68. முத்து.

f1309042

உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
உயிர் சிப்பியுள் திண்மபொருள்(நுண்துகள்) நுழைவால்
உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்
சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

விலங்கின வகையாம் முத்துச் சிப்பி
விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
பட்டை தீட்டத் தேவையற்றது முத்து
பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

இயற்கை முத்து அவிகுலிடி என்ற
இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
மட்டிகளிலும் உருவாகிறதாம். முத்துகள் நீலம்
மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
முத்து நகர் தூத்துக்குடியாம். மூழ்கி
முத்துச் சிப்பியெடுத்தல்.முத்துக்குளிப்பு என்பார்.

வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-10-2015.

index

67. புல்.

green-grass-hd-wallpapers-free-nature-images

     புல்

புல்லில் படுத்து வானம் பார்

அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!

மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை

சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.

புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.

பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.

புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.

உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

***

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.

புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.

அகரம் புல், அருகன் புல்லாகிய

அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.

ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.

காகா மூலி, ஆரோக்கியப் புல்,

குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,

விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

***

தலைவலி, கண்ணுபாதைக்கு நற்பசுமைவிருந்து.

விலையில்லை உலகிலிதற்கு வேறொருமருந்து.

நீர் வாழ் தாவரங்களும் புல்லினமே.

தர்ப்பை, அறுகம்புல் நீரின்றி வளரும்.

தர்ப்பை இரத்த அழுத்தத்தைக் கட்டப்படுத்தும்.

தர்ப்பைக் காற்றால் தொற்றுநோய் நெருங்காது.

நீரில் அழுகும் தன்மையற்றது தர்ப்பை.

சூரியகிரகணம் இதன் வலிமையை அதிகரிக்கும்.

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-7-2015

grass line

66. நிசாரியின் (சூரியன்) வீரியம்.

summer heat02

நிசாரியின் (சூரியன்) வீரியம்.

குளிருது குளிருது என்றுகுடங்குதலானோம்.

 குனிய நிமிர உடல் நோவானோம்.

 நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று

 நிசாரி தன் கிரணங்களை வீசினான்

 கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை

 வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை

 அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்

விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது

கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்

கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று

மரங்களின் கீழ் மக்கள். பறவை

மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.

குளியல் இரண்டு மூன்று முறை

எளிதான பருத்தி உடைத் தேர்வு

களித்திட கடல் தேடி ஓடல்.

புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-7-2015

10275602_10205085709176197_8091329699660233275_o

65. இரட்டைவால் குருவி

bird drango1

இரட்டைவால் குருவி

கரிக்குருவி, வலியன் குருவி,கரிச்சான்,

கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன்,காரியெனும்

கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி

கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               

கீதமிசைக்கும் அடர்த்தியற்ற காட்டில் வாழும்

வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில

’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்

பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்

பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட

பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

எறும்புப் புற்றின் மீது அமருமாம்

எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!

எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்

எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

(தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போதுஅதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில் இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல் வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ  என்று எழுதியது.(தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி))

பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-6-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

64. சில்லெனும் நீரே

11230665_987693664604226_4092811496928505606_n

*

சில்லெனும் நீரே

*

நீலவானக் கடல் பின்னணியில்

சாலம் காட்டும் நீரே!

ஆலங்கட்டியாய் விழுவாய்

அரிசிப் பொரியாய் விழுவாய்

ஆக்கினையான பனிக்கட்டி ஆவாய்!

ஆனந்த உணர்வு தரும்

ஆயாசம் உடலில் தீர்க்கும்

ஆனந்தத் துளியாய் இப்போது!

*

மெத்தென முகத்தில் விழுந்து

புத்துணர்வு தரும் துளியே!

எத்துணை தண்மை உன்

சத்தான திரவத்தின் அற்புதம்!

களைத்த முகத்திற்குப் புது

களிப்புத் தரும் அமிர்தம்!

பசியில் நல் அமுதமாவாய்

ருசிக்கும் சில்லெனும் நீரே!

*

பள பளக்கும் நல் நீரை

சள சளவென நன்கு அடித்து

சில் சில்லெனக் குளிர பாலர்

முகத்தில் தெளித்து நனைவார்

பகிரங்கமாய், பரவசமாய் மகிழ்வார்.

பச்சை மண் குழைத்து

பல வகைப் பணியாரம் செய்வார்.

சேற்றிலே நன்கு அளைந்தாடுவார்.

*

பா ஆக்கம்   பா வானதி

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  25-5-2015

*

samme   Katu………enkum,

https://kovaikkavi.wordpress.com/2015/05/23/379-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/

*

blue-border-603769

63. பூகம்பம்

south-asia

பூகம்பம்

ஆதி மௌரிய குப்த

இராச்சியத்தின் கீழாக இருந்த

இமாலய இராச்சியம் என்ற

நேபாளம் இன்று கிலியுள்!

ஏழை புத்த நாடன்று!

முப்பத்தெட்டு விகித வறுமை

காட்மண்டு தலைநகர் கொண்டு

காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்

பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)

புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

மூவித நில நடுக்கம்

சாதாரண முறை, மேற்தள்ளல்

முறை, சமாந்தர அசைவென

மானுட வாழ்வைப் பாதித்து

பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

சாதாரணமாகக் கூறும் பூகம்பம்

பல்லுயிர் காவு கொண்டது

பாரிய சேதம் சோகம்!

பன்னாட்டு உதவிகள் விரைகின்றன

ஓன்பது மாடித் தரஹரா

கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது

சோதனைகள், சோகம் விலகட்டும்

சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-5-2015

Center-Divider

62. நளிர் நளினம் (குளிர் நீர்)

Tamil-Daily-News-Paper_21454584599

*

நளிர் நளினம் (குளிர் நீர்)

*

பளிங்கு பளிங்கு கண்ணாடி

பளிங்கு பளிங்கு படிகம்

வெளிப்படை! உயிர் காக்கும்!

நளினம் தண்ணீர் – தெளிநீர்

தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!

நளினமின்றி உயிருலகு இல்லை

துளி பட்டாலும் துளிர்க்கும்

நளிவுடை நளிர் திரவம்

*

ஆறு, கடல், குளத்தில்

பீறும் மழையாயும், குட்டையிலும்

ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று

சேறு, குற்றம் களையும்

மீறும் தீ அணைக்கும்

வீறு கொண்டு பாயும்

நீருக்குச் சிறை பனி

நீராவி குளிர, திரவம்

*

அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்

அருமைப் பதநீர் தேனீர்

அழுதால் கண்ணீர் சுடுநீர்

பித்தநீர் மஞ்சள் நீர்

இளநீர் குடிநீர்  பலவகை

நீர் பூமியில் 71விகிதம்

நிறமற்ற புதுமை தனித்தன்மை

திறமைப் பயன் மின்சாரம்!

*

 

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

15-5-2015

*

samme  katu  enkum:-   

https://kovaikkavi.wordpress.com/2015/06/10/63-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87/

*

*

divider_130

61. குதிரைச் சவாரி..

unnamed (1)

குதிரைச் சவாரி..

கம்பீர நடை, பெருமித நடை
குதிரை நடை பரி நடை.
குதிரைச் சக்தி கால்களில் உண்டு.
குதிரைச் சக்தி இயந்திர சக்தியாம்.
அசுர வேகத்தில் தாவியோடும் சுறுசுறுப்பு
அழகு மினுமினுப்பு ஜாதிக் குதிரை.
அழகிய பிடரி முடி, சண்டித்தனம்.
அரச வாழ்வோடிணைந்தது பரி படை.

குதிரைப் பந்தயம் பண ஈட்டமிழப்பு
குதிரையேற்றம் 64 கலைகளுள் ஒன்று.
கொள்ளு புல்லுணவு துள்ளிக் குதிக்கும்.
வெள்ளை, கறுப்பு, சாம்பல் சிவப்பெனப்பல
ஒலிம்பிக் விளையாட்டிலும் குதிரைப் பங்குண்டு
நின்றபடி தூங்கும் வீட்டு விலங்கின்
நீள உடலில் ஏறியமர்ந்து பழகும்
நாட்டுப்புற வாழ்வுடைய எம் மகள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-4-2015

gallophorsepagedivider_jpg300

60. ஆழிப்பேரலை

1334484544-song-than-500


(இன்று ஆழிப் பேரலை துன்ப நிகழ்வு நடந்த 10வது ஆண்டு நிறைவுப் பிரார்த்தனைகளும்,
ஆத்ம சாந்தி ஒன்று கூடல்களும் நடந்து வரும் போது அன்று ஒரு வருட நிறைவுக்காய் எழுதிய கவிதையை இங்கு பதிவு செய்கிறேன்.)

ஆழிப்பேரலை ஓராண்டு நிறைவு (க்கு எழுதியது)

ஆழிப் பேரலையின் ஆவேசத் தாண்டவம்
ஊழிப்பிரளயமான முதல் ஓராண்டுக் காலமது.
சோழியாக உருண்டது  பலர் வாழ்வு!
கீழிறங்கினர்இ சொத்து சுகம் இழந்தனர்.
விழிநீர் வழிய உறவிழந்தனர் பலர்
வழியேதுமின்றி இன்றும் துயரில் பலர்.
00
சொர்க்கம் எமது நாடு எனும் 
வர்க்கத் தரம் பேணப்பட்டு இன்று
நிர்க்கதியாக யாரும் இல்லை யென்ற
சர்க்கரைச் செய்தி பரவ வேண்டும்.
தீர்மானமுடன் அதிகார நிறுவனங்கள் தம்
அர்த்தமுடை சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.
00
நல்லதைச்  சொல்பவர் சொன்னபடியே இருக்க
பொல்லாததைச் செய்கிறவர் செய்தபடி இருந்தால்
பொழியும் நிலவின் குளிரெங்கே தெரியும்!
வழியும் காதல் மொழிகளில் விவாகரத்து ஆகும்!
களிபொங்கும் குயிலிசையிலும் கனல் பறக்காதோ!
வழியற்ற மனம் வக்கிர பாதையிலிறங்காதோ!
00
விழி மனமே! உன்னிலும் கீழ் நிலையாளரைக்
குழிக்குள் தள்ளாது கைகொடுத்து உதவு!
பழிக்காளாகாதே! அருகிருந்து அடுத்துக் கெடுக்காதே!
புதுவழி காண உதவும் பொதுநலப்பணத்தைபதுக்காதே!
புனர் வாழ்விற்குக் கை கொடு!
அதுவுன்னை மனிதநேய விழிப்புணர்வு மனிதனாக்கும்!
00

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.27-12-2005

00

வேறு:-

ஆண்டவன் கணக்கு இது

எறும்புகள் சேர்ந்த நெல்மணிகள்
அரும்பு விட்டு முளைத்தன.
விரும்பி வாழ்ந்த வீடுகள்
நெறுங்கி அழிந்தது சுனாமியால்
00
அறுவடைக்குக் காத்திருந்த வேளை
அடைமழை கதிர்களை நனைத்தது.
இசைவுபாடுகளை என்றும் அழிக்கும்
முரண்பாடுகள் முட்டி மொதும்.
00
முரண்பாடுகளில் கட்டி முடிக்கும்
அரணமனை தானே நம் வாழ்வு
ஆண்டவன் கணக்கு இதுவென்று
மீண்டவர் யார் கூறுவார்!
00
நீண்ட நெடும் பாதையில்
தாண்டும் தடை ஏராளம்
சீண்டும் தொல்லை தாராளம்
மாண்டிட வேண்டாம் மன ஆர்வம்
00

(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை)
20-2-2005

தாரண வருடம் எழுதிய ஆழித்துன்பக் கவிதை

https://kovaikkavi.wordpress.com/2010/12/26/189-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/

Samme kind of:-        https://kovaikkavi.wordpress.com/2011/03/12/231/

imagesCAX5K52V

59. பசுமை நறுமணம் புல்தரை (புல்வெளி)

537395_345583298890802_1972166156_nபுல்வெளியை பணக்காரர்கள் யந்திரங்கள் வைத்து வெட்டி அழகாக்குவார்கள்.அதையே இங்கு புதுக்குதல் என்று குறிப்பிட்டுள்ளேன்.

 ”  சர் ஜகதீஷ் சந்திர போஸ் அறிவியல் மேதை தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன் இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும் பிறப்பும் இறப்பும் உண்டு. நம்மைப்போலவே மகிழ்ச்சி துன்பம் போன்ற உணர்ச்சிகளும் உண்டு என்ற கருத்தை  நூல்களில் கூறி உள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி போஸைப் பாராட்டி ‘சர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது….”   இதை முகநூலில் சகோதரி முருகுவல்லியின் ஆக்கத்தில் வாசித்தேன். அதனால் புல்லையும் உயிர் என்ற ரீதியில் எழுதியுள்ளேன்.

பசுமை நறுமணம் புல்தரை (புல்வெளி)

(நடத்துங்கள்! பட்டிமன்றம்!)

ச்சைக் கம்பளம், பாயென்று
இச்சையாய் பாவிணைப்பார் பாவலர்.
பாலரும் வயோதிபரும் புரள்வார்
பச்சைப் பசும்தரைப் பசுமையில்.
பார்த்துக் கொண்டிருக்கப் பசுமையீர்க்கும்!
சோர்வு தொலையும் மனநோய்க்கு.
கீர்த்தனம் புல்லின் பனித்துளி.
தனித்துளி புல்லின் கிரீடம்.

மிதித்தால் நசுங்கிச் சாதல்.
எதிர்க்கத் தெரியாத சாது.
எதிர்க்க விரும்பாத அகிம்சைவாதி.
புதுக்குதலாய்ப் (அலங்கரித்தல்) பேணுவார் பணக்காரர்.
சூரியக்கதிர் சூறாவளி மழையும்
தூவென்று ஒதுக்காத தூயமனதில்
சூரியக்கதிர் அளவாய் விழுந்தால்
சூனியமாகாது சூரனாய் எழுவார்.

சூறாவளிக்கும் பயந்து ஓடாத
சூதுவாதற்ற மௌனி புற்தரையார்.
தலைசாயோம் என்பவர்களிற்கு அதுவே
விலையாகும் இவர்களின் தரிசனம்.
பூக்களிடையில் புற்கள் கோலமாகும்.
பூமாதேவியின் பச்சை ரோமங்களா!
பூமாதேவியின் அழகுக் கூந்தலின்
பூணாரமா! (அணிகலன்) நடத்துங்கள்! பட்டிமன்றம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-11-2014

Nyt billede

Previous Older Entries Next Newer Entries