2. அ, கர வரியில் ‘ஆ’

 

*

*

‘ஆ’  வரி அடிகள்.

*

”ஆறுவது சினம்” – ஆக்கியது ஒளவையார்.
நோக்கிய போது ஆக்கியது இவை.

1. ஆக்கம் உயர்வுடைத்து.
2. ஆகமம் படித்தல் உயர்வு.
3. ஆகாத்தியம் அனுதினம் நன்றன்று.
4. ஆகாதவன் உறவு தவிர்.
5. ஆங்காரம், ஆவேசம் அழிவு வழி.
6. ஆச்சியை மதி.
7. ஆசாரம் பேணு.
8. ஆசிரியனைக் கனம் பண்ணு.
9. ஆசி பெறு, பெரியவரிடம்.
10. ஆசீர்வதி குழந்தைகளை.
11. ஆசவாசம் கொள் கடின வேலையின் பின்.
12. ஆசை, ஆசாபாசம் அளவாகக் கொள்.
13. ஆசை காட்டி ஏமாற்றாதே.
14. ஆம் போடுதல் எப்போதும் நன்றன்று.
15. ஆட்சேபனையும் தேவையெனில் கூறு.
16. ஆட்டம், அசைவு ஆக்கைக்கு நன்மை.
17. ஆட்படு, நல்ல அன்புக்கு.
18. ஆண்டவனை ஆராதி.
19. ஆணவம் அடக்கு.
20. ஆத்திரம் அழிவுடைத்து.
21. ஆத்மஞானம் வாழ்வுக்கு ஒளி.
22. ஆதங்கம் ஆக்கம் தரா.
23. ஆதரவற்றோரை ஆதரி.
24. ஆதிக்கம் என்றும் அமைதி தரா.
25. ஆபத்தில் என்றும் கை கொடு.
26. ஆய்வு செய்தல் பயனுடைத்து.
27. ஆயாசத்தில் இளைப்பாறு.
28. ஆயள்வேதம் சிறந்த வைத்தியம்.
29. ஆர்வம் முயற்சியைத் தூண்டும்.
30. ஆரம்பம் நேரப்படி அமை.
31. ஆரோக்கியம் சுகவாழ்வுப் பாதை.
32. ஆலோசனை ஆரோகணத்தின் படி.
33. ஆழம் அறியாது அடியெடாதே.
34. ஆற்றாமையை அடியோடு அறு.
35. ஆறப்போடு – ஆத்திர நேரத்தை.
36. ஆதனம் சேர்ப்பதிலும் பார்க்க அறிவைச் சேகரி.

12-12-2003. ஆக்கம்- வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

*

straight line

                          

                                     

1. அகர வரி அடிகள். – அ

 

art by Vetha

 

 

 

அகர வரி அடிகள். –  அ

 

‘அறம் செய்ய விரும்பு’
அவ்வையின் ஆத்திசூடி
செவ்வையாய் ஏத்தியபடி
செழித்தது பல அடி……

 

1. அக்கிரமம் தவிர்.
2. அகங்காரம் விலக்கு.
3. அகந்தை கொள்ளாதே.
4. அகம்பாவம் அழிவு தரும்.
5. அகவிருள் நீக்கு.
6. அங்கவீனனுக்கு இரங்கு.
7. அச்சம் அழி.
8. அசமந்தம் அனர்த்தம்.
9. அசுத்தம் கைவிடு.
10. அசூயை அழி.
11. அஞ்ஞானம் விலக்கு.
12. அட்சரம் பயில்.
13. அட்டூழியம் பண்ணாதே.
14. அடக்கம் சிறப்பு.
15. அடாவடித்தனம் வேண்டாம்.
16. அடிமைப்படாதே.
17. அடுத்துக் கெடுக்காதே.
18. அதர்மம் அழி.
19. அதிகாலை துயில் நீங்கு.
20. அந்தரங்கம் பேணு.
21. அநாதைக்கு உதவிடு.
22. அநீதியை ஆதரிக்காதே.
23. அப்பியாசம் அழகு தரும்.
24. அமைதி பொன் பெறும்.
25. அலங்கோலம் தவிர்.
26. அலட்சியம் தேவையற்றது.
27. அவச் சொல் தவிர்.
28. அவதானம் அர்த்தமுடைத்து.
29. அழிச்சாட்டியம் ஆகாதது.
30. அழுக்காறு அழிவு தரும்.
31. அளந்து கொடு.
32. அறம் செய்தல் புண்ணியம்.
33. அறிவு தேடு.
34. அன்பு செய்.
35. அனுபவம் கோடி பெறும்.
  

  —————

(எனது முதலாவது நூல் – வேதாவின் கவிதைகளில் இது இடம்பெற்றது. (பக்கம் 152, 153 ல்)

 

                              

Next Newer Entries