496. மை

281c9-mai

 

*

நிலாச்சோறு – நிலவே மலரே – 52.

மை

*

அறியாமை, இளமை, இருள், களங்கம்
குறிக்கும் மையின் தன்மைகள் ஏராளம்.
முறைமை, மெய்மை நியாயமெழுதும் மை.
தெறிக்கும் அபிப்பிராயங்கள், முறிக்கும் உறவுகள்,
அறிவிக்கும் சரித்திரங்கள், உலகாளும் தகைமைகளை
முரசறையும் மையினாளுமை, பெருமை வல்லமை.

*

தோழமை அன்பின்மை யால் இல்லாமை ஆகும்.
ஆதரவின்மை உலகில் பாரிய வறுமை.
பேசாமை, பாராமை உறவிற்குப் பகைமை.
உரிமை கொண்டுறவைச் சீர்மை செய்வோம்.
இளமை, முதுமை அனுபவங்கள் நன்மை,
பெருமை. சிலரிதைச் சிறுமையெனவும் எண்ணுவார்.

*

கண் மை கவர்ச்சியூட்டும் செழுமை.
பெண்மை இழிவெனும் மடைமை ஒழியட்டும்.
பேதைமை யைப் பெண்கள் வெல்லுதல் அறிவுடைமை.
அறிவின்மையால் கைம்மை நிலைமை தீமை.
ஆண்மை ஆளுதலென்பது பழைமை வழமை.
தகவின்மை தலைமை ப் பதவிக்கு ஏற்புடைமை யல்ல.

*

விரல் மை வாக்களிப்பின் உறுதிப்பாடு.
வசிய மை யால் வெற்றிலை மை யால்
கசியும் பன்மை கதைகள் சோதிடப்புலமை.
வண்ண மைகளால் வரையும் ஓவியங்கள்
கண் பறிக்கும் சிகரதிற்கழைக்கும் பொதுமை.
பசுமை க் கலைகள் புலன்களிற்குக் குளிர்மை.

*

இம்மை மறுமை செம்மை பெற
பொய்மை யாம் கருமை விலகுதல் முழுமை.
ஓற்றுமை உணர்வால் இல்லாமை வேற்றுமை.
பொறாமை யற்ற எளிமை வாழ்வு இனிமை.
குடிமை பெருக்கும் தாய்மை வலிமை.

*

அம்மை அண்மை அஞ்சாமை தரும்.
உவமை யில்லா எழுமை தரும்.
உயர்வு மைகளை தனிமை தெலைக்கும்
இறவாமை த் தமிழில் மையின்றி எழுதிய
தமிழின் அடிமை

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 9-5-2017

*************************************

493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)

sollalaku nool

*

நிலாமுற்ற குழுமம் கடந்த ஆண்டு செய்த விழாவில்புத்தகம் வெளியிட்டனர் அதில் வந்த எனது ஒரு கவிதை இது.

*

நிலாமுற்றம் கவிதைப் போட்டி 8.7.2016

முத்துப்பேட்டை மாறன் to நிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்)

வணக்கம் கவி உறவுகளே

நிலாமுற்றம் குழுமம் தனது ஆண்டுவிழாவையொட்டி நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் முதல் பட்டியலை இந்த நல்ல நாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.அறிவிக்கப்படும் கவிஞர்கள் கும்பகோணத்தில் நடைபெறும் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.வெளிநாடு வாழ் கவிஞர்களுக்கு சான்றிதழ் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களுக்கு அரங்கத்தில் கேடயம் வழங்கப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

#நிலாமுற்றம்_நடத்திய_ஆண்டுவிழா_கவிதைப்போட்டி

#தலைப்பு_ சொல்லழகு

#_போட்டி_வெற்றியாளர் வேதா இலங்காதிலகம் Vetha Langathilakam

கவிஞக்கு என் வாழ்த்துகள்

அவருக்கு நிலாமுற்றத்தின் நல்வாழ்த்துகள்.ஆண்டுவிழாவில் கவிஞர் கௌரவிக்கப்படுவார்.வெற்றிப்பெற்றவர்கள் தங்கள் அசல் புகைப்படத்தை கவிஞர் பாலு கோவிந்தராஜன் அவர்களின் உள்பெட்டிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.புகைப்படம் அனுப்பினால் மட்டுமே சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.கேடயத்தில் வெற்றியாளர்கள் புகைப்படம் இணைக்க வேண்டும்.

அன்புடன் முத்துப்பேட்டை மாறன்

நிர்வாகிகள்
தேர்வுக்குழு

 

சொல்லழகு.

சொல் மனிதன் சொன்னதாலானது.
சொல்லழகால் மொழி உருவானது.
சொல்லிலுண்டு மொழியின் உயிருடல்.
மனிதன் மொழிந்ததாலானது மொழி.
சொற்கள் சேர்ந்தால் சொற்றொடராகும்.
சொல்லிற்குப் பல் பிரதானம்.

*

ஓரெழுத்து ஈரெழுத்தாம் பல
சொல்லழகு தமிழிற்கு அழகு.
ழுகர ளகர சொற்கள்
தமிழின் மகுட வைரங்கள்.
மயங்கொலிச் சொல்லழகும் உண்டு..

*

இடமிருந்து வலமாக வலமிருந்து
இடமாக வாசிக்கும் சொல்லழகு
விகடகவி திருபருதி என்றுளது.
ஒரு சொல்லிற்கு பல பொருளுடைத்து.
ஓரெழுத்துச் சொல் நாற்பத்தேழு உண்டு.

*

சொல்லழகு சட்டென்று மனங்கவரும்.
சொன்னார் ஒளவைப் பிராட்டியர்
சொல் திறம்பாமை கற்பெனப் படுவது.
அம்மா என்ற சொல்லழகு.
மம்மா மம்மி எமக்கெதற்கு.

*

சொல்லழகு இல்லையேல் சுவையேது.
பேச்சினில் நிறையும் சொல்லழகும்
கவிஞனின் கவிதைச் சொல்லழகும்
இதயத்தைத் தாலாட்டி என்றும்
இணைந்திட வைக்கும் அமுதவழகு.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016.

குழுவினருக்கு  மனமார்ந்த நன்றிகள்.

 

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

 

 

492. மே தினம்…. மே தினம்

 

 

 

may -tst

*

 

2-4-2009ல் வார்ப்பு இணையத் தளத்தில் நான் எழுதிய கவிதை – புனை பெயர் கோவைக்கோதை
*

மே தினம்…. மே தினம்

*

உழைப்பின் ஊதியம் இளைத்தது.
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்.
களைப்பில் மனிதர் வளைந்தனர்.
சளைக்கவில்லை பலர் விழித்தனர்.
நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர்.
விளைந்தது போராட்டம் – குதித்தனர்.
*
சிக்காகோ, நியூயோர்க் பொஸ்டனீறாக
அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்.
நோக்கம் நிறைவேற போராட்டம்,
சிறை. உக்கிரமானது சர்வதேசப் புரட்சி.
உழைக்கும் நேரம் எட்டுமணியாக
உரிமையை போராடி வென்றனர்.
*
தொகுதியாய் கூட்டங்கள் உரிமைபேச
தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று.
எப்போதும் பணத்தில் குறியானவர்கள்,
தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள்,
எப்போது தானாகத் திருந்துவார்கள்,
அப்போதன்றோ பலருக்கு மே தினம்!
*
கோவைக்கோதை. ஸ்கன்டிநேவியன். 2-4-2009.
re publishing 30-4-2017
*
*
u.line

491. ஆசியுடைய வாசிப்பு

 

book

*

ஆசியுடைய வாசிப்பு

*

வாசிக்க வாசிக்க மன
பாசிப் படை விலகும்.
தூசியும் கரை ஒதுங்கும்.
யோசிக்கும் உணர்வு பெருகும்.

*

யோசிக்க சந்தேகம் உயரும்.
யோகமான தேடல் பெருகும்.
வாய்ப்புகள் எம்மை நெருங்கும்.
வாய்த்திடும் பல நிகழ்வுகள்.

*

வாத்தியாராகும் இன்பம் துன்பம்
நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவ பாடம்
கோத்திடும் மனப் பக்குவம்

*

பூவெனப் பயன்பாடு பூக்கும்.
பூவாச மதிப்பு பெருகும்.
பூரண மகிழ்வு மலரும்.
பூசிடும் செழுமை வாசிப்பால்.

*

உன்னை மறப்பாய்!
உலகை அளப்பாய்!
உண்மை உணர்வாய்!
ஊற்றான அறிவால்!!

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 23010.

*

நன்னூல்களே உற்ற நண்பன்.

புத்தகம் புத்தியின் சகவாச சங்கமம்
சுத்த அறிவின் சஞ்சார மைதானம்.
புத்தக அறிவொளி நிதானம் நம்
சித்தத்துத் தூசிகள் அகற்றும் சாதனம்.

*

வாசிப்பு தீபம் ஏற்றிடும் நிறைவு
வாணி கடாட்சம் ஏந்தும் நிறைவு.
வாசிப்பு வெள்ளம் உயர, அறிவு
விருட்சம் உயரும், வாகை நெருங்கும்.

*

நம்பிடும் நண்பனும் கைவிடுவான் நாம்
நம்பிடும் நூல்கள் கை கொடுக்கும்.
வம்பிலிருந்து நம்மைக் காக்கும். எம்
வெம்பிய மனதிற்கு மகா துணையாகும்.

*

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
8-6-2016

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2013/07/13/28-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/

*

 

book - 4

490. எதுவும் நிரந்தரமில்லை

ethuvum

*

எதுவும் நிரந்தரமில்லை

*

பொதுவாக நாம் மறக்கிறோம்
எதுவும் நிரந்தரமில்லை என்பதை
அதுவாக மனதிலிது தங்கினால்
பழுதான உலகமொன்று இல்லை
*
நேசிப்பவரின் துரோகம் பகைமை
யாசித்துப் பெறும் அன்பு
யோசிக்காத தீர்மானங்கள் அனைத்தும்
வாசிக்காத புத்தகமாய் அழிவதே.

*
ஆரோக்கியமாய் வாழ்ந்தால் நோயும்
ஆதரவில்லாப் பிள்ளைப் பாசமும்
ஆசை, காதல், நேசமும்
அந்தம் வரை நிரந்தரமில்லை.
*
விழிகளில் கண்ணீர் நிரந்தரம்.
கீதையின் சாரம் நிரந்தரம்.
மரணம் என்றும் நிரந்தரம்.
ஒருவரைப் பிரிவது நிரந்தரமல்ல.
*
புலம் பெயர்ந்தோம் தாய்
நிலம் நிரந்தரம்  இல்லை.
மொழி மாறினோம் அதுவுமங்கு
தள்ளாடுது நிரந்தரமா என்று.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 21-4-2017

*

 

end_bar

489. சுமையில்லாப் பொழுதுகள்.

13072661_10208099941913503_4589521719401647376_o

*

சுமையில்லாப் பொழுதுகள்.

*

படிப்பெனும் சுமை முடிந்தாலும் உயர்
படிப்பென்ற செமினாறியம் முடிந்ததும் மிக
வடிந்தது கல்விச் சுமை. தொழிலென
படியேறி மனுக்கள் கொடுத்து வேலையிலமர்ந்தேன்.
*
முடிந்தது சுமைப் பொழுதுகள். பணியில்
கொடியேறியது ஆனந்தப் பொழுது, நிறைவு.
விடிந்தது காலம!  பணி ஓய்வூதியம்!
வடிந்தது சுமைகள்! இனிய பொழுதுகளானது!
*
துடிப்பான பேரர்களின்று தென்றலாய் எம்முள்
அடிகோலுகிறார் ஆனந்தத் தேன் அடித்தளமாய்.
குடியேறி இதயத்திலின்பப் பூவாணம் வீசுகிறார்.
நடிப்பற்ற சுமையில்லாப் பொழுதுகள் நகர்கிறது.
*
முகநூல் குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளை
மிகவும் வேண்டுதலுடன் தவிர்த்து நடக்கிறேன்.
அகம் நிறைய சுமையற்ற பொழுதுகளாய்
முகம் மலர்ந்து தமிழோடு தவழுகிறேன்.
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 15-3-2016.
ena...ena...

488. வெறுப்புடை அழைப்பு

 

invitt.jpg-2

*

வெறுப்புடை அழைப்பு

*

மனம் நிறையக் கனவுகள்
சினம் குறைக்கும் நினைவுகள்
இனம் கூடும் திருமணம்
தனமெனும் இன்ப மழைச்சாரல்.
*
கொஞ்சும் நினைவில் நிறைந்து
அஞ்சும் குரூரங்கள் அழிந்து
மஞ்சள் பூசி மங்கலமுணர்ந்து
வஞ்சமற்ற அழைப்பிதழ் இதயமினிப்பது.
*
தனக்கான மணநாள் அழைப்பது
மனக்கசப்பு முனகலின் திரட்சியது.
வனவாச வெறுப்பு உமிழ்வது.
அழைக்காமல் தவிர்ப்பது மேலானது.
*
மோதல் முறுக்குதல் தவிர்த்தல்
கூதல் குளப்பமெனில் விலகுதல்
காதல் சிலிர்த்தல் அணைத்தல்
தோதாம் அமைதி வாழ்வில்.
*
_____________
வேதா. இலங்காதிலகம். 17-4-2017
*
ena...ena...

487. இன்பப் புத்தாண்டு – பிறந்தநாள் வாழ்த்துகள்

 

 

2017

tamil-new-year-wishes-2016

*

புரிந்துணர்வு
===================


அன்பு அமைதி புரிந்துணர்வின் ஊஞ்சலாம்.
தென்பு தரும் வாழ்வின் காரணமாம்.
கன்னல் இல்லறம் புரிந்துணர்வின் அன்படை.
மன்னிப்பு விட்டுக் கொடுத்தலின் அடிப்படை.

பரிவு நெஞ்சத்தின் அறிவு விரிந்து
சொரியும் உறவே புரிந்த உணர்வது.
சரியான சுய உணர்வு அனுசரிப்பது.
செரிக்கும் பக்குவம் புரிந்துணர்வுச் சிம்மாசனம்.

தரிக்கும் இசைவு, பகிர்வு, இணக்கம்,
சிரிக்குமுடன்பாடு, இளகிய மனப் பொருத்தம்.
சரியாது தாங்கும் தந்தையின் தோளும்
மரிக்காத தாய்மையணர்வும் ஆனந்தப் புரிந்துணர்வே.

நாடுகளின் முனனேற்றம், குடிகளின் முன்னேற்றம்
ஏடுகளில்; ஆவணமாகும் நற் புரிந்துணர்வால்.
காடுகளைப் பேணினால் இயற்கை மகிழ்ந்து
ஈடு செய்யும் மழையாம் கொடையால்.

ஓன்றை யொன்று புரிந்து ஈடுகட்டல்
நன்றான பிரதிபலனாம் புரிந்துணர்வுப் புத்தாண்டே!
அன்றி அனைத்தும் எதிர்மறை கேடாம்!
அழிவான சரியுமெரியுமுணர்வின்றி வரவேற்போம் புத்தாண்டை

Vetha. Langathilakam – Denmark–  14-4-17.

3-4-2017 ல் எனது 70வது பிறந்த நாள் இனிதாக முடிந்தது.
சில வாழ்த்துகளைப் பதிகிறேன்.

DSCF2608.jpg-l

17759860_10211159648684260_856741317456170479_n

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்
அஷ்ட லஷ்மிகள் – ஆதி லஷ்மி, கெஜ லஷ்மி , தைர்ய லஷ்மி , விஜய லஷ்மி , சந்தான லஷ்மி , தான்ய லஷ்மி , வித்யா லஷ்மி , தன லஷ்மி – வாழ்த்தட்டும் அருளட்டும்
மும்மூர்த்திகள் வாழ்த்தட்டும் அருளட்டும்
வைஷ்ணவ தேவி, சிந்த்பூரணி, மனசா தேவி, காங்கடா வஜ்ரேஸ்வரி தேவி , சாமுண்டா தேவி நைனா தேவி சப்த தேவிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்
பிரம்மி, வைஷ்ணவி, கெளமாரி , மகேந்திரி, மகேஸ்வரி, வராஹி , சாமுண்டி – சப்த கன்னிகைகள் – வாழ்த்தட்டும் அருளட்டும்
சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்

விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்
பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்
விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்
வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்
அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்
நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்
சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்
அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்
ஈரேழு பதினான்கு உலக நன்மைகளும் விளையட்டும்
குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்

பதினாறு பேறுகளுடன் நவ நிதியமும் அஷ்ட லஷ்மி (ஆதி லஷ்மி , கெஜ லஷ்மி, தான்ய லஷ்மி, தைர்ய லஷ்மி, விஜய லஷ்மி சந்தான லஷ்மி,வித்யா லஷ்மி, தன லஷ்மி) அருளும் கொண்டு சங்க நிதி பதும நிதி குபேர சம்பத்துடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி ஆண்டு வாழிய வாழியவே

*******

With flowers   ….

17760226_1293262884121452_4886478179898852299_n

தமிழுக்கும் கலைக்கும்
நிறமூட்டி அழகூட்டும்
வேதாமாவிற்கு அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க என்றும் வளமுடன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேதா அன்ரி. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
(அட 70 ஆவது அகவை என்று மார்க்கு சொல்கிறார். உண்மையாகவே நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் வேதா அன்ரி. 😉 😀 )  with wishing card

17795881_10212705396533230_3585302678229151374_n

 

எழுவதின் மலர்வின் விளைவில்,மகிழ்ச்சிக் குழைவில் திளைக்கையில் ,முளைக்கும் ஆரோக்கியத்தில் ஆயுள் உழைப்பு தளைத்துவிட,துளித்துவிடும் நாட்களும் வாழ்த்துக்களை அழைத்துநிற்க,ஞானத்தை தவணைமுறையின்றி , மொத்தமாக உழைத்துவிட,துணையின் காதல் அணைப்புடன் வாழ்க்கையின் மூலைமுடுக்கெல்லாம் இணைந்துவிட,மொழிவளம் பொழிந்து வழிந்து,உறையாது உவகை நிலைத்துவிட வாழ்த்துகின்றேன்.

கலகலக்கும் பேச்சுக்காரி!
கவின்மலர் சிரிப்புக்காரி!
கபடமில்லா நட்புக்காரி!
கற்பனைத் திறனாளி!
கோலெடுத்தெழுத்துகளைத்
கோர்த்து வைக்கும் அரசி!
கவிதைகளின் நாயகி!

காலங்கள் நீள வேண்டும்!
தமிழ்கொண்டு புகழ்பூக்க வேண்டும்!
மகிழ்வோடு வாழ மனமார வாழ்த்துகிறோம்.

எழுத்துப்பணி நிறைந்த மகிழ்வு எழுந்து எழுந்து எடுத்தவரிகளில்
நிறைந்த கருத்து, அறிவுரை அடுத்தவரை மகிழ்வுற வைத்த
கவித்துளிகள். இன்று கவித்துளிகளில் வாழ்த்துவதில் நாமும்
பெருமையடைகின்றோம்.!!!
பகவானின் ஆசியோடு ஆரோக்யத்துடன் பல்லாண்டுகாலம்
வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!! இனிய பிறந்தநன்னாள் வாஃத்துக்கள்!!!
“கவிதாயினி வேதா“

17796108_1501618236557545_4910433929600257958_n

பெண் குலத்தின் திலகமெனத் திகழ வாழ்க!
பிறழாத செல்வமெலாம்
திரண்டு சூழ்க!
மண்ணுலகின் பெருமை களைத் தேர்ந்து ஆள்க;
பிறந்த நாள் இலக்காக
இவற்றில் மூழ்க!

இனிய தாலாட்டு நாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
இன்னும் பாக்கள் நீளட்டும்
பாதை அழகாகட்டும் வாழிய நீடு

17634313_1006027139496941_4940399126768175167_n

17499485_976919362443138_6594465335219351239_n
*

 

03.04.2017

கவிஞர் Vetha Langathilakam
பிறந்தநாள் வாழ்த்துகள்

தேவதைபோல் இவரது தோற்றம் தினம்
தேன்க விதைகள் விளைக்கும் திறன்
வான்வெளி வையம்பு கழ்க்கொண்ட கவிஞர்
வேதாலங்க திலகம் பல்லாண்டு வாழ்க

சான்றோர்கள்நண்பர்கள்
உறவுகள் வாழ்த்துதலில்

இரா.கி ஒரத்தநாடு. தஞ்சை

17626154_1896172633988358_7445447197829413785_n
*
*

அன்பரே !
வணக்கம் .

உங்களுக்கு
என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

“ அறிவைத் தேடிக்கொண்டே இரு!
அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு !

சாதியை உதறு ! மதத்தை மற!
மனிதனை நினை! உழைப்பை நம்பு!

அன்புடன்,
சு.பொ.அகத்தியலிங்கம்

*

*

 

pink

486. நள தமயந்தி

 

nilave malare- 39

*

 நள தமயந்தி


நள தமயந்தி மகாபாரதத்தின் துணைக்கதை.
நவரசங்களுடைய ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.
நளவெண்பாவென புகழேந்திப் புலவர் எழுதினார்.
நிடத நாட்டு நளமகாராசன் ஆட்சி
நிசமான அருளாட்சியாக அமைந்ததாம் அன்று.
இளம் அரசன் நளன் நந்தவனவுலாவில்
அங்கிருந்த தடாகத்தில் அழகிய பறவையாம்
அன்னத்தைக் கண்டு அதனழகில் மயங்கினானாம்.

*

அதன் வெண்மை நிறம் பச்சையிலைகளில்
அழகொளிரப் பிரதிபலித்தது. கால்களின் சிவப்பு
தடாகத்து நீரிலும் பரவிச் சிவந்ததாம்.
தான் பிடித்தால் கைபட நோகுமென்று
பணிப் பெண்ணதைப் பிடித்து வரச்செய்தான்.
அவனிரக்க குணமறிந்து அன்னமவனிடம் தஞ்சமானது.
உன்னழகு நடை பெண்கள் நடைக்கொப்பா!
அறிந்திட அழைத்தேன் அஞ்சாதே என்றான்

*

அச்சம் விலகிய அன்னம் பேசியது
‘ நான்கு குணங்களும் நாற்படை ஆனவள்
காற்சிலம்பு முரசாக கண்கள் வாள்
வேற் படையாக சந்திர முகமுடையாள்
உன்னழகு அறிவிற்கு விதர்ப்பதேச இளவரசி
தமயந்தியீடானவள் ‘ என்றது. யாரது தமயந்தியென
நளன் காணாமலேயவளில் காதல் கொண்டான்.
மையல் மீறி அன்னத்தைத் தூதாக்கினான்.

*

அன்னம் தமயந்தியிடம் குளிரொளியுடையான், பெருந்தோளான்
நல்லாட்சியாளன், பெண்கள் மனங்கொள்ளை கொள்பவனென
நளன் பற்றியெடுத்துக் கூறியது. நளபுகழாரத்தில்
தமயந்தி மயங்கி தந்தையின் சுயம்வரத்திற்கு
நளனை அழைக்கிறாள். தமயந்தியழகில் மையலுற்ற
தேவர்களைவரும் நளனுருவில் சுயம்வரத்திற்கு வருகின்றனர்.
குழம்பிய தமயந்தி கண்களிமைப்பில் பேதங்கண்டு
நளனுக்கு மாலையிட்டு மகிழ்ந்து வாழ்ந்தனர்.

*

ஏமாந்த சனீசுவரன் வன்மத்தால் நளன்வாழ்வில்
பன்னிரு வருடங்கள் பீடித்து ஆட்டுவித்தான்.
சூதாடி நாடிழந்து, குழந்தை மனைவிபிரிந்து,
கார்க்கோடகன் பாம்பு கடித்து, தேரோட்டியாக,
சமையற்காரனாகி இரண்டாம் சுயம்வரத்தில் குடும்பத்தோடிணைகிறான்.
பல படிப்பினைக் கதையிதைக் கேட்டால்
சனிபாவம் தொடராது என்பது இறுதிவரிகள்.
சுருக்கமிது. விரித்து வாசியுங்கள் பலனடையலாம்.

*
_______________________________________     
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 29-3-2017
*
pink

485. 2008 கவிதை – ஆசி கூறும் காலைச் சேவல்.

சில பழைய புத்தக அடுக்கைத் துப்பரவாக்கிய போது
இந்தக் காற்று வெளியில் எனது கவிதை கண்டேன்.
2008

*

*

 

 

katruveli - 2

*

 

katruveli - 1.jpg-oo

*

*

12965393-se

Previous Older Entries