12. துணிந்தவர்!……

vethri3 270

துணிந்தவர்!……

பிள்ளை வாசிப்பில் மிக ஆர்வமாக உள்ளார் என்று அவருக்கு படிக்க ஒரு மேசை கதிரை வாங்கினார்கள் பெற்றோர்.
அழகாக அமர்ந்திருந்து வாசிப்பார் அதாவது புத்தகம் புரட்டுவார், படங்கள் பார்ப்பார்.

ஒரு நாள் மங்கும் மாலைப் பொழுதில் தாயார் அருகிலுள்ள சமையல் அறையில் நின்ற போது. இவர் இருக்கையறையிலிருந்து அம்மா…அம்மாவென்று ஆர்வமாக அழைத்த சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்து பார்த்த போது, தனது படிக்கும் மேசையில் இவர் ஏறி நின்று கூத்தாடுகிறார்.
தாயார் அதிர்ச்சியடைந்து விட்டார். இனி அவரைத் தனியே சிறிது நேரம் கூட விடக் கூடாது (அதாவது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்)
என்பது தெரிந்தது.
கதிரையில் ஏறி மேசை மேல் எறிவிட்டார்.

காலையில் பெற்றோருக்கு முன்னதாக ஆறு மணியளவில் எழுகிறார். அவராக சிறிது நேரம் விளையாட பெற்றோர் எழுந்து வருவார்கள். இப்போது இந்த மேசையைக் கீழே படுக்கப் போட்டு விட்டே இரவு படுக்கப் போகிறார்கள்.
காலையில் தனியே விளையாடும் போது மேசையில் ஏறி விழுந்தால் என்ன செய்வது!……ம்…ம்…..

பேரன் வெற்றியோடு நாம்.

கன்னப் பசுந்தில் உன்
கன்னற் சிரிப்பில்
கவிழ்க்கிறாய் எம்மை.
பற்கள் தெரியாப் புன்னகைப்
பகடை உருட்டித் தாயமாய்
பரிபூரண இன்பம் சிதறுகிறாய்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-11-2013.

line3

11. தமிழில் குறும்பூ!…!……

mine 187

தமிழில் குறும்பூ!…!……

தமிழில் ஆண்பால் பெண்பால் என்று
அப்பப்பா – அப்பம்மா.
தாத்தா –பாட்டி
என வழங்குகிறது அனைவரும் அறிவர்.

குளப்பம் வராது தவிர்க்கச் செய்த ஏற்பாடாக
எங்கள் பேரனுக்கு அப்பப்பா, அப்பம்மா என்று எங்களை அழைக்கப் பழக்கினோம்.
தாயாரின் பெற்றோரைத் தாத்தா பாட்டி என்று அழைப்பார்.
நன்றாக என் கணவரை அப்பப்பா என்று அன்பொழுக அழைப்பார். அப்பம்மா என்பது சிறிது குறைவு தான், ஆனால் கணவரிலும் பார்க்க நன்கு என்னோடு பழகுவார். காரணம் அவரோடு நான் பழகுவது அதிக நேரம் தான்.
இப்படியிருக்க திடீரென ஒரு நாள் என்னை தாத்தி என்று அழைத்தார். எங்களிற்கு ஆச்சரியமான ஆச்சரியம்!
யாரும் சொல்லியும் கொடுக்கவில்லை. என்னைப் பார்த்து என்னைக் கூப்பிடுகிறார் தாத்தி என்று.
எங்கள் அனைவருக்கும் சிரிப்பான சிரிப்பு.
சமாளித்துக் கொண்டு சரி இப்போது கூப்பிடுங்கள் வளர மாறலாம் என்று விட்டு விட்டோம்.
நான் கூறுவது என்னவென்றால் அப்பம்மா கவிதை எழுதுகிறார் பேரனும் நன்கு இயற்றப் பழகுகிறார் என்று.
ஆகையால் அவர் கவிதை எழுதுகிறார் என்பேன்.
பின்னே என்ன!…தானாகவே ஒரு சொல் புதிதாகப் பெண் பாலில் தாத்தி…..என்று!

இது எப்பூடியிருக்கூ…..!!!!!!!!!………

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2013.

straight line

one_partridge[1]-niram

(பேரனுடன் நான் பாடும் பாடல்.
வடிவாகக் கவனிப்பார்.
சிலவேளை உனக்கு வேற வேலையில்லைப் பாடு என்பது போல விளையாடுவார்.
நான் அவர் காதில் அதை விழுத்த வேண்டுமென்று பாடி முடிப்பேன்.
அவர் காதில் விழுத்துவார்)

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

baby-items

9. குதிரை ஆட்டம்.

இந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான்.

இப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏதாவது ஓரு ராகத்தை ம்..ம் என்றோ. லாலலா என்றோ இழுத்தபடி செல்வென்  இது வழமை.

இவர் வீட்டில்  தானே விளையாடும் போது என்னைப்  போல இராகம் இழுப்பார்.  பெரிய அனுபவஸ்தர் போல  செய்வார்.

பாடல் கேட்டால் போதும் சுற்றிச் சுற்றி ஆடுவார். தலை சுற்றி விழுவார் உடனே எழுந்து மறுபடி தொடருவார். பாடலுக்குக் கை தட்டுவார்.

என்னிடம்  ”..சீச்சோ  சீச்சோ..”  என்பார் அதன் கருத்து சோபாவிலிருந்து அவரைக் காலில் வைத்து ஆட்டுவது.

Sea shore

up and Down

vethri going to the London town  (இதை மாற்றி மாற்றி வேறு இடங்கள் கூறிப் பாடுவதுண்டு.)

summer13 013P1050158

மரக் குதிரை ஆடுவார் அதற்கு ஓரு பாட்டு.

 

குதிரை ஆட்டம்.

 

ஆடுங்கோ ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ!

சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை

மரக் குதிரை  (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

 

முன்னும் சாய்ந்து

பின்னும் சாய்ந்து

இன்னும் வேகமாய்

உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

summer13 082

வெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. உடனே சிரித்து (here she goes Again)

எந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.

”….வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
      எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
      வண்ணம் பலவே வண்ணம் பலவே
      எண்ணம் கிளறுது!  எண்ணம் கிளறுது!…”’  

(ஆங்கில வரிகள் நாம் முன்பு சிறு வயதில் பாடியது. தமிழ் எனது வரிகள் தான்.)

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன்.

விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013

 

baby-items

 

 

 

 

 

 

 

9. வெற்றி நடை…..

P1050028

*

வெற்றி நடை…..

*

தத்தக்கா பித்தக்கா தளிர் நடை.

தத்தக்கா பித்தக்கா தளர் நடை.

முத்தக்கா வெற்றியின் முதல் நடை.

தித்தக்கா தையா மழலை நடை.

*

பஞ்சுப் பாதம் மெல்லக் கடிதாக

அஞ்சும் மனம் சிறு தயக்கமாக

குஞ்சுப் பாதம் எடுக்குதே சிற்றடி!

விஞ்சும் அழகில் மனது மயங்குதடி!

*

நீயாவலாய் எடுக்கும் அடி

தீ மிதிக்கும் நடையடி!

ஏனித்தனை தயக்கமடி!

ஏணிப்படியாய் ஏறும் உலகமடி!

*

கோகுலம் சிரிக்கக் கோகுலக்கண்ணனாயெம்

ஆகுலம் விரட்டும் ஆயர்பாடியிவன்

நீ குலம் சிறக்க வந்தாய்!

நற்குலமகனாய் நடப்பாய்!

*

(ஆகுலம் – துன்பம், மனக்கலக்கம். குலம் – குடும்பம், வீடு)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-6-2013

*

footprints-blog-photo

 

8. வெற்றிக்கு ஒரு வயது

1st-birthday

வெற்றிக்கு ஒரு வயது

 

 

எங்கள் செல்லப் பேரன்

தங்கக்கட்டி ராசன்

உங்கு குடித்து வளர்ந்தான்.

இங்கு ஒரு வயதாகிறான்.

 

திலீபன் – சாந்தியின் அரும்

திலகம் தினகரன் ”வெற்றி”

உலவி நிறைகிறார் இன்று

கலகலப்பு ஒரு ஆண்டு.

 

எட்டியடி வைக்கிறார்

சுட்டிச் செல்வன் எங்கள்

கட்டி வராகன் வெற்றியே

பட்டுக் குஞ்சப் பெட்டகமே!

 

அச்சுப் பிச்சு மழலையால்

கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்

பச்சை மரகதமே! பல்லாண்டு

சீரும் சிறப்பாக வாழ்ந்திடு!

 

 

(கட்டி வராகன் – தங்கநாணயம்.   தினகரன் – சூரியன்)

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-4-2013.  

 

 

 

 

baloonz

7. அன்ராட்டிக்கா

feet

அன்ராட்டிக்கா

 

அன்ராட்டிக்கா வெண்பனி போலே

இன்றேன் குளிரவில்லை டென்மார்க்!

அன்றாடம் அதிக வெப்பத்தில்

நின்றாடிய மலேசியா விடுமுறையால்

டென்மார்க்கிற்கு வெற்றி வந்தார்.  (அன்ராட்டிக்கா)

 

உணரவில்லைத் தனது உடலை

உடல், கால், கைகளிற்கு

உறையிட்டு வாழ்ந்தார் டென்மார்க்கில்.

உல்லாசமாக அம்மா ஊரில்

உணர்ந்தார் ஆடையின்றி ஊடாடி.  (அன்ராட்டிக்கா)

 

கைகள் கால்களை நன்றாக

வைத்த கண் வாங்காது

அவதானித்தாராம். அம்மம்மா கால்களோடும்

அவதானித்தாராம். சிறுநீர் எங்கிருந்து

வருகிறது என்றும் பார்த்தாராம்.  (அன்ராட்டிக்கா)

 

பத்து மூன்று நாட்களங்கு.

சத்தான அனுபவங்கள் மலேசியாவில்

பத்து கோவிலில் முடியிறக்கி

பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.

சொத்து எங்கள் வெற்றி.     (அன்ராட்டிக்கா)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-3-2013.

 

 

baby-items

 

 

6. பல்லு (கொழுக்கட்டை)

Kolukkadai 104

பல்லு (கொழுக்கட்டை)

 

பல்லு! பல்லு! வெற்றிக்கு

பல்லு முளைத்ததற்காய் வழமைக்கு

பல்லுக் கொழுக்கட்டை செய்தோம்.

எல்லாம் தலையில் கொட்ட

செல்லம் ஒன்றைப் பற்றி

பல்லிற்குப் பதமாகக் கடித்தார்.

 

இரண்டாவதாகப் பணத்தைப் பற்றினார்.

மூன்றாவதாக மோதிரம் எடுத்தார்.

ஓன்றாய் கூடி மகிழ்ந்தோம்.

நன்றாய் வெற்றியும் மகிழ்ந்தார்.

அன்றைய திருநாள் இனிது.

என்றும் மறக்காத நாளது.

 

பல்லு! பல்லு! மனிதப்

பல்லு! பல்லு இல்லாவிடில்

சொல்லு நல்ல தெளிவில்லை.

பல்லு வெள்ளைக் கல்லு.

கல்லு முரசுள்ளால் வரும்

பல்லு கல்சியம் தாதுக் கலவை.

 

குருமணல், சாம்பல் கொண்டாம்

ஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்

இந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.

புத்தர் காலத்தில் வேப்பங்குச்சியாம்.

எகிப்தியர் காலத்தில் பற்பொடியாம்.

பற்பசை 1892ல் பிரித்தானியாவில் வந்ததாம்.

 

பெரிய பிரித்தானியப் பல் வைத்தியர்

Washington Went worth Sheffield

பற்பசையை 1892ல் கண்டு பிடித்தார்.

பல்லுக் குறுதி ஆலும் வேலும்.

பல்லில்லாதவன் சொல்லில்லாதவன்.

பல்லுப் போக சொல்லுப் போகும்.   

       (பழைய மொழிகள்)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

11-1-2013.

 

Kolukkadai 111

5. கண்ணிறை தரவுகள்

rainbow 041

imagesCA1CSAIR

கண்ணிறை தரவுகள்

(800ம் ஆக்கம்)

ண்ணச் சரங்கள் வண்ணச் சுரங்கள்.

கண்ணிறை தரவுகள் கண்ணா நீயே! (வெற்றி)

”என்ன குறும்படா!” என்கிறேன் கனவிலும்.

சின்ன முகிலாகவும் பின்னர் கலையும்.

பூவிதையாக என் கவிதை பாவுவேன்.

பாவிக்கும் நினைவுன் பூமுகம் தான்.

தரவு விழியும் ஆசை மொழியும்

மீசை முறுக்கியும் ஓசையிடும் உணர்வோடும்.

யிலாய்  ஆடி குயிலாய் பாடி

உயிரோடு பிணைக்குது கயிறாயுன் விழி.

தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.

டுருவும் பார்வை ஊடுருவித் துளைக்கும்

ஆராய்ந்து தேடும் ஆராயுமுன் கண்கள்.

தொழுது போற்றும் வழுது அற்றதாம்

விழுதாமுன் நேசம் பழுதகற்றும் மூலிகை.

(வழுது – பொய்)

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

24-1-2012.

blue-pacifiers-hborder

 

4. வெல்லமே வெற்றி….

 

வெல்லமே வெற்றி….

 

பேசிடும் கருப்பொருளில்
வீசிடும் ஒளிக்கற்றை.
ஆசியுடை நடுப்புள்ளி
தேசிகன்(அழகன்) நீயன்றோ!

னம் செழித்ததுவே
மனம் சூனியமாகாதே
புனலாய்க் குருதியையே
தனமாய்ப் பெருக்குகிறாயே!

கிளை பரப்புமுறவின்
முளை இவன்! பலாச்
சுளை! பால் முகக்
களை களையகற்றும்.

குடும்ப அதிகாரத்தில்
படு காத்திரமாக
எடுக்கிறாய் செங்கோல்.
பாடுபொருள் நீயன்றோ!

ன் சிரிப்போ
தேன்! உதிர்க்கிறாய்
பொன்! அன்பொழுகும்
சின்ன நிலாவே வெற்றி.

ன்னகையும் வேண்டாம்
இன்னிசையாமுன் புன்னகை
நன்னகைத் தங்கம்
ஓன்றே போதும்!

ந்தாவிளக்கே! எம்
நந்தவன நறவமே! (மணம்)
விந்தையடா நீயெமக்கு.
விந்தியமலைத் தேனடா!

வாழ்வுவானின் விண்மீன்!
வாழ்வுக் கலங்கரைவிளக்கு!
வாழ்வுப் பௌர்ணமி நிலா!
வாழ்க! வளமோடு நீடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-10-2012.

 

 
 

3. குழந்தை மனிதனாகும் எத்தனம்!

 

 

குழந்தை மனிதனாகும் எத்தனம்!

அசையும் பதுமையாய்க் கிடந்தார்.
தசையும் வைத்தது வளர்ந்தார்.
வசைத்து(வளைத்து)முழங்காலைக் கைகளால்
வசதியாய்த் தொடுகிறார்! – கைகளை
வசமாயதில் ஆறப்போடுகிறார்.

கைகள் இரண்டும் பிணைந்ததைப்
பைய அசைத்துப் பார்க்கிறார்.
மைகரம்!(பிரமிப்பு)…எப்படிப் பிணைந்தது!
இப்படி ஏனிது பிணைந்தது!
பிணைப்பையழகாய் ரசிக்கிறார்!

விரல்கள் பத்தும் பின்னுவது
தரமானவொரு ஆட்டமாகிறது.
விரல்களிணைப்பு விலகினால்
திரண்டு மறுபடி இணையுமோ!
பிணைந்தபடியே ஆய்வு! வியப்பு!

எப்படி! தனியொரு விரலைச்
சூப்புவது! வாயினுள் திணிப்பது!
முப்பொழுதும் பிரம்மப் பிரயத்தனம்!
செப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது
அப்படியே விரல்கள் வாயினுள்!

வலைப் பந்தை இலக்காக முயன்று
வலையுள்ளிடும் முயற்சி போன்றது.
எந்த உதவியுமின்றிக் குழந்தையின்
சுதந்திர இச்சைத் தேடல்!
நானே மனிதனாகும் ஆய்வு!

இன்று பத்து விரல்களையும்
உண்பது போன்று வாயினுள்
என்னமாய்மென்று சூப்புகிறார்!
மென்னும் சுவையிசை கூட்டி
சின்ன ராகமொன்றும் இசைக்கிறார்!

இம்மாநிலத்தில் குழந்தையெழுந்திட
தம்மைத் தாமே உருவாக்கிட,
மேம்பட எத்தனை பாடுபடுகிறார்!
சும்மாவல்ல! சுயேச்சையான
செம்மை முயற்சி! முயற்சி!

குழந்தையின் விடாமுயற்சியின்
கழஞ்சு அளவில் பெரியவர்கள்
வழக்கமாகக் கொண்டு பழகினால்
வழக்கற்றுப் போகுமே நோய்கள்!
முழவு கொட்டுமே ஆரோக்கியம்!

 
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2012.

(our photoes.)

(7-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில்(19.00-20.00) இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                                

 

Previous Older Entries Next Newer Entries