10. சான்றிதழ்கள்.

 

nilachoui...kamuka vandy

*

17884345_154432788420671_7001231560449851800_n

*

 

unavngivet

9. சான்றிதழ்கள்.

first round- 1

*

 

*

18301698_255758121563771_3098383095035422094_n

#தொடர்_குறுங்கவிதை_போட்டி_வெற்றிச்_சான்றிதழ்

#தலைப்பு_படத்திற்கேற்றதொடர்_குறுங்கவிதை_முதலாம்_சுற்று_போட்டி நாள் 2–3–17 இருந்து 7–3–17

#வெற்றியாளர் #பாவலர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தொடர்_குறுங்கவிதை _நற்சான்றிதழ்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

தமிழமுது தேன்சாரல் – முதல் சுற்று- 4-3-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.

பரமன் செவியில் பவ்வியமாய்
பதிவாக்கிய எண்ணக் குவியலால்
பாரம் விலகிய தெளிவில்
பாவை வதனத்துறுதி பர்வதமாய்.

பழகிய பிரசாதத்திற்காய்ப் புறா.
பாவையெண்ணப் பாக்கியத்திற்காய் படிக்கட்டில்
பாராயண மந்திரம். மனங்கவர்
பிரார்த்தனை மங்கலமாய் நிறைவேறுமா!

______________

17201228_1865194160412024_4025292421692367784_n.jpg- 22

*

Image may contain: one or more people

*

இரண்டாவது சுற்றுக்கு எழுதினேன் ஆனால் எடுபடவில்லை
12 பேரில் 6 பேர் தெரிவு செய்தார்கள்.
இந்த வரிகள்:-

Vetha Langathilakam தமிழமுது தேன்சாரல் 12-3-2017
2ம் சுற்று தொடர் கவிதை

பிரசாதச் சர்க்கரைப் பருக்கைகளைப்
பவ்யமாயலசும் இதமான குளிர்மை.
பளீரென்ற மூக்குத்தி மின்னல்
பிரியமானவன் பத்மாசனமிட்டிதயத்தில் கிசுகிசுப்போ!

பவழமல்லிகையாய் இளநகை விரிப்பு
பரம திருப்தியிலழகு வதனம்
பரவசக் காதலின் மாயமவளை
இரசவாதமிட்டு ஈர்த்து மயக்குகிறதோ!
__________________

 

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

8. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது

 

puthumai. march 17

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது

 
பூக்கள் படையுடனான இன்ப மாளிகை வீடு.
பாக்களவிழும் அமைதி ஆரோக்கியமான கூடு.
ஊக்கமுடைய ஊதுபத்தியாமறிவு நறுமணம் கமழ
கோதும் குறுந்தொகை மொழியாடுமில்லத்தில் வாழலாம்.
*
அன்புப் பார்வை அங்கீகரிக்கும் நாகரீகம்.
ஆதரவு மொழியுடைய செல்லச் சுவை
இதயத்தில்   தென்றல் வீசுமருமை வீட்டில்
அன்பின் மேலாண்மையுடன் ஆனந்தித்து வாழ்தலருமை.
*
தற்பெருமை பேசிப்பேசி இதயமறுக்கும் சுயநலமாய்
அற்பமாய் மூன்று வேலை செய்வதை
நற்செயலென்று பீத்தல், இதை நாள்முழுதும்
வற்புறுத்திக் கேட்க வைத்தலெத்தனை அலுப்பு!
*
இப்படியொரு மனிதருடன் காலமெல்லாம் வாழ்தல்
எப்படி அருமையாகும்! எருமையும் குடியிருக்காது.
தப்படி எடுக்கும் குடும்ப அங்கத்தவரால்
முப்பொழுதும் நாசமாகும் நிலை உருவாகும்
*
குடிகாரன் வீடு என்றும் மின்னல்
இடியுடைய சோக மழை பொழியும்
குடிலே! அறிவுக் குடை தேடியிங்கு
விடியலெனுமருமை காண புனர்வாழ்வு தேவை.
*
ஒழுக்கமற்ற பிள்ளைகளால் பெற்றவர் கௌரவம்
வழுகிடும், தன்மானம் வெகுவாகத் தலை குனியும்.
அழுகையே மூச்சுக் காற்றாகி சூனியமாகும்.
எழுகையற்ற இவ் வீட்டிலெருமையும் குடியிருக்காது.
*
கண்ணீராடும் நெஞ்சோடு கூட்டல் பெருக்கலற்ற
எண்ணங்களில் வசந்தமற்ற கருமை வீட்டில்
புண்ணாகும் மனதோடு வாழ்தல் கொடுமை.
வண்ணமாய் அருமையகம் தேடி வாழலாம்.
*
மயிலிறகு, குயிலினிமை பயிலுகின்ற பரமானந்தம்
துயிலாத புன்னகை துவளாத வீட்டில்
ஓயிலாக அமைய வாழ்தல் இனிமை.
வெயிலாக அருமையற்ற வீட்டுலகம் வேண்டாம்.
*
Vetha Langathilakam Denmark..13-4-2017
*
veeduuu

7. சான்றிதழ்கள்.

 

17458234_500001140389954_3830465224233237736_n

*

nillacgru -2

*

.படம் சொல்லும் கவிதை

*

அலட்சியம் நிராகரிப்பில் அக்கறையில்லை.
அவசியமிங்கு பணம் பசிக்காயிரங்கல்.
ஆண்டவன் தீர்ப்பா ஏழை பணக்காரன் – அன்றியிது
அவலத் தொழிலா! இரந்துண்டு வாழ்தலா! சொல்லுங்கள்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 23-3-2017

*

775615emfrzryzxr

6. சான்றிதழ்கள்.

17426291_445691232440296_7562366056331472943_n

*

nilachoru -4

*

ஈற்றுச்சீர் இருபது – 16 – 

உதிர்ந்த உறவுகள்

என்னோடென் பரம்பரை அழியுமோ!
என்னோற்றேன் எப்பிறவியில் யான்!
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க
நன்றான பேரர் நட்சத்திரங்கள்
என் வானில் விதியில்லையா
மூன்று முறைகள் கருக்கலைந்தது.
உதிர்ந்த உறவுகளாகுமோ!
_________________

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  25-03-2017

*

 

163664_469483907911_713827911_5799148_5756063_n

5. சான்றிதழ்கள்

nialchoru - 3

தீக்குச்சி.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

தீ சுட்டாலாறுது. தீசசொல் சூடாறாது.
தீயினும் அஞ்சப்படுவது தீமை
ஆற்றாமைத் தீயிலெரியாதே.
ஆற்றல் தீயாயெரியட்டும்.
உன்னுள்ளேயக்கினி உன்மதங்களையெரி
மேல் நோக்கியுயரட்டும் மேன்மையெண்ணங்கள்.

30-3-2017

2144764y0c9u25lsh

4. சான்றிதழ்கள்(முதலெழுத்து – இ- கவிதை. )

amirthan 21-2-17 Ena

*

ஓ! மிகுந்த மகிழ்ச்சி!எனது பெயரில் இந்த சான்றிதழ் காண்கையில்.
அமிர்தம் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.
கலந்து கொண்ட கவிஞர் கூட்டத்திற்கும் –
சான்றிதழ் பெற்றோருக்கும் மகிழ்வுடன் வாழ்த்துகள்..————படம் பார்த்து முதலெழுத்து – இ- கவிதை.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-2-2017

*

முதலெழுத்து – இ- கவிதை.

*

இருநிதிக் கிழவன் குபேரனாக நாம்
இங்கித நிலாவும் மரங்களுமுடைய செலவந்தர்.
இரஞ்சன பௌர்ணமியில் தருக்களின் காதல்
இணை பறவைகளும் வாழ்த்தும் இசைவுடைய
இன்னிசையாகிறதோ! இதில் வசமாகா இனமெதுவோ!
இந்திரவிழா போன்று கிளர்ச்சி தரும்
இலக்கண, இலட்சண, இன்ப வெளிச்சம்.
இயற்கை இரசனை ஆனந்தம் இது.
*

ena...ena...

3. சான்றிதழ்கள்..(ஆ – வன்னா)

amitham 13-2-17aavanna

*

ஓ! அமிர்தம் குழுவினரே மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் இனிப்பான நன்றிகள்.
பங்கு கொண்ட கவிஞர்களிற்கும் வெற்றியைக்
கைப்பற்றிய எல்லோருக்கும் நல: வாழ்த்துகள்..————————— வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-2-2017

ஆக்கிரமித்த போதைப் பொருள் மயக்கமோ!
ஆயிழைகளைப் புனர்வாழ்வு நிலையத்திற்கெடுத்துச் செல்லுங்களேன்!
ஆதங்கம் கொண்டு விதியெனும் மரத்தடியில்
ஆனந்தமற்று வேர்களில் சாய்வது பரிதாபம்!

ஆழிவித்து (முத்து) மனதின் ஆளுகை நம்மிடம்
ஆகாயத்தின் ஆவேசச் சுழற்சியாய் எழுங்கள்!
ஆழித்தீயாய் எழுந்து இக்கதிக்கு உங்களை
ஆளாக்கியவரைப் புடமிடுங்கள்! புதுயுகம் செய்யுங்கள்!

*

green line-2

 

2. முதலெழுத்து கவிதை

amirtham 5-2-17aana

முதலெழுத்து கவிதை

*

அகரமாகும் அன்னையாய் உலகில் நீயே
அகவொளித் திரியும் தைலமும் அன்பே.
அண்டமெல்லாம் பாச ஒளி வீசுபவளே
அப்பாவோடு இணைந்து உலகை ஆக்குகிறாய்.
அண்ணா, தங்கை, சகோதர உறவுகள்
அற்புதமாய்ப் படைத்து அகநிலையுறுதி தருபவளே.
அகலாத தாய்மையாம் மனவிதழ் கொண்டவளே.
அசுரனும்  மனமுருகுவான் அம்மா என்றால்

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 6-2-2017

Swirl divider v2

1. காட்டுப் பூ பூத்திருக்கு.

16602562_2058690364357643_5972216653592640202_n

காட்டுப் பூ பூத்திருக்கு.

*

*

காட்டுப் பூ பூத்திருக்கு
காத்தாயி வாடி இங்கு
காட்டாறு பெருக முன்னே
கை நிறைய அள்ளிடுவோம்.

காட்டம்மன் திருவிழாக்கு
காவடி ஆட்ட முண்டு
எட்டுப் பேரு ஆடுறாங்க
எட்டுமாலை வேணும் தாயி.

படகுக்கார மாயனு மங்கு
பகலோட வந்திடுவான்.அவனைப்
பாக்காம எம் மனசு
பாடாய் படுத்துதாயி.

பொங்கலோட படையலுண்டு
பொட்டிக் கடை நிறையவுண்டு.
எட்டி நட வண்டி
கட்டி எடுப்பாகப் போவோமாயி.

ஆண்டுக்கொரு திருவிழா
ஆசையாய் பாத்திருந்தோம்
ஆத்தா கருணையள்ளி எடுத்து
ஆசி பெத்து வாழ்ந்திடுவோம்.

வேதா. இலங்காதிலகம்.   டென்மார்க்   

16406966_2055905744636105_6021187486492171139_n-jpg-mm