67. பா மாலிகை (காதல்_தேவன்_விருது)

*
*
காதலர் தினக் கவிதைப் போட்டியில் #காதல்_தேவன்_விருது பெறும் காதற்பாவலர் Vetha Langathilakam அவர்களை இங்கே நடுவர் Sumathi Sumathi Shankar அவர்களோடு #காதல்_தேவன்_விருது பெறும் பாவலரகள்
மற்றும் விருதினை வடிவமைத்த பாவலர் குமார் சுவாமிநாதன் அவர்களோடு
காதல் தேவன் விருது 14.2.17-15.2.17

வேதா இலங்கா திலகம் Vetha Langathilakam   

வாழ்த்துவதில் மகிழ்வு கொள்ளும் நம்ம அமுதசுரபி நிர்வாகத்தினர்.
*
Kaathal thevan-22-3-17amutham
*

ஒ!…….காதல் தேவனா!…..
காதல் தேவி என்றால் நல்லாயிருக்குமே….
சரி பரவாயில்லை.. சிரிப்பு சிரிப்பாக வருகிறது..
உங்களுக்குப் பரிசாக எனது வலையில்
65 காதல் கவிதைகளை வாசியுங்கள் என்று கூறுகிறேன்.
மனமார்ந்த நன்றி. இதோ இணைப்பு……..https://kovaikkavi.wordpress.com/…/———————… கவிதை 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.

*

காதலன்றி உலகிலை

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

*

heartborder

 

 

 

66. பா மாலிகை (காதல்)

unkkena...nilamuttam

உனக்கென வாழ்கிறேன்.

***

புத்தியில் பயிரிடும் மானுட அகவிளக்கு
அற்புதத் தொண்டு, தொழிலாக எம்
கற்பித்தல் தெரிவிலென் இட மாற்றலுக்காய்
உற்சாகமான காத்திருப்புடன் உனக்கென வாழ்கிறேன்.
உறவை உயிராக எண்ணி அர்ப்பணித்திட
உலக வனத்தில் உச்சமாய் உலாவிட
பறவைகளாய் ஆசிரிய வானில் சிறகடித்திட
சிறப்பாயொரே இடத்தில் பணி செய்வோம்.

***

நிர்வாண மனங்கள் நிறைந்த உலகில்
சர்வமும் உணர்ந்து தமிழ் முத்துக்கள்
கோர்த்து வளரும் இளையோருக்கு அறிவுக்
கருவூல மாலையிணைக்க உனக்கெனக் காத்திருக்கிறேன்.
உணர்வெழுதும் உன்னின்பக் கவிப் பூக்கள்
உயிர்த்து வரும் அழகு மாந்த
அயர்வின்றிக் கையிணைத்து இறுதி வரை
இலக்கையடைய இங்கு உனக்கென வாழ்கிறேன்.

***

சங்காரம் செய்வோம் அறவீனத்தை! விழாது
எழுவோம்! இலட்சிய மதுரச முத்தாடுவோம்!
அகங்காரமற்ற அன்பு மன இராசாங்க
சுகந்தத்தில் புதைந்து வெற்றியால் இறுமாப்போம்.
அமிழ்தான மொழி இலக்கியம் பருகிட
தமிழென்ற வண்ண விரிப்பில் இழைந்தாட
குமிழுமன்பின் காப்புறுதியோடு இல்லறம் நெய்திட
அறுவடைக் காலத்திற்காய் உனக்கென வாழ்கிறேன்.

***

2-3-2017.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

ethayam

65. பா மாலிகை (காதல்)

12814698_740758996061492_251888590059564690_n

*

காதலன்றி உலகிலை

*

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.
_____________ .

pink

 

 

64. பா மாலிகை (காதல்)

unnodu

 உன்னோடு நானிருந்தால்

உன்னோடு நானிருந்தால் உன்னதங்கள் பெருகுமென்பாய்

என்னோடு நீயிருந்தால் சாதனைகள் பெருகுமென்பேன்.
முன்னோடும் எண்ணதில் உற்சாகம் முதலாகும்.
இன்னிசை யுருவாகும் அன்பு பெருக்கெடுக்கும்.
கன்னற் தமிழ் பின்ன வரும்.
சின்ன விழிகள் பூவாய் மலரும்.

காதலாய் அணைக்கும் காதற் குழந்தையால்
ஆதரவு உணர்வு பொங்கிப் பெருகும்.
கோதிடத் தேறிடும் சொல்லாத கலை.
பாதக நினைவுகள் தூர விலகிடும்.
சாதக எண்ணங்கள் ஒளியாய் விரியும்.
மேதகு புத்துணர்வு நாற்புறமும் பெருகிடும்.

இளமையின் ஊஞ்சலில் அழகு பெருகும்.
அளவற்ற அன்பு மழையாய்ச் சொரியும்.
தளர்வின்றி நாமும் தரமோடு நடப்போம்.
வளமான ஆனந்தத்தால் வரங்கள் நெருங்கும்.
உலகைப் பிடிக்கும் உளப்பாடு உருவாகும்.
உன்னோடு நானுமென்னோடு நீயும் கௌரவமாவோம்.

 

23-2-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.

 

 

ssssssss-c

63. வெட்கமென்ன பெண்ணிலவே

484313_389542217751778_100000880085147_1029172_139016638_n

வெட்கமென்ன பெண்ணிலவே

நாணம் என்னடி பெண்ணே! நானும்
காண கோணுகிறாய் ஏனடி கண்ணே!
நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு
நாற்குணங்கள் பெண்ணழகு இலட்சணம் தானே!!

***

பூந்தளிர் முகம் மறைக்கும் அந்த
காந்தள் விரல் பற்ற நிலவே
நீந்தும் முகிலாடை விலக்கு பெண்ணே
காந்தும் வெப்பத்தை வெட்க நிழலாலணை

***

வெட்கச் சிவப்புக் கன்னம் உன்
உட்கருத்தைக் கூறுதே! காட்சி தேன!;
இட்டமுடன் யான் நோக்க மண்ணையும்
சட்டென் யான் நோக்காக்காலென்னையும் நோக்குகிறாயே.

***

கதவிடுக்கில் ஒளிந்து நின்று பார்க்கும்;
கை விரல்கள் முந்தானை முடிச்சிடும்
கால் விரல்கள் மண்ணில் கோலமிடும்
காதல் சாலம் வெட்கமிது பெண்ணிலவே

***

.3-2-2017
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

775615emfrzryzxr

62. என் காதல் கவிதையும் நீயும்.

Vedha6

22-6-2011   உருவாகி  வந்தது. (வெளியானது)

 

 

 

bordertrans-kk

61. தெய்விகக் காதல்

12734154_10207515430461082_7693546037895988365_n

(போட்டிக்கு எழுதி 6ம் இடம் பெற்ற கவிதை.)
***
உய்தலிற்காய் உலகு வளர்தலிற்காய்
மெய்யாக உருவான இணைதலாய்
உய்யானம் காதலென அனுபவிப்போரும்
எய்யாமையாற் பலர் அவமதிப்போரும்.
***
மெய் உணர்ந்து மேவும்
தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்.
ஓய்யாரக் காதல் நிலையாகாது
நெய்யென உருகி அழிவது.
***
உயிரோடுயிராய் பூவோடு நாராயிணைந்து
பயிராகும் நேசம் உயர்ந்தது.
உறுதியானது உயரழிவு வரை.
இறுகினால் இன்பமேயதன் கரை.
***
தேடலும் காதல் கனிந்த
ஊடலும், பாடலும், ஆடலும்
இரவிவர்மன் வரைந்த ஓவியமே
பிரபஞ்சம் மயக்கும் காவியமே.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-2-2016     (உய்யானம் – நந்தவனம். எய்யாமை – அறியாமை.                         ஓய்யாரம் – பகட்டு)
lines-b

Previous Older Entries