58. அருவி

800px-Iguazu_Décembre_2007_-_Panorama_7

 அருவி

அரு – ஒர் உருவம் அற்றது.
வி – மிகுதி, மாறுபாடு, அழகு.
அருவி –ஒர் உருவமற்ற அழகு.
கருவி இது சிறந்த இயற்கைக்கு.
மருவி மலையால் வீழ்தல் வசீகரம்.
திருவினையாற் பெறலாம் ஆரோக்கியச் சுவாசம்.
வெருவும் இதன் ஆர்ப்பரிப்பும் வீழ்தலும்.
நருவிசாகவும் ஆர்ப்பரிப்பாகவும் பல சொரூபங்கள்.

(திருவினை – நல்வினை. வெருவும் – அச்சம். நருவிசாக –நாகரீகமாக)

அருவியாய் விழும் அன்புப் பேச்சு
சுருதியாய் இதயத்துள் நுழைவது நீச்சு.
பெருமை உற்பத்தி மின்சாரம் ஆச்சு.
செருகும் கற்பனை, ஏறும் கவிமூச்சு.
அருவி நீளம் பாயும் வீராங்கனை – வீரன்.
தருக்குடை அருவி அகப்பட்டது சுருட்டும்.
நிருத்தமுடை நீர் மூலிகைகள் கழுவியாடும்
தரும் ஆனந்தக் குளிப்பு உடலாரோக்கியம்.

(நீச்சு – நீந்தல். செருகும் – சிக்கும். நிருத்தமிடும் – நடனம்)

உன்னத இயற்கையின் கவிதை அருவி.
கண்ணாடிப் பளிங்கு நீர்ப் பாலருவி.
எண்ணற்றோர் எழுதிப் பாடி ஆடுகிறார்.
என்ன ராகம்! தாளம்! வசப்படுத்துகிறாய்!.
உன் தரிசனம் மயங்குகிறேனெனை மறக்கிறேன்.
சின்னக் குழந்தை மலையூற்றுக் காடாடிப்
பென்னம்பெரிய பேரருவியாகிப் பின்
என்ன மாதிரிக் கடலில் சங்கமம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-11-2014.

T 11-11-2014

imagesCAX5K52V

57. மழைத்தானம்.

rainforest

மழைத்தானம்.

வானம் பொத்தலாகிப் பொழியும் நீரை
தானமா யெமக்கு வானமே தருகிறதோ!
குழை கழுவி நீ கும்மியடிக்கிறாய்!
மழையே மழையே மகிழ்ந்து வருவாய்!
வெட்டவெளித் தூசி கழுவிக்
கிட்டே வா கடதாசிக் கப்பலிட!

விண்ணிலிருந்தி வழுவி நிலம் நாடும்
மண்ணிற் கொரு மணம் கூடும்.
கண்கள் கழுவிக் குளிர்மை தரும்
மழை, களைப்புப் போக்க நிலத்திற்கு
இழையிடும் – நீரினால் புத்துணர்வுச் சேதிக்கு
அழைப்பிடும், உடலுள உற்சாகத்திற்கும்.

றுக மூடிய வீட்டினுள் இன்பமாய்
இழுத்துப் போர்த்தித் துயிலலாம் வருவாய்!
உழவ னுள்ளம் உவகை யுணருது!
கிழவர்கள் குமரராய் ரசிக்கிறார் மகிழ்ந்து!
மழையில் நனைய மழலைகள் துடிக்கிறார்!
மதா பிதாவினர் தடுத்தாட் கொள்கிறார்!

த்தளம் கொட்டி மின்னலோடு வந்து
கைத்தலம் பற்றுவாய் பூமாதேவியை!
மின்னல் இடியால் மொத்த சீவன்களை
என்னமாய்க் கலக்குவாய்! அம்மம்மா பயங்கரம்!
அளவற்ற உன் பெருக்கினால் ஐயகோ!
அல்லோகல்லோலம் வெகு தாழ்வு இடங்களில்!

முதல் மழையில் நனையாதே! நனையாதே!
மூக்குச் சிந்தும் அவதி அவதி!
முக்காலமும் அம்மாவின் கார உரை.
அழகு மழையை ஆசைதீர ரசித்தேன்
அழகு வெள்ள நீரோட்டமங்கு தான்
அப்பப்பாவின் நாற்சார வீட்டில் தான்!

பா ஆக்கம்
பா வானதி வேதா இலங்காதிலகம்
டென்மார்க்.
23-10-2014.

மழை பற்றிய மேலும் எனது 3 இணைப்புகள் கீழே…
1.https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

2.https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

3.https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/

imagesCAX5K52V

56. இயற்கையினிமை.

10420273_1424845334447534_5618955619808144416_n

இயற்கையினிமை.

இதயத்தமைதி வேண்டி இயற்கையை நாடினால்
உதய சூரியனும் அந்திச்சந்திர ஒளிக்குளிர்மையும்
மதிய வெயில் ஒளியும் மனதிற்கிதமாகும் இயற்கை
நிதியம் என்ற மனப்பதிவு கண்களிற்குத் தக்க தரிசனம்.

இளங்கொடி யசைவில் ஓயாதிழைந்து பேசும்
இளந் தென்றலினிமைச் சுகமிதயத்திற்குத் தரும்
வளம் அளப்பரிய அற்புத உள உடல்நலச் சஞ்சீவி.
விளம்புதலற்ற விசால அனுபவம் வெகு சுகம் சுகம்.

அளப்பரிய அற்புத வானவில்லனுபவம் ஆழ்மனதிற்கிதம்.
இளம்பிறை அழகொளி நீலவான் பின்னணியில்
தளம் பதித்தென் மனக்குளத்தைப் பளிங்கு நீராக்கி
குளப்பம் நீக்கி நற்குணம் தருமமுத அனுபவம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-10-2014

imagesCACSXL03

55. நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

எத்தனை பசுமையாய் இருந்த மரம்
அத்தனை இலைகளும் உதிர்ந்து சிரம்
சுத்தமாய் வழித்ததாய் ஒரு தோற்றம்.
மொத்தமாய் உயிரில்லை என ஏற்கும்
அழகில்லை எனும் ஒரு சகுனம்
அர்த்தம் நிறைந்த ஒரு மௌனம்.
imagesCAK4MBNM

ஒரு ஏக்கநிலைத் தேக்கம்
சிறு காத்திருப்புத் தாக்கம்
கலையின் மாறுபட்ட அலகு
இலையுதிர் காலத்து அழகு
நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.
வெம்பி மனம் வேகாத மாட்சி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-11-2003.

straight line

54. மழைக் கவிதை

rain-28

*

மழைக் கவிதை

*

நீர் கொண்ட மேகம் பெரும்
போர் செய்யச் செய்ய
வாளும் வேலும் உரசலின் கடுமையோ
மூளும் மின்னல் தெறிப்பு!

*

மானம் ரோசம் பீறித் தானோ
வானம் பெரிதாய் அழுவது!
உன்னாலும் நிறுத்த முடியாததென்றும்
என்னாலும் முடியாதது மழை.

*

பிரபஞ்சம் நனைத்து மணகரைத்து
அரசாங்கம் நடத்தும் மழை.
மனம் நனைத்து வயல் நனைத்துத்
தனம் தரும் மழை.

*

தடல் மேலொரு கவிதையொரு
திடல் மேலொரு கவிதை.
இலை மேலொரு கவிதை நற்
கலை இம்மழைக்கவிதை.

*

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்
14-12-2013.

*

கோடை மழை.

*

கோடை மழை பாலைவனச் சோலை.
குளிர்கழி (ஐஸ்) சுவைக்கும் உணர்வு நிலை.
பிரிந்த காதலர் சேரும் நிலை
பட்டினியாளனுக்கு எச்சிலிலையும் கோடை மழை.

*

தாயைப் பிரிந்த மழலைக்கு வரவாம்
தாயின் அணைப்பு கோடை மழையாம்.
விளைந்த வயலிற்குச் சொரியும் குளிர்மைக்
கோடை மழை கொடுமையிலும் கொடுமை.

*

வெப்பத்தில் பொழியும் மழை நோய்களை
செப்பமாய் காவி வரும் தொல்லை.
குளங்களின் நீர் மட்டம் உயரும்.
வளங்கள் பெருக நல் வாய்ப்பாகும்

*

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
15-5-2016.

*

In FB:

Samme  karu…rain  –     another poem mine –        https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

another   samme  :-     https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/   

16161859-

53. சத்தமிடா நித்தியங்கள்.

Rain1

 

சத்தமிடா நித்தியங்கள்.

 

 

மழை நீரிலழுந்தும் தவளையின் இரவு ராகம்

குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்

சளைக்காது கீச்சிடும் இராப்பூச்சி ரீங்காரம்

குழைந்து கலந்த சேற்று மண்வாசம்….

இழைந்து மனதில் இனிமையாய் ஆடும்.

நெல்லிக் கனியாய் ஆழச்சுவை ஊடாடும்

சொல்லி விளங்காத ஏக்க நிலை கூடும்.

அள்ளி அனுபவித்த மனம் மிக வாடும்.

உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

27-7-2001.

bar line

52. நித்திய நிரந்தரங்கள்.

bullock_cart

நித்திய நிரந்தரங்கள்.

 

 

விடிகாலை ஓசை ஆரவாரங்கள்

          துடிப்பான புலர்தல் அலங்காரங்கள்

புதுக்காலை இயற்கை அலாரங்கள்.

           எக்காலையு மிவைகள் நிரந்தரங்கள்.

மாட்டு வண்டிச் சப்தம்,

            ஆட்டும் சலங்கைச் சப்தம்,

ஓட்டும் வேகக்  குலுங்கல்

             கேட்டுத் தூக்கம் அலுக்கும்.

 

ஓடிடும் முதற் பேருந்து

             ஊடும் பெருமூச்சு விருந்து.

ஆலயமணியின் காலை ஆலாபனை

             ஆன்மாவின் ஆலிங்கன அருச்சனை!

மாமரத்துக் குடை முன்றில்

              சாமரம் வீசும் இளந்தென்றல்

பாசுரமாக்கும் சுகம் என்றும்.

              நாதசுரமாக்கும் புதுக்காலை மன்றில்.

 

இலுப்பைக்கனி மாங்கனிகளை வெளவால்

              பழுக்கக்கொத்தும் பாங்கின் எக்காளம்,

கிளுகிளுத்த கும்மாளம்  மௌனத்திரை

              கிழிக்கும் ரௌம்மிய இசைத் தட்டாய்!

சேவல் கூவும் இராகமுலகை

               ஏவல் செய்வது காலையிளமை!

சேவல் காலைக்காவற் பறவை!

               மேவுமிவை அதிகாலைப் பெருமை!

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

17-1- 2003-   ரி.ஆர். ரி தமிழ்அலையில்

2006   இலண்டன் தமிழ் வானொலியில்

 

(முன்றில் – வீட்டின் முன்புறம்.  முன்றில் – வாயில் முற்றம்.)

 

M 1

 

 

51. அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

vector drawing

அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

 

 

கதிரவன் கதிர் விரித்து

அதிகம் சிரிக்கிறா னருமையிது.

எதிர் கொள்வோ ரனைவரும்

அதிரசமுண்பதாயப்; பெரும்

குதிகொள்கிறார் குதிரை நடையில்.

 

பனியில் நனைந்து உணர்வுகள்

பனிக்கட்டியாகு மனுபவம் தினமும்

டெனிஸ் வாழ்வில் காண்பதால்

முனிவு தவிர்க்கிறது மனதில்

இனிக்கும் காதிரவன் கதிர்.

 

நல்ல கோடை வந்ததாம்

பொல்லாப் பனிக்காலம்

நில்லாது வருவ துறுதியாம்!

சொல்லாமற் சொல்கிறார் சோதிடம்

எல்லவன் கதிர் விரிக்கட்டும்!

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23-8-2013.

 

(குதிரைநடை – கம்பீர நடை, பெருமிதநடை. எல்லவன் – சூரியன்.   முனிவு – சினம்)

 

 

 

 

0032

 

 

50. சிந்தும் முத்தம்…

550081_341251529323979_775776062_n

சிந்தும் முத்தம்…

இந்திர நீல முழுமை இரவில்

சந்திர முத்தம் ஆகாய நுதலில்.

சுந்தரக் கதிரவன் பகல் முழுவதில்

அந்தர முத்தம் ஆகாயம் பூமியில்.

அந்தி பகலில் தாரகைத் தேவதைகள்

தந்த முத்தம் எந்தச் சந்தில்!

காந்தப் பூமி உருண்டு சுழன்று

பாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ!

இயந்திர சரசம் மாநிலம் முழுதும்

தந்திர சரசம் மானுடம் முழுதும்

உந்திக் குதித்து இதயக் கேந்திரத்தில்

குந்துதே இந்த மனச் (உணர்வுச்) சிந்து.

விந்தையெனக் கெந்து மிந்த உந்தல்

சந்தமோ வெறும் மந்தமோ அறியேன்.

விந்தைச் சிந்தையில் சிந்திய பந்தல்

பிந்தாது குந்தட்டும் மனப் பொந்திலே.

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-8-2013.

12720-22coloured

 

49. மலைக்குழந்தை.

tibet

மலைக்குழந்தை.

 

 

நதி தானே தனக்கும்

குதித்து வழி சமைக்கும்.

சுதியுடன் கரை சமைக்கும்.

குதித்தோடும் நீர்ப் பாலம்.

நதி மலையின் தூதாம்.

 

வித்தையாடும் நீரின்  சலசலப்பு

தத்தோமென ஓடும் வியப்பு.

பொத்தெனப் பாய்தலும் மலைப்பு.

பொத்தவியலா அழகுச் சிரிப்பு.

தித்திக்கும் காட்சி வனப்பு.

 

ஆவினப் பால் நுரையாடை

மீனினம் நிறையோடை.

மானினம் நீரருந்து மோடை.

மானிட நாகரீக வாடை

மேனிலைக்கு வளர்த்த ஓடை.

 

மலையரசன் பட்டுச் சால்வையாம்

வனப்பெண் காற்சலங்கையாம்.

அலைச்சடுகுடு ஆடும் தெய்வீகம்.

விலையிலாக் கலைநிகர் கங்கை.

பூமிமார்பினற்புதப் புத்தோவியம்.

 

எத்தனை ஆச்சரிய முலகின்

அத்தனை உயிர்களிற்கும் வாழ்வீயும்

தத்துவப் பிறப்பு நதி

சத்துடை பன்முகப் பரிணாம

வித்துடை மலைக் குழந்தையே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-7-2013.

(சுதி – இசைச் சுருதி)

(இக் கவிதை 9-7-2013 செவ்வாய்க் கிழமை மாலை (19.00-20.00) ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில்

கவிதை பாடும் நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

bar6_anm

Previous Older Entries Next Newer Entries