78. ஒரு தாகம். (மரம் பற்றியும்)

p46h

ஒரு  தாகம்.

***

கலக்கும் உயிர் வேதனை
விலங்குகள் மனிதனின் இயல்பூக்கம்
மோகம், நீர் வேட்கை, ஆசை,
ஏக்கம், ஆர்வம், தவிப்பு
ஏதிர்பார்ப்பென ஊர்ந்து
பாடாய் படுத்துகிறது தாகங்கள்.
***
சுதந்திரதாகம் அரசியல் சூழ்ச்சியுள் சுழலுகிறது.
சுழலும் கவிதாகம் விரிகிறது.
கலை காதல் தாகம்  பாகமாய்
அலைக்கழித்து நாகமாய் மனிதன்
அலைகிறான். காகமாய் தேடித் தேடி
மோகம் அடங்காத தாகத்தில்
ஏகமாய் தேகம் குலைக்கிறான்.
***
சுயதேவைக்கு மரங்கள் அழிப்பு
தூயநீருக்கு மகா பரிதவிப்பு
பஞ்சபூத ஆதாரம் மரம்
காற்று சுத்திகரிக்கும் அரும்பணி
குளிர்காற்று பெறும் தடை
ஆகாயத் தூய்மை அழிவு மண்ணரிப்புத் தடைகள்
மரமழிப்பால் நடைபெறும் தாகங்கள்.
***
ஓசோன் படலம் செப்பனிடும் மரம்
மழைக்குக் காரணியாகிறது.
பூமி மேற்பரப்பின் காற்றின்
வெப்ப வேகத்தைத் தடுக்கும்
மரம் காத்தல் அவசியம்.
மனிதனே மறந்தான் மனிதனே கெடுத்தான்.
நீருக்கான தாகமும் உயர்கிறது.
***
Image may contain: one or more people
***
.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-7-2016.
(Samme katu…..)
 *
blue-border-603769
Advertisements

77. காடும் அழகும்

471536_310237545748768_2073209016_o

 

காடும் அழகும்

வனம், கானகம், புறவு அடவியெனும்
அனந்தப் பெயருடைய மரங்களடர் நிலம்.
ஐவகை நிலத்திணையில் முல்லை காடு சார்ந்ததாம்.
ஐக்கியமானால் காடு அதிசயம் சொர்க்கம்.
***
சுந்தரவனக்காடுகள் வங்காளதேசத்துப் பரப்பிடையும்
சுந்தரமுடைய பறவைகளிற்கு அமேசான் காடும் சிறப்பாம்.
மூங்கில் காடுகள் யப்பானில் அழகாம்.
மூங்கில் எழுப்பும் சத்தமே அற்புதமாம்.
***
யேர்மனியில் சுற்றுலாவிடமாம் கருப்புக் காடாம்.
கவாய்தீவில் வெப்பமண்டலக் காடு அழகாம்.
கனோலா மஞ்சள் மலர்வனம் சீன அழகாம்.
கேரளஅழகு சுந்தனமரக்காடு முட்புதர்காடு.
***
பிரான்சில் லவெண்டர் மரவனம் அழகாம்
இலாவண்ய இயற்கைக் காட்டில் ஆதிவாசிகள்
புரண்டார். செயற்கை அழகில் இன்று மயங்குகிறார்.
காட்டு அழகு நேசிப்பவனுக்கு ஒரு விதம்.
***
காட்டுலாவில் அமைதி ஓய்வு புத்துணர்ச்சியுருவாகும்.
காற்று சுத்திகரிப்பால் நல் மூலிகைக் காற்று
காடு வளம் காப்பதில் நாடு வளமாகிறது.
நீர்வளப் பாதுகாப்பு அடர்வன ஈரப்பதம் சிறப்பு.
***
நறுமுகையே நாடியேகு காடுக்கேதுமில்லை ஈடு.
வெறும் அற்ப மாயை செயற்கையோடு.
பெறுமதி! காட்டுக் குடை தேடு.
சிறுமதி காடழிக்காதே! வெப்பமாகும் நாடு
***
– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.20-6-2016
trees

76. பூமி தினம்….சித்திரை 22.

12108210_963859023674549_6243759633574699469_n

பூமி தினம்….சித்திரை 22.

***

பொட்டல் வெளியிலொரு பசுமை கண்
கட்டும் பச்சை! அழகோ அழகு!
அட்ட திக்கும் பச்சை எழுப்புவோம்.
இட்டமுடன் மழை . பூமி காப்போம்.
***
பூமித்தோலின் உரோமங்கள் என்றனர் பசுந்துளிர்கள்.
பூத்து தரணியைக் காக்கும் எழில்கள்.
பூமாதேவியென போற்றும் பொறை மகள்
பூசனை செய்வோம்! பச்சை வளர்ப்போம்!
***
பூவுலகம் என்னும் நிலவுலகம் எம்மை
பூவாகக் காப்பது வெள்ளிடை மலை
பூரணி, பூதிகம், பூதலம், பூ
பூகண்டமென தொகை பெயர்கள் பூவன்னாவிலும்.
***
பூஞ்சணம் பிடிக்காத பசுமைப் போர்வை
பூங்கோயிலாக்கும் உலகை சந்தேகம் இல்லை.
பூசகனாவோம் பூஞ்சை நிலம் ஆக்காது.
பூஞ்சோலயென மண்ணைக் காப்போம் நாம்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2016
***
Image may contain: tree, plant, outdoor and nature
*
lines-multi-color-483451

75. பச்சைக் கொலை!

1916649_10207639381719786_4054199736759492968_n

பச்சைக் கொலை!

***

அறிவு கெட்ட மானிடனே
தறிக்கிறாயே அறிவீனமாய் என்னை!
முறிவது நான் மட்டுமல்ல
முடக்குகிறாயே  பறவைகள் வாழ்வையும்!
பச்சைக் கொலையிது! உன்னை
துச்சமாய் யாரும் கொன்றால்!
முச்சந்திக்கு இழுப்பார்களே..பார்!
முச் சங்கத்திலும் முறையிடுவாரே!
***
பாடை வரை வருகிறேனே!
பாங்காக எண்ணிப் பார்!
பாடெனும் புவி வெப்பமடைதல்,
பாதிப்பு மழையின்மை, பட்டினி!
மரம் கடவுளென்பார் மனிதா!
மரம் வெட்டல் பயங்கரவாதம்!
மகிழ்ந்து நாளுக்கு ஒரு
மரம் நடு! சொர்க்கம்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-3-2016
***

மரங்கள்

*

பெரும்
நிழற் குடை இலவசச் சேவிதம்.
கால்நடைகள் வயிறாறும் தீவனச் சேவை.
பணம் செலவற்ற உரத் தழைகள்.
பகலில் நச்சுக் கரியமலவாயு உள்ளெடுக்கும் தொண்டன்.
*

மருந்து எண்ணெய் பிசின் தேவையா
அடுப்பெரிக்க, குளிர் தேச வெப்பச் சேவை
தீப்பெட்டித் தொழில், கடதாசி செய்ய
மண்ணரிப்புத் தடையாம் வரம் மரங்கள்.
*

சுகமான
பறவைகள் வாழுமிடம். பூமியின் வெப்பம்
மிதப்படுத்தும் இரசாயன சேவை. புழங்கள்
காய்களும், தேக ஆரோக்கியம் காக்க
சமயத்தில் காற்று வேகக் கட்டுப்பாட்டதிகாரி.
*

அழுக்கு நீரருந்தி தருவது அமுதம்.
தெருவோர நிழல் வாடி, சீவகாருண்யம்.
மனிதக் கரம். பிச்சைக் காரனின் வீடு.
சீ! மரமே எண்ணாதே! பல்சேவகனிவன்.
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1.8.2016

*

( Same  katu)
*
sketch-2.png.klkl

74. பூக்கடை

 

download

 

 

பூக்கடை

***

பூக்கடை வாசத்தில் இழுக்க
பூவாய் மனம் மலரும்.
பூங்கணைக்கு மயங்காதார் யாருளர்.
பூங்காற்றும் நெஞ்சு நிறைக்கும்.
***
பா கட்ட மனமெண்ணும்
வாவென்று மனம் அழைக்கும்.
ஆகாட்டி மனம் ரசிக்கும்.
தூவென்று யார் வெறுப்பார்!.
***
பூமாலை கட்டி அதைப்
பூணாரம் ஆக்கலாம். நீ
பூவாய் மணப்பாய் பூரிப்பாய்
பூவழகி பூவாடைக்காரி நீயே!
***
பூ விற்கும் கை
பூ மணம் வீசி
பூவையின் மணம் ஊரையிழுக்கும்.
பூவாய் பணம் பெருகும்.
***
பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-3-2016
lotus-border

73. இது இந்திரலோகமோ!….

12232937_10206982346854325_3621954402400425501_o

 

இது இந்திரலோகமோ!….

***

புலம் வெளித்த போது நன்கு
நிலம் தெரிந்தது மா தூவியதாக.
வலம் வரும் சிறுவர்கள் பனியை
நிலத்தில் வீசியது போல் சிறு
தூவானம் போல், வெள்ளைத் தூறல்கள்,
தூறல்கள் சிறு துளி பெருவெள்ளமாக
போர்வை இட்டது வெள்ளைக் கம்பளம்.
பார்க்கும் இடங்கள் வாகனங்கள் அனைத்தும்.
சீர்மிகு வெண்மை! பனி டென்மார்க்கில்!
இது இந்திரலோகமோ! பாதை மூடலை
இயந்திரம் வந்து உப்புத் தூவியது.
வெளியே போவதா!….ம்க்கும்! குளிர்!….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
8-1-2016
***
Today also snow….1-3-2016
***
16161859-

72. மறக்கவியலா இன்ப வெள்ளம்!

Tamil-Daily-News-Paper_23010981083.jpg-gg

மறக்கவியலா இன்ப வெள்ளம்!

***

வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
உள்ளம் வெதும்பத் துன்பச்  சோதனை
வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.
***
தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.
***
அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
வென்றது வெள்ளம் காலு கங்கையால்
தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்!.
***
தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
தேவதூதர்களாய் தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-1-2016.
Big Blue Divider

Previous Older Entries