12. திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி.

img

திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி.

மலர்வு:- 26-1-1952 உதிர்வு:- 6-5-2014

கமலநாதன் எனும் பெயருக்கேற்ப
கமலமுகம் கொண்டு டென்மார்க்கில்
கம்பீரமாய் கண்ணியமாய் கண்ணிறைய உலாவினீர்கள்!
அமலனுக்கென்ன துணிவு! உங்களை அங்கழைக்க!

மதுர அறிவு, தீர்க்கமான கவனிப்பு!
மயக்குமுங்கள் கருத்துகள்! சமயம் கலாச்சாரம்
மகிழ்ந்து பேணிய மகோன்னத மனிதன்!
மனதில் நிலைக்கும் வித்தகன் தாங்கள்!

அன்பு, ஆதரவு, தோழமை கொண்டு
அனைவரையும் அணைத்து அமைதியாய் வாழ்ந்தீர்கள்
அன்பான மனைவி, மூன்று பிள்ளைகளையுதறி
அப்படியென்ன அவசரம்! அவ்வுலகு ஏக!

சமூக ஆலோசகராகப் படித்து டென்மார்க்
சமூகம் விட்டு இலண்டன் சென்றீர்கள்!
அமோகமாய் வாழாது ஈதென்ன கொடுமை!
அதிர்ந்ததெம் மனது தங்கள் மரணிப்பால்!

மறக்க முடியவில்லை தங்களை! உண்மை
துறப்பதே வாழ்வு! நினை! உணர்த்துகிறீர்கள்!
தங்கள் ஆத்மா அமைதியடையட்டும்! கலங்கிப்
பொங்கும் துன்ப மனங்களும் சாந்தியடையட்டும்!

சாந்தி!….சாந்தி!….சாந்தி!……
ஓகுஸ் வாழ் தமிழ் மக்கள்
டென்மார்க்.
11-5-2014.

(Written by Vetha.Elangathilakam.)

10298979_10152006629416831_1454237632701079684_n

straight line

11. திரு கந்தையா சுப்பிரமணியத்தின் ஆன்ம அஞ்சலி

k.s anjaty

திரு கந்தையா சுப்பிரமணியத்தின் ஆன்ம அஞ்சலி
தோற்றம்:- 1-3-1927. மறைவு:- 3-5-2014.

பிறப்பொன்று உறுதியாகும் போது
இறப்பொன்றும் முடிவில்வருவது திண்ணம்.
தோன்றுவன யாவும் என்றோ உறுதியாய்
மறைவது இயற்கை. காலத்தில் நிகழும்.
மனம் வருந்திக் கலங்குதலும் இயற்கை.
மகன் பேரப் பிள்ளைகளுடன் பெரியவர்
திரு கந்தையா சுப்பிரமணியம் டென்மார்க்கில்
மகிழ்ந்து வாழ்ந்தார் நீண்ட காலம்.

கண்டதும் முகம் மலர்ந்து பேசுவார்.
கருணையாய் சிறுவருக்கு இனிப்புக் கொடுப்பார்.
சுற்றியுள்ளோருடன் இனிமையாய்ப் பழகுவார்.
பற்றுடன் பேரப் பிள்ளைகளோடு மகிழ்ந்தார்.
முற்றும் என்று இறையடி சேர்ந்தார்.
யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தையில்
வாழ்வைத் தொடங்க உதித்தார். இன்று
ஆழ்ந்து உறங்குகிறாரெம்மைக் கவலையில் ஆழ்த்தி.

எண்பத்தேழு வயதில் தன் வாழ்வின்
எண்ணம் மறந்தார். அனைத்தும் அனுபவித்தார்.
எமது கண்ணீரால் அஞ்சலி செய்கிறோம்.
இவரின் ஆன்மா சாந்தியடைவதாக.
இவரை இழந்து வருந்தும் உறவுகளிற்கு
அமைதி கிடைக்க இறைவனைப் வேண்டுகிறோம்.

டென்மார்க் நம்பிக்கைஒளி
றீய
7-5-2014

(Written by Vetha.Elangathilakam.)
images

10. தாயின் ஆத்மா சாந்தியடைக!

 

 

 

தாயின் ஆத்மா சாந்தியடைக!

 

மற்றவரால் தர முடியாத
மாபெரும் அன்பின் உரித்தாளர்
பெற்றவர் எமது பெரும் சொத்து.
பார்க்காது அவரோடு பேசாது
பேதலித்து வாழ்ந்த காலத்தை
பெரிதாய் எண்ணிக் கலங்காதீர்!

ஊரே கூடி விடையிறுத்தல்
உனக்குக் கூடக் கிடைத்திடுமோ!
உன் தாய் உனக்கு மட்டுமல்ல!
ஊரிற்கு! பெரும் சமுதாயத்திற்கு!
ஆறு! மனமே ஆறு!..அது
அவரது உயர் நிலை ஆறு!

பெரும் சமூகம் ஒன்றாகப்
பிரியாவிடை தரும் மாபெரும்
பெருமையையெண்ணி மனம் ஆறு!
நாளை நமது நிலையெதுவோ!
அழியும் உயிர் பெருமையோடு
அழிவது பெரும் பேறென ஆறு!

ஓயா மன உழைச்சலின் இடைவேளையிது.
தாயின் உடல் உபாதை நீங்கியது.
தக்கபடி பேணப்பட்டுப் பாதுகாப்பாய்
தாயின் ஆத்மாவும் அமைதியடைகிறது.
தாயின்  பிள்ளைகள் உறவுகள்
அனைவருக்கும் அமைதி கிட்டட்டும்
     
தாயின் ஆத்மா சாந்தியடைக.

 

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-2-2011.

In  alaikal.com

http://www.alaikal.com/news/?p=58075

 

                                       

 

 

9. ஏழிசை வாரிதியே! திலகேஸ்வரன் மாஸ்ரரே!…

   

10-12-2007.

சங்கீத ஆசிரியர் திலகேஸ்வரன் இரண்டாவது நினைவாஞ்சலி.

சங்கீத விருட்சம் அமரர்
எங்கள் திலகேஸ்வரன் ஆசிரியரைத்
தாங்கிய பூதவுடல் மறைந்து
தாண்டுகிறது இரண்டாம் வருடம்.
00
பூதவுடல் மறைந்தாலும் உங்கள்
புகழ் மறைவில்லை. எங்கள்
காதினிலே உங்கள் கீதம்
காற்றில் கலந்து ஒலிக்கிறது.
00
நீங்கள் இல்லாமையைத் தினமும்
வெகுவாக நாங்கள் உணர்கிறோம்.
கலைச் சேவையுமஇ உங்களை இழந்து
தவிக்கிறது. உங்களாசியை வேண்டி நிற்கிறோம்.
00
என்றென்றும் உங்கள் ஆத்மா
அமைதியுடன் உறங்கட்டும் உங்கள்
மனைவி, பிள்கைள் அனைவரும்
அமைதியடைய இறைவனை வேண்டுகிறோம்.
00
10-12-2009

7. அமரர் கீழ்கரவையூர் பொன்னையன்

 

 

அமரர் கீழ்கரவையூர் பொன்னையன்.

 

எத்தனை அறிவிப்பாளர்கள் ஊடக
முத்தங்களில் தம் திறனை
வித்;திடுவதை அறிகிறோம், கேட்கிறோம்.
தத்துவங்கள் விதைத்த உன்
உத்தமப் பாணி யாருக்கும்
சொத்தாகவில்லையே அமரர் வியூகனே!

தாராளம் உனக்கொரு சொல்.
சரளமாய் வானலைத் தமிழில்
ஏராளம் கருத்துக்கள் பாய்ந்து
ஊராளும் மணிக்கணக்கிற்கும் மேலாக.
நேராய் வாழ்த்துக்களும் பெற்றாயே!
யாரால் முடியும் இவ்வகையில்!

தின்றுவிடுகின்ற  நோயும் மரணமும்
வென்று விட்டது உன்னை.
என்றும் மறக்க முடியாத
அன்றலர்ந்த உன் தமிழுக்காய்!
இன்றும் நெஞ்சம் தவிக்கிறது,
நின்றலைகிறது உன் பிரசன்னத்திற்காய்!

உன் ஆத்துமம் பிரிந்த நாள்
இன்று 23-9-(2002) இதயம் கனக்கிறது.
சாளரச் சக்கரவர்த்தியே! உன்
சாதுரிய இலக்கியக் காற்றில்லா
சாளரங்கள் திறந்து மூடுகின்றன.
சாந்தியுடன் நீ துயில்கொள்வாயாக!

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
22-9-2009.

வேறு

அருட்சுடர் வீசு!

(22-9-2002ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை இலண்டன் தமிழ் வானொலியில் வியூகனுக்கு நோய் எனும் தகவலிற்காக எழுதி வாசிக்கப் பட்டது.)

 

வியூகன் எனும் சகலகலாவல்லவன்
வியூகம் அமைத்து விதைத்தான் இலக்கியம்.
சாளரச் சக்கரவர்த்தியின்று நோயில்
சாய்ந்துள்ளான் மருத்துவ மனையில்.
சக்கரவாகமான நேயர்கள் மனம்
துக்ககரமாகித் துடித்துத் துவள்கிறோம்.

விதந்தோத முடியாத விழுமிய தமிழுடன்
வித்தகச் செருக்குடன் வார்த்தைகள் நர்த்தனமிடும்
தமிழ்க் கவிச்சமர் அவனுடன் தொடுத்தோம்.
அமிழ்தினும் இனிய அம் மகோன்னத
அனுபவத்திற்குக் கரவையூர் பொன்னையனை
மீண்டும் எம்மிடம் அனுப்பு இறைவா!

கீர் கீர் எனத் தமிழினைக் கிழித்து விளக்கும்
சீராளனைத் தாராளமாக எழுப்பித் தா!
அருச்சுனனுக்குத் தேரோட்டினாயே!
அருமையாகக் கீதை உபதேசித்தாயே!
அருமை வியூகம் அமைத்து அருட்சுடர் வீசு!
எங்கள் வியூகனுக்கும் கைகொடு கண்ணா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-9-2002

*

வேறு

*

அன்பான வியூகன்!

*

இறைவா வியூகனை நடமாட விடு!
இறiவா நீ வெகு கொடியவனா!
இல்லை நாம் தான் கொடியவரா!
ஏனிப்படிச் செய்தாய்! கூன்விழாத தமிழைக்
கூறுபோட்டு விளக்கும் குற்றமற்ற வியூகனை !
சற்றும் எண்ணாது நோயெனும் சரமெய்து
சாய்க்கிறாய்! சாதிக்க நினைப்பவர்களை ஏன்
பாதித்து வதைக்கிறாய் சிதைக்கிறாய் ஏன்!

ஆண்டவனே இது நியாயம் அல்ல!
ஆண்டகையான கரவையூர் பொன்னையனை சீண்டுகிறாயா!
வேண்டுமா உனக்கு இலஞ்சம் சொல்!
வியூகனை எழுப்பிட ஏனிந்த வஞ்சம்!
அவனைக் குகனோடு கைகோர்க்க அனுப்பு
தமிழ் அலை வானொலியில் அவன்
தமிழ்ப் பந்தாடியவன் இனியவன்! எம்மை
தமி;ழ் சாளரத்தால் இலக்கியத்துள் அமிழ்த்தியவன்

நோயெனும் கருமுகிலினுள் ஆழ்த்துதல் நியாயமா!
பாயச் செய்யுன் பெரும் கருணையை
நல்ல தமிழை சாளரத்தால் கேட்டதே
நாம் செய்த நல்ல செயலன்றி
நாமொரு பிழையும் செய்யவில்லையே! இது
உனக்குப் பொறுக்கவில்லையா! போகட்டும் அவரது
குடும்பத்திற்காய் அவரை விட்டு விடு!
அவரை நடமாம விடு இறைவனே!

21-9.2002

*

 

                      

 

8. ஓகுஸ் – மாலதி கலைக்கூடத்திற்கான

 

சுப தமிழ்ச் செல்வன்  அஞ்சலிக் 
அஞ்சலிக் கவிதை.

ங்களமான புன்னகை புரிவான்
பொங்கும் மகிழ்வுடை வதனமுடையான்.
திங்கள் போன்று இயக்கத்தின் இணைவில்;;
சங்கமமாகினான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்திநான்கில்.
ஓன்பது வருடத்தில் அரசியற்துறைப் பொறுப்பாளரானார்.
தென்மராட்சி மட்டுவில் பதியில் விரிந்தான்.
‘தினே ‘ பெயரில் இயக்கத்தில் ஆரம்பித்து
இராஐதந்திரிகளிடையில் சமாதானப் பேச்சில்; மதிப்படைந்தார்.

பிரிகேடியர் சுப தமிழ் செல்வன் உதிர்வு
சரியான செய்தியோ! ஒரு ஏமாற்றுத் தகவலோ!
செரித்திட மனம் மறுத்தது, .நம்ப முடியவில்லை.
சொரிந்த ஊடகத் தகவல்களில் உறுதியானது
சரிந்தது  அறுவரின் பெறுமதி உயிரென்று.
பிரியும் உயிர் உடலிலிருந்து என்பது மெய்.
எரிகுண்டு வீசி உயிரை எரிப்பது கொலை.
நரித்தனப் போர் முறைத் தந்திரம் இது.

கார்த்திகை இரண்டு இரண்டாயிரத்தி ஏழு
பார்த்திருக்கவில்லை இப்படி ஒரு தகவலை.
போர் நடக்கவில்லை, ஊர் கலையவில்லை.
பார் முற்றாக விடியாத வேளை
யார் நினைத்தார் இது நடக்குமென்று!
சீர் கெட்ட முறையில் குடிமனைகள் மீது
சீறி வந்த குண்டுகள் உயிர்ப்பலி எடுத்தது
ஏறு போலிருந்த ஆறு இயக்க வீரர்களை.

காபாரதத்து மண்மீட்பில் அபிமன்யு இறந்ததற்காக
அருச்சுனன் வில்லை வீசிவிட்டுப் போகவில்லை.
மகன் கடோற்கஐன் இறந்ததற்காக வீமன்
தண்டாயுதத்தை எறிந்திடவில்லை.
மண்மீட்புப் போர்க்களத்தில் அழுகைக்கு இடமில்லை.
சாவிற்குப் பயந்தால் விடுதலை இல்லை.
சாதனை வழியாம் மண்மீட்பில்
சகோதரத்துவமாய் நின்று போர் தொடுப்போம்.

3-11-2007.

 

வினைத்திட்பமுடைய வீரர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
இவர்கள் விருப்பப் படி தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கட்டும்
இவர்கள் உற்றார், உறவினர் அனைவருக்கும் மனச்சாந்தி கிடைக்கட்டும்.

 பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்

                    

 
 

6. அஞ்சலி பா.

ratna

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்      – திருக்குறள்.

( பிரிய முடியாது பிரிவிற்கு உடன்பட்டு பிரியும் போது துன்பத்தால் கலங்குவதைவிட்டு பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் வாழ்வோர் உலகில் பலர்.)

மட்டுவில் கந்தையா – சுன்னாகம் முத்துப்பிள்ளையின்
கண்ணான கடைக்குட்டி 1934ல் உதித்த
ஏழாவது குமாரன் திருவாளர் இரத்தினசிங்கம்.
என் மைத்துனர், என் தங்கையின் கணவர்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரியில்
எண்ணெழுத்து கற்றவர் இவர்.
உடன்பிறப்புகள் – உற்றவரிற்கு உதவுதல்
தன் கடனென்று தாராளமாக உதவினார்.
பணக்காரன் என்று ஊரில் பெயரெடுத்த
கமக்காரன், குணக்காரன். கடம்பவனநாயகியோடு
1972ல் தன்குலம் வாழக் குடும்பம் அமைத்தவர்.
பிறப்பெனும் நுழைவாயிலால் புகுந்து
சிறப்போடு வாழ்ந்த வாழ்வில் இவர்
பெற்றெடுத்த நான்கு முத்துகள் கல்யாணி,
காமினி, அபிராமி பெண் முத்துக்களாக
கடைக்குட்டி ஐனார்த்தனன் ஆண்மகனாவார்.
பிள்ளைகள், மணவாழ்வு – குழந்தைச் செல்வங்களாய்
ஆறு பேரக் குழந்தைகள் விழுதுகளானார்கள்.
ஆலமரமாகி வாழ்ந்த பெருமகனார் இவர்.
இலங்கையில் இன்பமாக காலம் கழித்தவர்
கலங்கும் நாட்டுநிலையால் இறுதிக் காலங்;களை
Nஐர்மனி, சுவிற்சலாந்து, இலண்டனிலும் வாழ்ந்தார்.
வீடுவரை உறவெனும் சங்கிலி கழன்றது.
விதி முடிந்ததாகிக் கண்மூடித் துயில்கிறார்.
கடமை செய்திடப் பிள்ளைகள், உறவினர்
கண்கலங்கி நிற்கிறார்கள் பக்கத்திலே.
இந்த உடல், இந்த வாழ்வில் நாமெதைக்                                                                                                                                       கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு!
இவ்வுண்மையைத் தினம் எண்ணும் வாழ்வு
தாமரையிலைத் தண்ணீராக அமையும். எம்மால்
இவ்வுலகத் துன்பங்களையும் தாங்கிட முடியும்.
உடலைவிட்டுப்  பிரிந்த இவர் புண்ணிய
ஆத்மா சாந்தியடைவதாக! கலங்கி நிற்கும்
உறவுகள் மனம் அமைதியடைவதாக!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வேதா. இலங்காதிலகம் குடும்பத்தினர். (டென்மார்க்)
மீனா . இராமச்சந்திரன் குடும்பத்தினர். (யாழ்ப்பாணம்)
சதானந்தன். நகுலேஸ்வரர் குடும்பத்தினர்.( கொழும்பு)
கமலா. சரவணபவன் குடும்பத்தினர். (கொழும்பு)

Deepam-Border-Kolam-1

5. தோழர் சுரேந்திரன். (அஞ்சலி)

 

திறமை உள்ளவர்கள் ஏன்
அதிக காலம் வாழ்வதில்லை?
சகோதரர் சுரேந்திரனே! நீங்களெமக்கு
அறிமுகமானீர்கள் ரி.ஆ.ரி வானலையில்.
அருவியாகக் கொட்டுவீர்களே!
நல்ல பட்டுக் கவி வரிகள்! நான்
மட்டில்லா வியப்படைவதுண்டு!
கொட்டிய வரிகளை அள்ளி
சட்டென்று எழுதிக் கொண்டு
பட்டம் வாங்கப் படிப்பதாக
அக்கு வேறு ஆணிவேறாக அதை
அலசிப் பார்த்ததுண்டு. இங்கு
நீங்களெனக்கு ஆசிரியராக.
நாடகங்கள், மேடைப் பேச்சில்
கம்பீரமாக முழங்குவீர்கள்.
கனிவாகப் பேசி மக்களைக்
கவரும் திறமைசாலி! உங்கள்
இழப்பு வெறுமை தருகிறது மனதிற்கு.
உயர்ந்த மனிதரே! தோழர் என்று அழைக்கும்
நெருக்கம் இழக்கிறோம் நாம்.
இழப்பு இழப்புத் தான்!
ஏற்று வாழும் விதி எமது.
உறவுகள், குடும்பத்தினருக்கு  மன அமைதி கிட்டட்டும்        
உங்களாத்துமா சாந்தியடையட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-3-2010.

( திவுகள். கொம்ல் வெளியானது. ரி.ஆர்.ரிதமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

3. தமிழ் சாகரத்திலொரு முத்து, அமுது.

 

 

டைப்புலகிற்கு ஏழு தசாப்தங்களினும் மேலாக
கிடைத்திட்ட ஒரு தமிழ் இலக்கிய முத்து,
அடைக்கலமுத்து அமுதசாகரன் – இயற்பெயர்.
நெடும்தீவில் 15-9-1918ல் உதித்தார்.
இளவாலை தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதிகளின்
இளவல். நாம் அழைப்பது அமுது புலவர்.
காதலுடை மனைவி ஆசிரியை சுவாம்பிள்ளை திரேசம்மா.
சாதலற்ற இலக்கிய கலாநிதிக்கு 92 அகவை.

லண்டன் மிடில்செக்ஸ், ஹரோ, நோத்கொல்டில்
23-2-2010ல் பூதவுடம்பை நீத்தார்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், தமிழ்த்துறைப்
பண்டிதர் வகுப்பிலும் திறமையாகப் பயின்றார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான்,
இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் பண்டிதராகவும்,
பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், முதற்தர ஆசிரியர்,
சஞ்சிகையாசிரியர், செய்தியாளர், கவிஞரென உருவானார்.

தின்மவயதில் எழுதுகோலில் தமிழ் இலக்கியமாட
மாதா அஞ்சலி – முதலாக்கப் பிரசுரம், 1938ல்.
ஊற்றான தமிழ் வளத்தால் அமுது புலவர்
சாற்றினார்  தமிழுக்கு ஆபரணங்களாய்ப் பல நூல்கள்.
பெற்;ற பட்டங்கள், திறமையின் ஆபரணங்களானது.
பாவேந்தர், கவியரசர், கௌரவ கலாநிதி, தமிழ்கங்கை,
மதுரகவி, சீவியகாலச் சாதனை, கவிதைச் சுடர்,
செந்தமிழ்த் தென்றல், சொல்லின் செல்வர்,

புலவர் மணி, முப்பணி வேந்தரென இவ்
அரும் தமிழர் ஆற்றலின் சாதனையால் ரோமாபுரியில்
பரிசுத்த பாப்பரசர் இரண்டாயிரத்து நான்கில்
செவாலியர் விருதினை வழங்கியதாலும் கௌரவப்பட்டார்.
ஈழத்தமிழ் இலக்கிய உலகில் இவரென்றும்
ஒரு துருவ நட்சத்திரமாய்ப்  பிரகாசிக்கிறார்.
இவரது காலத்தில் வாழ்ந்தது நமக்குப் பெருமை.
 என்றுமிவர் வாழ்வார். நாமிவரை அஞ்சலிக்கிறோம்

 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
 ஓகுஸ், டென்மார்க்.
 7-3-2010.

( வானொலிகளிலும், பதிவுகள். கொம், வார்ப்பு . கொம் லும் வெளியானது.)

4. தமிழ் அஞ்சலி.

Previous Older Entries Next Newer Entries