36. தொலைந்தது மீண்டும் வந்தது…

12039676_698210246980112_4955103489819450402_n

*

தொலைந்தது மீண்டும் வந்தது…

*

காலப்பஞ்சுப் பொதியில் தீப்பிடித்து
நிர்மூலமான வீடுகள், காணிகள் புத்துருவானதென்று
உயிர் பிழியப்பட்ட மனம் அடங்கலாம்.
உருக்குலைந்த குடும்பமினித் திரும்புமோ!

*

ஆடிக்காற்றாய் அலைந்த தமிழர் மனம்
தேடியுறவுகளை அலைந்து பெருமூச்சிடும் மனம்
தொலைந்தது மீண்டும் வந்தது என்று
குதூகலித்துக் கொண்டாடுமோ ஒரு நாள்!

*

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-12-2010  வார்ப்பு. கொம் படமும் வரிகளில் அன்று எழுதியது.

veedu

35 தாய் நிலம்

 

mullu

 

scann-1

(.கடைசி மறைந்த வரிகள்.)   நடந்த  போராட்டத்தாலெழுந்த   முட்கம்பி  வேலியது

27- 10- 2009 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் வாசித்த கவிதையிது.
எங்கோ மறைந்திருந்து தூசி தட்டிய போது கண்டேன்.
பதித்து ஆவணமாக்கலாமென பதிவிட்டேன்.

ஒரு    படம்   தேடலாமென் இதே தலைப்பைக் கொடுத்த போது
இன்னும் மினுக்கமாக அன்று வார்ப்பு .கொம் க்கு
நான் எழுதிய கவிதை கண்டேன் இதோ அது

அந்த ஒரு நாள்..

பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரமாகத் தம்பட்டம் அடிபடுகிறதே,
தீந்தமிழே இதைக் கேட்டால் வெட்கமுறும்!

எரிகுண்டு, நச்சுவாயு வீசி மக்களை
மரிக்கவைத்த அந்த ஒரு நாள்,
பெரிசும்சிறிசுமாய் இருபதினாயிரத்திற்கும் மேலான
அரிய உயிர்களை எடுத்தது அன்பின்வாதமா!

தினம் ஆள்கடத்தல், வன்புணர்ச்சிகளின்
கனம், கொள்ளையடிப்பு, அகிம்சைவாதமா!
அரசதீவிரவாதம், அரசபயங்கரவாதம்
உரசாத பரவச ஆட்சியா நடக்கிறது!

அந்து ஒரு நாள் மட்டுமல்ல
வந்த பல தசாப்தங்களாக நம்மைக்
கடந்த இனவாதக் கொடுமைகளையடக்க
நடந்த போராட்டத்தாலெழுந்த முட்கம்பி வேலியது!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-10-09

இணைப்பும் தருகிறேன்.  http://www.vaarppu.com/padam_varikal.php?id=44

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-4-2017

gate line

34. அந்தநாள் ஞாபகம்

11990538_10206567470802683_1246651914165505259_n (1)

அந்தநாள் ஞாபகம்

பனை வளவில் அப்பாவுடன்
பனம் பாத்தி அமைத்ததும்
பல கதைகள் பேசியதும்
பசுமை நினைவுகள் அழியாதது…

அதி காலையில் எழுந்து
அணில் கொறித்த மாங்காய்கள்
அந்த மரத்தின் கீழ்
அவசரமாய்ப் பொறுக்கியது அழியவில்லை…

சிறு ஆணியடித்து கம்பிணைத்து
சின்னத் தகரம் சில்லாக
சிறு தள்ளு வண்டியென
சிற்றடி நடந்தது அழியாதது.

சனிக்கிழமை காலை மாமிமாருக்கு
சங்கீத வகுப்பெடுக்க வருவார்
சங்கீத வாத்தியார் சாம்பசிவம்
இங்கிதமாய் அருகிருந்து இதயத்திலெடுத்ததுவும்

பெற்றவர் சகோதர அன்பு
பெருமையாய் வாழ்ந்த வீடு
அருமைத் தாய்நாடு அத்தனையும்
ஒரு புலம்பெயர்வால் மறக்குமா!

அந்த நாள் ஞாபகம்
எந்த நாளும் மறக்காதது.
இந்த வாழ்விற்கு வளமூட்டும்
சந்தன அட்சயபாத்திரம்! கிரியாஊக்கி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2015

panai-2

 

 

33. அந்த மாமரம்

sathas-first-0071

அந்த மாமரம்

அந்த மாமரம் அன்று
சொந்த மாமரம் எமக்கு.
தந்த நிழற் குடையில்
குந்தப் பாய் விரித்த
முந்தை அனுபவம் இது
சந்தமாய் நெஞ்சில் பாயுது.
வாழ்வூக்கிய பால பருவ
வான் நோக்கிய மாமரம்.

புல் வெட்டிப் பசுந்தாக
கல் பொறுக்கிச் சுத்தமாக
சருகுகள் கூட்டி அள்ளி
ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
அருமையாய் அப்பா சகோதரங்களுடன்
ஒருத்து அனுபவித்த வசந்தம்
பெருமையான மாலைப் பொழுதுகள்
கருமையற்ற மனமினித்த காலங்கள்.

தேன் சுவையான மாம்பழம்
பென்னம் பெரிய மாம்பழம்
இன்று நினைத்தாலும் ஏக்கம்1
மாலைத் தென்றல் பெரும்
சாலையெனப் புகுந்து விளையாடி
வாலையாட்டிச் சாமரம் வீசியது
ஊஞ்சல் கட்டி ஆடி
உறவாடிய பசும் கொற்றக்குடை

பெரிய கல்லோ ஒரு
பெரிய வேரின் புடைப்பையோ
சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
சிரித்து ரசித்த ரசனை
சிந்தை நிறைந்து வழிகிறது
கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-5-2015.

service_treespowerlines_transrightofway_med

32. ஈழம்

ceylon1601

ஈண்டுள்ளது அகராதியில் இலங்கை

ஈழநாடு, ஈழமண்டலம் என்றாக.

ஈழம் என்பது புதிதல்ல!

ஆழம் கொண்ட உணர்வல்லோ!

ஆதியில் வழங்கிய பெயரல்லோ!

மோதி அல்லாடுகிறோம் இன்று.

அசைக்க முடியாத நம்பிக்கையின்

விசையில் பலர் இயங்குகிறார்.

ஈந்தது பல்லுயிர் பலிகளும்

ஈடில்லா இழப்புகளும் ஏராளம்.

ஈரவிழி காயாதோர் பலர்.

ஈடாட்டம் காணும் போராட்டங்களும்

ஈர்த்திடும் போராட்டங்களும் ஓயவில்லை.

ஈசுவர சித்தம் எதுவோ

!ஈட்டுப் பத்திரமாய் மக்கள் 

ஈடழிதல் மாற வேண்டும்

 

 

திசையறியா முடிவறியும் பயணமிது.

இசைவோடு ஈழமாகுமா கேள்வியது

ஈழம் இல்லை என்றும்

ஈயோம் என்று எதிரணியாரும்

ஈப்பிணியாய்க் காதிலூற்றுகிறார் ஈயம்.

ஈரப்பாடு இல்லா இடத்தில்

ஈழம் அமைவது கேள்வியாய்

ஈழம் சொல்லாகுமா செயலாகுமா!

 

பா ஆக்கம்

வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ்.

7-3-2015

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

31. ஆராத ஆசை

580989_130759073731917_932147182_n

ஆராத ஆசை

 

ஊரான பிறந்த ஊரை

யாராலே மறக்க முடியும்!

ஆராத ஆசையங்கு

சீராட எம்முறவுகளோடு.

 

வேராகவிருந்த பல

ஏராளம் உறவுகள் இன்று

ஊராள உலகில் இல்லை

சீராட முடியா நிலை.

 

தோராயம் கொண்ட ஆசை

நேராதல் கடும் சிரமம்.

பேராசையென்பதில்லை.

தீராது இந்த ஆசை.

 

(தோராயம் – எதிர்பார்ப்பு.  நேராதல் -சரியாதல்.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-9-2013.

 

 

chainborder

30. கோவை (கோப்பாய்) அம்மன்.

OLYMPUS DIGITAL CAMERA

கோவை அம்மன்.

ளம் காற்று வீசும் வயலோரம்

இதமாக ஆலமர நிழல் தரும்.

இருப்பிடம் முத்துமாரியம்மன் தலம்.

இனிய பால நினைவுகளேந்தி வரும்.

அலரிப் பூக்கன்றுகள் ஆலய வீதியில்

அடர்ந்த நிழலிற்குத் தென்னை மரங்கள்

படர்ந்த அன்றைய பழமைக் காட்சிகள்

தொடர்வதில்லை யெதுவும் கால மாற்றம்.

ட்டு நினைவுகள் பக்தி ரசத்தோடும்

கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்

கேட்டுப் படித்தோம் பல திருப்பதிகம்.

விட்டு விலகாத நினைவுப் படம்.

உறவுகள் சகோதரர் ஒன்று கூடினோம்.

உறவினை அம்மனோடு இறுகப் பிணைத்தோம்.

உறவும் பிரிவுமாய் வாழ்வு கடக்கிறது.

உறவு அம்மனோடு கோபதாபம் கொண்டது.

விரிபுவி மாந்தருக்கு அருளும் தேவி

விரி புகழ் முத்துமாரியம்மன் தாயி.

சரியாப் புகழுடைய கோப்பாய்(கோவை) மத்தியம்மன்

விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-1-2013.

OLYMPUS DIGITAL CAMERA

 

Previous Older Entries