37. நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

602082_585271648167116_116299475_nl

நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

வாழையடி வாழையாக வந்த தமிழ்
பேழையுள் முத்தாகப் போற்றிய தமிழ்
மாலையோடு மேடையென வளர்ந்த தமிழ்
சாலையில் பாலனாக பீதியில் தமிழ்
ஏழையெனப் புலம்பெயர் சாலையில்
நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்.
பட்டுத் தமிழ் அழியுமொவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மன உளைச்சல்.

பட்டி மன்றங்களாய் நீட்டி நீட்டித் தமிழ்
தொட்டுத் தொட்டுத் தமிழ்க் கருத்தாடல்கள்
விருப்போடு கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தமிழ்
கருத்தோடு இங்கு நிலைத்திடத் தமிழ்
பனுவல் எழுதியும் பல பாணியில் தமிழ்
கூனுதலின்றித் தினுசுதினுசுhகத் தீந்தமிழ்
அனுதினம் வீழ்த்துங்கள் காதினில் தமிழ்!
மனுமக்கள் உதட்டினில் ஏந்துங்கள் தமிழ்!.

முழவு கொட்ட முருகாயிருந்த தமிழ்
முழுமையாய் அழியாது ஆய்வு செய்யுங்கள்!
வாழையடி வாழையான தாயகத் தமிழ் காக்க
வாரிசுகளுடன் தினம் வார்த்தைப் போர்!
புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
புரவலர் பெற்றோர் குழந்தைகளும் போர்!
பாய் விரியுங்கள் பரப்புங்கள் தமிழை!
சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமிழ்!.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2003

(அன்று 2003 ல் தமிழ் இருந்த நிலையில் எழுதிய கவிதை.
இரிபிசி இலண்டன் ரைம் வானொலியில் வாசித்தேன்.
20-1-2004ல: ரிஆர்ரி தமிழலை வானொலி கவிதை பாடுவோமிலும் வாசித்தேன்.)

green-line-2

36. புலமைத் தமிழ் பிரியட்டும்.

viewer-5-4 mm

புலமைத் தமிழ் பிரியட்டும்.

வான மழையாய்த் தமிழ்க்கொடை புவியில்

தானமாகிறது முல்லை மணமாக.

கம்பன் ஒளவைக் கவி உறவுகளாய்

கவிஞர்கள், கவிதாயினிகள் உலகில்.

தன் மொழியோடு உறவாடுதல் இனிமை

இன்னொரு (மொழி) வகையறிதல் பேரினிமை.

வித்தியாச வரிகளின் நளினங்கள் அறிதல்

உத்தியாகும் உயரும் ஏணியாய்.

பல் கவித்துவம் மொழியாடல் புதுமை

பகிர்தல் உணர்தலிற்றான் விலகுகிறார்.

துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்

புலமைத் தமிழ் பிரியும்.

தமிழென அற்ப வரிகளின்றி வீரியக்

குமிழாக ஆழ்ந்து அகலட்டும்!

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க் – 27-11-2014.

EMBDESIGNTUBE (2)

 

35…பிழையறு!

2088870-12299-frame-of-fresh-fruits-and-berries-ææ

இதை இங்கு வாசித்தேன்.
அதை தங்களுடனும் பகிர்கிறேன்.
படவரிகளை நான் எழுதினேன்.
அது பற்றி வாசிக்கத் தேடிய போது இது கிடைத்தது.
அனுபவியுங்கள்.

http://selvamperumal.blogspot.dk/2011/11/pgsr-bahasa-tamil.html……

மொழிச் சிதைவை களையும் வழிமுறைகள் 

1.   தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தமிழாசிரியர்கள் மொழிப்பற்றினை தமிழ் மாணாக்கர்களிடம் விதைக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் பயிலாமல் தமிழ் மொழியைப் பிழையற பேசும் வண்ணம் புதிய குமுகாயம் இந் நாட்டில் உருவாக வேண்டும். தமிழ் மொழியின் தூய்மையான பேச்சைக் கேட்டு அனனத்து தமிழ் மக்களும் தமிழ் மொழியின் இனிமையை தங்கள் குழந்தைகள் அறிய முனைப்பு காட்ட வேண்டும். தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும். தமிழ் மொழி தன் ஊடே கொண்டிருக்கும் அற்புதங்களையும் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ‘எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ எனும் திருமொழியை தமிழ் இனம் உணர தமிழாசிரியர்கள் பெரிதும் பங்காற்ற வேண்டும். மொழி அழிந்தால் இந்நாட்டில் தமிழ் இனம், கலை, கலாச்சாரம் அழியும் எனும் உணர்வை அனைவரும் உணர மொழிச்சிதைவைக் கண்டித்து தமிழாசிரியர்கள் ஊடகங்களில் கண்டணங்களைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த படைப்புகள் தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும், தமிழ் இணைய தளங்களிலும் உலா வர அதிக நாட்டமுடையவர்களாக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். செந்தமிழின் சிறப்புகளையும் தூய தமிழ் படைப்புகளையும் அனைவரும் கற்றுக் கொள்ள வழி வகுக்க வேண்டும். தூய தமிழில் அனைவரும் பேசும் முறையினை அறிமுகம் செய்திடல் வேண்டும்.  தமிழர்களிடையே தூய தமிழ் மொழிப் பற்றினை ஓங்கச் செய்வது தமிழாசிரியர்களின் தலையாய கடமையாகும்.  
  
2.   தமிழினம் மொழிச் சிதைவை உணராமல் கொடுந்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பகட்டான தமிழ் இனம் இந் நாட்டில் வாழ்ந்து பாடையிலேறும் முன் பண்பட்ட தமிழினமாக, மொழி வளம் கொண்டவர்களாக வாழ்ந்து வீழ்வது உத்தமம் எனும் நிலையை அடைய வேண்டும். இனமானம் கொண்ட குமுகாயம் மலர வேற்று மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மோகமுடைய மனப்போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். செம்மொழிஎன்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்கவேண்டுமென்றால் தூய  தமிழில் தமிழ் படித்தவர்கள் தமிழில் பேச வேண்டும். இந்நிலை நீடித்தால்செம்மொழியாகிய தமிழ், காலப்போக்கில் இலக்கியவழக்கில் தனித் தமிழாகவும் பேச்சு வழக்கில்கலப்புமொழியாகவும் மாறித் தன் தனித்தன்மையைஇழந்துவிடும் என்பதை தமிழ் படித்தவர்களாவது உணர வேண்டும். …..(தொடர்கிறது……)……  

வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-10-2014

lotus-border

34. தமிழ் வல்லாண்மை.

10494665_683233265086101_5352445299418082750_nff

தமிழ் வல்லாண்மை.

நறுமணத்தால் தன்னை அடையாளம் காட்டும் மல்லிகை.
பெறுமதி வரிகளால் சிம்மாசனமிடுவது தமிழ் வல்லமை.
வரிகளின் சுடரில் வையகம் பார்க்கும் சொல்லமைவு
வரிகளால் கவிஞன் தனக்காய் கவி இருக்கை செய்வான்.

விருப்பாய் மகிழ்வாய் மனம் தழுவி விரியும்
அருவருப்பில்லாத் தென்றல் இணையும் இன் வரிகள்
உருத்தாய் நர்த்தனமாடும் நங்கையின் நளின அழகாய்
கருத்தைக் கவர்ந்து கரும்பு பிழிந்த சாறாய்த்தமிழ்.

ஈன்ற பொழுதிருந்து மனிதமனம் மகா சமுத்திரம்.
தோன்றிடும் இலக்கண நோய்க்கு மருந்து இலக்கியம்.
ஆன்றோர் தமிழ் மனதைத் தொட்டுத் தூக்கிடும்.
ஊன்றிடும் காகித வயலில் எழுத்து விதைகள்.

புலவர் மரபுகள் புறம் தள்ளியும் இலக்கியக் களிரேறுவார்
பலமுகப் பரிமாணங்கள் தமிழ்ப் பாலருந்திக் காட்டுவார்.
அலசலாம் குறும்தொகை மொழியை தமிழ்வேர் ஆழந்தொட்டு
விலங்கிட்டுத் தோளேறி விரலால் புத்துலக வாயில் காட்டலாம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2014.

Nyt billede

33. வேரோடட்டும்……

kananyuu

 

வேரோடட்டும்……

பூக்காட்டில் புகுந்து
நோக்காடின்றி உலாவ
சாக்காடும் நகர்ந்திடும்.
பூக்கூடை மனதில்
பூக்கும் கவிகள்
பூவாசமாய்க் கொட்டட்டும்!
பூங்காற்றும் இன்கவிப்
பூக்களை விசிறட்டும்.

பூவிதையான தமிழ்ப்
பாவிதை முளைக்கக்
கவிதை செய்கிறேன்.
கவித்துவம் பவித்திரம்!
நவியம் விவிதம்!
பவிகம் சிலிர்ப்பை
நவிலுங்கள் நாளும்
நானும் உயர்ந்திட!

ணர்வை உள்ளதைப்
புணர்கிறது தமிழ்.
உணர்த்துகிறேனுள்ளபடி
உயிராகச் சுமந்து.
வானத்து நிலவாக
வையகத்திலொளிர
நானேத்தும் கவி
வேரோடட்டுமுள்ளங்களில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-9-2014
(நவியம் -புதுமை. விவிதம் -பலவிதம். பவிகம் – சிறப்பு.)

 

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

32. மொழி.

big_conch2-kl

மொழி.

மொழியொரு சமூகக் கருவி.
வாய்மொழிப் பாடல் பழமொழிகளென
படங்கு விரிப்பு ஏராளம்.
சடங்குப் பாடல்கள் பண்பாட்டின்
தடங்களில்லா அற்புதக் கையளிப்பு.

வாடலற்ற மொழியின் அழகியல்
ஆடல், நாடகம், இலக்கியம்
பாடல், பண்பாடு, அறிவு,
ஆன்மீகம், அனுபவ அலசல்கள்.
ஆதனம் தேசியம் கட்டியெழுப்ப.

தேசிய வரலாற்றுத் தொடர்பு
தேசிய முன்னேற்றம் உருவாக்கும்
ஆசி நிறைந்தது மொழி.
ஓசைகளினொரு வடிவம் மொழி
கருத்துப் பரிமாற்றச் சாதனம்.

உணர்வு சிந்தனைப் பரிமாற்ற
உருவிற்கு மொழி பாலம்.
நாகரிக நாகர்வின் கடையாணி.
சேகரிக்கவும் பண்பாட்டை அழிக்கவும்
மீகாமனாவது மொழிச் செங்கோல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-8-2014.

T  23.9.2014.

green line-2

31. கொள்முதலில்லாக் கொடை

 

537604_4574824085833_1364190056_n-aaa

கொள்முதலில்லாக் கொடை

 

எடுத்துக்காட்டான எம் எழிலுடைத் தமிழே
எடுத்தாட்சி வழக்கின் எடுப்பான தமிழே
எடுத்தெறியாப் பண்போடு எடுத்தேற்றி யெழுதுங்கள்.
எடுத்தெழுதுங்கள் எழுத்துப் பிழையற

 

தன்னிகரில்லாத் தமிழே! அமுதின் உயர்வே!
தன்மானம் காக்கும் தகவுடைத் தமிழே
முன்னோர்கள் முயன்று வளர்த்திட்ட தமிழே
முன்னோடித் தமிழின் முன்னேற்றம் உயர்வே!

 

இலக்கிய இலக்கணம் இறைந்த தமிழே
இலக்கமற்ற பாக்கள் நிறைந்த தமிழே
இலங்கும் கருத்தாழம் சொல்லழகு நிறைவே
இலயிக்கும் இலாகிரி குறைவிலாத் தமிழே

 

பொருளாழம் பொன்னின் நிகருடை எழிலே!
சொல்லாழம் உலகோர் சொக்கும் தரமே!
சுவையாழச் சுவை சுகமான சுமை.
சுவையணியும் பன்னூறு நிறை தமிழே!

 

கொள்ளையின்பக் கொழுந்து விரித்த தமிழ்
கொள்ளையடிக்கும் பூந்தாது கொழித்த தமிழ்
கொள்ளுப் பூட்டனிற்கும் மூத்த தமிழ்.
கொள்முதலில்லாக் கொடை கொற்றத் தமிழ்!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-7-2014

 

green line-2

30. இலக்கியத் தமிழ் வளவு.

Elkkiya......

இலக்கியத் தமிழ் வளவு.

பசும்பாலைப் பக்குவமாய்க் காய்ச்சிப் பின்
பதமாய் ஆறிடப் பிரை சேர்க்கின்
பாகமாகும் தயிர் கடைந்து வெண்ணெயாக்கும்
பாங்கு நல்லிலக்கியத் தமிழ் வளவு.

நூற்திரிகளின் திரிப்பு கயிறெனும் பிறப்பு.
நுட்ப மனப்பகுப்பால் இலக்கியப் பிறப்பு.
நூலறிவின் நுணுக்க அலசல் விரிப்பு.
நுகர்ந்த அறிவுணர்வின் மூத்தோர் தொகுப்பு.

வாழ்வினால் பிறக்கும், வாழ்வை வளமாக்கும்
வானுயர் சிந்தனையால் மனம் பண்படும்.
அறிவு, உணர்வை ஆளுமையாக்கும் இலக்கியம்.
அரும்பொருட் சொல்லோசை நயமிகு இலக்கியம்.

உள்ளதை மனம் உணர்ந்து மொழியும்.
உள்ளங் கவரும் சொல்லழகு ரதம்.
பள்ளம் மேடு பாயுமகண்ட நீரோட்டம்.
உள்ளபடி இயங்கும் மானுட அறிவாயுதம்.

குமுகாயம் சீராக்கும் ஓரின அறிவாயுதம்.
குமுகாய நெளிவைத் தட்டித் தட்டி
குறை தீர்க்கும் மொழிச் செயற்பாடு.
குணம்தரு மிலக்கியத் தமிழ் வளவு.

(குமுகாயம் -சமூகம். பிரை – உறை மோர்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-1-2004.

pachchai line

29. தமிழ்த்தேன்

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்த்தேன்  

 

அளைந்தேன் இலக்கியத் தேன்

அரும் தேன் மலைத்தேன்.

தமிழ்த்தேன் ரசித்தேன் மலர்ந்தேன்.

களித்தேன் இது மலைத் தேன்.

இசைந்தேன் மனதில் எடுத்தேன்

இணைந்தேன் இனிதாய் சுவைத்தேன்.

கோர்த்தேன் சிந்தாது வரைந்தேன்.

எழிற்தேன் பதித்தேன் செழித்தேன்.

எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

10-9-2013.

green line-2

28. என் தமிழ்.

thammmiil

படி!..படி!…

முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

சொத்தையின்றி ஊன்றிப் படி!

முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

எந்நூறையும் ஒதுக்கிப் படி!

 பண்டைத் தமிழாம் சங்கத் தமிழடி

தோண்டு! வேளையின்றிப் படி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
13-7-2013.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

green line-2

Previous Older Entries Next Newer Entries