58. பொறுத்திரு!

12234849_10206971685667802_9095139822821523432_n

 

பொறுத்திரு!

 

 நீல இரவினில் மயக்கும்

கோல விழிகளின் பரவசம்

சீலனுன் இதயம் திருடும்

சாலக்காரனின் அழகு தரிசனமே!

***

அவசரப்படாதே! அவன் உன்

அருகில் வரட்டுமே! ஏன்

அழகு மங்கைகள் அவன்

அழகில் மயங்குவாரெனும் பயமோ!

***

முத்துக்களும் மின்னும் மணிகளுன்

சொத்தல்ல! தூய்மையாம் அவன்

பத்தரை மாற்று அன்பின்

உத்தம இதயமேயுன் சொத்து!

***

கன்னல் கன்னியே! காதல்

இன்னல் நீங்கும் ஈதல்!

என்றும் இருவழிக் கூதலால்

இன்னும் எத்தனையோயின்பம் பொறுத்திரு!

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

19-11-2015

Ha_3610png0002

57. இளஞ் சிவப்புக் காதல்

12111964_1637477273207592_6064421111639268644_n

 

இளஞ் சிவப்புக் காதல்

(அழகம்- கூந்தல். குழகுதலாய் – கொஞ்சி விளையாடுதல், கலத்தல்.
கழகம் – கல்வி பயிலுமிடம்.)
***
மலரென்ற உடலிங்கு அசையுது
புலனைந்தும் தடம் மாறி உலையுது
மலரேந்தும் நினைவு மகிழ்ந்தாடுது
அலங்கார சாத்திரம் ஆராயுது.
***
அழகமேந்தும் வதனம் நிலவானது
குழகுதலாய் என்னை இழுத்தது.
கழகமாய் என்னை வரவேற்றது.
பழகிட மனம் துடித்தது.
***
நிழலாவாளோ பாசமிகு அன்பிற்கு!
பழமாய் கனிவாளோ பசிக்கு!
வழங்குவாளோ தன்னை எனக்கு!
முழங்குமா காதல் தீபம்!
***
இளஞ்சிவப்பு அழகில் தனியன்
இளகி உருகுதல் காதலின்
களமான குணம்! மனிதன்
தளமிடலாம் காதலிற்குத் தரமுடன்.
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-11-2015
***
3356826ujko9qbny6

56. கன்னற் காதல்

58413_252084991594227_338192240_n

கன்னற் காதல்

தென்னஞ் சோலையிலே தென்றல் வீசுகையில்
கன்னம் குழிவிழவே காத்திருப்பாள் எனக்காக
உன்னை நினைக்கையிலே உள்ளம் இனிக்கையில்
என்னை மறக்கிறேன் பூத்திருக்கும் உனக்காக

சொன்ன சொல்லையே நினைவாகக் காத்திடுதல்
என்ற உணர்வென்றும் பவுத்திரக் காதலுக்கே
அன்றொரு நாளருவிக் கரையில் அந்த
உன்னருகு அனுபவம் இன்றும் இனிக்குது.

தென்றலின் சுகத்தில் குளிர் நீரிலமிழ்ந்து
ஒன்றாய் நனைந்தது எங்கள் பாதங்கள்.
இன்னல் கரைந்தது மின்னல் புகுந்தது.
பின்னும் கரங்களால் மனதில் இன்பமடி.

தென்னோலை காற்றிசையில் நடனம் ஆட
கன்னம் சிவந்திட பயத்தில் நீயங்கு
பின்னற் சடையைப் பின்னிப் பின்னி
அன்னையின் ஏச்சுக்கு அகத்தில் பயமானாய்.

என்னைப் பிரியாதென்றும் இணை சேர்ந்து
சின்ன மகனைச் சிற்பமாய் செதுக்குவோம்
அன்னமே பேதையேயென அகத்தில் எண்ணாதே
என்ன சொல்கிறாய்! இதற்குச் சம்மதமா!

மென்மையோ வன்மையோ உன் அன்பு
பன்னீர் தெளித்தலாய் என்னைக் களிப்பாட்ட
மன்னனும் இராணியுமாய் மகிழ்ந்து வாழ்வோம்.
இன்னமுத வாழ்வை என்றும் இளமையாக்குவோம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-10-2015.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

55. காதல் தேன் குடிக்கும் இணை…

11063893_982928191747440_4112471955561398157_n

காதல் தேன் குடிக்கும் இணை…

மான் நீர் குடிக்கக் காதல்
தேன் குடிக்கும் இணையை அப்படி
ஒயிலாகப் பார்க்கும் அழகுப் பறவை
மயிலே நீயும் துணை தேடுகிறாயா!

என் நிலை மறந்து உன்னில்
நான் சாய நீ எங்கே
உன் சிந்தையைச் செலுத்துகிறாய் கண்ணா!
என்னிடம் இறங்கி வா கண்ணா!

குளிரோடை இன்பத்தில் பசும் சோலைக்
குளுமையில் யாருமற்ற இத் தனிமையில்
பச்சைக் கிளிகள் போல் பல
பசுமைக் கதைகள் பேசுவோம் கண்ணா.

கண்ணன் ராதையோ முருகன் வள்ளியோ
கண்ணிறைந்த காதலுடன் மயங்கும் தேவதையே
எண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே!
எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-5-2015.

blackwith-colour

54. படகு வீடு.

padaku-10-a

படகு வீடு.

பனியில்லாக் கூடு படகு வீடு
இடம் சிறிது அடடா! அற்புதம்!
வித்தியாச இருப்பிடம் விந்தை அனுபவம்.
நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.

சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால்.
தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகினுள்.
தேசுடை இயற்கை தேனடையான கூடு.
தேனூறும் நிலவு தேனான அனுபவம்.

தண்ணீர் படை சூழ்ந்து தரையாக
தாரகைகள் வெள்ளி முறுவல் விரிக்க
அம்புலி இல்லாத வானில் அம்சமாய்
நம் அன்பு ஒளி நிலவானது.

மெல்லிசை அலை தவழ்ந்து படகு
இல்லம் நிறைந்தது. புனிதம் பின்னி
மெல்ல மெல்லக் கவிதை நெய்தது.
சொல்லவியலா உணர்வுகள் உள்ளம் நிறைத்தது.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-4-2015

(தேசுடை – ஒளியுடை. தேனடை- தேன கூடு)

imagesCAX5K52V

53. தாதான்மியக் காதலுரு…..

11075315_10205201894081371_1963618067_nதாதான்மியக் காதலுரு…..

தாஜ்மகால் காதலுக்கு என்ற

தாக்கமோ காதல் சிலை!

தலையாம் மலையுச்சியில் தவம்!

தாதான்மியக் காதல் உரு!

 

இயற்கையை ரசிக்கும் உள்ளம்

இணைவிழி இணை மனத்தோற்றம்

இதுவன்றோ காதல் என்ற

இன்னுயர் உதாரணக் கல்லுரு.

 

ஊனுயிராய் உலவிக் கலக்கும்

ஊன்றுகோல்! அன்பு ஊற்று!

உன்னதம்! காதல் இறைமை!

இத்தேடல் பிரபஞ்ச  மயக்கம்!

 

இவ்வாடல் உலக இயக்கம்!

காதலியல் ஒழுக்கம் தரும்

காதல் செய்யுங்கள் மனுகுல 

காந்தி! மாசு அறுக்கும்!

(தாதான்மியம் – ஒன்று பட்டிருக்கை)

https://www.vallamai.com/?p=55640

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்  

23.3.2015

இரண்டாவது வரிகள்-

உயில் விருந்து.

”…உலகத் தொல்லைகள் வேண்டாம் வா 

உச்சிமீதமர்ந்து காற்று ஊடாடாது இணைவோம்

உறைந்து போவோம் இன்பக் காதலில்

ஊர் சுற்றுவோர் கண்களிற்கு விருந்தாவோம்…”

உயில் எழுதி பணமும் வைத்த

உல்லாசப் பயண மலையேறும் சோடியின்

உருவச் சிலையிது உருவாக்கியவர் வாழ்க!

உவப்பான அற்புதச் சிற்ப விருந்து!

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

24-3-2015

பாராட்டுப் பெற்ற வரிகள் காண இணைப்பு….இதோ!…

http://www.vallamai.com/?p=55903

Center-Divider

52. பயன் ஈயும் காதல்

893239_382534188545770_1636332049_o

பயன் ஈயும் காதல்

உயிரை உய்விக்கும் உன்னதம் காதல்

பயிராகி வாழ்வில் பயனீயும் காதல்.

செயிக்கும் தாரக மந்திரம் காதல்!

ஒயிலாகி வாழ்விற்குப் பலம் தரும் காதல்.

காமதேவனுக்கு யாகமோ காதலர் நாள்!

காமன் திருவிழாவோ காதலர் நாள்!

காமன் முதுகேறும் காதலர் வாள்

காமம் நிறைந்தால் புனிதமழிக்கும் தேள்!

 

காதல் களவாடும் இளமைக் காலம்

காதல் நதியின் இன்பப் பாலம்!

காமன் மலர்ச் சாரல் தூவல்

காதற் கலையின் சித்திரக் கோலம்!

காதல் தீ பனியாகிக் கொட்டும்

காதல் பட்டம் கண்களால் வானெட்டும்.

காதல் மாளிகை வார்த்தைகள் கட்டும்.

காதல் கவிதைகள் மழையாகப் பொழியட்டும்!

எல்லோருக்கும் இனிய காதலர் நாள் வாழ்த்துகள்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.1

3-2-2015.

3356826ujko9qbny6

51. அன்பின் எல்லைகள்

Unavngivet

அன்பின் எல்லைகள்

(அன்பின் எல்லைகள் இரண்டாகத்தானே இருக்கும்!
விரும்புதலும் வெறுத்தலும்.
இதற்குள் பல அடங்குகிறது.
அலட்சியப் படுத்தி உதாசீனப் படுத்தும் அன்பும்
அன்புக்காக உயிர் கொடுக்கும் அன்பும்.
இதையே கூற வருகிறேன்.)

பச்சைக்கிளி அவன் விருப்பத்தை
அச்சையாய் (வேதவாக்காய்) அன்பினால் செய்கிறாள்.
இச்சைப்படும் அவள் விருப்பங்கள்
கொச்சையாய் (இழிவு), நிராகரிப்பு, ஏற்பில்லை.
கெச்சை (பெருமித) நடையில் நழுவுகிறான்.
பச்சைப் புண்ணாகும் இதயம்.
சச்சை(ஆராய்ச்சி) செய்தால் இவன்
பச்சை(அநாகரிக) ஆண் மகனே.

மின்மினிகள் காதல் வெளிச்சமிடும்
நான் எல்லைகள் விடுபட்டும்
அன்பு எல்லைகள் பரந்தவன்.
அன்பே உனக்காய் என்றும்
தன்னைப் பெண்ணுக்காய் மாற்றும்
இன்பச் செல்ல மொழியாளன்.
அன்பின் மேலாண்மை கொண்டவனும்
தன்னலமற்றவனும் உலகில் உள்ளான்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-2-2015.

butterfly- 3

50. வருவானா ராமன்!…..

P6020059
(ஓவியம்:- இணையத் தோழி சகோதரி மனோ சாமிநாதன் வரைந்தது.)

வருவானா ராமன்!…..

ஒரு வசந்தம் தேட
ஒருத்திக்கு ஒருவனாகயிவள்
ஒரு மனப்பாடமைந்த
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

பெருவெளிப் பிரபஞ்சத்திலிவள்
இருளுலகம் காணுமொரு
திருமண வாழ்வு தவிர்க்க
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

அரும்பும் பொழுதிலென்னையும்
கருகும் பொழுதிலின்னொருவளையும்
இருக்கை கொண்டவனல்லாத
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

ஒருமைப் பாடுடைய உண்மைக்
கருத்தாளி, கருணன், கிரகபதியை
தருணனாம் திருமகனை உருத்தாக்க
வீர ராமனைத் தேடுகிறாள்.

கையல்ல இதயம் பற்றும்
வையகம் மெச்சும் கைகாரனாகத்
தைரியமாய் மீசை முறுக்கும்
வைரக்காதல் ராமனைத் தேடுகிறாள்.

(இருக்கை –குடியிருப்பு. ஒருமைப்பாடு – ஒற்றுமையுணர்வுடைய
கருத்தாளி – அறிவாளி. கருணன் – அருளுடையவன்.
கிருகபதி – வீட்டுத்தலைவன். தருணன் – இளைஞன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

imagesCADKKMCK

49. அங்கொருத்தியா!

1005506_513913305363503_1577338198_n

அங்கொருத்தியா!

***

சொற்கள் நந்தவனத்தி லிவள்
புற்களில் புரள்வது விரகத்திலா!
கற்பனைச் சொல்லரங்கத்தில் தில்லானா
அற்புத அத்தர் வாசனை!

***

அலைக்கூட்டத் தழகு மொழி
விலையின்றிப் புரளுது கரைசேர
குலைகுலையாய்த் திராட்சை யுருளும்
குளுகுளு காட்சிச் செழுமையது.

***

அவதி யாற்றாமை அழகியலாக
அன்பு அணைப்பு முத்தமாகி
இன்பக் காதல் சுவராகி
அரண் எழுகிறது மொழியாகி.

***

தனை விலக்கியதை யேற்காத
தலைவணங்காத் தன்மை
தொலையாக் காதலாய்க் கரைபுளுது.
அலையுமவன் மனதில் அங்கொருத்தியா!

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-7-2014

 

Divider_Pink_Heart_001

Previous Older Entries Next Newer Entries