484. 5. குறுங்கவிதைகள் (13, 14,15)

13413066_1782090002077246_6719568626088052063_n

*

குறுங்கவிதைகள்

*

13

தொபுக்கடீரென்று அப்பா நீருள் குதித்தார்
தாங்க முடியாத சிரிப்பு பிள்ளைக்கு
என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பு
அதுவும் அம்மா போல வயிறழுத்தி
ஆகா!..இன்னொருக்கால் குதியுங்கோ அப்பா!
17-6-2016

*

poo

14.

29-6-16—இடை ஒடியாதோ பூக்களின் பாரத்தில்!
கூந்தலுக்குள் என்ன வைத்துக் கடத்துகிறாய்!..-
புன்னகையை மறைக்க மல்லிகை முக்காடோ! (பின்னோடோ)

*

IMG_3973.jpg-3.jpg-yy

*

15.

வரமான உலகில் வளமான தமிழை
வரம்பின்றி வாசி! அன்றேல் ஊமையாகு!
மடமையாக இருப்பதிலும் அறிவாளியாகு!
மனம் அழகை ரசிக்காவிடில் சிலையாகு!

 

Vetha.Langathilakam

Denmark-24-3-2017

*

*

1149328vh07ofmens

483. எங்கே மனம்!

bbb

ethaya matam

*

 எங்கே மனம்!

*

*

நியாயமாக நடக்காத உன் மனம்
அநியாயத்திற்கு வீணாகத் துணையான மனம்
வியாபிக்கும் இடம் எங்கே சொல்!
தயாள மனதை எங்கே தொலைத்தாய்!

பொங்குதே மனம் அமைதி இன்றி.
தங்கு தடையின்றி அன்று படித்த
தங்கமான நீதிக் கருத்துகள், நெறிமுறைகளில்
முங்கிய அந்த அமைதி மனமெங்கே!

போதுமெனும் மனமின்றி ஏனிந்தப் பேராசை!
மோதும் உணர்வு ஏன் வந்தது!
ஓதிய அம்மாவினாசைகள் எங்கு ஒழுகியது!
வாதிடவில்லை! பதுக்கினாயா! எங்கே மனம்!

கங்கு எரிந்தாலும் அச்சமற்று உள்ளதா!
சங்கே முழங்கத் தமிழ் பேசுதா!
எங்கே மனம்! நியாயமாக உள்ளதா!
அங்கே தங்கிடவை வீரம், துணிவை!

நீதிமன்றம் உன்மனம்! நாளும்
கோதும் நற் செயல்களால் கழிவுகள்
ஒதுக்க தேடு! எங்கே மனம்!
புதுப்பித்திடு! புனிதமாக்கு! துளசிதளமாக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 2-3-2017

*

ethayam

482. சத்திய சோதனை

1904049_698698750212867_5052261578001816809_n

சத்திய சோதனை

*

*

சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.

***

சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.

***

உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.

***

வேதா. இலங்காதிலகம் டெனமார்க்.

7-3-2017

 

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

481.- ஈ – முதலெழுத்துக் கவிதை.

eeyanna

*

– ஈ –    முதலெழுத்துக் கவிதை. 

*

ஈதலாம் வறியவருக்கு உதவுதலில் முன்னிடம்
ஈட்டினார் அன்னை திரேசாவோடு பலர்.
ஈகையாளனாக உலகில் எல்லோரும் ஆவதில்லை
ஈவிரக்கமுடன் தானமிடுவோர் உயர்வு பெறுகிறார்.
ஈடுபாட்டுடன் எழைகளுக்குக் கொடுத்தல் கருணை.
ஈண்டு வாழும் வரை தயாளராயிருப்போம்.
ஈன்றோரும் பெருமையுறுவர் அங்கவீனரை அணத்தால்.
ஈசனே! ஈச்சப்பியான வாழ்வெனக்கு வேண்டாம்.

*

(வேறு)

ஈரமுடை(அன்புடை) பெற்றோர் ஈரம் (கரும்பு).
ஈரம் (அறிவு) தந்தார் நன்றி..
ஈரம் (அருள்)பொழிந்தார் இறைவன்.
ஈரமானது(குளிர்ச்சி)இவைகளால் மனம்.

*

27-2-2017
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

Swirl divider v2

480. அச்சாணி இல்லா தேர் முச்சாணும் ஓடாது

 

puthumai-feb-20-17

 

தக்கபடி அச்சில் நிற்கும் ஆணி
சக்கரங்கள் கழலாது காக்கும் ஆணி
சக்கரக் காப்பாணி கழன்று விட்டால்
சக்கரம் மூன்று சாணும் ஓடாது.

நம்பிக்கையாம் அச்சாணி வாழ்வுச் சக்கரத்தில்
தும்பிக்கையாகும் இது வெற்றிப் பிறப்பிடத்தில்.
நம்பிக்கை நழுவிடில் புத்துணர்வும் மகிழ்வும்
வெம்பிப் பாழாகும் முயற்சியும் வெற்றியும்.

தலைமைத்துவம் எனும் அச்சாணி நிர்வாகத்தை
அலையாது கட்டினுள்ளே காக்கும் பார்வை.
நிலையான அன்பு உறவிற்கு அச்சாணி
அலையாத ஒழுக்கம் மானுடம் காக்குமேணி.

உறவிற்கு ஆதாரம் ஒட்டும் அன்பு.
உயிர் வாழ்ந்திட அச்சாணி உணவு.
உழவுத் தொழில் உலகிற்கே அச்சாணி.
உயர்த்திடும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்.

மனவளம் சிறக்க நூலகம் ஆதாரம்.
மழை வளம் சிறக்க மரங்களாதாரம்.
இழையும் ஆதாரங்கள் நிரந்தர அச்சாணிகள்.
இலக்கில்லா வாழ்வும் அச்சாணியற்ற தேர்.

தண்டவாளம் இன்றேல் புகைவண்டி ஓடாது.
அண்டமளவு மனித சாதனைகள், அவன்
வெண்டிரை (கடல்) அளவு முயற்சியால் தானே
கண்டிட இயலாத அச்சாணி இதுவே.

கடல் போல் காரியங்கள் செய்திட
உடல் நலம் பெரும் அச்சாணி.
உடலியங்க உயிரோட்டம் சுவாசம் தானே
உயிர் இயங்கும் உன்னத உத்தரவாதம்.

புலம் பெயர்ந்த வாழ்வு அசைய
நலமான மொழியே நல் அச்சாணியானது.
கால சக்கரம் சுழல தாங்குவது
அச்சாணி அனுபவங்கள், கற்பனைகள் தானே.

பணபலம், குண்டர் பலம் தேர்தலிற்கு
பணம் வாழ்விற்கு அச்சடித்த அச்சாணி.
மாற்றத்திற்கு அச்சாணி போராட்ட குணம்.
சினிமாவின் அச்சாணி நல்ல இயக்குனர்.

சிறுவர்கள் சமுதாயம் நாட்டிற்கு அச்சாணி.
சிறுவரான இன்றையவர் நாளைய தலைவர்.
சிறப்பு நினைவால் சிறப்பு நிகழ்விற்கும்
அதிட்டமீயும் அச்சாணி அவரவர் கையிலே.

 

வேதா. இலங்காதிலகம்.
 டென்மார்க்.- Feb- 2017

 

lines-stars-243923

479. 4.குறுங் கவிதைகள்(10-11-12)

17022370_1140201139439632_5389476834001913423_n

14 14-6-16

Vetha . L

10.
ஆதித் தொழிலைப் பாதியினர் மறந்தார்
படடினி உலகுக்குப் பாதை வகுத்தார்.
சேற்றை உழக்கினால் பசியாறச் சோறு
உழுவோன் மடி துழாவுதல் விதி.
ஏருயர நாடுயரப் பாடு படு!

Vetha.L

11134356_815628041824730_874016360_n

11.

உப்பக் காவுவதென்று அப்பா காவினார்.
இப்பொது சேறு படாது நானுன்னை.
பொய்யான சிரிப்பில் மறைக்கும் துன்பம்.
வாருங்கள் போவோம் வீட்டிற்கு நானும்
வக்கணையாய் உணவு சமைத்துத் தருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-6-2016–

12.

water-f

1-7-16

வெள்ளைக் கூந்தலழகி பள்ளி கொண்டு
அள்ளிக் கட்டாது அவிழ்த்த கூந்தலோ
—கொட்டுவது யார் கொள்ளைப் பாலை
இட்டு நிரப்பிட இயலாத ஊற்று
—புகை ஒரு புறம் யாரோ
பகைவர் பாலெடுக்கப் படை எடுப்போ!

Vetha.L

 

divider_172

478. ஆற்றங்கரையினிலே……

டென்மார்க்கில் முன்பு வந்த சஞ்சிகை ஒன்று.
அன்று இதில் வெளியான எனது ஒரு கவிதை.

*

arumbu-2

ஆற்றங்கரையினிலே…

arumbu-1

163664_469483907911_713827911_5799148_5756063_n

 

477. அன்னை

11598_585243608241965_422712515643263483_n

*

அன்னை

*

அகரமாகும் அன்னையாய் உலகில் நீயே
அகவொளித் திரியும் தைலமும் அன்பே.
அண்டமெல்லாம் பாச ஒளி வீசுபவளே
அப்பாவோடு இணைந்து உலகை ஆக்குகிறாய்.
அண்ணா, தங்கை, சகோதர உறவுகள்
அற்புதமாய்ப் படைத்து அகநிலையுறுதி தருபவளே.
அகலாத தாய்மையாம் மனவிதழ் கொண்டவளே.
அசுரனும் இளகுவான் அம்மா என்றால்

வேதா. இலங்காதிலகம்  டென்மார்க்.  6-2-2017
______________________ .

தாயே (எதுகை – யே)

*

இயேசுவே நீயுமென்
தாயே அன்பை
ஈயேனென்று சொல்லாதவர்-
ஏயே! (இகழ்ச்சிக் குறிப்பு) பேயல்லவே!
¤
ஐயே! அம்மாவே!
ஓயேன் எழுதுவேனுன்னைக்
காயேன் சிரியம்மா!
கையேற்பேன் பரிசினை.
¤
கையேந்தி வாழாதேயென
கையேட்டில் எழுதினாளம்மா.
சாயேனம்மா. கேட்டொழுகுவேன்.
சுயேச்சையாய் உயர்வேன்.
¤
தீயே என்றாலும்
நாயே என்றாலும்
தாயேயுனை வெறுக்கேன்.
நீயே தெய்வம்.
¤
நோயே வந்தாலும்
பாயே வேண்டேன்.
பேயே போன்று
போயே விடுவேன்.
¤
சேயே கூறுகிறேன்
மையே பூசினும்
தாயேயுன் கண்ணழகு.
வாயேன் கிட்ட.
¤
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-8-16

*

Samme  katu  enkum  ;-    

https://wordpress.com/post/kovaikkavi.wordpress.com/13350

*

big-blue-divider

475. வாழ்க்கை ஒரு நாடகம்.

mmmmm

 

வாழ்க்கை ஒரு நாடகம்.

வாழ்க்கை எழுதப்படாத நாடகம்
தாழ்ந்திடாத இயக்கம் தயாரிப்பில்
வாழ்ந்திடும் நாம் நடிகர்கள்.
வாழ்வதே எமது நடிப்பு
***
சீழ்க்கையடித்து ரசிக்கும் ஆடம்பரம் (பகட்டு)
சூழ்ந்திடும் கைதட்டல் கேடயம்.
ஏழ்மைக்கு இதுவொரு பாடகம் (சூதுவிளையாட்டு)
வீழ்ந்திடும் சுயம் அவமானம்!
***
ஊழ்வினை என்று ஏதுமில்லை.
தாழ்வாம் மனித நேயமிது.
அழுதாலும் நல்லவராய் முகமூடி
பொல்லாமை நயவஞ்சகம் இது.
***
வெலவெலக்கும் சொந்தக் கதை
இலக்கிற்காய் அடியெடுக்கும் சவால்.
விலக்கிட யாருமற்ற கர்மம்.
கலக்குகிறார் மாறு வேடத்தில்.
***
விழிகளில் சூரியக் கனவோடு
பழி பாவங்கள் தாண்ட
வாழ்வுக் கசப்புகளை இனிப்பாக்கும்
வழியென்று ஒப்பனை நாடகங்கள்.
***
விறைப்பான அத்யந்த நடிப்பு
சிறப்பான போலிச் சிரிப்பு
துறப்பில்லா மேடைத் திரை
இறப்பாம் இடைவேளை வரையாட்டம்.
***
மௌன மொழியும் நேரத்தில்
யௌவன முகமூடி ஆகிறதே
அகரம் தொட்டறிவு மயங்கி
பந்தயச்சாலை வாழ்வில் ஓட்டம்.
***
பந்த பாசம் அழித்து
முந்துகிறார் வெற்றிப் பந்திக்கு
ஓத்திகை இல்லாத நாடகம்!
முத்திரை பெறுவாரோ இறுதியில்!
***
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 3-7-2016
2680815j4f6wm8q9w

474. “கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

 

2-8-janu-17

“கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

வில்லில் இருந்து விடுபட்ட கணையாம்
கல்லும் (வன்)சொல்லும் ஒரே வினையம்.
சொல்லிற்கு உறுதி சிறந்த பல்லு.
பல்லு போனால் போகும் சொல்லு.
அன்பான சொல் சடுதியாய் முகிழ்த்தும்
இன்பிக்கும் இசையோடு பிணைதல் போலும்
அன்ன பல சூட்சும தாக்கங்;களாக்கும்.
வன்சொல் புதைக்க முடியாத கல்.
***

பொன்னகரம் அழைத்தேகும் அமைதிச் சொல்
அன்புப் பெருவெளி நகர்த்தும் சொல்
புன்னகைப் பூந்தளிர் தெளிக்கும் பூவனம்.
ஆன்மிகக் கடை திறக்கும் ஆலிங்கனம்.
” தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு ” திருக்குறளே
பாவினார் திருவள்ளுவர். உதட்டால் உதிர்ப்பார்
பாவியர் முள்ளான சொல் உள்ளாறாதது.

***

ஐம்புலன்களை வென்ற குற்றமற்றவர் ஐசுவரியமாய்
ஐயமின்றி இன்னமுதச் சொல்லை உமிழ்வார்.
ஆணவம் பொறுமையற்றவர் சினமோங்க ஏந்துவார்
ஆயுதமாகப் பிறரைக் காயமாக்கும் கல்
கல்லு விட்டால் நொறுங்கும் கண்ணாடி
சில்லு சில்லாக ஆகிடும் யன்னல்
மினா பள்ளத்தாக்கிலும் விடுகிறார் கல்லு.
கல் கவணெறிந்தால் குருவியும் நில்லாது.
***

நிதானம் இழந்து தன்னைக் காக்க
சூதானமற்ற சொற்கள் மனிதன் ஆயுதமாகும்.
ஆதனமாய் கருதும் உயிர் மொழிச்
சொல் கல்லாக, கூர் அம்பாக.
நெஞ்சச் சுவரில் அறையப்படும் வன்சொல்
பஞ்சல்ல இருள் போர்த்தும் சொல்.
வஞ்சகச் சொல் பொல்லாதது பாறாங்கல்.
சொல் விடாதோர் மௌனி, மதியூகி மட்டி.
***

சொல்லைக் கூட்டாக விட்டாலும், பல்லு
பல்லாகப் பிரித்தாலும் கருத்துகள் மாறுபடும்.
சொல்லெறிதல் அஞ்சல் ஓட்டமாகவும் தொடரும்.
அல்லல் தருமளவு பெரிதாகவும் நீளும்.
சுகமாய்ப் புரண்டு விழும் சொல்
அகத்தில் வெள்ளிக் கொலுசாகக் குலுங்கும்.
இகத்தில் நல்ல சொல்லை விட்டு
சுகமுடை உலகத்தை நாளும் சமைப்போம்.
***

வேதா. இலங்காதிலகம்   ஓகுஸ் டென்மார்க்.  2016- decem

493789nfy8xzi1n4

Previous Older Entries Next Newer Entries