, உடற் சிரமமின்றிப் பயணங்களின் கதைகளையும் தொகுத்துத் தந்தார். பயணம் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது.
போர்த்துக்கல், இலங்கைப் பயணங்களையும் படித்துள்ளேன். ஆர்வம் தருவதாகவும் இது எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.
மரக்கறிகள் தானியங்கள், நோய்கள் என்பவை பற்றியும் ஆர்வமாக வாசித்துள்ளேன்.
இவர் தொடாத தலைப்புகள் இல்லையெனலாம்.
பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மீகம், அதிசயத் தகவல்கள், சினிமா, இயற்கை போன்ற பல தலைப்புகளில் எழுதித் தன் திறமையை வெளிக் கொண்டு வருகிறார். இவைகளிற்கு ஏற்ற படங்களையும் தேர்ந்தெடுக்கிறார்! அருமை! இது மக்களை மிகவும் ஈர்க்கிறது.
உதாரணமாக நிறங்கள் பற்றி ஆச்சரியம் நிறைந்து இவர் எழுதிய தகவலில் நான் குறிப்புகள் எடுத்து வைத்திருந்து, சிவப்பு தலைப்பில் கவிதை எழுதும் போது அதையும் சிறிது பாவித்தேன்.
ஓடிவிளையாடு பாப்பாவிலிருந்து பெரியவர்கள் வரை பயன் பெறும் தளமாக தமிழ்6 ஓடியதை சிதறல்களாகத் தொகுப்பது அருமையான சிந்தனை விரிவு தான்.
இந்த நூல் மக்களிடம் பரவிப் பெருமை பெறட்டும். தங்கள் முயற்சி இனிது நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்தையும் கூறுகிறேன்.
இது போன்று பல நூல்கள் விரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
வேதா. இலங்காதிலகம்
(ஓய்வு பெற்ற பெட்டகோ)
டென்மார்க்
4.6.2014.
இணையம்:- வேதாவின் வலை.