22. பா மாலிகை (அஞ்சலிப் பா )

Face book  தமிழமுது கவிச்சாரல் மற்றும் தமிழமுது தேன்சாரல் குழுமங்களின் தலைமை நிர்வாகி பூங்காவனம் இரவீந்திரன் அம்மா அவர்களின் கணவர் இன்று இயற்கையெய்தினார். .

அவர் கணவரின் மறைவை முன்னிட்டு இரங்கல்  வரிகள்.

anchali - poonga

*

பிரியமுள்ள சகோதரி!

உலகமாம் காட்டுப் பாதையில்
வலக்கையாகிய உறவு நழுவல்
இலகு அல்ல இன்ப
இலயம் தவறும் இசையே.
மறைதல் எல்லோருக்கும் ஆனது.
மனமதை ஏற்று உறுதியாய்
மலைப்பற்ற பயணம் தொடர்தல்
மனதோடு மல்லாட்டம் தான்.

தெய்வத்தை இறுகப் பற்றும்
தேவதை தாங்கள் சிறிது
தேவை காலமே தேறிட.
தேனினுமினிய தமிழும் உறவாய்த்
தோள் கொடுக்கும். அறிவெனும்
தேசுடை கருவியுமுண்டு. ‘உரனென்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான்.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ‘

சாந்தி!…சாந்தி!…சாந்தி!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 25-3-2017.

*

poongavanam

*

 

10645017_728439903878023_3880273020971776344_n

Advertisements

21. பா மாலிகை (அஞ்சலிப் பா )

எம்    இனிய நண்பரும்டென்மார்க்கின் பிரபல மனவியல் நிபுணர் சிறீ. கதிர்காமநாதனின் மனைவி. எம் தோழி மறைவு. அஞ்சலி

980803_10201179790044814_777912586_o

 

butterfly-frame1914

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

20. அனலில் நடந்தாள்…(அஞ்சலி).

15391055_230386284065811_4675529781252088582_n

அனலில் நடந்தாள்….

***

அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.

***

மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.

***

ஆளுமை, தைரியம், நம்பிக்கை
ஆன்மவுறுதி அனைத்தும் தும்பிக்கை.
ஆராதிக்கவில்லை இவரை ஆயினும்
ஆழ்ந்து கண்ணீருடன் இருதினம்.
ஊருக்குழைப்பது வெகு உத்தமம்.
ஊசாட உடலைப் பேணுதலவசியம்.
ஊகத்தில் அமர்த்தாது அலட்சியமாய்
ஊதுதல் ஊற்றுக் கண்ணாமுயிரிழப்பே.

***

ஆன்மா அமைதி பெறட்டும்
தமிழ்நாட்டை  இறைவன் காக்கட்டும்.

***

jayalalitha_actress_turned_politician

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 7-12-2016

anchali.png

19. ஆத்தும சாந்தி

 

சகோரர் கிருஷ்ணகுமாரின் தாயாரின் ஆத்துமா சாந்தியடைவதாக.

26366850-Vector-frame-with-black-ribbon-Stock-Vector-condolences-mourning-obituary.jpg-ffanjaly.png-pp

என்னால் எழுதப்பட்டது.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

 

 

anjali-2

18. 63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

63th kamal..

இலங்கை கொழும்பில் அமரரான என் தங்கையின் பிறந்த நாள் பிரார்த்தனையில்  இங்கிருந்து நானும்…29-6-2015 ல்….

63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

முகில் பூக்கள் படைசூழ்ந்த
அகில் புகையும் ஆர்மோனியங்களின்
திகிலற்ற இசையுள் நனைந்து
சுகித்திருப்பாய் மென் காற்றாக.
இன்றுன் அ,றுபத்தி மூன்றாமகவை
என்ன ஆச்சரியமொரு முறைNனும்
உன்னை நான்கு மாதங்களுள்
சின்னக் கனவாகவும் காணவில்லை.

அன்பெனும் கிரீடம் சூட்டி
இன்ப விருந்தோம்பல் செங்கோலெடுத்து
நன்மையான அறுபத்திரண்டு வருடங்கள்
மின்னலாய் ஒளிர்ந்து மறைந்தாய்
வாழ்வின் புரிதல், நியமங்களில்
ஆழ்ந்து உழலும் துன்பமில்லை.
பவள மல்லிகையாய், மயிலிறகாய்
பவளமாய் ஒளிர்கிறாய் சாந்தி!

இரவும் பகலும் உன்
தரமான அன்பு பச்சையமாகி
வரம் தரட்டும் எமக்கு
சரங்களாய் இறங்கட்டுமுன் ஆசிகள்!
எட்டிச் சிறகடித்துப் பறந்தாலும்
விட்டுப் பிரியாது நாளும்
தொட்டு விளையாடுகிறதுன் நேசம்.
பட்டொளியானவுன் அனுபவங்களிற்கு நன்றி.

வேதா. இலங்காதிலகம்.

131030473_1xjavil_1435400021

17. தங்கைக்கு இறுதி அஞ்சலிமாலை

KLcdMzrT4-22

என் உடல் நலம் கருதி நீண்ட பயணத்தாலான

உன் இறுதிக் கிரியைகளில் மனதார

இங்கிருந்து கலக்கிறேன். இலங்கை கொழும்பில்

நாளை (22-2-2015)அக்கினியோடு சங்கமமாகிறது உன்னுடல்.

இரவும் பகலும், நாளும் பொழுதும் என்னோடு நீயம்மா!

(அன்பின் இருப்பிடம் பண்பின் உறைவிடம்.

கோப்பாய் நகுலேஸ்வரர் சுவாமிநாதரின்
நான்காவது மகள்.
கொழும்பு சரவணபவன். சுப்பிரமணியத்தின் அன்பு மனைவி.
4 புத்திரச் செல்வங்களும் 5 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்த
சௌபாக்கியவதி. சின்ன மாமா சொல்லுவார் ராஐசுலோசனா என்று…)

unnamed

10645017_728439903878023_3880273020971776344_n

16. அஞசலிப் பாமாலைகள்

எங்கள் பாட்டி திருமதி பூரணம் சண்முகநாதன் (இளைப்பாறிய ஆசிரியர் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலை- கிளிநொச்சி மகா வித்யாலயம்.) பாட்டியின் இறுதி அஞசலிப் பாமாலைகள்
(என்னால் எழுதப்பட்டது.)

poor

p00rnam  anusha

Scan-eye closed

Previous Older Entries