விருந்துபசரிப்பு. 27.

 

விருந்துபசரிப்பு. 27.

 

பெருந்தன்மையான மனிதனின் பண்பு  சமூகத்தில்
விருந்தினர் உபசரிப்பு வளமை.

இன்முகமாய், இதமாய் உபசரிக்கும் கலையே
அன்பான விருந்தினர் பராமரிப்பு.

மனையிலிருந்து விருந்து உபசரித்தனர் அன்று.
வினையோடு இதுவுமொன்று இன்று.

உபசரித்துச் சேர்ந்து உறவாடி உண்ணலில்
உறவு நன்கு விருத்தியுறும்.

முகம் கோணும் உபசரிப்பு உடனே
இனம் கண்டு விலகும்.

கொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்
எடுப்பதான மனநிறைவுடைத்து.

ஆலயப் பூசையின் பின்னர் தரும்
அன்னதானமும்  விருந்து உபசரிப்பே.

இஸ்லாமியரும் பள்ளிவாசலில் கந்தூரி
சோற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு
இணைத்தனர் திண்ணையை முன்னோர்.

தண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே
திண்ணையில் வைத்தனராம் முன்னோர்.
 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-5-2012.

 

                           

 

ஆகாயம். 26

வாழ்வியற் குறட்டாழிசை.

ஆகாயம். 26

ஆகாயம், அந்தரம், பேரண்டப் பெருவெளி
ஆதாயம் வழங்குகிறது சீவன்களிற்கு.

ஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு
வானமெனும் ஆகாயமும் ஒன்றாம்.

சுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்
எட்டிட முடியாத ககனம்.

மண்ணில் விழாத விதானம், குறைக்கவோ
எண்ணினால் கூட்டவோ இயலாதது.

அழியாத, முடிவற்ற, ஒப்பற்ற ஆகாசத்தை
அண்ணாந்தே பார்க்க வேண்டும்.

ஆவி, புகை வானச்சுவரிலரிய
ஓவியமிடுவது ஒப்பற்ற காட்சி.

காலையோ, மாலையோ எப்போதும் ஒரே
கோலம் அல்லாத நிரூபம்.

இடி, மின்னலிற்கும் வளி மண்டலம்
அடி பணியாத சாம்ராஜ்யம்.

கடல் நீல வெட்ட வெளியின்
கொடை – வானவில், மழை.

சுந்தர உலகைப் பார்க்கும் விண்
சூரிய, சந்திர இருப்பிடம்.

ஆத்மா, உடல் தனித்தனி போன்று
ஆகாயமும், மேகமும் தனித்தனியே.

அவதியான உலகில் எதுவுமே இல்லை
நிரந்தரம். வானமே நிரந்தரம்.

(ஆகாயத்திற்கு மறு பெயர்கள்:- அந்தரம், ஆகாசம், பேரண்டப் பெருவெளி, வானம், ககனம், விதானம், நிரூபம், வளி மண்டலம், வெட்ட வெளி, விண் – இன்னும் பலவாகலாம்.)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-4-2012.

 
 

வாழ்த்தியல். 25

(701வது இடுகை) 

வாழ்வியற் குறட்டாழிசை.

வாழ்த்தியல். 25

 

விசுவாசத்தில் வணக்கமாய், இணக்கமாய் கடவுளை
வாழ்த்திட, இன்மொழியாகும் வாழ்வு.

வாழ்த்துங்கள் வாயார, மனதார, நல்லதற்கு!
தாழ்வுறாக் கீர்த்தி வரும்.

வாழ்த்திட, ஆசீர்வதிக்கப் பதினாறு பேறாம்!
வானமான மனமே வேண்டும்!

ரியாதை, மரபு, வழக்கம், வெற்றி,
மதிப்பான பரிசுகளிற்கும் வாழ்த்துவார்!

வாழ்த்துதலால்  இரு பகுதி மனங்களும்
மாழ்வதே  இல்லை – துன்பத்தில்.

தாழ்ந்திடும் போது  ஒருவன் உயர
வாழ்த்துதல் தன்னம்பிக்கைத் துளிகளாகும்.

தாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நன்கு
வாழ்த்துதலில் குறையொன்றுமில்லை.

னிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.
கனியா வுள்ளம் விலகியோடும்.

வாழ்த்துகள் வாழச் செய்யும். வயிறெரிய,
வீழ்ந்திட, வாழ்த்துவது இல்லை.

படுடைய, சலித்த நெஞ்சு வாழ்த்திற்குக்
கபடியாடும் நன்றி கூற.

ளையாத இணக்கமுறா நெஞ்சில் நன்றி
விளையாது – கல் மனமே.
 

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-3-2012.

 

                                  

 

 

 

24. வாழ்வியற் குறட்டாழிசை(உதவுதல்)

 

24. வாழ்வியற் குறட்டாழிசை

உதவுதல்.

தவுதல் என்பது கடின நிலையின்
கதவு திறத்தல் எனலாம்.

ணம் பொருளற்றாலும், உடல், உள்ளத்தால்
மனம் நிறைய உதவலாம்.

ழை, முதியோருக்கு உதவுதல் வரட்சியில்
மழை பெயதல் போலாகும்.

னம் விரும்பி உதவுதலானது தூய
இனம் புரியா சாந்தியுடைத்து.

னம் விரும்பினாலும் உதவ முடியாத
கனமிகு சூழல்களும் உருவாகிறது.

போதைகளின் உதவி மனிதனை நிர்வகிப்பதாக
போலி மயக்கம் கொள்கிறார்.

தவி பெற்று உயர்ந்ததும் உதவியவரை
உதாசீனம் செய்பவர் பலர்.

தவினாலும் பலரால் திரும்ப பெரும்
உபத்திரவம் உருவாகிறது வழமை.

தவுவோம் என்று நெருங்குவோர் பலரால்
உலைச்சலும் வரும்! விழித்திரு!

தவு! உதவு! அலட்சியம் செய்வார்.
உயர்வு இறுதியில் உண்மை.

தவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
உதவி செய்ய மறக்கிறோம்.
 

க்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-2-2012.

                                     

இல்லறத் துணை. 23

வாழ்வியற் குறட்டாழிசை. 23

இல்லறத் துணை

ல்லறத் துணை பெண் மட்டுமன்று!
இருவருமே ஒருவருக்கொருவராவர்.

ல்ல பண்புடை கணவன்  மனைவியே
இல் வாழ்வின் ஆபரணம்.

ற்புடைமையை ஆணும் பெண்ணும் கட்டாயம்
ஏற்றமுடன் காக்க வேண்டும்.

ற்புடைய கணவன் மனைவிக்கு வாய்ப்பது
வெற்றியுடை அழுக்கற்ற வாழ்வு.

சிக்கனம், புகழ் காத்தலில் இருவருமே
தக்கபடி செயலுறுதல் தேவை.

றையற்ற கணவன் மனைவி என்றும்
நிறைவோடு தலையுயர்த்தி வாழலாம்.

ல்ல மனைவி இருந்தும் கணவன்
நல்லவனல்லால் வாழ்வு ஒளிராது.

ல்ல கணவனிற்கு வாய்க்கும் மனைவி
பொல்லாதவளானால் வாழ்வு  பாழ்.

வீரமும் காதலும் கை கோர்த்தால்
தீரமுடை வாழ்விற்குத் துணை.

ருவரை ஒருவர் தொழ வேண்டாம்
இருவரும் உண்மையாக வாழ்ந்தால்

வாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண
வாழ்வு பிள்ளைகளிற்கு முன்மாதிரி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-2-2012.

  

                                  

 

குறட்டாழிசை 22. அறம்.

வாழ்வியற் குறட்டாழிசை 22.

அறம்.

ன்சொல், கோபம், பொறாமை என்பவை
இன்றி ஆசையறுத்தல் அறமாம்.

ழுக்கம் சார்ந்த நன்னடத்தை, நீதி
வழுவாத தன்மையும் அறமே.

ற்பண்பை உணர்த்தும் தர்மம், ஒழுங்குடை
நல்வழி வாழ்வியல் அறமாகும்.

றம் பேணுதல் மனித வாழ்வில்
மறம் பல தரும்.
(மறம் – வலிமை,வீரம், வெற்றி என்ற கருத்தில்)

றமுடை  வாழ்வைப் புறம் தள்ளல்
நிறமற்ற வாழ்வுப் பாதையாகும்.

நெறியுடைய அறவாழ்வு பெரும் குடி
வெறியனிற்கு ஒத்து வராது.

றமெனும் பல்லக்கில் ஏறுவோனின் வாழ்வரசு
திறமான செங்கோல் உடையது.

றமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்
அறமீறலில் இன்று அத்திவாரமிடுகிறான்.

லட்சியக் கோலோச்சும் அற வரலாறு.
அலட்சிய வரலாறு அறமீறல்.

பால பருவத்திலிருந்து அறம் போதிப்பு
சீலமுடை வாழ்விற்கு அரண்.

றறிவு  மனிதரென்பதற்கு  அறம்   பொருத்தமானது.
கீழறிவாளராய்  மாறுவதே விந்தை!

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-1-2012. 

  

                                    

21. புலாலுண்ணல் (அசைவம்)

 

21. புலாலுண்ணல் (அசைவம்)

 

த்தனை மரக்கறிகள் உலகிலுண்டு, எதற்காக
பித்தாகிறார் மானிடர் புலாலுண்ண!

வெறும் தசையை சுவையூட்டி உண்ண
அறுத்தல் கொலை!  பாவம்!

சையை வளர்க்கத் தசையா! மனம்
இசைவது சீவ இம்சைக்கே!

மீனை நீரிலிருந்து எடுத்தல் கொடுமை!
ஊனையுரித்தல் அதிலும் கொடுமை!

சைவம் எனும் பதமே புனிதமாகும்.
அசைவமாகிப் புனிதம் இழக்காதீர்!

மிருகங்களிலும் மேலானவன் மனிதனென்றால் ஏன்
மிருகங்களையே கூறாக்கி உண்கிறார்!

ருளுடைமை, ஆன்மீகம், தெய்வீகம் என்பவன்
அருளழித்துப் புலாலுண்ணல் தவிர்க்கலாம்.

னத் தூய்மை  உடற் தூய்மையாக்கும்.
இவையும் சைவத்துள் அடங்கும்.

கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.

சைவம் என்பது சவம் உண்பது.
சைவனாகிச் சிவனடி சேரலாம்.

(அறிவு ரப்பர் போன்றதாம்! புலால் உண்பதின் நன்மையையும் நன்கு கூறுகின்றனர், வாசித்தேன். எனது தலைப்பிற்கு எனது வரிகள் இது. வாதாட அல்ல!…)

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-12-2011.

 

                                    

 

20. துன்பம்.

வாழ்வியற் குறட்டாழிசை 20.

துன்பம்.

 

துணிந்த மனதாளன், முயற்சியாளனுக்கு வரும்
துன்பம் தூசிக்கு நிகர்.

ன்பம், துன்பத்தைச் சமமாக ஏற்பவர்
இகத்திலே  யோகி ஆகிறார்.

ன்பம் வரவெனும் ஏற்றம் என்றால்
துன்பம் செலவெனும் இறக்கம்.

வாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்தால்
தாழ்வு துன்பத்தால் இல்லை.

ந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்
நொந்த மனதிற்கு ஆறுதலாகும்.

றுமை, நோய், பணம், நிம்மதியின்மை
பொறுமையைப் பறிக்கும் துன்பம்.

ன்பத்தை முழுதாக வரவேற்கும் நாம்
துன்பத்தையும் ஏற்கப் பழகலாம்.

பாராளும் அரசனையும் துன்பம் துரத்தும்
போராளியாகவே வேண்டும் நிச்சயமாக.

ல்லவன், கெட்டவன் பேதம் இன்றி
எல்லோரிடமும் துன்பம் மோதும்.

துன்பத்தைத் தத்துவம், பொழுது போக்கு
இன்னரும் கலைகளால் வெல்லலாம்.

டர்களை எதிராடும் குணமற்றவர் நொந்து
தொடர்வது தற்கொலை முயற்சியுமாகும்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-12-2011.

  

                                  
 

வாழ்வியற் குறட்டாழிசை. 19.

வாழ்வியற் குறட்டாழிசை. 19.

 

ஒழுக்கம்.

 

ழுக்கமுடையோர் மேல் சாதி. வாழ்வில்
ஒழுக்கமற்றோர் கீழ் சாதி.

து, புகை, பொய், களவு
மாது தீய ஒழுக்கத்துள்ளாகும்.

ழுக்கவாளன் வழுக்கும் அழுக்கு விலக்கி
இழுக்கின்றி நிதானமாய் நடப்பான்.

ழுக்கமுடையோன் இதயம் நாளும் துளி
அழுக்கின்றி நிம்மதியாக வாழ்கிறது.

ண்ணாடியில் நடப்பது போன்றது ஒழுக்கமான
பண்புடைய நல்லவன் வாழ்வு.

ல்லவனைக் கெட்டவன் ஆக்கவும் உலகம்
வல்லமையாய்ப் பாடு படுகிறது.

ழுக்கம், நூல்கள், மரபு, சூழலால்
விழுப்பமாய்(சிறப்பாக) காக்கப் படுகிறது.

ழுக்கம் வாழ்வு தரும். ஊழலுலகத்தில்
ஒழுக்கயீனமே வாழ்வு தருகிறது.

த்தம அறிவிருந்தும் ஒழுக்க மிழப்பவன்
உத்தமர்களால் கீழ் நோக்கப் படுகிறான்.

வீரியமான ஒழுக்க சீலனிடம் மலர்வது
தைரியப்பூ, உண்மைப் பூ.

ழுக்கத்தை ஆள்பவன் வார்த்தை வங்கியிலும்
இழுக்கற்ற பேச்சை எதிர் பார்க்கலாம்.

ழுக்கமெனும் உரைகல்லில் மனிதப் பண்பு
அப்பழுக்கற்ற சந்தனம் ஆகிறது.

 
க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-12-2011.

  

 

                              

                              

 

 

வாழ்வியற் குறட்டாழிசை. 18 (செயல் உறுதி.)

Art by Vetha

செயல் உறுதி

ஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.

ன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.

ட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்

டம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.

டலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.

முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.

ன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.

நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.

நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.

கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.

சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.

சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.

க்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ் டென்மார்க்.
7-11-2011.

 

In Anthimaalai web site:-    http://www.anthimaalai.blogspot.com/2012/01/18.html

  

                             

 
 

Previous Older Entries