வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

 

வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

புகழ்.

ல்ல வாழ்வு, நடத்தை, செயல்களே
ஒருவனிற்குப் புகழ் தருபவை.

குதியானவரைப் பற்றி உண்மையாய், இனிமையாய்
உரைத்தல் புகழ் ஆகும்.

கெட்ட செயல் செய்து  ஒருவன்
எட்டும் பெயர் புகழல்ல.

கேட்டுப் பெறுவதல்ல புகழ், தானாக
நாட்டுவதே புகழெனும் பெருமை.

சாதனையாளரைப் பலர் மத்தியில் புகழ்!
வேதனையதை மனதில் அடக்குதல்.

ளி கொண்ட கைதட்டல், சபையில்
மொழியற்ற புகழ் அங்கீகாரம்.

புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
இகழ்வதில்  வெகு கஞ்சத்தனமாகு!

புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
இகழ்வான செயலாகிப் போச்சு.

புகழ் ஒரு போதை. அதை
அகழ்ந்து புதைப்பதும் வாதை.

புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
புகழைத் தேடுபவனும் உண்டு.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-10-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/11/17.html

  

                                     

 

வாழ்வியற் குறள்+தாழிசை 16. (பொறுமை.)

 

16. வாழ்வியற் குறட்டாழிசை.

பொறுமை.

 

கழ்வாரைப் பொறுத்தலும் ஓரளவோடு உனை
அகழ்ந்து புதைக்காமற் பார்.

பொறுமையெனும் பண்பு  மனித வாழ்வில்
பெருடையுடைய ஒரு திறவுகோல்.

ணவம், அகங்காரத்தை பொறுமையால் கொல்பவன்
நாணவும் தேவையில்லை எதற்கும்.

வாயாடியுடன் சொற்களால் பேயாடுவதிலும் பொறுமையுடன்
போராடுதல் வெகு சிறப்பு.

பொறுமையெனும் கனி பழுத்திட கடுமையாக
வறுமைப் படுகிறார் பலர்.

கெட்டவனைத் தன் பொறுமையால் சாதுரியமாய்க்
குட்டுதல் நற் பண்பு.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-10-2011.

(மேலேயுள்ள பன்னிரண்டு வரிகளும் வழமை போல நானாக எழுதியது. மகளிடம் போயிருந்த போது பெரிய பிரித்தானியாவில்  இருக்கையறையில் இருந்து இதை எழுதியபடி கதைத்தேன். ”அம்மா என்ன பரீட்சைக்குப் படிப்பது போல செய்கிறா´´  என்று கூறினா. ” ஓன்றுமில்லை மகள்! பொறுமை பற்றி எழுதுகிறேன். பொறுமை பற்றி உன் எண்ணத்தை கூறேன்” என்றேன். கீழ் வரும் எட்டு அடிகளும் அவரின் கருத்துகளே. இவர் மனோ தத்துவத்தில் டிப்ளோமா முடித்தவர்.              இதை ஏன் கூறுகிறேன் என்றால் கீழே வரிகள் முழுவதும் உணர்வு சம்பந்தமாகவே உள்ளது. இது தவிர டென்மார்க்கிலிருக்கும் போது தமிழ் சஞ்சிகைகட்கு கதைகள் எழுதினார். இலண்டனில் தனது வைத்தியசாலைச் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறு கதைகள் எழுதியவர். சிறந்த பாடகி. ஓவியக்காரி. இனி படியுங்கள்!)

பொறுமை பொறுமையென்று மனித உணர்வுகளைக்
குறுகிடச் செய்தல் சரியல்ல.

னக்கு ஆபத்து என்றால் பொறுமை
விலக்கு! துணிந்து எழு!

பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
பொறுத்து என்ன பயன்!

கேடு செய்வோரை உணரவிடாது பொறுமையென்று
பாடு படுத்தல் வீண்.

 

க்கம் லாவண்யா. 

U.K           

 

*

In Anthimaalai  web site :-       http://anthimaalai.blogspot.com/2011/11/16.html

  

 

                                    
 

வாழ்வியற் குறள்+தாழிசை 15.

 

 

 

வாழ்வியற் குறட்டாழிசை 15

வாய்மை.

 

பார்த்ததை, கேட்டதை அப்படியே கூறும்
வார்த்தை வாய்மை ஆகிறது.

வாய்மை பேசுவோன் மிகச் சிறந்த
தூய்மையாளன் பெயரைப் பெறுகிறான்.

ண்மையொளி உள்ளத்தில் பிறந்தால் ஒருவன்
பண்ணும் செயலிலுமது பிரதிபலிக்கும்.

ள்ளத்தில் தூய்மை, பேச்சில் வாய்மை
கள்ளமற்ற வாழ்வுப் பாதையாகும்.

வாய்மை பேசினால் என்றும் நன்மை
வாய்த்தல் என்பது வாய்மையல்ல.

வாய்மை பேசாதவன் மனச்சாட்சி அவனை
ஓய்ந்து அமைதியடைய விடாது.

ரிச்சந்திரனியல் எல்லோரிடமும் வாய்ப்பது என்பது
அரிதான ஒரு செயல்.

வாய்மையாளனை வாயார வாழ்த்தாத பலர்
வாழும் உலகம் இது.

வாய்மை தேய்மையற்ற முதன்மை வழி.
சாய்மையின்றி நேர் வழியேகலாம்.

வாய்மையால் உலகாள முடியாது என்று
பொய்மையாளர்  நிரூபிக்கிறார் இன்று.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-10-2011.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/10/15.html

  

 

                               

கேட்டறிதல் 14. (வாழ்வியல் குறள்+தாழிசை)

 

 

வாழ்வியற்  குறட்டாழிசை

கேட்டறிதல் 14.

 

கூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்
கேட்டறியும் செவிச் செல்வம்.

பார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்
கேட்டறிதலும் பெரும் செல்வமே.

கேட்டதும் கெட்டதை உடன் மற!
கேட்ட நல்லதோடு தொடர்.

நல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி!
சொல்வதால் உயர்வாய்! கீழாகாய்!

பெரியோர் வாய் மொழிகள் கேட்டு
உரிய வழியில் செல்லலாம்.

நூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு
மேலுயரப் பயனாகும் நல்லவனிற்கு.

பொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்
நல்லனவற்றைப் பிறருக்குக் கூறார்.

விட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்
கேட்டும் பழகுதல் நட்பு.

வயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி
செவிக்குக் கேட்டலும் பூரணம்.

கேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.
வாட்டும் ஐயப்பாடு விலகும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
17-9-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/14.html

  

 

                        
 

வாழ்வியற் குறள்+தாழிசை. 13

 

Art by Vetha.

வாழ்வியற்  குறட்டாழிசை  13.

முயற்சியுடைமை.

 

முயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை
அயர்ச்சி  காண்பது அரிது.

த்தனை செல்வம் குறைந்தாலும் முயற்சியாளன்
சித்தம் என்றும் சோர்வதில்லை.

தேனீயின் சுறுசுறுப்புடைய முயற்சியாளனால் ஒரு
விநாடியும் சோர்ந்திட முடியாது.

பொறாமை அனல், வெட்கக் குமிழ்கள்
தேறாத தடையாகும் முயற்சிக்கு.

முயற்சியாளனுக்கு அயர்ச்சியற்ற மனமே காந்தம்.
பயிற்சி ஒன்று தேவையில்லை.

றும்பின் அயராத முயற்சியாளனுக்கு  என்றும்
வறுமையென்பது தோல்வி தான்.

முயற்சியுடையோன் வாழ்வு புன்னகைத் தோட்டம்.
இழந்தோனிற்கு மயான வட்டம்.

முயற்சியாளன் சுய நம்பிக்கைக்காரன். தனவந்தன்.
யெயம் பெறுவது திண்ணம்.

யாருக்கும் தலை வணங்காத வாழ்வை
ஓயாத முயற்சியாளன் கொள்வான்.

முயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்
கயிறு, நல்லேணிப் படி.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-9-2011.

(திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி
” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.”
இலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று இனி  குறள் – தாழிசை  என்று வருகிறது)

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/10/13.html

  

                            

 

 

 

 

வாழ்வியற் குறள்+தாழிசை. 12

 

 வாழ்வியற் குறட்டாழிசை. 12.

சோம்பலின் ஆட்சி.

 

தீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி
நீறு பூத்த நெருப்பாக்குகிறது.

மூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.
சீதேவி ஆதரிப்பாள் முயற்சியாளனை.

தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.

மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.

முயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய
அயர்ச்சியாளரை ஒதுக்கி விடும்.

சோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.
அம்பலத்திலும் ஆட மாட்டான்.

புவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,
கவனயீனத்தினாதி காரணம் சோம்பலே.

ளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்
ஆளும் தகுதி உடையவன்.

சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
தாம்பூல வரவேற்பு உண்டு.

ம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
சோம்பல் அழித்தோன் மனது.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-8-2011.

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/09/12.html

  

                         

 

 

வாழ்வியற் குறள்+தாழிசை. 11 (குழந்தைச் செல்வம்)

Art byVetha.

வாழ்வியற் குறட்டாழிசை. 11

குழந்தைச் செல்வம்.

 

குழந்தைச் செல்வத்தை மக்கள் இளமைக்
காலத்தில் பெறுதல் ஆரோக்கியம்.

குறையற்ற குழந்தைச் செல்வத்தை எமது
குறையற்ற உடல் உற்பத்தியாக்குகிறது.

குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது
குறைவறப் பராமரித்தல் அவசியம்.

உலகிலேயே இனிய இசை  தம்
மக்கள் மழலைச் சொற்களே.

உலகத்துத் துன்பங்களை  ஒரு மழலை
உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்.

சின்னக் கைகளின், கால்களின் அபிநயத்திற்கு
என்ன விலையும் கொடுக்கலாம்.

நல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும், பெற்றவர்
நல்லவரானால் பிள்ளைகளுக்கும் பொக்கிஷமே.

உலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்
உருப்படாது உருவாகுதல் என்பது.

குழந்தைச் செல்வம் நவீன உலகில்
குழப்பமுடைய  செல்வமாம் சிலருக்கு.

குற்றமற்ற பளிங்கு மனதால் தெய்வத்திற்கு
குழந்தையை சமன் படுத்துகிறோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-8-2011.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/09/11.html

  

 

                                  

 
 

வாழ்வியற் குறட்டாழிசை.10

Art by Vetha.

*

வாழ்வியற் குறட்டாழிசை. 10

*

கல்விச் செல்வம்.

லகில் உயர் செல்வம். வாழ்க்கைக்கு
வாய்ப்பாடானது வளமான கல்வியே.

ல்லையற்ற பெருமை, வல்லமை தரும்
இல்லாமையாகாத கல்விச் செல்வம்.

மின்சாரம் ஒளி தருதல் போல
தன்சாரமாய்க்  கல்வி(அறிவு) ஒளிரும்

ற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.

பாலாவியன்ன பட்டுடை போன்ற அழகு
மேலான கல்வி தரும்.

பெற்ற ஒருவரின் கல்வியால்  குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.

கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி

நீதியாகக் கற்றபடி ஓழுகாததால் உலகில்
அநீதி மலிந்து நிறைந்துள்ளது.

ல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.

வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
பட்டுப் போகாதது கல்வி.

முதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2011.

In Anthimaalai. web site :-     http://anthimaalai.blogspot.com/2011/09/10.html#comments

  

                             

 

வாழ்வியற் குறட்டாழிசை. 9. (பிறர்க்குதவல்.)

பிறர்க்குதவல்.

 

பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு
பிறவியிலேயே வரும் குணம்.

தவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.

திமிர், செருக்குடையோன் தான் பெற்ற
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.

தவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு   மூடாதது.

யன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.

ற்ற தருணத்தில் செய்யும் உதவி
மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்.

தவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.

தவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.

ன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.

பெற்ற உதவியை நினைத்து நன்றி
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
19-7-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/13.html

 

                                  

வாழ்வியற் குறள்+தாழிசை 8. (பொறாமை)

வாழ்வியற் குறட்டாழிசை.  8

பொறாமை.

பிறரின் உயர்வால் பெருமையுறும் மனம்
கறளெனும் பொறாமை அற்றது.

பொறாமை துறவாமை பெருங் கேடு
அறவே அதையழித்தல் மேம்பாடு.

வீழ்த்தும் பொறாமையால் சிறப்பழிவது எம்
வாழ்வமைச்சு எனும் அறம்.

ண்பற்ற மனதில் ஆற்றாமை, தாளாமை,
ஏற்காமை பொறாமை ஆகிறது.

ண்புடை மனம் பொறாமை தரும்
மைகளை அறிவால் வெல்கிறது.

பொறுமையெனும் அருமையான குளிர் சாரல்
பொறாமைத் தீயை அணைக்கும்.

தையோ எப்படியோ வெல்வதிலும் உனை
வதைக்கும் பொறாமையை வெல்!

மாறாத நட்பை மனதில் பேணினால்
பொறாமைப் புகை புகையாது.

பொறாமை மானம் வெட்கம், ரோசம்
பார்க்காது பல்லை இழிக்கும்.

ங்காரம், ஆவேச, அழுக்கு நெய்யில்
ஓங்காரமாய் எரிவது பொறாமை.

ங்கும் மனம், தாங்காத மனம்
வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2011.

In Anthimaali web site:-    http://anthimaalai.blogspot.com/2011/08/8.html

   

         
 

Previous Older Entries Next Newer Entries