41- அம்மாவின் பதினெட்டாம் திதி.

amma

அம்மாவின் பதினெட்டாம் திதி.

ஆராரோ! ஆராரோ! ஆம்மா!
யாராரோ வருவாரே வாழ்வில்
வாராதே அம்மா நீயாக!
சோராதே மனமுன் நினைவாலே!

பதினெட்டாய் வந்த திதியிது
நதியோட்டக் காலங்கள் களன்றது
நிதிப் பெட்டகம் உங்கள் நினைவது
குதியாட்டம் அப்பாவையும் இணைத்து.

எங்களிற்காய் ஓயாது உழைத்து
உங்களிற்காய் ஓய்ந்து தூங்குங்கள்!
திங்களிற்கு அருகில் அப்பாவோடு
திருப்தியாய் தூங்குங்கள் ஆராரோ.

அன்பு முத்தங்கள் ஆராரோ
இன்னும் முத்தங்கள் அப்பாவிற்கும்
என்றும் ஏணியாகும் இருவரன்பும்
நன்றே வழிகாட்டட்டும் ஆராரோ!…

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-5-2014

anjali-2

40. இன்னுமெந்தன் காதில்…

amma

இன்னுமெந்தன் காதில்…

இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்
பின்னுகிறது பழைமை வேதமாக!
இன்னுமெந்தன் கனவில் உருவம்
சின்னத்திரை போல் மின்னுகிறது!
இன்னும் நீங்கள் பூவுலகில்
பின்னும் நினைவோடு தானம்மா.

நீங்கள் இல்லையென்று எதற்காக
நானிங்கு கலங்க வேண்டும்!
நீங்களென்றும் என்னுள் தானம்மா
நான் மறந்தாலன்றோ விலகிட
நீங்களென்னை விட்டுப் போகவில்லை.
தேன் நினைவு கனவிலுமென்றும்

பொறுமையாம் பெருமாயுதம் தந்தீர்கள்
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து
பக்குவமாய் நடை பயிற்றனீர்கள்
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று.
என் மனிதத்தின் சாவியே
என் அப்பாவுடன் நீங்களுமன்றோ!

விநாயகராய் உங்களைச் சுற்றினேன்
விளக்கமிகு வாழ்வுக்கனி யேந்தினேன்.
அன்னையர் தினமெனவொரு நாளேன்!
குன்றிடாத நினைவுகள் என்றுமே!
நன்றிகள் நவில்வது மென்றுமே
நான் எண்ணுவதும் என்றுமே.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2003.

anjali-2

39. புரிந்துணர்வு.

P1040865

*

  புரிந்துணர்வு.

 

வெளியுலக முதலுறவு அம்மா

துளியுதிரத் தொடர்புறவு அப்பா.

வழிமுழுதும் இரு உறவும் தப்பாது

மொழியோடு உரு தருமே ஒப்பேது.

 

முனிவோடு முயன்று நம் தனிமையை

கனிவோடு தவிர்த்திடும் நல் அக்கறையாய்

இனிய உறவாம் உடன் பிறப்புகளை

இணைத்தனரிருவரும் எம்மின்பக் கூட்டுறவை.

 

உழைப்பு, ஊக்கம், உதிரம் எமக்காய்

உணர்ந்து உவப்பாய் அன்பாய் உதிர்த்தனர்.

உன்னத நற்பெயரை அவருக்காய் உலகில்

உணர்ந்து நாம் உயர்வாய்க் கொடுக்கலாம்.

 

பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு

பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு

என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்

அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

1-8-2004.

 

 

floral-divider_9_lg236

38. பரிணாம மந்திரம்.

3

பரிணாம மந்திரம்.

 

உருகி ஓடும் பனியாறாய்

பெருகும் அன்பு பேராறாய்

தரும் நேசம் அமைதியானது.

பெரும் ஆதரவான கைப்பிடியது.

 

 

கருவோடு திருவான பெருமையது.

பருகிடும் பெற்றவர் பாசமது        

குருவானது. நாம் பெரும்  தருவாக

இருவரும் ஒருமையாய்த் தருவது,

 

 

 

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக

சில்லறையின்றிப் பெறும் தூயது.

நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.

 

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

 18-6-2010.

 

 

 

 

clipart_purpleline2

37.அன்னைக்காக….

 

 

அன்னைக்காக….

 

மேகத்தில் மின்னும் நட்சத்திரம் – என்
தேகத்தை ஆக்கிய உயிர்ச்சித்திரம் -என்
தாகத்தில் பாலீந்த தாய்ச் சித்திரம்.
ஈகத்தில் நீயொரு உயர் சித்திரம்.

தேவையைக் குறிப்பால் உணர்ந்து
சேவையினை உவந்து செய்து
பூரண சேவையில் தினமும்
பூவுலகில் என்னைப் பாவையாக்கினாய்.

ன்னையென்ற பெயரோடு நீயே
தென்னையாய் உயர்ந்த தாயே
என்னைக் கண்ணாக நீயேந்தி
வண்ணமாய் வாழவைத்தாய் நன்றி.

பூரண உன் சேவைச் சிறப்பிற்கு
பூரிப்பான ஒரு சமர்ப்பணமிது.
பூவை உன் மகளின் கவிப்பூவிது.
சேவை உன் தாய்மைக்குச் சிறப்பிது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2005.

 

 
 

பெற்றோர் மாட்சி. 36.

 

 

பெற்றோர் மாட்சி. 36

10-1-2009.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குவதே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.

27-12-2008
எண்ணங்களால் நமக்கு நன்மை சேர்த்து,
திண்ணமாய் பிறருக்கும் தீங்கு செய்யாது,
வண்ணமான சிந்தனை பரவிடு…
என்ற சூழலில் வளர்த்து
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக.

20-12-2008.
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கும்
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதிதுவென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கு.
காக்கும் இச்செயல் எமது நம்பிக்கையை.

6-12-2008.
தித்திப்பான தமிழைப் படிக்க
கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்
துவர்ப்பாயும் தூண்டினர் பெற்றோர்.
அறுசுவையாகத் தமிழையின்று  அனுபவிக்கிறோம்.

23-11-2008.
பிறந்தேன். பிறந்து சுயமான திறமையில்,
பிறரோடு கலந்த கூட்டிணைவில், நிறம்
பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி,  வாழ்வதற்காகவே
நான் வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
இப்புவியில் பிறந்தேன்.

22-11-2008.
நம்பிக்கை பெற்றவரில் கொண்டு நாமும்,
எம்மை நம்பி மனமிணைத்துப் பெற்றவரும்
வாழ்கிறோம். தம்படி கூட நம்பிக்கையிழந்தால்
தரணி வாழ்வு அர்த்தமின்றிப் போகும்.
தம் வழிகாட்டலில் எம் நம்பிக்கையை
பெற்றவர் வளர்க்க வேண்டும்
சிறந்த தன்னம்பிக்கையாக!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
வலையேற்றம்:- 28-8-2011

தம்படி –  அணா நாணயத்தில் 12ல் ஒரு பாகமாகிய பை (பழைய நாணய முறையில்). a pie equal to a twelfth of an anna ( under the old coinage)

 

 

                         
 

 

பெற்றோர் மாட்சி. 35.

 

 

பெற்றோர் மாட்சி. 35.

18-5.2008.
நிறைவு – நிறைந்தது என்பது அங்கு குறைவாயிருக்கும். குறைவற்ற பேராசைக்காரர் எம் இறையான பெற்றோர். தம் பிள்ளைகள் இமயப் புகழ் பெற்றிட இணையில்லா ஆசையுடையோர்.  இவர்கள் எண்ணம் எம் நடவடிக்கையைச் சீராக்கி நிலைக்க வைக்கிறது.

28-5-2008.
உறவுகளின் தொகுப்பு வாழ்வு. திறவுகோல் இங்கு பெற்றவராகிறார். தினம் எம்மை வழி நடத்தி, திகட்டாத உறவுகளை இணைத்து, திறமையாக வாழ்க என்று எம்மைத் திறம்பட நடத்துகிறார்கள், வாழ்வை உறவுகளின் சங்கமமாக்கி.

20-7-2008.
” தூங்கிய பொழுதாக முயற்சியின்றி வாழாதே! ஏங்கிய பொழுதாக இவை போய்விடும்! தீங்கு நீங்க முயற்சி செய்திடு!”…. பெற்றவரிடம் இருந்து வாங்கிய அறிவுரை ஓங்கி ஒலிப்பதால், சோம்பலை ஒதுக்கி நன்றியைத் தூது விட எழுகிறேன் தூக்கத்திலிருந்து.

18-10-2008.
குழந்தையிலிருந்து எம்மைக் குறையின்றி வளர்க்கும் பெற்றவரின் குறிக்கோள் சீரும் சிறப்புமாகக் குன்றில் எம்மை ஏற்றுதலே. அழவைத்து அவர்களுக்கு ஆக்கினை கொடுத்து அறியாது வளர்கிறோம் நாம். குறைகள் கொடுக்காது அவர்களைக் குனிய விடாது வளர்வோம், நட்சத்திரமாவோம் என்று பெரியவரானதும் எண்ணுகிறோம். அப்போது பெற்றவர் எம்முடன் இல்லை.

2-8-2008.
நித்தமும் முத்தத்துடன் சத்தான மொழிகள்
கொத்தாகத் தரும், அன்புப் பெற்றோரின்
உத்தம நோக்கத்தை நிறைவேற்றும் விழுதாக,
வித்தாகப் பிள்ளைகளை ஆக்குவது
சத்தமில்லாத யுத்தமிப் புதிய உலகில்.

9.8.2008.
முத்து பவளமென எம்மைத் தம் சொத்தாக ஏந்திய பெற்றவருக்கு, ”தத்தெடுத்தவர்களாக பிள்ளைகளை எண்ணுக”வென்பது, புத்தம் புதிய சேமநல சமூகச் சிந்தனை. எத்தனை பேர் இதில் நீந்திக் கரையேறுவார், எத்தனை பிள்ளைகள் முத்து மாணிக்கம் ஆவார்!

10-8-2008.
தவழ்ந்த மடியில் அவிழ்த்த எண்ணங்களின் நேர்கோட்டில், கவிழ்ந்து விடாது காலத்தைச் செலுத்து என்று மகிழ்ந்து கவனமாக வளர்த்தனர் பெற்றோர். மதித்து அவ்வழி நடத்தல் உயர் வாழ்விற்கு உறுதியுடைய தளராத படி.

16.8.2008.
பக்குவமாய்ப் பேசிப் பழகி, அன்பில் சிக்க வைத்து, பாசத்தைப் பொழிந்து சொக்க வைப்பவர் எமது பெற்றோர். அக்குவேறு ஆணிவேராய் அவ்வன்பு அழிந்திடாது இணைத்து, பல படிகள் உயர நடப்பது மிக்க பொறுப்பான எமது கடன்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(uploaded.17-7-2011)

 

                         
 

34. ஏணிப் படியான அன்பு.

 

 

 

ஏணிப் படியான அன்பு.

19-4-2008.
மாணிக்கம் முதலாம் நவமணிகளும், ஆணிப்பொன்னும் கூடக் காணிக்கையாகாது பெற்றவரன்புக்கு. ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர்,  நாணிடத் தேவையில்லை. மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்.

” எம்மை உதாசீனம் செய்வோரைப் பொருட் படுத்தாதே. அம்மணமாக அல்ல, நீ ஆயிரம் திறமைகளுடன் இம்மியளவும் தயங்காது தொடர்ந்து முன்னேறு.”  அம்மா, அப்பாவின் புத்திமதி இது. இம்மட்டும் அப்படியே தொடர்கிறேன். கம்பீரம் எம்மை வந்தடையப் பெற்றவர் ஆசி துணையே. எம்மைப் பெற்றவரை மதித்தால் உரிய சம்பளம் செம்மையாய் வந்து சேரும்.

இயற்கை தந்த உறவு பெற்றோர். செயற்கையில் உறவாகப் பலர் தொற்றுவார். மயக்கமும் தந்து மாயமும் செய்வார். வியக்கும் உறவான பெற்றவர் பாசமே, தயக்கம் காட்டாது தனியே துடிப்பது. தவறிடாது அவரைப் போற்றி நல்வாழ்வு வாழ்வோம்.

விழியோரம் அன்பு கசிய, களிகொள்ளும் பார்வையாய்,  ஒளிச்சுடராக அன்பு காட்டி வழி காட்டிய பெற்றோரே, வழி வழியாக நீங்கள் தந்த பண்புகளை எழிலாக எடுத்து, ஆயிரம் அனுபவங்கள் பெற்றோம், பெறுவோம். அவரணைப்பில் ஆதரவு துளியும் குறையாது, அவரன்பை ஆராதிக்காத உள்ளங்கள் அவர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுங்கள். மறுபடி வராது இந்த ஜென்மம்.

கருணை மனம், தென்றல் வீசும் வாசல், அருமையாக அன்போடு  பிணைத்து, திருவாக பெற்றொர் ஊட்டிய விடயங்களை  நாம் பெரிதாக எடுப்பதில்லை. அமுத வாசலிது. கருமை குணங்களை விலக்கி, அனைவரும் கருணாமூத்தியாய் எம் உள்ளத்தை வளர்ப்போம்.

26-4.2008.
சிறையல்ல உலகு. சிலவற்றைச் செய்யப் பிறந்தாய் என்று நற் பண்பெனும் மறை ஓதி உருவாக்கிய போசகர்கள், இறைவன் தந்த பொக்கிசம் பெற்றவர். முறையாக இதை உணர்ந்து, குறையின்றி அமைக்கும் வாழ்வே வரம்.

27-4-2008.
அழுதவர் அழுகையை நிறுத்தும் , இழுக்கற்ற பாசம் பொழியும், தொழுகைக்குரிய பெற்றவர் விரும்புவது, முழுவதுமான எமது பதில் அன்பைத்தான். மதிப்புடைய பதில் ஆதரவைத்தான். மிதிக்காத அந்த அன்பால் தானே நாம் எழுந்தோம்.

நிலா போன்ற அன்பெனும் ஒளி, உலாவியது பிள்ளைகளுக்காய் பேதமின்றி. பலாச்சுளை போல் இனிக்குமதை, சகோதரர்கள் நாம் குலாவி மகிழ்ந்து உயர்ந்தோம். குறையின்றி அவர்களை இறுதி வரை காப்போம்(காத்தோம்). எம் வாழ்வில் அவர்கள் தானே வானம்.

4-5-2008.
உறவே உலகின் இணைப்புச் சங்கிலி. குறையே இன்றி அதைப் பேணுதல் நிறைவே. உன்னத பெற்றவர் அன்பு வாழ்வில் கறை துடைத்து, உயிரின் கலங்கரை விளக்காகிறது. அறவே விலக்காது பெற்றவரை அணைப்போம். நறவான அவர்கள் உறவு உலகில் உயர்வே! உயர்வே!

17-5-2008.
சொந்தம் கொள்ளும் பெற்றவா, உறவின் சந்தம், அன்பு ஆதரவு எனும் பந்தம், பகிர்தலின் உருவம் தான். அந்தம் வரை தொடர்தலில் தான் உண்டு சொர்க்கம். முந்துவோம். இதைப் பிந்தாமற் பகிர்வோம். வந்திடும் வாழ்வில் நிதமும் சொர்க்கம்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

          

 
 

பெற்றோர் மாட்சி 33.

 

 

 

பெற்றோர் மாட்சி 33.

 

17-11-2007.
சொர்க்கம் என்ற வாழ்வை இனிமையான
வர்க்கமாக்கு என்று பெற்றவரெத்தனை
தீர்க்கமாய் எம்மை வளர்த்தார்.
தர்க்கங்களும் தியாகங்களுமாய் வளர்த்தார்.
சொர்க்கம் கையினில் வருமென்று
வேர்க்க விறுவிறுக்க நாமும் பாடுபடுகிறோம்.

16-9-2007.
எங்கள் வாழ்வின் கலங்கரை விளக்குகள்
பொங்குமனுபவ, ஆதரவின் அரிச்சுவடி எழுத்துகள்.
மங்காத பாசமுடைய இனிய பெற்றவர்.
பொங்குமன்பின் அட்சய பாத்திரங்கள்.
இங்கிவ்வுலகில் வாழும் பேசும் தெய்வங்கள்.
எங்கும் வியாபித்த இறைவனுக்குச் சமமானவர்கள்.

ஆவணி-2007.
பெற்றோரின் ஆதரவின்றேல்
முற்றாத பிஞ்சு மழலைகள்
சற்றேனும் முன்னேற முடியாது.
வற்றாத அன்பிலும், அனுபவத்திலும்
குற்றாலம் அருவியில் குளிப்பதாய்
பற்றும் நம்பிக்கையில் நாம்
குவிப்பது வெற்றிகளையே.

15-9-2007.
துயர்களைத் துரத்தத் துணையானவர்கள்.
துணிவைத் துடுப்பாகத் தர முயன்றவர்கள்.
துருவநட்சத்திரமாக எம் மனதில் உள்ளவர்கள்.
துடிப்புடை எமதுயர்வின் சிந்தனையுடையவர்கள்.
துலக்கமாகக் கூறமுடியும் வேறு யாரது?
துயிலாத கண்ணாகவெமைப் பாதுகாத்த பெற்றோரே.

24-1-2009.
முதியோரான பெற்றவர் தரும்
முதிர்ந்த சிந்தனைகளை நாம்
மனமுவந்து ஏற்று நடக்கலாம்.
முகமூடியற்ற அனுபவ உரையது.
முன்னுரையாகுமிது பேரக்குழந்தைகளுக்கு.
முதன்மையான வழிகாட்டியுமாகும்.

தை -2009.
பூமியின் வாழ்க்கை, உறவினால்
பூத்துக் குலுங்கக் கிடைத்த பொக்கிஷம்.
பூமி போல் பொறுமையுடையவர் பெற்றோர்,
பூப்போல் அவர்களைப் பேணுங்கள்.
பூமியில் உங்கள் பாதை நிம்மதியில் பூக்கும்.
பூக்குமேயதனால் சிறந்த வாழ்வு அனைவருக்கும்.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(முதற் படம் – நன்றி ஆனந்தவிகடன்)

 

                         

 

 
 

32. அம்மா.

அம்மா.

 

பத்து மாதம் கருவாய் வயிற்றிலெமை
மெத்தக் கவனமாய் சுமந்தாயம்மா!
முத்தாய், சத்தாய், தலைமகளாயெனை
பத்திரமாய் நெஞ்சிலும் சுமந்தாய்!

உருகியோடும் பனி ஆறாய்
பெருகும் அன்பு பேராறாய்
பெரும் ஆதரவான கைப்பிடியது.
தந்திட்ட நேசம் அமைதியுடைத்து.

மனம் நிறை அறுசுவையுணவு
குணம் நிறையவளது பண்பு
இனமணைத்து வாழும் கூட்டுறவு
பணக்குறையைச் சமாளிக்கும் சாதுரியம்.

அம்மாவொரு அரசியல்வாதி போல்
அன்பு மந்திரியாய் அப்பாவிற்கு!
இன்ப இல்லற அரசியாயவள்
இனிய முன்மாதிரி எமக்கென்றும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2011.

http://akkinikkunchu.com/2017/05/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF/

அம்மா.

அம்மா என்றால் அன்பு
மம்மா மம்மியும் அன்பு.
தெம்மாங்கு இனிமை அம்மா.
தெய்வீகப் பெருமை அம்மா.
*
 
அன்புருகி ஆசையாய் பெருகி
இன்பத்தின் எல்லையில் உருவாகி
ஓன்பது மாதம் பொறுத்திருந்து
ஓருயிர் தருபவர் அம்மா.
*
 
 எல்லையில்லா அன்பு! இதற்கு
இல்லை எதுவும் ஈடு!
நல்ல அம்மா அப்பாயிணைவு
இல்லாண்மை பெருக்கும் உறவு.
*
 
வல்லமைப் பெற்றோரால் அமையும்
நல்ல பிள்ளை உருவாக்கம்.
அம்மாவோடு அப்பாவையும் இணைப்போம்.
ஆனந்த உலகைக் காண்போம்.
*

 

                               

                             
 

Previous Older Entries