12. வேதாவின் ஆத்திசூடி – ‘ ஒள

 

 

(Art:-  by Vetha)

 

‘ அ ‘  கர வரிகளில்

ஒள ‘  காரம்.

 

ஓளவியம் பேசேல்.

பொறாமை வசனங்களைப் பேசாதே.

து ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

 

1.     ஓளவையார் மொழி படித்து நட.
2.    ஓளவியம் கொள்ளுதல் தவிர்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2010.

நல்ல தமிழ்.

யிரெழுத்து உயிருள்
பயிராகும் முதலெழுத்து.
உயிர், மெய்ப் பயிரெழுந்து
உணரவைக்கும் அகிலத்தை.

மொழிகள் அழகுடை மலர்கள்.
மொழிகள் உருசியுடை கனிகள்.
விழி நிறைந்த இன்பத் துளி.
அழிவற்ற பாதைக்கு ஒளி.

டுத்தாள ஆள இன்பம்.
எனக்கும் உனக்கும் எழிலானது.
எழுது! எட்டும் வரை எழுது!
எல்லையில்லா இன்பத்தின் கொல்லை.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-1-2011.

 

வேதாவின் ஆத்திசூடி  உயிர் எழுத்து வரிகள் இத்துடன் முடிவடைகிறது.

                                       

11. வேதாவின் ஆத்திசூடி – ” ஓ’

  

 

(Art:–by Vetha.)

 

 

அ’ கர வரிகளில்

‘ காரம்.

 

ஓதுவது ஒழியேல்.

நல்ல நூல்களைப் படித்தலை
விட்டுவிடாதே. படித்தபடியே இரு.

இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1.   ஓச்சம் (உயர்வு) கொள், நன்னடத்தைகளால்.
2.   ஓசி வாங்கி வாழப் பழகாதே.
3.   ஓடக்கோல் போல் பிறருக்கு உதவியாயிரு.
4.   ஓடுதல் உடலுக்கு நல்ல அப்பியாசம்.
5.   ஓதி, உணர்ந்து வாழ்தல் அழகு.
6.   ஓவியக்கலை மனதுக்கு மகிழ்வு தரும்.
7.   ஓர்மம் (மனஉறுதி) கொண்டு முயற்சிகள் செய்ய வேண்டும்.
8.   ஓட்டைவாயனாக வாழப் பழகாதே.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2010.

                                

10. வேதாவின் ஆத்திசூடி – ‘ஒ

 

 

‘அ’ கர வரி அடிகளில்

ஒ’  கரம்

ஓப்புரவு ஒழுகு.

உலகத்தோடு பொருந்த, உலகநடையைத் தெரிந்து அந்த வழியிலே நட.
இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1.    ஒத்தாசை செய்து வாழ்.
2.    ஓப்புரவறிந்து ஒழுகு.
3.    ஓப்பமிடமுன் உள்ளடக்கம் வாசி.
4.    ஓட்டுக் கேட்டல் தவிர் ஒரு மனப்பாடுடை வழிபாடு தெளிவுடைத்து.
5.    ஓற்றுமை ஏற்றமுடைத்து.
6.    ஒழுங்கீனம் மதிப்பிறக்கும்.
7.    ஒழுக்கம் ஒருவனுக்கு ஒளி தரும்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
         ஓகுஸ், டென்மார்க்.
         5-8-2010.

 

humming-bird

                                              

9. வேதாவின் ஆத்திசூடி – ” ஐ”

 

 ”அ’கர வரி அடிகளில்

” ஐ” காரம்.
 

ஐயம் இட்டுண்.
ஏழைகள், அங்கவீனரெனும் இயலாதவர்களுக்கப் பிச்சை

இட்டு உண்.
ஓளவையின் வரி இது.

 

இனி எனது வரிகள்.

1. ஐக்கியம் பேணு.
2. ஐசுவரியம் என்பதில் அறிவும் அடக்கம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
      ஓகுஸ், டென்மார்க்.
      4-82010.

 

                              

8. வேதாவின் ஆத்திசூடி – ‘ஏ’

 

 

‘அ’ கர வரி அடிகளில்

‘ஏ’ காரம்.
 

ஏற்பது இகழ்ச்சி.

ஒருவரிடத்தில் சென்று பிச்சை கேட்பது,
இரந்துண்டு வாழ்வது இகழ்தலுக்குரியது.
இது ஒளவையாரின் வரி.

 

இனி எனது வரிகள்.

 

1.    ஏகாந்தம் எப்போதும் நல்லதல்ல.
2.    ஏவல் மொழி கேட்டுப் பிறரைப் பகைக்காதே.
3.    ஏய்த்தல், ஏமாற்றுதல் விலக்கு.
4.    ஏமாளியாய் வாழாதே.
5.    ஏண்டாப்புக் கொள்ளாதே.
6.    ஏட்டுப் படிப்புடன் அனுபவ அறிவும் இணை.
7.    ஏன் என்ற கேள்வி எப்போதும் கேள்.
8.    ஏற்றமும் தாழ்வும் சமமெனக் கருதி வாழ்.

 ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
      ஓகுஸ், டென்மார்க்.
      4-7-2010.

 

imagesCACSXL03

                               

7. வேதாவின் ஆத்திசூடி. – ‘எ’

 

 

 ‘அ’ கர வரி அடிகளில்

‘எ’ கரம்.

 
 எண்ணெழுத்து இகழேல்.
கணிதத்தையும் இலக்கணத்தையும் அவமதிக்காதே.
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1.    எடுத்துக் காட்டு, நல்லவராக வாழ்ந்து.
2.    எகத்தாளமாகப் பேசுவது தவிர்.
3.    எடுத்தெறிந்து பேசுவதும் அழகல்ல.
4.    எடை அதிகரிக்க விடாதே.
5.    எண்ணம் தூயதாக இருத்தல் நலம்.
6.    எத்தனை தரமும் நல்லதற்கு எத்தனிக்கலாம்.
7.    எண் எழுத்து ஞானம் எவருக்கும் தேவை.
8.    எண்ணும் எழுத்தும் ஏற்றம் தரும்.
9.    எதிரியை நண்பனாக்குதல் நல்லதல்ல.
10.  எதிர்ப்பைத் துணிவுடன் எதிர் கொள்ளு.
11.   எதிர் நீச்சலிட்டு வாழ்வை வெல்.
12.   எரிச்சலுணர்வை அண்டவிடாதே.
13.    எச்சரிக்கையுணர்வு எப்போதும் தேவை.
14.   எம்மை நாமே புகழ்தல் அழகல்ல.
15.    எல்லம் (இஞ்சி) உணவில் சேர்.
16.    எழுத்தைப் பிழையற எழுதப் பழகு.
17.    எழுத்தைக் கற்பிப்போன் உயர்ந்தவனாகிறான்.
18.    எறும்பு போல் சுறுசுறுப்பாயிரு.
19.    எல்லை மீறாத அளவு எதற்கும் தேவை.
20.    எழில் கொஞ்சும் இயற்கை ஆரோக்கியமுடைத்து.
       
ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
        ஓகுஸ், டென்மார்க்.
        4-8-2010.

 

3FlowersDiv

                             

6. வேதாவின் ஆத்திசூடி – ‘ஊ’

 

uuvanna

‘அ’ கர வரி அடிகளில்

  ‘ஊ’ காரம். 

ஊக்கமது கைவிடேல். ( ஒரு தொழில் செய்யும் போது முயற்சி, மனவலிமையைக் கைவிடாதே.)
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1. ஊக்கம் உயர்வுக்கு ஏணி.
2. ஊடல் இணைகளுக்கு இன்பம்.
3. ஊதாரித்தனம் வாழ்விற்கு உதவாது.
4. ஊதற்காற்றில் உடலைப் பேணு.
5. ஊமைக் காயம் ஆபத்துடைத்து.
6. ஊரிற்கு நல்லது செய்.
7. ஊராரை மதித்து வாழ்.
8. ஊழல் தீவினைக்கு வழி வகுக்கும்.
9. ஊறுகாய் உணவின் சுவை மாற்றும்.
10. ஊனமுடையோரையும் ஏற்று வாழப் பழகு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2010.

                                       

Previous Older Entries